Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாகோர்னோ - கராபாக் மோதலின் புவிசார் அரசியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   26 DEC, 2023 | 02:38 PM

image

பிரிட்னி மார்டில்

நாகோர்னோ-கராபாக் மீதான அஜர்பைஜான் - ஆர்மீனியா போரின் விரிவான மதிப்பீடு காகசஸ் பகுதியில் ஓர் சிக்கலான மற்றும் ஆழமான புவிசார் அரசியல் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. முதலாம் உலகப் போருக்குப் பின்னரும் ரஷ்ய பேரரசின் வீழ்ச்சியின் விளைவாகவும் உருவான அதிகார வெற்றிடம் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியாவுக்கு தங்களது சுதந்திரத்தை பிரகடனப்படுத்தும் வாய்ப்பை வழங்கியது.

சோவியத் யூனியனின் "பிளவு மற்றும் ஆட்சி" கொள்கையை மூலோபாயமாக ஏற்றுக்கொண்டமை குறிப்பாக ஆர்மேனியர்கள் மற்றும் துருக்கிய அஜர்பைஜானியர்களின் பன்முகத்தன்மை கொண்ட நாகோர்னோ-கராபாக் பகுதியில் பதட்டங்களை மேலும் அதிகரித்தது. சோவியத் சகாப்தத்தில் நாகோர்னோ-கராபாக் தன்னாட்சிப் பகுதிக்கான அடித்தளம் இருந்தபோதிலும், காகசஸ் புவிசார் அரசியல் நிலப்பரப்பின் சிக்கல்களை எடுத்துக்காட்டி, மறைந்த பதட்டங்கள் நீடித்தன.

1990 களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகிய இரண்டும் சுதந்திரத்திற்கான அபிலாஷைகளை அறிவித்தமையால், நாகோர்னோ-கராபாக் மீதான பிராந்திய மோதல்களை ஆட்சி செய்யும் ஓர் திருப்பு முனையாகும்.

30,000 உயிர்களைப் பலிகொண்ட 1992 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இரண்டு வருட மோதல், குறிப்பிடத்தக்க இடப்பெயர்வுக்கு வழிவகுத்ததுடன் ஆர்மீனியா நாகோர்னோ-கராபாக் மீது மேலாதிக்கத்தைப் பெற்றது மட்டுமல்லாமல் அஜர்பைஜான் பிரதேசத்தையும் கைப்பற்றியது. ஆர்மீனியா மீதான ரஷ்யாவின் வெளிப்படையான ஆதரவானது இந்த மோதலில் ஒரு முக்கிய காரணியாக இருந்ததுடன், போரின் முடிவைப் பாதித்ததுடன் போருக்குப் பின்னரான தன்மையை வடிவமைத்தது.

நெருக்கடியில் ரஷ்ய மத்தியஸ்தத்தின் தாக்கம், ஆர்மீனியா மீதான வரலாற்று நேசத்துடன், செயற்பாட்டில் ஆழமான புவிசார் அரசியல் பொறிமுறைகளை சுட்டிக்காட்டுகிறது.

முதல் நாகோர்னோ-கராபாக் போரைத் தொடர்ந்து, ஆர்மீனியா பிராந்தியம் மற்றும் அதனை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றது. எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்ததுடன், இதனால் தொடர்ச்சியான பதட்டங்களும் இராணுவ விரிவாக்கங்களும் விளைவாகிறது.

புவிசார் அரசியல் வரலாற்றின் சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கு வரலாற்று, இன மற்றும் பிராந்திய அதிகார பரிமாணம் தொடர்பான விரிவான புரிதல் தேவைப்படுகிறது, ஏனெனில் இந்த கூறுகள் நாகோர்னோ-கராபக்கின் தற்போதைய பின்னணியைத் தொடர்ச்சியாக வடிவமைக்கின்றன.

அடுக்குகளை வெளிப்படுத்தல்

ஆர்மீனியாவின் வெளிப்படையான வெற்றியானது 1994 இல் நாகோர்னோ-கராபாக் மோதலின் முடிவைக் தீர்மானித்தது, ஆனால் இது ஒரு சமச்சீரற்ற தீர்மானமாகும், இது அஜர்பைஜானுக்கும் ஆர்மீனியாவிற்கும் இடையிலான அடிப்படை பதட்டங்களைத் தீர்க்கத் தவறியது. மாறாக, அது நீண்ட கால, கொதித்து நிற்கும் மோதல்கள் மற்றும் எல்லை முரண்பாடுகளுக்கு முன்னோடியாக மாற்றமடைந்தது.

2020 இல் அஜர்பைஜான் படைகள் நவீன வான் பாதுகாப்பு திறன்கள், பாரிய ராக்கெட் பீரங்கிகள் மற்றும் துருக்கிய ஆதரவின் ஆதரவுடன் நாகோர்னோ-கராபக்கை மீட்க ஒரு மூலோபாய தாக்குதலை ஆரம்பித்த போது, செயலற்றிருந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியது. 44 நாட்கள் தீவிரப் போரைத் தொடர்ந்து, அஜர்பைஜான் வெற்றிபெற்றதுடன், பிராந்தியத்தின் குறிப்பிடத்தக்க பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது.

உறுதியான கணிப்புகளுக்கு மாறாக, 2020 மோதல் நிரந்தரத் தீர்வில் முடிவடையவில்லை. அதைத் தொடர்ந்து, அஜர்பைஜான் ஒரு "சலாமி-துண்டாடல்" உத்தியை ஏற்றுக்கொண்டதுடன், படிப்படியாக நாகோர்னோ-கராபக்கின் மீதமுள்ள பிரதேசங்களுக்குள் நுழைந்தது.

அஜர்பைஜான் இராணுவப் படைகள் 2021 ஆம் ஆண்டில் ஆர்மீனியாவின் சியுனிக் மற்றும் கெகர்குனிக் மாகாணங்களில் தங்கள் ஆட்சியை வலுப்படுத்தி மதிப்பிடப்பட்ட 50 சதுர கிலோமீற்றர் ஆர்மேனிய நிலப்பரப்பை இணைத்துக் கொண்டது. செப்ரெம்பர் 2022 இல், அஜர்பைஜான் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தளங்களை உள்ளடக்கியதாக ஆர்மேனிய எல்லையை நோக்கி பாரிய நடவடிக்கைகளை ஆரம்பித்த போது பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.

நிலைமையை சிக்கலாக்கும் வகையில், அஜர்பைஜான் வெளிப்படையாக ஆயுதங்களின் சட்டவிரோத பரிமாற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக இன்னமும் ஆர்மேனிய கட்டுப்பாட்டில் உள்ள நாகோர்னோ-கராபாக் பகுதிகளுக்குள் இராணுவ முற்றுகையை விதித்தது. எவ்வாறாயினும், பல அவதானிப்பாளர்கள், ஆர்ட்சாக் குடியரசின் ஆர்மேனிய ஆதரவு தற்காப்புப் படைகளை காலப்போக்கில் வலுவிழக்கச் செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒரு உத்தியாக இதனைப் பார்த்தனர்.

இந்த கருத்து செப்ரெம்பர் 2023 இல் உறுதிப்படுத்தப்பட்டதுடன், அஜர்பைஜான் ஆர்ட்சாக்கிற்கு எதிராக மற்றொரு பெரிய இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது, இது ஆர்ட்சாக் பாதுகாப்பு இராணுவத்தின் சரிவையும் கிட்டத்தட்ட 120,000 ஆர்மேனிய குடிமக்களின் இடம்பெயர்வையும் விளைவாக்கியது.

இந்த வன்முறை நிகழ்வுகள் வரலாற்றுக் குறைகள் மற்றும் புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுடன் இன்னமும் பிராந்தியத்தின் தற்போதைய போர்களை வடிவமைக்கின்றன என்பதையும் அஜர்பைஜான்-ஆர்மீனியா போரின் நீடித்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சிக்கலான தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.

நாகோர்னோ-கராபக்கில் அஜர்பைஜானின் இராணுவ நடவடிக்கையின் பின்னணியில் மனிதாபிமான வீழ்ச்சி

செப்ரெம்பரில் அஜர்பைஜானின் 24 மணி நேர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், நீடித்த புவிசார் அரசியல் மாற்றம், நாகோர்னோ-கராபாக்கிற்கான மூன்று தசாப்த கால நடைமுறை சுய-ஆளுகையின் முடிவைக் குறித்ததுடன், அதன் குடித்தொகையில் குறிப்பிடத்தக்க வெளியேற்றத்தைத் தூண்டியது. உள்ளூர் பாதுகாப்புப் படைகள் மீதான பாகுவின் இந்த தீர்க்கமான வெற்றியானது தெற்கு காகசஸில் அதிகார சமநிலையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், குடியிருப்பாளர்களை அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் வைத்தது.

என்கிளேவ் சர்வதேச அளவில் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டாலும், அது பிரதானமாக ஆர்மீனியர்களை கொண்டுள்ளதுடன், அவர்கள் இப்போது மோதலின் உளக்காயம் மற்றும் இடப்பெயர்வின் யதார்த்தத்துடன் போராடுகிறார்கள்.

வெகுசன இடப்பெயர்வுகள் முன்னணியில், குறிப்பாக மனிதாபிமான மண்டலத்திற்குள் பிரதான முன்னுரிமைகளை வழங்கியுள்ளன. பாகுவின் மீது செல்வாக்கு செலுத்தும் வெளி தரப்பினர், மனிதாபிமான உதவி மற்றும் நாகோர்னோ-கராபக்கை விட்டு வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்வதில் அஜர்பைஜானின் ஒத்துழைப்பிற்காக அவசரமாக பரப்புரையாற்ற வேண்டும். 

மேலதிகமாக, தங்க விரும்புவோரின் உரிமைகளைப் பாதுகாப்பது அல்லது திரும்புவதைக் கருத்தில் கொள்வது கட்டாயமாகும். சர்வதேச அழுத்தமானது, களத்தில் உருவாகி வரும் மனித உரிமைகள் நிலைமையை மேற்பார்வையிட ஐ.நா கண்காணிப்பாளர்களை ஏற்றுக்கொள்வதற்கு பாகுவைத் உந்த வேண்டும்.

அரசியல் கண்ணோட்டத்தில், போரினால் பீடிக்கப்பட்ட இந்தப் பிராந்தியத்தில் மேலும் மோதலைத் தவிர்க்கும் நோக்கில், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் ஒரு தீர்வை எட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் பிரதான கவனம் செலுத்தப்பட வேண்டும். அரசுகளிடையேயான எல்லைகள் மற்றும் வர்த்தகப் பாதைகள் மீதான தகராறுகள் பகைமையை மீண்டும் தூண்டக்கூடிய சாத்தியமான தூண்டும் புள்ளிகளாக இருக்கின்றன.

அக்டோபர் 5 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்படுகின்ற வரவிருக்கும் தலைவர்கள் நிலையிலான கூட்டம் இராஜதந்திர தீர்மானங்களுக்கு ஓர் முக்கிய வாய்ப்பை அளிக்கிறது.

அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் விரைவான ஒரு நாள் போர் ஆகியவை 2020 மோதலின் மீது கட்டமைக்கப்பட்ட அஜர்பைஜானின் இராணுவ வெற்றிகளின் உச்சக்கட்டத்தைக் குறித்தது. சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், 2022 இல் விரிவாக்கங்களின் போது பாகுவின் மூலோபாய நிலைப்பாடு சீராக மேம்பட்டது.

2022 டிசம்பரில் லாச்சின் பிரதேசத்தில் அஜர்பைஜான் முற்றுகையிட்டதால், நாகோர்னோ-கராபாக் மனிதாபிமான நிலைமைகளை மோசமாக்கியதன் மூலமாக நிலைமை ஓர் மோசமான திருப்பத்தை எடுத்தது.

செப்ரெம்பரில் மோதல் ஆரம்பித்த போது, இராஜதந்திர உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், ஒரு புதிய போர் உடனடியாக உருவானது. அஜர்பைஜானின் அடுத்தடுத்த இராணுவத் தாக்குதல் விரைவான வெற்றியைத் தூண்டியதுடன் உலகளவில் விமர்சனங்களை ஈர்த்தது. இருப்பினும், துருக்கி போன்ற பிராந்திய நட்பு நாடுகள் அஜர்பைஜானுக்கு ஆதரவை தெரிவித்த அதே நேரத்தில் ரஷ்யா தீர்க்கமாக தலையிடுவதைத் தவிர்த்தது.

இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்தான போர்நிறுத்தம் ஓர் மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியதுடன், இடம்பெயர்ந்த ஆர்மேனிய இனத்தவர்கள் அஜர்பைஜான்-கட்டுப்பாட்டு பிரதேசங்களிலிருந்து வெளியேறினர். லாச்சின் வாயிலின் திறப்பு பொதுசன வெளியேற்றத்தை ஆரம்பித்ததுடன், இது ஒரு காலத்தில் நாகோர்னோ-கராபாக் தாயகம்  என்று அழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் சோகமான வெளிப்படுத்தலைக் குறிக்கிறது.

சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகள் தொடர்பில் போராட வேண்டும், இந்தப் பேரழிவுகரமான மோதலுக்குப் பிறகு மனிதாபிமான வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கான அவசரத்தை வலியுறுத்த வேண்டும்.

வரலாற்றின் சங்கிலிகளை உடைத்தல்: பிராந்திய சக்தி பரிமாணவியலில் நிலைமாற்றங்கள்

செப்ரெம்பர் 2023 இன் விருத்திகள் அஜர்பைஜான்-ஆர்மீனியா மோதலின் வரலாற்று பதிவுகளிலிருந்து விலகி, பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சூழலில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை ஏற்படுத்தியது. நூற்றாண்டு பழமையான பகைமையின் மற்றொரு அத்தியாயமாக பலர் போரை சித்தரித்தாலும், ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது: அஜர்பைஜானின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட ஆர்மீனியா, எதிர்வினையாற்றாமல் இருக்கத் தீர்மானித்ததுடன், ஒரு நாள் மோதலில் பாகு வெற்றியை நிலைநாட்ட அனுமதித்தது.

பிரதம மந்திரி நிகோல் பாஷினியன் நகர்வுகள் அவர் தேசிய நலனுக்கு மாறாக அரசியல் இலக்குகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றம் சாட்டிய ஆர்மேனிய மக்களிடமிருந்தான விரக்தியைத் தூண்டியதுடன், அவரது அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மை பலவீனப்படுத்தப்பட்டது.

சிலர் பாஷினியனின் மூலோபாய எச்சரிக்கையை அஜர்பைஜானுக்கு சாதகமாக இருக்கும் தற்போதைய சக்தி சமநிலையின்மைக்கு ஓர் நடைமுறையான பதிலளிப்பு என்று உணர்கிறார்கள். இந்த முரண்பாட்டை இரண்டு பிரதான மாறிகள் ஏற்படுத்துகின்றன.

முதலாவதாக, மேற்கு நாடுகளுடனான அஜர்பைஜானின் நட்புறவு, அத்துடன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் இருந்தான குறிப்பிடத்தக்க வருமானம் ஆகியன பாரிய இராணுவ நவீனமயமாக்கலுக்கு அனுமதித்த அதேசமயம் ஆர்மீனியாவின் மோசமான பொருளாதாரம் அத்தகைய முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தது.

இரண்டாவதாக, அஜர்பைஜான் அதன் நீண்டகால நட்பு நாடான துருக்கியிடமிருந்து நிலையான ஆதரவைக் கொண்டிருந்தது, ஆனால் ஆர்மீனியா, அதன் வரலாற்று பங்காளரான ரஷ்யா விரைவாக தலையிட தயங்கியதை கண்டறிந்தது. ரஷ்யாவின் மறுப்பு ஆர்மீனியாவிற்கு அதன் முந்தைய பாதுகாப்பு உத்தரவாதங்களிலிருந்தான குறிப்பிடத்தக்க மாற்றமாக இருந்ததுடன், நீண்டகால நட்பு நாடான மாஸ்கோவில் தங்கியிருக்கும்தன்மை தொடர்பான கரிசனைகளை அதிகரித்தன.

அஜர்பைஜானின் செல்வாக்கு ஆர்மீனியாவின் பிராந்திய லட்சியங்கள் மற்றும் கௌரவத்தின் பீடத்தில் வளர்ச்சியடைந்ததுடன், இது பிராந்திய அதிகார உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. காகசஸில் தனது அதிகாரத்தை அதிகரிப்பதற்கு அஜர்பைஜானுக்கான ஆதரவைப் பயன்படுத்தி துருக்கி உச்சத்தை பிடித்தது.

1991 இல் சோவியத் யூனியனின் உடைவு, மத்திய ஆசியா மற்றும் காகசஸில் ஒரு அதிகார வெற்றிடத்தை நிரப்புவதற்கு துருக்கிக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியது. தற்போதைய மோதல் அதன் நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரஷ்யா ஆர்மீனியாவை வெளிப்படையாக கைவிட்டமை பங்காளராக மாஸ்கோவின் நிலைத்ததன்மை சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன், இது மத்திய ஆசிய நாடுகளை தங்களது கூட்டணியை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறது.

பிரதம மந்திரி பஷின்யன் ரஷ்யாவை கணிப்பதில் ஒரு மூலோபாய தவறை ஏற்றுக்கொண்டமை ஆர்மீனியாவின் பாதுகாப்பு அமைப்பில் சாத்தியமான மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, ஆர்மீனியா மேற்கத்திய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்ள விரும்புகிறது. எவ்வாறாயினும், ரஷ்யா மற்றும் ஈரானுடனான வரலாற்றுக் கூட்டணிகளைத் துண்டிப்பதில் உள்ள நுணுக்கங்கள், மூலோபாய உட்கட்டமைப்பு சார்புகளைக் கருத்திற் கொண்டு குறிப்பிடத்தக்க சவால்களை முன்வைக்கின்றன.

கற்பனை செய்யப்பட்ட மேற்கு நோக்கிய மையமானது தடைகளை சந்திக்கமுடியும் என்பதுடன் புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், ஆர்மீனியாவின் எதிரிகளின் இராணுவ அனுகூலத்தை கருத்திற் கொண்டு, கராபாக்கின் பரிமாணம் தேக்கநிலையில் இருக்கக்கூடும் என்று என்று மற்றவர்கள் ஊகிக்கிறார்கள்.

நாகோர்னோ-கராபக்கில் அஜர்பைஜானின் இராணுவ நடவடிக்கையின் பின்னணியில் மனிதாபிமான வீழ்ச்சி

செப்ரெம்பரில் அஜர்பைஜானின் 24 மணி நேர இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், நீடித்த புவிசார் அரசியல் மாற்றம், நாகோர்னோ-கராபாக்கிற்கான மூன்று தசாப்த கால நடைமுறை சுய-ஆளுகையின் முடிவைக் குறித்ததுடன், அதன் குடித்தொகையில் குறிப்பிடத்தக்க வெளியேற்றத்தைத் தூண்டியது. 

உள்ளூர் பாதுகாப்புப் படைகள் மீதான பாகுவின் இந்த தீர்க்கமான வெற்றியானது தெற்கு காகசஸில் அதிகார சமநிலையை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், குடியிருப்பாளர்களை அவர்களின் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற நிலையில் வைத்தது. என்கிளேவ் சர்வதேச அளவில் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டாலும், அது பிரதானமாக ஆர்மீனியர்களை கொண்டுள்ளதுடன், அவர்கள் இப்போது மோதலின் உளக்காயம் மற்றும் இடப்பெயர்வின் யதார்த்தத்துடன் போராடுகிறார்கள்.

வெகுசன இடப்பெயர்வுகள் முன்னணியில், குறிப்பாக மனிதாபிமான மண்டலத்திற்குள் பிரதான முன்னுரிமைகளை வழங்கியுள்ளன. பாகுவின் மீது செல்வாக்கு செலுத்தும் வெளி தரப்பினர், மனிதாபிமான உதவி மற்றும் நாகோர்னோ-கராபக்கை விட்டு வெளியேற விரும்புவோருக்கு பாதுகாப்பான வெளியேற்றத்தை உறுதி செய்வதில் அஜர்பைஜானின் ஒத்துழைப்பிற்காக அவசரமாக பரப்புரையாற்ற வேண்டும். 

மேலதிகமாக, தங்க விரும்புவோரின் உரிமைகளைப் பாதுகாப்பது அல்லது திரும்புவதைக் கருத்தில் கொள்வது கட்டாயமாகும். சர்வதேச அழுத்தமானது, களத்தில் உருவாகி வரும் மனித உரிமைகள் நிலைமையை மேற்பார்வையிட ஐ.நா கண்காணிப்பாளர்களை ஏற்றுக்கொள்வதற்கு பாகுவைத் உந்த வேண்டும்.

அரசியல் கண்ணோட்டத்தில், போரினால் பீடிக்கப்பட்ட இந்தப் பிராந்தியத்தில் மேலும் மோதலைத் தவிர்க்கும் நோக்கில், ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் ஒரு தீர்வை எட்டுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளில் பிரதான கவனம் செலுத்தப்பட வேண்டும். 

அரசுகளிடையேயான எல்லைகள் மற்றும் வர்த்தகப் பாதைகள் மீதான தகராறுகள் பகைமையை மீண்டும் தூண்டக்கூடிய சாத்தியமான தூண்டும் புள்ளிகளாக இருக்கின்றன. அக்டோபர் 5 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தால் நடாத்தப்படுகின்ற வரவிருக்கும் தலைவர்கள் நிலையிலான கூட்டம் இராஜதந்திர தீர்மானங்களுக்கு ஓர் முக்கிய வாய்ப்பை அளிக்கிறது.

அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் விரைவான ஒரு நாள் போர் ஆகியவை 2020 மோதலின் மீது கட்டமைக்கப்பட்ட அஜர்பைஜானின் இராணுவ வெற்றிகளின் உச்சக்கட்டத்தைக் குறித்தது. சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், 2022 இல் விரிவாக்கங்களின் போது பாகுவின் மூலோபாய நிலைப்பாடு சீராக மேம்பட்டது.

2022 டிசம்பரில் லாச்சின் பிரதேசத்தில் அஜர்பைஜான் முற்றுகையிட்டதால், நாகோர்னோ-கராபாக் மனிதாபிமான நிலைமைகளை மோசமாக்கியதன் மூலமாக நிலைமை ஓர் மோசமான திருப்பத்தை எடுத்தது.

செப்ரெம்பரில் மோதல் ஆரம்பித்த போது, இராஜதந்திர உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், ஒரு புதிய போர் உடனடியாக உருவானது. அஜர்பைஜானின் அடுத்தடுத்த இராணுவத் தாக்குதல் விரைவான வெற்றியைத் தூண்டியதுடன் உலகளவில் விமர்சனங்களை ஈர்த்தது. இருப்பினும், துருக்கி போன்ற பிராந்திய நட்பு நாடுகள் அஜர்பைஜானுக்கு ஆதரவை தெரிவித்த அதே நேரத்தில் ரஷ்யா தீர்க்கமாக தலையிடுவதைத் தவிர்த்தது.

இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்தான போர்நிறுத்தம் ஓர் மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டியதுடன், இடம்பெயர்ந்த ஆர்மேனிய இனத்தவர்கள் அஜர்பைஜான்-கட்டுப்பாட்டு பிரதேசங்களிலிருந்து வெளியேறினர். லாச்சின் வாயிலின் திறப்பு பொதுசன வெளியேற்றத்தை ஆரம்பித்ததுடன், இது ஒரு காலத்தில் நாகோர்னோ-கராபாக் தாயகம்  என்று அழைக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் சோகமான வெளிப்படுத்தலைக் குறிக்கிறது.

சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டவர்களின் உடனடித் தேவைகள் தொடர்பில் போராட வேண்டும், இந்தப் பேரழிவுகரமான மோதலுக்குப் பிறகு மனிதாபிமான வீழ்ச்சியை நிவர்த்தி செய்வதற்கான அவசரத்தை வலியுறுத்த வேண்டும்.

https://www.virakesari.lk/article/172501

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.