Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அலர்ஜி என்றால் என்ன? என்று முதலில் பார்த்துவிடுவோம். எமது உடலினுள் செல்லும் ஏதாவது ஒரு பொருளுக்கு அல்லது தொடுகையுறும் பொருளுக்கு எமது உடலால் காட்டப்படும் செயற்பாடுதான் இந்த ஒவ்வாமை. இந்த ஒவ்வாமை அதாவது அலெர்ஜி எதற்காகவேண்டுமானாலும் ஒருவருக்கு வரலாம் ஆனால் அது வரும்வரை அந்த நபருக்கு எனக்கு இது ஒவ்வாதபொருள் என்பது தெரியவராது.
19150.jpg
ஒருவருக்கு பூனையின் முடி, நாயின் முடி, மகரந்தமணிகள், தூசுக்கள், ஹெயார் டை என எதனாலும் இந்த ஒவ்வாமை வரலாம், சிலருக்கு நண்டுக்கறி அல்லது இறால் சாப்பிட்டால் கை,கால் தடித்து உதடுகள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும் இதேபோல்தான் எதற்குவேண்டுமானாலும் ஒவ்வாமைவரலாம். இந்த ஒவ்வாமை வைத்தியசாலையில் எமக்கு ஏற்றப்படும் மருந்துகளாலும் வரலாம். வழக்கமாக நோய்க்கு ஏற்றப்படும் அண்டிபயோட்டிக்கிற்கு சிலருக்கு ஒவ்வாமை வரலாம் இவளவு ஏன் சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பனடோலுக்குகூட சிலருக்கு அலர்ஜி ரியாக்ஸன் வரலாம்/ வந்திருக்கின்றது ஏன் எறும்புகடித்தால்கூட இது வரலாம்.
 
முந்தைய பதிவுக்கு இங்கே கிளிக்
 
 
 
அண்டிபயோட்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. நோய்க்கிருமிகளின் வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப இந்த அண்டிப்யோட்டிக் மருந்துகள் வகைப்படுத்தப்படும். ஒருகிருமிக்கூட்டத்தை அழிப்பதற்கு  அதைத்தாக்கக்கூடிய அண்டிபயோட்டிக்கை கொடுத்தால் மட்டுமே அழிக்கமுடியும் அதைவிட்டு வேறு ஒன்றை நோயாளிக்குக்கொடுப்பதும் அதை நிலத்தில் ஊற்றுவதும் ஒன்றுதான்.
 
ஒவ்வாமையை கண்டறிவது எப்படி?
 
கடி/ சொறி ஏற்படுதல், கைகால்கள் தடிப்படைதல், உடலின் பகுதிகளில் சிவப்பு நிற தழும்புகாள் தோன்றும், மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படும், இதயத்துடிப்பு குறைவடையும், வயிற்றுவலி, சத்தி ஏற்படும், அதிக வியர்வை, பய உணர்வு ஏற்படும், உதடு மற்றும் நாக்கு வீக்கமடையும், வயிற்றோட்டம் ஏற்படலாம். 
aae4653ba48d841da08e0c0bfd54cb80ceb87120-1500x1500.webp

 
மருந்து ஏற்றப்பட்டதும் அல்லது ஏதாவது ஒரு பொருளை நீங்கள் கையாளும்போது மேலே கூறியவற்றுள் ஏதாவது ஒன்றோ அல்லது ஏனைய அறிகுறிகளோ தென்பட்டால் உங்களுக்கு அந்த மருந்துக்கோ அல்லது பொருள்ளுக்கோ ஒவ்வாமை  இருக்கின்றது என்று அர்த்தம்.
 
தோல் தடிப்படைதல்- Urticaria
 
Anaphylaxis-symptoms-causes-and-diagnosis-SS20-3-scaled-e1613485280155.webp
 
2668866.jpg

கண்மடல்கள் வீக்கமடைதல்- Angioedema
 
Angioedema2010.jpg
94454610-6cf3-47e6-8c7d-a3f410a0cc81.webp
 
 

 
மூச்செடுப்பதில் சிரமம்
Breathing_Artwork.jpg
உணவுக்கு ஏற்படும் ஒவ்வாமையால் ஏற்படும் கடிசொறியால் அவளவு பாதிப்பில்லை ஆனால் கண்மடல்கள் வீங்கி மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாகவைத்தியசாலைக்கு செல்வது அவசியம், உணவு ஒவ்வாமைக்கும், மருந்துகளால் ஏற்ப்படும் ஒவ்வாமையாக இருந்தாலும் சரியான நேரத்திற்குள் மருத்துவசிகிச்சையை பெறாவிடில் நிமிடங்களில் மரணம் சம்பவிக்கலாம்.
 
ஒவ்வாமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒருவருக்கு மருத்துவமனையில் எவ்வாறு சிகிச்சை வழங்கப்படுகின்றது?
 
ஓவ்வாமைக்கு எவ்வாறு மருத்துவம் செய்யவேண்டுமென்றவரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது.
ALS-Anaphylaxis-Algorithm.jpg

 

வைத்தியசாலைக்கு சென்றதும் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு   நோயாளிக்கு உடனடியாக ஒக்சிசன் வழங்கப்படும். தீவிர ஒவ்வாமையில் குறட்டைச்சத்தம் போன்ற ஒலியை மயக்க நிலையில் இருக்கும் நோயாளி ஏற்படுத்திக்கொண்டிருப்பார், இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய்வழியாக குழாயை பொருத்தி செயற்கைச்சுவாசத்தை ஏற்படுத்துவார்கள் ( Intubation). இதற்கான தேவையில்லாத சந்தர்ப்பத்தில் அதாவது நோயாளியின் தீவிரம் குறைவாக இருந்தால் ஒக்ஸிசஸ் மாஸ் பொருத்தப்படும் அதோடு Asthalin ஆவி பிடிக்கச்செய்வார்கள்.
Health-GettyImages-1447339217-58b61968b3f34eef94960bd892dd6499.jpg

 

 
 Adrenalin எனப்படும் மருந்து கையில் நேரடியாக ஏற்றப்படும் (IM Intra muscular ), கையில்Cannula ஏற்றப்பட்டு Hydrocortisone எனப்படும் மருந்து வழங்கப்படும். Chlorphenamine எனப்படும் பிரிட்டோன் கனுலா ஊடாக வழங்கப்படும். இவற்றை தனியே ஒரு வைத்தியரால் செய்யமுடியாது குறைந்தது 3 தாதியர்களாவது தேவை, ஒரே நேரத்தில் இவை அனைத்தும் மிகக்குற்கிய காலத்தில் செய்துமுடிக்கப்படவேண்டும்.
 
நோயாளியின் இரத்த அழுத்தம் உடனடியாக குறைவடையலாம். இதற்காக சேலையின் கனூலாஊடாக விரைவாக வழங்குவார்கள், விரைவாக வழங்கலை போலஸ் என்று அழைப்பார்கள். இதன் பின்னர் ECG எடுக்கப்படும், சிலருக்கு ஒவ்வாமையால் நெஞ்சுவலி கூட ஏற்படலாம்.
 
வெளி நாடுகளில்   Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில் ஊசியைப்போட்டுக்கொள்ளமுடியும். ஒவ்வாமை ஏற்பட்டு அம்புலன்ஸ் வருவதற்குள் ஏற்படும் மரணத்தை இது கூடியவரையில் தடுக்க உதவுகின்றது. வெளி நாடுகளில் ஒவ்வாமை இருக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் இதைப்பயன்படுத்துகின்றார்கள்.
 
AAI-EpiPen.jpg
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளிக்கு ஏற்றப்படும் மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் மேலே கூறிய அனைத்தையும் உடனே செய்வார்கள், செய்யவேண்டும்.
அப்படியானால் வைத்தியசாலையில் ஏற்றப்படும் மருந்தால் ஏற்படும் அலர்ஜியை முன்பே கண்டறியவழிகள் இருக்கின்றதா? அப்படியானால் ஏன் மரணங்கள் சம்பவிக்கின்றன?
 
அடுத்தபதிவில் பார்ப்போம்...
 
எனது இணையத்தள முகவரி
 
  • கருத்துக்கள உறவுகள்

@venkkayam இந்த பதிவு உங்கள் சொந்த ஆக்கமா?

ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு கல்வியூட்டல் நிச்சயம் எல்லாரும்கும் தேவை. 

7 hours ago, venkkayam said:

வெளி நாடுகளில்   Adrenalin pen (Epi pen) விற்பனையில் இருக்கின்றது. இப்படியான ஒவ்வாமைகள் ஏற்படும்போது பேனாபோல் இருக்கும் இதன் மூடியைக்கழற்றி நாமே நமது காலில்

முதலுதவி பயிற்சியின்போது இதைப்பற்றி அறிந்தேன். இலங்கையில் Epi pen பாவனை இல்லையா? இதற்கு நிகராக எப்படியான வழி பயன்படுத்தப்படுகின்றது?

அஸ்மா உள்ளவர்கள், மூச்சு எடுப்பதில் பிரச்சனை உள்ளவர்கள் எல்லாம் அவதானம் தேவை. அலர்ஜி இல்லை என்று நினைத்துக்கொண்டு மருந்து தரப்படுவது பற்றி கவனம் வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.