Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாமல் ராஜபக்ஷவுக்கு அரச இல்லத்தை எவ்வாறு வழங்க முடியும்? - அனுரகுமார


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   12 JAN, 2024 | 03:23 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன? நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு  அரச இல்லத்தை வழங்க முடியும்.

ராஜபக்ஷர்கள் இன்றும் அரச இல்லங்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் உரையாற்றியதாவது,

பாராளுமன்றத்துக்கு குறைநிரப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி, நிதி ஒழுக்கம் பற்றி அரசாங்கம் பாடம் கற்பிக்கிறது.

இவர்களின்  நிதி ஒழுக்கத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம். டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க  அரச முயற்சியாண்மை திணைக்களத்துக்கு 13  ஆயிரம் இலட்சம்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 13  ஆயிரம் இலட்சம் ரூபா எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதை பாராளுமன்றத்துக்கு அறிவியுங்கள். இதில்  நிதி ஒழுக்கம் உள்ளதா?

இந்த குறை நிரப்பு பிரேரணையில் ஜனாதிபதியின் மேலதிக செலவுகளுக்காக   2000 இலட்சம்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், எரிபொருள் மற்றும்   வாகன பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு  2000 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

வரவு செலவு திட்டத்தின் போது ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகனங்களுக்காக  நிதி ஒதுக்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கான செலவினங்கள் நாட்டுக்கு பாரிய சுமை என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளோம். இதற்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்க குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜனாதிபதி நிதி ஒதுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்தில் இருந்து முழு நாட்டையும் வலம் வருகிறார். இலங்கையில்  எந்த அரச தலைவர்களும் இவ்வாறு உலகை சுற்றவில்லை. ஒன்று மரண வீட்டுக்கு செல்கிறார்.

திருமண வீட்டுக்கு செல்கிறார். அல்லது உலக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குப்பற்றாத மாநாடுகளில் உரையாற்றுகிறார். முழு உலகையும் சுற்றி விட்டு மீண்டும் உலகம் சுற்ற 2000 இலட்சம் ரூபாய் கேட்கிறார்.

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கும், சீருடை வழங்குவதற்கும் மானியம் ஒதுக்கப்படவில்லை.

பரீட்சை வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி உல்லாச பயணம் செல்ல 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றமும் சிந்திக்க வேண்டும், ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும்.

பாடசாலை உபகரணத்தில் இருந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் வரை  வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரி வருமானத்தை பெற்றுக்  கொண்டு ஜனாதிபதி உலகை சவாரி வருகிறார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது இவர்களின் வாகன பேரணியுடன் அம்புலன்ஸ் வண்டி வருகிறது.

இவர்கள் படுக்கை நோயாளிகளா? ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில்  அம்புலன்ஸ் இல்லை. இவ்வாறான செயற்பாடுகளின் போது மக்கள் எவ்வாறு திருப்தியுடன் வரி  செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோக பூர்வ இல்லத்தில் வாழ முடியும்.

நாமல் ராஜபக்ஷ அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரது தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள் வெட்கமில்லையா? நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும். முடிந்தால் பாராளுமன்றத்தில் குறிப்பிடுங்கள்.

கப்பலில் களியாட்டம் நடத்தியது தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில் யாரை ஏமாற்றுகின்றீர்கள். நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள்.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன, ஏன் மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகிறது என்பதை  பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு எவ்வாறு  பதிலளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

https://www.virakesari.lk/article/173789

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை (ஜேவிபி) பொறுத்த வரைக்கும் பேச்சில் மகா வல்லவர்கள். அவர்களைப்போல அடுக்ககடுக்காக பேசுவது , புள்ளி விவரங்களுடன் பேசுவது சிரமம். ஆனால் அடுத்த நிலைக்கு , அதாவது அதேட்க்கெதிராக நடவடிக்கை எடுப்பதட்கு இறங்க மாடடார்கள். பேச்சில் வல்லவர்கள், செய்கையில் கோடடை விட்டு விடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது - செஹான் சேமசிங்க

Published By: VISHNU   12 JAN, 2024 | 10:52 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

உலக நாட்டு தலைவர்களை ஜனாதிபதி நேரில் சந்தித்ததால் தான்  நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. உல்லாச பயணங்களுக்காக ஜனாதிபதி வெளிநாடு செல்லவில்லை. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்களுக்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா ஒதுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை . மேலதிக மானியம் மற்றும் குறைநிரப்பு பிரேரணை குறித்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு  தெளிவில்லாமல் இருப்பது கவலைக்குரியது.

டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கு  1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான 0.73 வீத பங்குகள் தேசிய சேமிப்பு வங்கி வசமுள்ளது. இந்த பங்குகளை திறைசேரிக்கு சொந்தமாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களையும், பாராளுமன்றத்தையும் தவறாக வழிநடத்தும் வகையில்  குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ஜனாதிபதி உலகை வலம் வருவதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிக மானியம் குறைநிரப்பு பிரேரணை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். ஜனாதிபதி உலக நாட்டு தலைவர்களை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் தான் நாட்டின் கடன் நிலை ஸ்தீரமடைந்துள்ளது. பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஜனாதிபதியின் பங்களிப்பு இன்றியமையாதது.

வெளிநாட்டு சுற்று பயணங்களுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது அடிப்படையற்றது. 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில்  ஒதுக்கப்பட்ட மானியங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதியின் செலவினங்கள் முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/173797

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "வீழ்ந்தாலும் வித்தாகிடு!"     "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!"   "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!"   "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "சமாதானம்" [அந்தாதிக் கவிதை]     "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!"   "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • Published By: RAJEEBAN   17 MAY, 2024 | 06:17 PM   முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார். நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா,  வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட்டங்கள்,  கேப்பாபிலவு மண்மீட்பு போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஸ்ரீநாத் பெரேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மயிலத்தனை மாதவனை தமிழ் பண்ணையாளர்களை சமீபத்தில் சந்தித்திருந்தார். உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில் இல்லை என தெரிவிக்கும் அவர் ஜேவிபி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை சிறிதளவும் புரிந்துகொள்ளவில்லை அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.     கேள்வி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ளீர்கள்? இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றீர்கள் அங்கு எவ்வாறான உணர்வுகளை கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றீர்கள்? பதில்- கடந்த வருடம் இளைஞர்கள் பலர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது உட்பட பல்வேறு  ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுவது மிகவும் சாதகமான விடயம். பரந்தன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நான் இதனை அவதானித்தேன். திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட விடயம்  தமிழ்மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. சமூக ஊடகங்களில் நான் அவதானித்த விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உணர்வுகள் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என தமிழர்கள் கருதுகின்றனர். இந்த துன்புறுத்தல்கள் வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் கருதுகின்றனர். தமிழ் மக்களின் உணர்வுகள் கடினமாகியுள்ளமை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வெளிப்படும் என கருதுகின்றேன். நான் கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன். தங்கள் உறவுகளைஇழந்த குடும்பத்தவர்களின் துயரம் வேதனை ஒவ்வொரு வருடம் மனதை வருத்தும் விதத்தில் வெளிப்படும். இந்த வருடமும் அதேபோன்ற வேதனையான துயரமான உணர்வுகளே வெளிப்படப்போகின்றன. கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால்  தனிமையில் வாழும்போது அவர்களிடமிருந்து வெளிவராத உணர்வுகள்  அனைவரும் ஒன்றிணையும் போது திடீரென வெடித்துக் கிளம்பும் கண்ணீராக கதறல்களாக. தற்போது வடக்குகிழக்கில் காணப்படும் நிலைமை மாற்றமடையும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்த நிலை மாறாது.   2 திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டமைக்கு உடனடியாக நீங்கள் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டனம்வெளியிட்டிருந்தீர்கள்-? பதில்-  இது மிகவும் மோசமான செயல் என்னவென்று சொல்ல முடியாத செயற்பாடு-  எவரும் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொள்ளக்கூடாது. முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? அதில் என்ன உள்ளது? அது ஏன் தவறு ?  போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக அவர்கள்  முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குகின்றனர். இது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமில்லை. அவர்கள் இதன் மூலம் மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைகூருகின்றனர். இதில் என்ன தவறு உள்ளது ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான விதத்தில் இந்த விடயத்தை  கையாள்கின்றனர்.   3 திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு தென்பகுதியிலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்-  திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு  எங்களை போன்ற சில குழுக்கள் மாத்திரம் எதிர்ப்பை வெளியிட்டன. எதிர்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. மலையக அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் குரல் வெளிப்பட்டதை நான் அவதானிக்கவில்லை. 4 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடும் பகுதிகளிற்கு தென்னிலங்கையிலிருந்து தொடர்ச்சியாக சென்று வருபவர்களில் நீங்களும் ஒருவர் - அவர்களின் போரட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து நீங்கள் அவர்களின் போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை வெளியிட்டு வந்துள்ளீர்கள் - காணாமல்போனோர் அலுவலகம் உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழு போன்றவை குறித்த உங்கள் அவதானிப்பு என்ன? பதில்-  எந்த நம்பிக்கையும் இல்லை. காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன  ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா? எதுவும் வெளிவரவில்லை. மரணச்சான்றிதழ் வழங்குவது இழப்பீடு வழங்குவது குறித்து மாத்திரம் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் காணாமல்போனவர்களின் உறவுகள் உங்களிடம் பணம் கேட்கவில்லை நீதியைதான் கோருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை தான் அவர்கள் கேட்கின்றனர். காணாமலாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு இது தொடர்பில் எவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இது தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் எதனையும் செய்யவில்லை. உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில்இல்லை. அரசாங்கம் அதற்கு தயாரில்லை. நடந்து முடிந்த சம்பவங்களிற்கு பொறுப்பான ஆளும் வர்க்கமும்  ஒடுக்குமுறை அரசாங்கமும்  வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக  இவ்வகை ஆணைக்குழுக்களை பயன்படுத்த முயல்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை விட இது எந்த வகையில் சிறந்தது என்பது எனக்கு விளங்கவில்லை. 5 சில வாரத்திற்கு முன்னர் நீங்கள் மயிலத்தனைமடு சென்றிருந்தீர்கள்? மயிலத்தனைமடு கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் தற்போது பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். தங்கள் கால்நடைகளிற்கு உணவு வழங்குவதற்காக அவர்கள் மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்தி வந்தார்கள். பெண் ஆளுநர் - பதவியேற்ற பின்னர்  அந்த நிலத்தை கைப்பற்றி  சிங்கள விவசாயிகளிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். அவர்களின் போராட்டம் 200நாட்களை கடந்து நீடிக்கின்றது  அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் துணிச்சலுடன் அர்ப்பணிப்புடன் போராடுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கூட வலுவான விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என நான் கருதுகின்றேன்.   கேள்வி- எதிர்வரும் தேர்தல்களில் ஜேவிபி தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளதே? பதில்- ஜேவிபி தற்போது  சிங்கள பௌத்த வாக்காளர்களின் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது அவர்கள் தற்போது வடக்குகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் ஆதரவை பெற முயல்கின்றனர். இந்த பகுதிகளில் அவர்களிற்கு மிகக்குறைந்த ஆதரவே காணப்படுகின்றது அனுரகுமார திசநாயக்க இந்த பகுதிகளில் தனது ஆதரவை அதிகரிக்க முயல்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கப்போகின்றன. இதன் காரணமாக அனுரகுமார திசநாயக்க தமிழ்மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றார். ஆனால் அவர் தமிழ் மக்களிற்கு எதனையும் வழங்க முன்வரவில்லை. நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவோம்  அபிவிருத்தி செய்வோம் என மாத்திரம் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை அவர் புரிந்துகொள்ளவில்லை. தேசியஇனப்பிரச்சினைக்குபொருளாதார அபிவிருத்தி மூலம் மாத்திரம் தீர்வை காணமுடியாது. தங்கள் பகுதிகளை தங்கள் நாளாந்த வாழ்க்கையை நிர்வகிப்பதற்கான உரிமையை  தமிழ் மக்கள் கோரிநிற்கின்றனர். இதற்கான தீர்வு குறித்த விடயத்தில் அனுரகுமார திசநாயக்க அமைதியாக  காணப்படுகின்றார். 13வது திருத்தம் குறித்தும் அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய  13 வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்து 24 மணிநேரத்தில் டில்வின் சில்வா அதனை முற்றாக எதிர்த்தார். நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார். இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் -ஜேவிபி சிறிய அளவு அதிகாரப்பகிர்விற்கு கூட தயாரில்லை . ஆரம்பத்திலிருந்து இதுதான் அவர்களின் கொள்கை . அவர்கள் அதிகாரங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமாட்டார்கள்  இதேவேளை ஜேவிபி தமிழ் வர்த்தகர்களின் ஆதரவை பெற முயல்கின்றது. சோசலிஸ கட்சி என்ற நிலையிலிருந்து அவர்கள் சீர்திருத்த பூர்ஸ்வா  கட்சியாக மாறிவிட்டனர். அவர்களிடமிருந்து தமிழர்களிற்கு எந்த தீர்வும் கிடைக்காது.   கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்  பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுடன் கைகோர்ப்பது குறித்து கருத்துதெரிவித்திருந்தீர்கள்? பதில்- தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு காலத்திற்கு காலம் பெரும்பான்மை சமூகம் ஏதோ சில தீர்வுகளை முன்வைக்க முயன்றுள்ளது. இடதுசாரிகள்  என்ற அடிப்படையில் நாங்கள்அதனை ஆதரிக்கவில்லை. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை ஏற்றுக்கொள்வதிலேயே அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு  தங்கியுள்ளது. எனினும் இலங்கையை ஆண்ட எந்த முதலாளித்துவ கட்சிகளும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவர்களின் அரசியல் அடிப்படை என்பது சிங்கள பௌத்த பேரினவாதமாகும். இடதுசாரிகள், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரம்  தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை  ஏற்றுக்கொள்கின்றார்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பதும் அதற்காக போராடுவதும் பெரும்பான்மை சமூகத்தினர்  அதனை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் ஒரு வகையான இடதுசாரிகளிற்கான ஒரு புனித கடமை. தமிழ் மக்களின் போராட்டத்தை தென்பகுதியின் வர்க்க போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கவேண்டும். நாங்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எந்த முதலாளித்துவ கட்சியும் இதனை செய்யப்போவதில்லை. https://www.virakesari.lk/article/183790
    • இந்த சங்குப்பிட்டி பாலம், இரவில் விளக்குகள் எரியும் பொழுது அழகாக இருக்கும். ஆனால் இப்பொழுது வீதியோர சோலர் மின் விளக்குகள் எரிவதில்லை.  2023 தை மாதம் வந்த பொழுது இவை ஒழுங்காத்தான்இருந்தன (ஒன்றிரண்டு பழுதடைந்தாலும் கூட) ஆனால் இம்முறை ஒன்றுமே எரியவில்லை.. அப்பொழுதுதான் தெரிய வந்தது பழுதடைந்தது, களவு எடுத்துக்கொண்டு போனது, பாராமரிப்பு இல்லை என..  சோலர்களை தனிநபர் ஒருவர்தான் வழங்கியிருந்தார் எனக் கூறினார்கள்( உண்மையா என தெரியாது) ஆனால் அங்கே இருப்பவர்களும் கொஞ்சம் அக்கறை காட்டலாம் தானே.. ஊருக்குப் போய் வரும் சந்தர்ப்பங்களில் சில நடவடிக்கைகளைப் பார்க்கையில் கவலையாகவும் ஒருவித விரகத்தியையும் ஏற்படுத்துவது உண்மை.. அதனால்தான் அப்படி எழுதினேன்.. மற்றப்படி அங்கே வாழ்பவர்களின் நடவடிக்கைகளில் அதிகம் மூக்கை நுளைப்பதில்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.