Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெஹான் ஃபசல்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 21 மே 2023
    புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் 'ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி விவேகானந்தர் சிறுவயதில் இருந்தே சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

'Swami Vivekananda the Feasting, Fasting Monk' அதாவது 'சுவாமி விவேகானந்தர் விருந்து மற்றும் உண்ணாவிரத துறவி', இது அவரது வாழ்க்கை வரலாற்றின் பெயர். ஆனால் இதன் தலைப்பு வெறுமனே வைக்கப்படவில்லை.

வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார் என்பதிலிருந்தே அவருக்கு உணவின் மீதிருந்த ஆர்வத்தை அளவிட முடியும்.

உலகிலுள்ள எல்லா பழங்களிலும் அவர் கொய்யாவை மிகவும் விரும்பினார். இது தவிர, சர்க்கரை மற்றும் ஐஸ் கலந்த மென்மையான தேங்காயைச் சாப்பிடவும் அவர் விரும்பினார். காந்திஜியை போலவே அவரும் ஆட்டுப்பால் குடித்தார்.

ஐஸ்கிரீம் விவேகானந்தரின் பலவீனமாக இருந்தது. அதை அவர் எப்போதும் குல்ஃபி என்றே அழைப்பார். அமெரிக்காவின் பூஜ்ஜியத்திற்கு குறைவான தட்பநிலையிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிடும் வாய்ப்பை விவேகானந்தர் தவறவிட்டதில்லை.

ஒரு நாள் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ராமச்சந்திர தத்தா, தன்னுடன் தக்ஷிணேஸ்வர் கோயிலுக்கு வரும்படியும், அங்கு வருபவர்களுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் ரசகுல்லா கொடுப்பார் என்றும் விவேகானந்தரிடம் கூறினார்.

அங்கே ரசகுல்லா கிடைக்கவில்லையென்றால் ராமகிருஷ்ணரின் காதை இழுத்துவிடுவேன் என்று விவேகானந்தர் அண்ணனிடம் கூறினார். விவேகானந்தர் அங்கு ஏமாற்றமடையவில்லை. மேலும் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார்.

 
விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

சிறுவயதில் இருந்தே துறவி ஆகவேண்டும் என்ற ஆசை

விவேகானந்தர் சிறுவயதில் மிகவும் குறும்புக்காரர். அவரின் தலையில் தண்ணீர் ஊற்றுவதுதான் அவரை சாந்தப்படுத்த ஒரே வழி.

சுற்றித்திரியும் சாதுக்களிடம் விவேகானந்தருக்கு அதிக பற்று இருந்தது. அவர்களுடைய சத்தத்தைக் கேட்டதும் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடுவது வழக்கம்.

சாதுக்களின் குரலைக் கேட்டதுமே அவர் அறையில் பூட்டப்படுவார். அவர்கள் சென்ற பின்னரே அவர் வெளியே வர அனுமதிக்கப்படுவார். அந்த அளவிற்கு சாதுக்கள் மீது விவேகானந்தரின் மோகம் இருந்தது.

குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் துறவியாக விரும்பினார். குழந்தைகள் எழுத்துகளை அடையாளம் காணத் தொடங்கும் வயதில் விவேகானந்தர் எழுதவும் படிக்கவும் தொடங்கினார்.

அவரது நினைவாற்றல் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. புத்தகத்தை ஒருமுறை படித்தாலே அவருக்கு அனைத்தும் நினைவில் இருக்கும். விளையாட்டுகளில், நீச்சல், மல்யுத்தம் மற்றும் சிலம்பம் சுற்றுவதை அவர் விரும்பினார். வாள் சண்டைப் பயிற்சியும் அவர் பெற்று வந்தார்.

ராய்ப்பூரில் தங்கியிருந்த காலத்தில் செஸ் விளையாட்டிலும் அவர் தேர்ச்சி பெற்றார். சிறந்த மாஸ்டர்களிடம் கிளாசிக்கல் இசைப் பயிற்சி பெற்ற அவர், பகாவஜ், தபலா, இஸ்ராஜ், சிதார் போன்ற இசைக்கருவிகளை மிகவும் திறமையாக வாசிப்பார். ஆனால் பாரம்பரிய இசையில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

அவருடைய இசைதான் அவரை அவருடைய குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருகில் அழைத்துச் சென்றது. அவரது இசையால் பரமஹம்சர் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை அவரது பாடலை கேட்டுக்கொண்டே சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார்.

 

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார்

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

படக்குறிப்பு,

ராமகிருஷ்ண பரமஹம்சர்

ஒவ்வொரு தந்தையைப் போலவே விவேகானந்தரின் தந்தை விஸ்வநாதரும் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் அதற்கு எதிராக இருந்தார்.

விவேகானந்தர் பிரம்மச்சரியத்தை ஏற்றுக்கொண்டு துறவியாக வாழ முடிவு செய்தார்.

மூத்த மகன் என்பதால் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏழு பேர் கொண்ட குடும்பத்தை நடத்தும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.

விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர், எளிமை மற்றும் தார்மீக ஆன்மீகத்தின் அடையாளமாக இருந்தார். விவேகானந்தர் தனது செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வார் என்பதில் ராமகிருஷ்ண பரமஹம்சர் உறுதியாக இருந்தார்.

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RKMDELHI.ORG

படக்குறிப்பு,

ராமகிருஷ்ண பரமஹம்சர்

1886 ஜூலை வாக்கில் ராமகிருஷ்ணரின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியது. அவருக்கு தொண்டை புற்றுநோய் இருந்தது.

கடைசி நேரத்தில் தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து விவேகானந்தர் தான் தனது வாரிசு என்று அவர் அறிவித்தார். இதற்குப் பிறகு, 1886 ஆகஸ்ட் 16 ஆம் தேதி ராமகிருஷ்ணர் பரமஹம்சர் மகாசமாதி அடைந்தார்.

அதன் பிறகு விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.

1898ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிளேக் நோய் பரவியது. நோய்க்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் கல்கத்தாவை விட்டு வெளியேறினர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. அப்போது விவேகானந்தர் கல்கத்தாவில் தங்கி மக்கள் மத்தியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.

 

நல்ல ஆளுமை உடையவர்

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

விவேகானந்தரின் உடல்வாகும், உயரமும் நன்றாக இருந்தது. அவர் மிகவும் தர்க்கரீதியானவர், ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் மனதைக் கவர்பவராக இருந்தார்.

"சுவாமிஜியின் உடல் ஒரு மல்யுத்த வீரரைப் போல வலிமையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. அவர் 5 அடி 8.5 அங்குல உயரம் கொண்டவர். அவரது மார்பு அகலமானது, அவருக்கு அற்புதமான குரல் இருந்தது," என்று ரோமயா ரோலண்ட் தனது புகழ்பெற்ற புத்தகமான ' லைஃப் ஆஃப் விவேகானந்தா' வில் குறிப்பிட்டுள்ளார்.

"அனைவருடைய கவனத்தின் மையமாக அவரது பரந்த நெற்றியும், பெரிய கருப்பு கண்களும் இருந்தன. அவர் அமெரிக்கா சென்றபோது, ஒரு பத்திரிகையாளர் அவரது எடை 102 கிலோ இருக்கும் என்று மதிப்பிட்டார். சில நேரங்களில் அவர் தன்னைத் தானே கேலி செய்து 'மோட்டா சுவாமி' என்று அழைத்துக்கொள்வார்.”

சரியாக தூங்க முடியாதது தான் அவருடைய பெரிய பிரச்னை. அவர் படுக்கையில் புரண்டுகொண்டே இருப்பார். ஆனால் தூக்கமே வராது. எவ்வளவோ முயற்சி செய்தும் தொடர்ச்சியாக அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது.

 

அமெரிக்காவுக்கு அனுப்பிய மைசூர் மகாராஜா

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார்.

முதலில் அவர் வாராணசிக்கு சென்றார், அங்கு அவர் பல அறிஞர்கள் மற்றும் துறவிகளுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டார்.

புத்தர் தனது முதல் உபதேசத்தை வழங்கிய சாரநாத்துக்கும் அவர் சென்றார். இதையடுத்து அயோத்தி, லக்னெள வழியாக ஆக்ரா சென்றார். அதன் பிறகு பம்பாய் சென்றார். அங்கிருந்து பூனாவுக்கு புறப்பட்டபோது தற்செயலாக அவரும் பாலகங்காதர திலகரும் ஒரே காரில் அமர்ந்தனர்.

இருவருக்கிடையே ஆழமான விவாதம் நடந்தது. திலகர் அவரை தன்னுடன் பூனாவில் தங்கும்படி அழைத்தார். விவேகானந்தர் 10 நாட்கள் திலகருடன் இருந்தார். இதையடுத்து விவேகானந்தர் ரயிலில் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

அங்கிருந்து மைசூர் சென்று அங்கு மகாராஜாவின் விருந்தினராக தங்கினார். ஒரு நாள் மகாராஜா அவரிடம் 'நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்’ என்று கேட்டார். அமெரிக்கா சென்று இந்தியா பற்றியும் அதன் கலாசாரம் பற்றியும் விஷயங்களை பரப்ப விரும்புவதாக சுவாமி அவரிடம் கூறினார்.

மகாராஜா அவரது அமெரிக்க பயணத்திற்கான செலவுகளை ஏற்க ஒப்புக்கொண்டார். ஆனால் விவேகானந்தர் அந்த நேரத்தில் மகாராஜா அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை. ஆனால் பின்னர் அதற்கு ஒப்புக்கொண்டார்.

 

உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும் ஈர்த்த உரை

1893 மே 31ஆம் தேதி விவேகானந்தர், மெட்ராஸில் இருந்து 'பெனின்சுலா' என்ற நீராவி கப்பலில் அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார்.

தாய்நாடு பார்வையில் இருந்து மறையும் வரை அவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது நீராவி கப்பல் கொழும்பு, பினாங், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் வழியாக நாகசாகியை அடைந்தது.

ஜூலை 14ஆம் தேதி ஜப்பானின் யாகோஹோமா துறைமுகத்தில் இருந்து 'எம்பிரஸ் ஆஃப் இந்தியா' கப்பலில் அவர் அமெரிக்கா புறப்பட்டார்.

அந்தப் பயணத்தில் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர் ஜெம்ஷெட்ஜி டாடாவும் அவருடன் இருந்தார். இருவருக்கும் இடையே இங்கிருந்து தொடங்கிய நட்பு வாழ்நாள் முழுவதும் நீடித்தது.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

வான்கூவரில் இருந்து சிகாகோவுக்கு அவர் ரயிலில் சென்றார். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் (Parliament of world’s Religions) பங்கேற்க வந்திருந்தனர். அவர்களில் விவேகானந்தர்தான் வயதில் மிகவும் இளையவர்.

"உரையாற்றுபவர்களின் வரிசையில் விவேகானந்தர் 31வது இடத்தில் இருந்தார். ஆனால் தன்னை இறுதியில் பேச அனுமதிக்குமாறு அமைப்பாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அவரது முறை வந்ததும் அவரது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவரது நாக்கு பீதியில் உலர்ந்தது,” என்று கௌதம் கோஷ் தனது 'தி பிராஃபெட் ஆஃப் மார்டர்ன் இண்டியா, சுவாமி விவேகானந்தர்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"அவரிடம் உரையும் தயாராக இல்லை. ஆனால் அவர் அன்னை சரஸ்வதியை நினைவு கூர்ந்தார், டாக்டர் பெரோஸ் அவரது பெயரை அழைத்தவுடன் மேடைக்கு விரைந்தார். அவர் தனது முதல் வார்த்தையான 'அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே' என்று சொன்னவுடன், அனைவரும் எழுந்து நின்றனர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிடங்கள் கைதட்டிக்கொண்டே இருந்தனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து மத சமத்துவத்தின் செய்தி

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

கைதட்டல் நின்றவுடன் விவேகானந்தர் தனது சிறு உரையைத் தொடங்கினார். அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே உலகின் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியாவின் சார்பாக உலகின் இளம் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.

இந்து மதம் எப்படி சகிப்புத்தன்மையின் பாடத்தை உலகிற்கு கற்பித்துள்ளது என்பதை அவர் கூறினார். உலகிலுள்ள எந்த மதமும் மற்ற மதத்தைவிட சிறந்ததோ கெட்டதோ அல்ல என்றார் அவர். எல்லா மதங்களும் இறைவனை நோக்கிச் செல்வதற்கான வழியைக் காட்டும் ஒன்றுதான் என்று அவர் சொன்னார்.

அதன் பிறகு அமெரிக்காவின் பல நகரங்களில் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் விரும்பப்பட்டன.

உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. அவர் ஓராண்டு முழுவதும் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டார்.

இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் இங்கிலாந்தில் தங்கிய அவர், இந்தியா மீது ஆர்வமுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் பேராசிரியர் மேக்ஸ் முல்லரை சந்தித்தார்.

விவேகானந்தர்

இங்கிலாந்தில் அவர் பிபின் சந்திர பாலையும் சந்தித்தார்.

விவேகானந்தர் இந்தியா திரும்பியதும் அவரை வரவேற்க எல்லா இடங்களிலும் மக்கள் கூடினர். மெட்ராஸில் இருந்து அவர் கும்பகோணத்துக்கு ரயிலில் சென்றார். அவரைப் பார்க்க வழியில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூடினர்.

ரயில் நிற்காத ஒரு சிறிய ஸ்டேஷனில் அவரைப் பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை நிறுத்தினர்.

மக்களின் அன்பில் உண்ர்ச்சிவசப்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது பெட்டியிலிருந்து வெளியே வந்து மக்களைச் சந்தித்தார்.

 

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்

விவேகானந்தர்

பட மூலாதாரம்,PENGUIN

1901 டிசம்பரில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது அதில் பங்கேற்ற தலைவர்கள் பலர் பேலூருக்கு வந்து சுவாமிஜியை தரிசித்தனர். அவர்களில் பலர் தினமும் மதியம் அவரைப் பார்க்க வரத் தொடங்கினர்.

சுவாமிஜி அவர்களுடன் அரசியல், சமூக மற்றும் மதப் பிரச்னைகளைப் பற்றிப் பேசினார். அவரைச் சந்திக்க வந்தவர்களில் பாலகங்காதர திலகரும் ஒருவர். பிரபல தாவரவியலாளர் ஜெகதீஷ் சந்திரபோஸும் அவருடைய நெருங்கிய நண்பர்.

சுவாமி விவேகானந்தர் விலங்குகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரிடம் வாத்துகள், செம்மறி ஆடுகள், மாடுகள் மற்றும் ஆடுகள் இருந்தன. அவரே அவற்றைப் பராமரித்து, தன் கைகளால் உணவளித்து வந்தார்.

அவர் தனது நாய்களில் ஒன்றான 'பாகா'வை மிகவும் நேசித்தார். அது இறந்தபோது மடத்திற்கு உள்ளே கங்கை நதிக்கரையில் அதை அடக்கம் செய்தார்.

 
விவேகானந்தர்

பட மூலாதாரம்,WWW.BELURMATH.ORG

படக்குறிப்பு,

பேலூர் மடம்

சுவாமி விவேகானந்தரின் உடல்நிலை எப்போதுமே அவ்வளவு நன்றாக இருந்தது கிடையாது.

அவரது கால்களில் எப்போதும் வீக்கம் இருந்தது. வலது கண்ணின் பார்வையும் குறைந்துகொண்டே சென்றது. அவருக்கு எப்போதும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.

அவருக்கு மார்பின் இடது பக்கத்திலும் வலி இருந்தது. தந்தையைப் போலவே அவருக்கும் சர்க்கரை நோய் இருந்தது.

வாராணாசியில் இருந்து திரும்பியதும், அவரது நோய் மீண்டும் அதிகரித்தது. புகழ்பெற்ற வைத்தியர் சஹானந்த் சென்குப்தாவிடம் அவர் சென்றார்.

விவேகானந்தர் தண்ணீர் அருந்துவதையும் உப்பு சாப்பிடுவதையும் அவர் தடை செய்தார். அடுத்த 21 நாட்களுக்கு அவர் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை.

கடைசி நாளில் மூன்று மணி நேரம் தியானம்

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது நெருங்கிய தோழி சிஸ்டர் நிவேதிதாவுக்கு தனது கைகளால் உணவு பரிமாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.

கைகளை கழுவுவதற்காக அவரது கைகளில் தண்ணீரையும் தெளித்தார். இதற்கு சிஸ்டர் நிவேதிதா, 'இதையெல்லாம் நான் செய்ய வேண்டும், நீங்கள் அல்ல' என்றார்.

அதற்கு விவேகானந்தர், 'இயேசு கிறிஸ்துவும் தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுவார்' என்று மிகவும் கம்பீரமாக பதிலளித்தார்.

சுவாமி விவேகானந்தர் தனது மகாசமாதி நாளில் அதிகாலையில் எழுந்தார். அவர் மடத்தின் கர்ப்ப கிருகத்திற்கு சென்று அதன் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் மூடினார். பின்னர் தனியாக மூன்று மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். அவர் சக புனிதர்களுடன் தனது மதிய உணவை உண்டார்.

 

நான்கு மணிக்கு ஒரு கோப்பை சூடான பால் குடித்தார். பின்னர் பாபுராம் மகராஜுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

மாலையில் பிரார்த்தனை மணி அடித்ததும் விவேகானந்தர் தன் அறைக்குச் சென்றார். அங்கே கங்கையின் முன் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.

இரவு 8 மணியளவில் அவர் ஒரு துறவியை அழைத்து தன் தலை மேல் விசிறுமாறு கூறினார். அப்போது விவேகானந்தர் படுக்கையில் படுத்திருந்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவரது நெற்றி வியர்வையால் நனைந்தது. கைகள் லேசாக நடுங்கின. அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.

எல்லாம் முடிந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக அது இருந்தது. அப்போது இரவு 9.10 மணி. அங்கு இருந்த சுவாமி பிரேமானந்த் மற்றும் சுவாமி நிஷ்சயனந்த் ஆகியோர் சத்தமாக அவரது பெயரைக் கூறி அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் சுவாமிஜியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

மாரடைப்பால் காலமானார்

விவேகானந்தர்

பட மூலாதாரம்,RUPA & COMPANY

டாக்டர் மகேந்திரநாத் மஜூம்தார், விவேகானந்தரை பரிசோதிக்க அழைக்கப்பட்டார். செயற்கை சுவாசம் கொடுத்து சுவாமி விவேகானந்தரை அவர் எழுப்ப முயன்றார். இறுதியில் நள்ளிரவில் சுவாமி விவேகானந்தர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

மாரடைப்புதான் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. சிஸ்டர் நிவேதிதா அதிகாலையில் வந்தார். மதியம் 2 மணி வரை சுவாமி விவேகானந்தரின் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 22 நாட்களுக்குப் பிறகு இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.

எனது 40வது வசந்த காலத்தை என்னால் பார்க்க முடியாது என்று அவர் சொன்ன வார்த்தைகள் உண்மையானது.

 

விவேகானந்தர் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்

  • அவர் வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார்.
  • அவர் ஆட்டுப்பால் குடித்து வந்தார். கொய்யா அவருக்கு மிகவும் பிடித்த பழம் மற்றும் ஐஸ்கிரீம் அவரது பலவீனமாக இருந்தது.
  • அவர் பெரிய மாஸ்டர்களிடம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்று பல இசைக்கருவிகளை வாசித்தார்.
  • அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.
  • சில சமயம் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு தன்னை 'மோட்டா சுவாமி'(குண்டு சுவாமி) என்று அழைத்துக் கொள்வார்.
  • அவருக்கு நன்றாக உறக்கம் வராது. கடுமையாக முயற்சித்தும் ஒரு நேரத்தில் அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது.
  • ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்தபோது ஒரு சிறிய ஸ்டேஷனில் ரயில் நிற்கவில்லை. அவரை பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.
  • அவருக்கு விலங்குகள் வளர்ப்பதில் விருப்பம் இருந்தது. அவரது நாய் 'பாகா' மடத்தின் உள்ளே கங்கை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
  • ஒருமுறை வைத்தியர் தண்ணீர் குடிப்பதையும் உப்பு சாப்பிடுவதையும் தடை செய்தபோது, அவர் 21 நாட்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/articles/cd1rk7d0jxmo

 

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
    • ஆளணிப்பற்றாக்குறையே சுகாதாரத் தொண்டர்கள், தொண்டராசிரியர்கள் ஆகியோருக்கு வாய்ப்பாக அமைகிறது. தற்போது தொண்டராசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள திரியிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவாக நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.