Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 DEC, 2023 | 02:57 PM
image
 

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  வடக்கிற்கான விஜயத்தின்போது  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் இன்று  செவ்வாய்க்கிழமை  யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்  என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில்  கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லயின் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  அ. சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/172068

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வடக்கின் ஸ்ராலின் ஆகிட்டார். வெள்ளத்தைக் கண்டதும் திட்டம் போடுவார். வத்தினதும் திரட்டின காசோடு ஆள் எஸ்கேப்.

முதலில் தீவகத்தின் பிரதான வீதியை போட்டு முடியுங்கப்பா. சனம்.. இந்த மழை காலத்தில் வேலைக்கு பள்ளிக்கூடங்களுக்கு போகப் படும் பாடு. அதுவும் இருந்த ரோட்டை போடுறன் என்று கிண்டிவிட்டு.. அந்த மக்கள் இப்ப 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு உருப்படியான வீதி இன்றித் தவிக்கினம்.

இவர் மட்டுமல்ல.. எந்த அரசியல் கட்சியும்.. ஊடகங்களும்.. இதில் அக்கறை காட்டுவதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலியாறு கிளிநொச்சி மாவட்த்தின் கீழ் வருகின்றது. அடுத்தவருடம் முதல் யாழ் மாவட்த்திட்கு கடல் நீரை நண்ணீராக்கும் (RO வாட்டர்) திடத்தின்மூலம் நீர் வழங்கப்படும். அநேகமாக எல்லா இடங்களும் இதன்மூலம் நீரை பெற்றுக்கொள்ளும்.

பாலியாறு திடடமானது அநேக வருடங்களாக பேசப்பட்டு பணம் ஒதுக்கினாலும் செயட்படுத்தப்படவில்லை. இங்கு நீர் தேக்கிவைக்கப்பட்டு வழங்குவதட்கான ஒரு திடடம்.  மழை இல்லாவிட்ட்தால் அது பிரச்சினையாக இருக்கும். யாளிட்கு வருடம் முழுவதும் நீர் வழங்கமுடியாது. இருந்தாலும் ஓரளவிட்கு தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த திடத்தின் மூலம் யாழின் சில பகுதிகளும், பூநகரி, மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளுமே உள்ளடக்கப்படும்.

இந்த திடத்திற்கு எட்கேனவே கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி சில வேலைகள் நடந்தாலும் அது காரணங்களால் தடைபட்டு போயுள்ளது. நிறைவேற்றினால் நல்லதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தவிச்ச வடக்கிற்கு தண்ணீர் வழங்கும் பாலியாறு

Published By: DIGITAL DESK 3  20 DEC, 2023 | 11:50 AM

image

மு.தமிழ்ச்செல்வன்

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை.

இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாணம் மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர்  திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிசெல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் ஏனைய  மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமான காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவையினை நிலத்தடி நீரில்மட்டுமன்றி ஆறுகள்,குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாலியாறு

இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள்  கலக்கிறது.

பாலியாறு குடிநீர் திட்டம்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும். 1 இலட்சத்து 18,363 ஏக்கர் ( 479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1,317 மில்லி மீற்றர் சராசரி   மழைவீழ்ச்சியிருந்து  கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2,562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக  கடலில் சேர்கிறது. 

பல மில்லியன் ரூபாக்கள் செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக  பெறப்படும். 

பயன்பெறும் பிரதேசங்கள்

அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னாள் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்படவுள்ளது.

திட்டத்தின் ஏனைய நன்மைகள்

பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் திட்டம் தொடர்பான  ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

358 ஹெக்டயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம்

வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி

சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம்

மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி

சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை

நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல்

நீர் தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை

திட்டத்தின் சவால்கள்

பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2,562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும்.

நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது

இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல்

வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம்

மேற்படி இந்த திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம் பாலியாறு திட்டம் என பல திட்டங்கள ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின. 

ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதல் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை.

ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே.

https://www.virakesari.lk/article/172130

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்

Published By: VISHNU   16 MAY, 2024 | 01:31 AM

image
 

வடக்கு மாகாண மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் புதன்கிழமை (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. 

IMG-20240515-WA0013.jpg

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

IMG-20240515-WA0016.jpg

பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.

IMG-20240515-WA0014.jpg

பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

IMG-20240515-WA0011.jpg

IMG-20240515-WA0012.jpg

IMG-20240515-WA0010.jpg

IMG-20240515-WA0008.jpg

https://www.virakesari.lk/article/183650

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.