Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Lasantha.jpg

மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கு தண்டனை வழங்கப்படுவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் குழு ‘X’ பதிவில், அவரது படுகொலைக்கு காரணமானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

“15 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை உள்நாட்டில் தீர்த்து வைப்பதாக இலங்கை அரசு உறுதியளித்த போதிலும், விசாரணை ஸ்தம்பித்துள்ளது. லசந்தவின் கொலைக்கான பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து போராடி வரும் அவரது குடும்பத்தினருக்கு இன்றுவரை நீதி கிடைக்காமல் போய்விட்டது” என குழு மேலும் தெரிவித்துள்ளது.

மறைந்த இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது நினைவு தினம் இன்று (ஜனவரி 08) அனுஸ்டிக்கப்படும் நிலையில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/287340

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் லசந்த கொல்லப்பட்டார் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அனைத்து ஊடகவியலாளர்களையும் மௌனிக்க வைக்கும் உள்நோக்கத்துடன் கொல்லப்பட்டதாகவும், அவர் கொல்லப்பட்டு 15 வருடங்கள் கடந்தும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரிகள் தவறியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

லசந்த 15 வருடங்களுக்கு முன்னர் இன்று போன்ற ஒரு நாளில் பட்டப்பகலில் கொல்லப்பட்டார் என்றும், இன்றுவரை ஒரு குற்றவாளியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

“அரசாங்க அதிகாரத்தை திணிப்பதன் மூலம் பத்திரிகையாளர்களை மௌனமாக்க முயல்வது, கருத்து மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கலாம்” என சிரேஷ்ட வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“ஜனநாயகத்தின் தூண்களில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், இதுபோன்ற கொடூரமான கொலைகள் ஒரு சமூகத்தில் நடைபெறாது. ஆசிரியர் விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருந்தது. இதன் மூலம் அனைத்து பத்திரிக்கையாளர்களையும் வாயடைத்து விடலாம் என அதிகாரிகள் நினைத்தனர்,” என்றார்.

கொலை நடந்து 15 ஆண்டுகள் ஆன பிறகும், குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்களுக்குத் தண்டனை பெற்று, நீதியைக் காப்பாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவராக லசந்த விக்கிரமதுங்க போன்றவர்கள் பெரிதும் தவறவிடப்படுவார்கள் என சட்டத்தரணி நவரத்ன தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/287415

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லசந்தவை நினைவுகூருவதுடன் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைவுகூருவோம் - ரெய்சா விக்கிரமதுங்க

Published By: RAJEEBAN   08 JAN, 2024 | 05:31 PM

image

இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு  வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா  விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை மாத்திரமல்லாமல்  அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களை நினைவுகூருவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது :

lasantha_2433333333.jpg

பாலஸ்தீனம், சூடான், கொங்கோ, யேமன்  மற்றும்  தாய்நாட்டுக்கு அருகில் பலோச்சிஸ்தான்  ஆப்கானிஸ்தான் மியன்மாரிலிருந்து நாளாந்தம் மரணங்கள், காணாமல் போதல், காயங்கள், பசிபட்டினி குறித்து இருள்மயமான தகவல்கள் வெளியாகின்றன.

இலங்கையர்களுக்கு  இந்த காட்சிகள் பழக்கமானவை. நாங்கள் யுத்தத்தை அனுபவித்த நாட்டை சேர்ந்தவர்கள்

லசந்தவின் மரணம் யுத்தத்தினால் ஏற்பட்ட இழப்புகளில் ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

ஆனால் அவரது மகள் சுட்டிக்காட்டியுள்ளது போல கொல்லப்படுவதற்கு முன்னர் எனது அங்கிள் போர் சாதனமொன்று குறித்த செய்திகளை வெளியிட்டு வந்தார். கசப்பான உண்மைகளை வெளியிட்டு வந்தார்.

இலங்கையர்களான எங்களுக்கு  மறப்பதே தேசப்பற்று என சொல்லப்பட்டுவந்துள்ளது, அதாவது இறுதிக்கட்ட போரின்போது இழக்கப்பட்ட உயிர்கள் பெரும் வெற்றிக்காக செலுத்தப்படவேண்டிய சிறிய விலை என  எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

rasisa.jpg

இன்று நாங்கள் உலகம் எங்கிலும் மக்கள் அமைதி சமாதானத்திற்காக பேரணியாக செல்வதை பார்க்கின்றோம், அவர்கள் காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்களை வாசிக்கின்றனர். கொங்கோவிற்காக நிதி திரட்டுகின்றனர், டார்பூரில் இடம்பெறும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர்.

இந்த தருணத்தில் இளம் செயற்பாட்டாளர்கள் ஆச்சரியம் ஏற்படுத்தும் தார்மீக தெளிவை, முன்னோக்கி அணிவகுத்து செல்வதற்கு தாங்கள் தயார் என்பதை மாத்திரம் வெளிப்படுத்தவில்லை. மாறாக பகிஷ்கரிப்பு, புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கும் தங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை நோக்கி வேண்டுகோள்களை விடுப்பதற்கும் உலகில் இடம்பெறும் வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள காரணங்களை அறிவதற்கும் தாங்கள் தயார் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

லசந்த விக்கிரமதுங்கவை நினைவுகூருவதற்காக நாங்கள் அணிதிரண்டுள்ள இந்த தருணத்தில் இது குறித்து சிந்திப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன்.

அதிகாரம் குறித்து அதிகம் சிந்தித்த, ஊழல் அரசியல்வாதிகளையும் வர்த்தகர்களையும்  அம்பலப்படுத்த முயன்றமைக்காக  பெரும் விலையை செலுத்திய அவர் தற்போது எங்கள் மத்தியில் இல்லை என்றாலும் அவர் பணியாற்றிய அனைத்து ஆசிரிய பீடங்களையும் கடந்து சென்ற அனைத்து பத்திரிகையாளர்களிடமும் அவரது பாரம்பரியம் உயிர் வாழ்கிறது.

அவர்களில் பலர் தொடர்ந்தும் ஊடகங்களில் பணியாற்றுவதுடன் தங்கள்அறிவை இளம் தலைமுறையினரிடம் பகிர்ந்துகொள்கின்றனர்.

இன்று  உலகில் மாத்திரமல்ல இலங்கையிலும் ஈவிரக்கமற்ற சூழல் நிலவும் காலம்.

விலைகள் விண்ணை தொடுகின்றன- வரிகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன 

ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஒரு வருடகாலத்திற்கு மேல் வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள்  நேர்மையான மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை.

மறப்பதே தேசப்பற்று என மீண்டும் அவர்கள் எங்களிற்கு தெரிவிக்கின்றனர்.

பலர் அதனை ஏற்க தயாராக உள்ளனர் குறிப்பாக கொழும்பில்.

மாறாக ஒரு ஓரமாக  நின்று கொண்டு கைகளை உயர்த்துவதற்கு பதில் நாங்கள் மறப்பதற்கு பதில் நினைவுகூருவதற்கு  திடசங்கற்பம் பூணுவோம் என நான் முன்மொழிகின்றேன்.

லசந்த விக்கிரமதுங்கவை அவரது நகைச்சுவை உணர்வு, அவரது இரக்க குணம் ஒரு செய்திக்காக அவர் தொடர்ந்து முயற்சித்தல் போன்றவற்றை மாத்திரம் நினை கூருவதுடன் மாத்திரமல்லாமல் அவரை போன்ற அச்சமில்லாத தங்கள் உயிர்களை இழந்த ஊடகவியலாளர்கள் ஊடகப்பணியாளர்களை நினைவில்வைத்திருப்போம். குறிப்பாக அடிக்கடி பெயர்கள் மறக்கப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த பத்திரிகையாளர்களை நினைவு கூருவோம்.

தேர்தல் என வரும்போது எங்கள் வாக்கை செலுத்தும் தருணம் வரும்போது நாங்கள் மனச்சாட்சியின் அடிப்படையில் வாக்களிப்போம் - இனவெறியர்களை ஊழல் அதிகார வெறிமிகுந்த அரசியல்வாதிகளை தவிர்ப்போம்.

எனது அங்கிள் தற்போதுஇருந்தால் அவர் தீவிரமாக செயற்படுவார் மக்களை சரியான தெரிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளும் கடுமையான தலையங்கங்களை எழுதுவார்.

ஆகவேநாம்  சரியான தெரிவுகளை மேற்கொள்வோம்.

நினைவுகூருவோம் தொடர்ந்தும் எதிர்ப்போம்.

https://www.virakesari.lk/article/173448

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.