Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

Osteoarthritis.jpgஇன் நோயின் பெயர் osteoarthritis ஆகும்.சுருக்கமாக எலும்பு அழிவடையும் நோய் என்றும் இதைக்கூறலாம்.முதியவர்களை மட்டுமே இன் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பது பிழையான ஒரு கருத்தாகும். இன் நோயினால் பாதிக்கப்படும் 5 நபர்களுள் ஒருவர் 65 வயதிற்கும் குறைவானவர்கள்.இந்த நோய் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மட்டுமல்ல அபிவிருத்தியடைந்த நாடுகளான அமெரிக்கா யூரோப் நாடுகளையே படுத்தி எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றது.அமெரிக்கா மட்டுமே வருடாவருடம் இந்த நோய்க்காக 6400 கோடி அமேரிக்கன் டாலர்களை செலவழிக்கின்றது.
 



மூட்டழற்சி நோய் இன்று நேற்று தோன்றிய நோய் அல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதனை தொல்லைபடுத்திவந்துள்ளது.எகிப்திய மம்மிக்கள் சிலவற்றில் கூட இவ் வீங்கியமூட்டுக்களை கண்டுபிடித்திருக்கின்றார்கள்.அதோடு உலகப்பிரபலமான ஆய்வுப்பயணியாக கிரிஸ்டோபர் கொலம்பஸும் இன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்தான்.
வீங்கிய மூட்டு என்றபதம் கிரேக்க வார்த்தையில் இருந்துதான் தோற்றம்பெற்றுள்ளது.

மூட்டு என்றால் என்ன?

sd.JPGமூட்டின் உடற்கூற்றியலைப்பார்த்தோமேயானால் இது இரு எலும்புகள் சந்திக்குமிடமாகும்.மூட்டு ஒரு நாருறையினால் மூடப்பட்டிருக்கும்,இவ் உறை அம்மூட்டினை பாதுகாக்கும் ஒரு அமைப்பாகும்.இத் தொகுதியை எலும்பிடைச்சவ்வு மூடியிருக்கும்.
 
 
 
 
இச்சவ்வு எண்ணைத்தன்மையான ஒரு பதார்த்தத்தை சுரக்கும்,இந்த பதார்த்தம் உராய்வில் இருந்து அதாவது மூட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று தேயாமல் பாதுகாக்க உதவுகின்றது.அதோடு என்பு முடியும் முனையை குருத்தெலும்பு என்று அழைப்பார்கள் இது சற்று பஞ்சுத்தன்மையுடையதாக காணப்படும்.இது நீங்கள் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ வாகனங்களில் உள்ள Shock absorber  போன்று தொழிற்பட்டு மூட்டைப்பாதுகாக்கும்.

இவ் மூட்டழற்சியை ஒத்த வேறு ஒரு நோய் காணப்படுகின்றது.இதை முடக்குவாதம் (Rheumatoid arthritis) என்று அழைப்பார்கள்.இது மூட்டழற்சியைப்போல் அல்லாது சரமாரியாக உடலின் அத்தனை மூட்டுக்களையும் ஒரே நேரத்தில் தாக்கும் வல்லமைவாய்ந்தது.ஒரு மூட்டில் இருந்து வேறு ஒரு மூட்டிற்கு இன் நோய் பரவும்.ஆனால் மூட்டழற்சி (osteoarthritis) நோய் ஒரு மூட்டில் இருந்து வேறு ஒன்றிற்கு பரவுவதில்லை.


 
 எலும்பின் அடிப்படைக்கட்டமைப்பு கீழே காட்டப்பட்டுள்ளது
 
9312400-bone-structure.jpg
 
 
 
எலும்பின் பகுதிகளான மூட்டுக்குருத்தெலும்பு(articular cartilage)மற்றும் அடிக்குருத்தெலும்பு (subchondral bone) என்பன சிதைவடைதலே இன் நோயின் முக்கிய குணங்களாகும்.
23.JPG
 
சாதாரணமாக எமது உடலின் பாரத்தைத்தாங்கும் மூட்டுக்களான இடுப்பு என்பு மூட்டு மற்றும் முழங்கால் என்பவையோடு முதுகெலும்பு, கைகள் ,கைவிரல்கள் என்பனவும் இன் நோயால் பாதிப்படையும்.இந்நோயால் ஆண், பெண் இருபாலரும் பாதிப்படைந்தாலும் ஆண்களை விட பெண்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகின்றார்கள்.அதிலும் முக்கியமாக மாதவிடாய் நிறுத்தமடையும் காலப்பகுதியை கடக்கும் பெண்கள் இந்நோயால் பாதிப்படைதலுக்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.
 
X- Ray மூலம் மூட்டுக்களை அவதானிக்குபோது இவற்றை இலகுவாக கண்டறியலாம்.
OA-knees.jpg

 

 
 
நோய்க்காரணிகள்
 
நோயாளி உடற்பருமனுடன் கூடிய மூட்டழற்சி நோயாளியாக இருத்தல்
மூட்டில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டிருத்தல்
 விவசாயியாக இருத்தல்
பரம்பரை பரம்பரையாக் இன் நோய் குடும்பத்தில் இருத்தல்
முதுமையடைதல்
மூட்டு பிரழ்தலுக்கு சரியான சிகிச்சை எடுக்காமை
 
 
 
இன் நோயை 3 வகையாகப்பிரிக்கலாம்
 
1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய்.(Nodal Generalised OA )
2) என்பு மூட்டுகளுக்கிடையில் கல்சியம் குறைவு ஏற்படுவதனால் இது ஏற்படும்.(Crystal Associated OA)
3)இளவயதினரிடம் ஏற்படும் மூட்டழற்சி நோய்.(OA of Premature Onset )
 
1)முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோய்
 
இன் நோயின்போது கைவிரல்,கால்களின் மூட்டுக்கள் சடுதியாக வீக்கமடைந்து வலி ஏற்படும் இது 2,3  வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்.இது பார்ப்பதற்கு முடிச்சுக்கள் போன்றிருப்பதால் Nodal Generalised என்று அழைக்கப்படுகின்றது.
Heberdens-nodes-Osteoarthritis-600x600.jpg
 
இதில் 2 வகையான முடிச்சுக்கள் இருக்கின்றன
Heberden’s nodes
Bouchard’s nodes
 
image3.jpeg
Heberden-Arthrose.jpg

 

 

 

 
முடிச்சுக்களைக்கொண்ட மூட்டழற்சி நோயின் ஏனைய வகைகள்
 
CMC of thumb
 
 
 
பெருவிரலும் மணிக்கட்டும் இணையும் பகுதியில் ஏற்படும் பாதிப்பால் இது ஏற்படுகின்றது.இன் நோய்நிலையின்போது பெருவிரலைப்பயன்படுத்தமுடியாத நிலை ஏற்படும்.பெருவிரலைப்பயன்படுத்தும்போது அதிகவலி ஏற்படும்.
 
 
CMC-Joint-1-_100_large.jpg
 

Hallux

 
கால்பெருவிரலில் வீக்கம் ஏற்படுவதோடு பெருவிரலை அசைக்கமுடியாத நிலை ஏற்படும்.
 
download%2B%25287%2529.jpg

Valgus/rigidus

 
நின்ற நிலையில் கால்களைச்சேர்த்துவைத்திருக்கும்போது முழங்கால்மூட்டுக்கள் அருகருகாமையில் ஒன்றாகவும் பாதமூட்டுக்கள் தூரமாகவும் இருக்கும்.
 
download%2B%25289%2529.jpg
 
Capture32.jpg
 
 
 

Knees & hips

arth7_hipreplace-8col.jpg
இடுப்பு எலும்பில் ஏற்படும்பாதிப்பால் இன் நிலை ஏற்படுகின்றது.தொடர்ச்சியான இடுப்புவலியாக இல்லாமல் இடையிடையே இடுப்புவலி வந்து செல்லும்.ஆண்களில் விதையில் வலி ஏற்படும்.முக்கியமாக காலைவேளைகளில் மூட்டுக்களை அசைப்பது இருத்தல் எழும்புதல் கடினமாக இருக்கும்.
 

Apophyseal joints

image012.jpg
 
முதுகெலும்பின் என்புகள் இணையும் பகுதியைத்தான் என்று கூறுவார்கள்.இதில் கல்சியம் படிவடைந்து இவ் இடைவெளி நிரப்பப்பட்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்ததும் ankylosing spondylitis என்ற நோய் நிலை ஏற்படும்.இதன்போது முதுகில் கூன் ஏற்படும்.
 
ankylosing-spondylitis-illustration-73a904.gif

 
 

மூட்டழற்சி நோய் நோயியல் 

 
Finger-Osteoarthritis1.jpg
 
 
நோய் அறிகுறிகள்:-
 
ஆரம்பத்தில் தொடர்ச்சியானவலியாக இருக்காமல் இடையிடையே ஏற்படும் வலியாக இருந்து நாளடைவில் தீவிர நிலைக்கு வலி மாற்றமடையும்.
முக்கியமாக மூட்டில் அழுத்தம் அதிகரிக்கும்போது அதாவது எழுந்து நிற்கும்போது வலி அதிகமாக இருக்கும்.
ஓய்வெடுக்கும்போது வலி குறைவாக இருந்தாலும் இடையிடையே ஏற்படும் வலியினால் நித்திரைகுழப்பமடையும்.
சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் கால் கைகள் இறுக்கமடையும் அதோடு கை கால்களை அசைக்கும்போது எலும்புகள் தேய்வடையும் சத்தத்தை நோயாளியினால் உணரமுடியும்.
 

 மூட்டு நீர்க்கட்டு (joint effusion)

hkj.JPG
 
MUS_arthrocentesis_knee.gif
 
 
 
கை கால் மெலிவடைதல்,மூட்டுக்களை அசைக்கும்போது சத்தம் ஏற்படுதல்
 
நோயை கண்டறியும் சோதனைகள்
 
இரத்தப்பரிசோதனைகள் மூலம்  இந்நோயை உறுதிப்படுத்தமுடியாது.
X Ray, MRI மூலமே இன் நோயை உறுதிப்படுத்தலாம்.
 
presentation1pptx-radiological-imaging-of-osteoarthritis-17-638.jpg
 
slide_50.jpg
 
 

சிகிச்சைமுறைகள்

உடற்பயிற்சியும் வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுமே இன்
physioandpatient_3.jpg
நோய்க்கான முக்கிய சிகிச்சை முறைகளாகும்.இயன் மருத்துவர்/உடற்பயிற்சி மருத்துவரின் உதவியே இன் நோய்ச்சிகிச்சையில் பெரிதும் உதவுகின்றது.இவரின் உதவியுடன் isometric exercise, aerobic  exercise, isotonic exercise உடற்பயிற்சிகளை மேற்கொள்ளமுடியும்.உடற்பயிற்சியின் மூலமாக மூட்டுவலி,மூட்டுவீக்கம்,களைப்பு,உடற்சோர்வு,மனச்சோர்வு போன்றவற்றைக்குறைக்கமுடியும்.வெப்ப,குளிர் சிகிச்சைகள் ஸ்ரெச்சிங்க் உடற்பயிற்சிகளால் மூட்டழற்சிக்கு பெரிதும் நிவாரணம் கிடைக்கும்.
 
 
எடைகுறைப்பு இன் நோய்க்கான முக்கிய அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.உடற்பாரத்தின் அழுத்தம் மூட்டுக்களில்
download%2B%25282%2529.jpg
தாக்கப்படுவதனாலேயே மூட்டுக்களில் மிகுந்தவலி ஏற்படுகின்றது,எனவே உணவுக்கட்டுப்பாட்டின் மூலமும் உடற்பாரத்தைக்குறைப்பதன்மூலமும் இவற்றைக்கட்டுப்படுத்தலாம்.கால்சியம் அதிகம் உள்ள உணவுவகைகள்,காய்கறிகள் யோகட்,பால்,சீஸ்,கடலுணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகள்,ஜங்க் பூட்ஸ்,கொத்து,பிறைட் ரைஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
 
மூட்டழற்சியால்பாதிக்கப்பட்டவர்கள்  ரீதியான ஆதரவு மிகவும் அவசியம்.உளவியல் ரீதியாக இவர்கள் மிகவும்
patient-education-counseling-and-psychological-support-to-the-patient-and-relatives.jpg
பாதிப்படைந்துவிடுவார்கள்.அன்றாட அடிப்படைவேலைகளைக்கூட இவர்களால் தனியே செய்யமுடியாதுபோகும்.ஒரு கைபேசியையோ,டிவி ரிமோட்டைகூட தூக்கும்போது கைவலி ஏற்படலாம்.நடக்கமுடியாமல் தள்ளுவண்டியை பயன்படுத்துபவராக மாற நேரிடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குடும்பத்தவரின் ஒத்துளைப்பு நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.
 
அக நோக்கு சிகிச்சையின் மூலம்(endoscopy)மூட்டழற்சியின் பாதிப்புக்களில் இருந்துவிடுபடமுடியும்.இதன் மூலம் மருத்துவர் மூட்டிற்குள்ளே கருவிகளை செலுத்தி தீங்குவிளைவிக்கும் பாதிப்படைந்த இழையத்தை அகற்றுவார்.
1.jpg
 
 
 ஜாயின்ட் ரீபிளேஸ்மன்ற் surgery (joint replacement surgery)-இதன்மூலம் பாதிக்கப்பட்ட மூட்டு முழுவதுமாக அகற்றப்பட்டு செயற்கைமூட்டு பொருத்தப்படும் இதன்மூலம் அடுத்த 10-15 வருடங்களுக்கு எந்த வலியும் இல்லாமல் வாழமுடியும்.
 
 
home1.jpg
 
andover_happy_patient.jpg
ஹாயோலூரோனிக் அசிட்டை நேரடியாக மூட்டுக்குள் செலுத்துவதன் மூலமாக வீக்கம் மற்றும் வலியை குறைந்தது 6 மாதத்திற்காவது தள்ளிவைக்கமுடியும்.மூட்டழற்சி நோயை பூரணமாக குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் வலி நிவாரணிகளை பயன்படுத்துவதன்மூலமும் சரியான உடற்பயிற்சி மற்றும் உடல் எடைகுறைத்தல் வழக்காமான வாழ்க்கைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதம் மூலமும் வலியையும் பாதிப்புக்களையும் வெகுவாக குறைக்கமுடியும்.
 
 
வலி நிவாரணி மருந்துகள் மற்றும் பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகள்
Analgesics, Nonsteroidal anti-inflammatory drugs (NSAIDs), Corticosteroids
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, venkkayam said:

 

இனியும் நீங்கள் அரிச்சுவடிக்குள் தவளத் தேவையில்லை.

அந்ததந்த பகுதியிலேயே எழுதலாம்.

உதாரணத்துக்கு இந்தத் திரியை நலமோடு நாம் வாழ பகுதியில் பதியலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2023 at 19:57, ஈழப்பிரியன் said:

இனியும் நீங்கள் அரிச்சுவடிக்குள் தவளத் தேவையில்லை.

அந்ததந்த பகுதியிலேயே எழுதலாம்.

உதாரணத்துக்கு இந்தத் திரியை நலமோடு நாம் வாழ பகுதியில் பதியலாம்.

நன்றிகள் அவ்வாறே செய்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.