Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை

March 13, 2023
GAzkcz2aUAALyNL.jpg?resize=1200%2C550&ss

Photo, @PMDNewsGov

மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து  அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

இந்தத் தடவை அவர்கள் உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) என்ற அமைப்பின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறார்கள். இந்தப் பேரவை இலங்கையில் முதலில் 2014ஆம் ஆண்டிலும் பிறகு 2021ஆம் ஆண்டிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இரு தடவைகளிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்று முடங்கிப்போய்க்கிடந்த சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்த வேளைகளிலேயே தடைகள் நீக்கப்பட்டன.

உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவின் வருகையும் அதற்கு கிடைத்த பிரசித்தமும் மேற்கு நாடுகளில் உள்ள அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில குழுக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாம், சிங்கள பௌத்த மதத்தலைவர்களில் ஒரு பிரிவினரும் தென்னிலங்கை சிவில் சமூகத்தவர்களும் முன்னெடுத்திருக்கும் ஒரு முயற்சி குறித்து ஊடக வட்டாரங்கள் மூலமாக அறிகின்றோம். இந்தக் குழுக்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளில் தெரிந்தெடுத்த குறிப்பிட்ட சில பிரதிநிதிகளுடன் குறிப்பாக அந்தச் சமூகத்தின் ஒரு சில நபர்களை மாத்திரம் இப்போது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலகத் தமிழர் பேரவையுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் எமது சமூகத்தை கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் ஒருமித்த குரல்களை முழுமையாக பிரதிபலிப்பவை அல்ல. உலகத் தமிழர் பேரவைக்கு முன்னர் இருந்த பிரதிநிதித்துவம் இப்போது இல்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்” என்று அந்தக் குழுக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இலங்கையில் சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்ததாக அவர்களது விஜயத்தின் உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். கண்டியில் அவர்கள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததுடன் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான புனித தலதா மாளிகைக்கும் சென்று வழிபட்டார்கள்.

அடுத்த ஓரிரு தினங்களில் அவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ஏனைய மதங்களின் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினா்கள்.

சிவில் சமூகத்துடனான அவர்களின் சந்திப்புக்களில் பதற்றமோ, சந்தேகமோ அல்லது அவர்களை வெறுத்து ஒதுக்கும் உணர்வோ காணப்படவில்லை. நாம் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்று எமது தேசிய கீதம் கூறுவதைப் போன்று இது இவ்வாறுதான் அமையவேண்டும்.

பொருத்தமான தருணம்

உறுதியானதும் நிலைபேறானதுமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் நல்லிணக்கச் செயன்முறை ஒன்றை முடுக்கிவிடுவதற்கு தற்போதைய தருணமே பொருத்தமானதாகும். மக்களை இடர்பாடுகளுக்கு உள்ளாக்கிய படுபோசமான பொருளாதார நெருக்கடி இனநெருக்கடி அல்ல, நாட்டை பொருளாதார ஊழலில் இருந்தும் சூறையாடலில் இருந்தும் விடுவிப்பதே முன்னுரிமைக்குரியது என்று அவர்களை உணரவைத்திருக்கிறது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. தங்களது நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பதற்காக அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கிறார்கள்.

உணவகங்களுக்கும் அவர்கள் படையெடுக்கிறார்கள். சாதாரண இலங்கை உழைப்பாளியினால் இந்த உணவகங்களுக்குச் சென்று அங்குள்ள விலையுயர்ந்த உணவு வகைகளை சாப்பிடக் கட்டுப்படியாகாது. புலம்பெயர் சமூகத்தில் இருந்து வந்திருக்கும் தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இந்த உணவகங்களுக்கு வந்து அவர்களும் உணவு வகைகளை ருசிபார்க்கிறார்கள்.

உலகத் தமிழர் பேரவை ஒரு வருடகாலமாக உயர்மட்ட பௌத்த மதகுருமாருடன் ஊடாட்டங்களை செய்துவந்திருப்பதே அவர்களுடைய இலங்கை விஜயத்தில் தற்போதுள்ள பிரத்தியேகமான அம்சமாகும்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்காக பிரசாரத்தை முன்னெடுத்த முக்கியமான புலம்பெயர் தமிழ்ச் சமூக அமைப்பாக உலகத் தமிழர் பேரவை இருக்கின்ற போதிலும், அதன் உறுப்பினர்கள் இரு பிரதான பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் தலதா மாளிகைக்கும் சென்றார்கள்.

பௌத்த மதகுருமாருடன் சேர்ந்து அவர்கள் விடுத்த அறிக்கையில் “இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் புரிந்துணர்வையும் அமைதி சமாதானத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நாம் கடந்த சுமார் ஒரு வருடகாலமாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்திருக்கிறோம். 2023 ஏப்ரலில் நேபாள நாட்டின் நாகார்கோட் நகரில் நடத்திய கட்டமைப்பு ரீதியான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் பரஸ்பரம் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் அதன் வழியாக இந்தத் தேசிய கலந்துரையாடலுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. இலங்கை மற்றும் புலம்பெயர் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய முதல் முயற்சியை தொடருவதற்கு வழிகாட்ட நாம் ‘இமாலய பிரகடனத்தை’ செய்துகொண்டோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இது இரு தரப்புகளுக்கும் இடையிலான ஒரு இணக்கப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

ஆறு அம்ச கூட்டறிக்கை

உலகத் தமிழர் பேரவைக்கும் பௌத்த மதகுருமாருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்து வெளியிடப்பட்டிருக்கும்  கூட்டறிக்கை நன்கு தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணமாகும். நீதி மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையை ஐக்கியப்பட்ட ஒரு கட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு செய்யவேண்டியவற்றை பிரதிபலிப்பதாக அது அமைந்திருக்கிறது.

நேபாளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற இடத்தை குறிக்குமுகமாக ‘இமாலயப் பிரகடனம்’ என்ற மகுடத்தில் அமைந்திருக்கும் கூட்டறிக்கை கீழ்வரும் ஆறு அம்சங்களை வலியுறுத்துகிறது.

* எந்தவொரு சமூகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவோ, அதன் அடையாளத்தையும் பெருமையையும் இழந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சாத வகையில் நாட்டின் பன்முகத்தன்மையை பேணிக்காத்து மேம்படுத்துதல்;

* பொருளாதார நெருக்கடியை வெற்றிகொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினதும் மற்றையவர்களினதும் ஈடுபாட்டுக்கும் முதலீடுகளுக்கும் வசதியாக அமையக்கூடியதாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் உகந்த பொருளாதார வகைமாதிரியை தெரிவுசெய்வதுடன் இலங்கையை உறுதியான ஒரு மத்தியதர வருமானமுடைய நாடாக முன்னேற்றும் பாதையில் பயணம் செய்வதை உறுதிப்படுத்துதல்;

* தனிப்பட்ட உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் உத்தரவாதம் செய்து சகல மக்கள் மத்தியிலும் சமத்துவத்தை மேம்படுத்தக்கூடியதும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி மாகாணங்களுக்குப் போதுமான அதிகாரங்களை உத்தரவாதம் செய்யக்கூடியதுமான புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைதல். அதுவரை அதிகாரப்பகிர்வு தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நம்பகமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்;

* ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததுமான நாட்டுக்குள் மக்களின் மத, கலாசார மற்றும் அடையாளங்களை ஏற்றுக்கொண்டு மதித்து அதிகாரங்களைப் பரவலாக்கி இனக்குழுக்களுக்கும் மதக்குழுக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதை நோக்கி பாடுபடுதல்;

* மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை வளர்க்கக்கூடியதும் கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வதில் பற்றுறுதியுடன் கடந்தகால அவலங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளைக் கொண்டதுமான இலங்கையை உருவாக்கும் நோக்குடன் செயற்படுதல்;

* இரு தரப்பு மற்றும் பல்தரப்பு சர்வதேச உடன்படிக்கைகளின் கடப்பாடுகளை மதித்து சுதந்திரமானதும் உரமும் ஊக்கமும் நிறைந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து உலகில் சமாதானமும் வளமும் கொண்ட நாடுகள் மத்தியில் பெருமைக்குரிய ஒரு இடத்தை இலங்கை பிடிப்பதை உறுதிசெய்தல்.

உலகத் தமிழர் பேரவையுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைதாங்கிய பௌத்த மதகுருமாரில் வண. பேராசிரியர் பள்ளேகந்த ரத்னசார மற்றும் வண. மாதம்பகம அஸ்ஸஜி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் கொவிட் பெருந்தொற்று காலத்தில் இறந்த முஸ்லிம்களின் பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதற்குப் பிறரது உணர்ச்சிகளை மதிக்காத முறையில் எந்தவிதமான விஞ்ஞான அடிப்படையற்ற தீர்மானத்தை அன்றைய அரசாங்கம் எடுத்தபோது இஸ்லாமிய மதத்தவர்களின் உரிமைகளுக்காக உறுதியாகக் குரல்கொடுத்தவர்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வண. களுபஹன பியரத்ன தேரரும் இந்த பிக்குமார் குழுவில் அடங்குவார்.

உலகளாவிய 1000 சமாதானப் பெண்கள் என்ற குழுவின் ஒரு உறுப்பினராக 2005 நோபல் சமாதானப் பரிசுக்காக நியமிக்கப்பட்ட விசாகா தர்மதாச நேபாளப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாக செயற்பட்டார். அவரின் பங்களிப்பு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் குழுவுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் பொதுநிலைப்பாடு ஏற்படுவதற்கு பெரிதும் உதவியது.

முரண்பாடான சான்றுகள் 

உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவின் விஜயத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்றால் அது அவர்களும் பௌத்த மதத்தலைவர்களும் சேர்ந்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பேயாகும். இதற்கு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்குமான அவர்களின் முயற்சிகளுக்கு தனது ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி தங்களது பணிகளுக்கு நாட்டின் அதியுயர் அதிகார பீடத்தின் ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது என்பதால் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளும் பௌத்த மதத் தலைவர்களும் மாத்திரமல்ல அவர்களைப் போன்று இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும் நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஊக்கத்தை கொடுத்திருக்கும்.

ஆனால், இந்த முயற்சிகளுக்கு தோள்கொடுப்பதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை அரசியல் தலைவர்கள் தட்டிக்கழிக்கமுடியாது. மலை உச்சியை நோக்கி பாறாங்கல்லை நகர்த்துவதைப் போன்ற இந்த முயற்சிகளை மற்றவர்கள் செய்யட்டும் என்று அரசியல் தலைவர்கள் வாளாவிருக்கமுடியாது.

அரச அதிகார நிறுவனங்களை அமைப்பதற்கும் சட்டத்தில் உறைந்துகிடக்கும் நீதியை உறுதிசெய்வதற்கான வழிவகைகளை வகுப்பதற்கும் அரசியல் தலைமத்துவத்தை அரசாங்கம் கொடுக்கவேண்டியது அவசியமானதாகும்.

மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் தங்களது மேய்ச்சல் தரையை சிங்கள குடியேற்றவாசிகள் சோளப் பயிர்ச்செய்கைக்காக அபகரித்துவருவதாக கடந்த மூன்று வருடங்களாக முறைப்பாடு செய்துவருகிறார்கள். இந்த மேய்ச்சல் தரை 2011ஆம் ஆண்டில் அமைச்சரவை தீர்மானம் ஒன்றின் மூலமாக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தத் தரையில் 2020ஆம் ஆண்டு முதல் பொலன்னறுவையைச் சேர்ந்து சிங்கள குடியேற்றவாசிகள் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருகிறார்கள். முரண்பாடான இந்த அனுமதிகள் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கின்றன.

இரு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிறகு எண்பதுக்கும் அதிகமான கால்நடைகள் களவாடப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்பட்டு அல்லது மின்சாரம் தாக்கி பலியாகயிருப்பதாக தமிழ் விவசாயிகளுக்காக தற்போது வாதாடும் சடடத்தரணியான கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் உறுதிசெய்திருக்கிறார்.

விவசாயிகள் சுமார் 160 கால்நடைகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. மட்டக்களப்புக்கு ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக 2023 அக்டோபர் 7ஆம் திகதியளவில் இரு பொலிஸ் காவல் நிலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட இந்த நியாயமற்ற நிலைவரம் தொடருகிறது. அது மாத்திரமல்ல, செங்கலடியில் உள்ள இந்த மக்களுக்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க 2023 அக்டோபர் 8ஆம் திகதி அறிவித்தார் என்பதும் குறி்பிடத்தக்கது

மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களில் சிலரை (13 பேர்) வெளியேற்றுமாறு 2013 நவம்பரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவோ அல்லது சகல ஆக்கிரமிப்பாளர்களையும் அப்புறப்படுத்துவதாக 2022 ஜூலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட்ட உறுதிமொழியோ இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பேராசிரியர் ஜெயசிங்கம் கூறியிருக்கிறார்.

“எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை. இது ஆட்சிமுறையினதும் நிருவாகத்தினதும் அலட்சியத்தை அல்லது தகுதியீனத்தை அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு நீதிவழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் அதன் கொள்கையையே வெளிக்காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அதியுயர் அதிகாரமுடைய ஜனாதிபதியின் சொல்லுக்கு மதிப்பளித்து களத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் பெரும்பாலும் ஆட்சிமுறைமையில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

மேலும், நீதிமன்ற உத்தரவுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில்தான் வன்முறைகள் மூள்கின்றன.

சொல்லுக்குப் பிறகு செயல்வேண்டும். அல்லாவிட்டால் தற்போது உணரக்கூடியதாக இருக்கின்ற நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்க உணர்வுகள் சமூகத்தின் அடிமட்டத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டுவரப்போவதில்லை. 2011 அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் மேய்ச்சல் தரை குறித்து வர்த்தமானி மூலம் ஜனாதிபதி உத்தரவை பிறப்பித்தால் அது நல்லிணக்கத்துக்கான ஒரு தொடக்கமாக அமையலாம்.

jehan-e1660716495972.jpg?resize=83%2C116கலாநிதி ஜெகான் பெரேரா
 

https://maatram.org/?p=11178

Edited by கிருபன்
  • கிருபன் changed the title to நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார்.    
    • வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM   வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின்  தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    
    • 24 மணித்தியாலயத்தில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழப்பு Published By: Vishnu 23 Dec, 2024 | 04:05 AM   நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். மட்க்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை,  ஹெட்டிபொல,  கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.   எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.    
    • கல்வித்துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள தொடர்ச்சியான ஒத்துழைப்பு - ஆசிய அபிவிருத்தி வங்கி Published By: Vishnu 23 Dec, 2024 | 02:57 AM   தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட தூதுக்குழுவின் பணிப்பாளர் டகாபுமி கடோனோவுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (22) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் அபிவிருத்தியில் பிரதான செயற்பாட்டு பங்குதாரராக ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்படுவது இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையின் தேசிய அபிவிருத்தியின் முதற் கட்டமாக புதிய கல்வி முறைமை மறுசீரமைப்பு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல் புதிய கல்வி கொள்கையை வெற்றிகரமான முறையில் செயற்படுத்துவதற்காக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு,ஆசிரியர் - அதிபர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்த கலந்துரையாடலின் போது எடுத்துரைத்துள்ளார். தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் ஊடாக கல்வித்துறையில் தோற்றம் பெற்றுள்ள சவால்களை வெற்றிக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளனர்.    
    • இனப்பிரச்சினை என்பதே இல்லை, பொருளாதார பிரச்சினைதான் இருக்கு என சொல்வதனை கேட்டு  எல்லோரும் நம்புகிறார்கள், ஆனால் ஒரு சிலர் (நீங்கள் உட்பட) மட்டும் நம்ப மறுக்கிறீர்கள், ஆகையால் நீங்கள்தான் மாறவேண்டும்😁.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.