Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   09 JAN, 2024 | 02:43 PM

image

சத்திய மூர்த்தி

ஒரு வருடத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டின் அரகலய சமூகப் புரட்சியின் ஆரம்பமா அல்லது குறிப்பாக ஆயுதப் படைகள் (வேண்டுமென்றே?!) தங்களின் கடமையைச் செய்யத் தவறியதால் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைபாடா என ஒரு பொது விவாதம் உருவாக ஆரம்பித்துள்ளது.

ஒரு வகையில், இது ஓர் கல்விசார் பயிற்சி அல்லது நிகழ்வுக்கு பின்னரான அறிக்கை மட்டுமே, ஆனால் அத்தகைய பயிற்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளதுடன், அதை ஊக்கப்படுத்தாமல் விடக்கூடாது.

பாராளுமன்றத்தில் அண்மையில், "ஆளும்" பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் ஒரு தடவை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, 9 மே 2022 அன்று மாலை இடம்பெற்ற தீவைப்பு சம்பவங்கள் குறித்து பிரத்தியேகமாக கவனம் செலுத்தினார்.

அந்தச் சம்பவத்தில், வடக்கைத் தவிர்த்து நாடு முழுவதிலும் பல இடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் தலைவர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட சொத்துக்களுக்குச் ஒன்று முதல் இரண்டு மணித்தியாலங்கள் வரை நீடித்த, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக தீவைக்கப்பட்டிருந்தது.

வீரசேகர, அரகலய போராட்டத்தைப் போலவே முன்னெப்போதும் இல்லாத மே 9 தீவைப்புக்கு முந்தைய இரண்டு சம்பவங்களை சுட்டிகளாகக் குறிப்பிட்டார். முதலாவது சம்பவம் ஏப்ரல் 19 அன்று, எரிபொருள் பவுசருக்கு தீ வைக்கும் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தனது உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியை கைது செய்வதற்கு அரசாங்கம் உத்தரவிட்டமையாகும்.

உதவிக்காக பொலிஸார் முறையிட்ட போதிலும் அருகில் நின்ற ஆயுதப்படைகள் தலையிட மறுத்துவிட்டதாக அவர் கூறினார். இராணுவம் தலையிட மறுப்பதும், கடமைக்கு கட்டுப்பட்ட  அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கும்பல்களின் அழைப்புக்கு அரசாங்கம் செவிசாய்த்தமையும் முழு பொலிசாரையும் மனச்சோர்வடையச் செய்தது என்று அவர் வாதிட்டார்.

SLPP பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பொலிஸ் மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டதுடன் தொடர்புடைய இரண்டாவது சம்பவத்தை வீரசேகர நினைவு கூர்ந்ததுடன், அது நாடு தழுவிய ரீதியில் தீவைக்கப்பட்ட காலையிலேயே, இடம்பெற்றது. 

நிச்சயமாக, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் மேற்பார்வைக் குழுவின் தலைவரான வீரசேகர, ஒரு விவரத்தை விட்டுவிட்டதாகத் தெரிகிறது, அது ஒருங்கிணைந்த தீவைப்பின் காலையில், டசின் கணக்கான பேருந்துகளில் தலைநகர் கொழும்புக்கு வந்த அவரது கட்சியினர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை ராஜினாமா செய்வதிலிருந்து தடுக்க, இளைய சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாவின் கோரிக்கையின்படி, தங்களது கோபத்தையும் விரக்தியையும் வெளிக்கொணருவது போல், கண்ணில் தென்பட்ட அனைவரையும் அடித்து நொருக்கியதாகும்.

அதற்குப் பதிலாக நகரம் முழுவதும் அவர்கள் அடி வாங்கினார்கள் என்பது வேறு விடயம். தங்களது பேருந்துகளில் "வெளியாட்களை" தாக்கியவர்கள், அன்று காலை சென்ற அந்த வாகனங்களின் பதிவு இலக்கங்களின் நீண்ட பட்டியலை வைத்திருந்தமை நினைவுகூரத்தக்கதாகும். மீண்டும், ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையா அல்லது சில மணிநேரங்களுக்கு மட்டுமான அவர்களுக்கும் அவர்களின் தலைவர்கள் அனைவருக்கும் காத்திருந்த ஓர் வெள்ளோட்ட நடவடிக்கையா?

தீவிரமான சிங்கள-பௌத்த பெரும்பான்மையின் சமகால அடையாளமான வீரசேகர உண்மையில் குறிப்பிடவில்லை என்றாலும், அந்த கடினமான நாட்களில் பொலிஸாரின் மன உறுதியை அரசாங்கம் உயர்த்தத் தவறியதுடன் இராணுவம் உதவிக்கு விரைந்து செல்லத் தவறியமை இதனை விளைவாக்கியதுடன், பொலிஸாரிற்கான உதவி கிடைத்திருப்பின், அரகலய முன்னணியில் விடயங்கள் வேறுபட்டிருக்கலாம்.

நிச்சயமாக, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை "கும்பலாக ஆக்கிரமித்தமையையும்" பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை எரித்தமையையும் அவர்கள் நிறுத்தியிருக்கலாம். சிலநாட்களாக ஜனாதிபதி செயலகத்தின் பொதுமக்களின் முற்றுகைக்கு ஜனநாயக அங்கீகாரம் கிடைத்ததைக் கூட வழங்குவது இதுதான்.

இலக்கு மற்றும் நோக்கம்

அரகலயவின் போது கூட, தாமதமாக ஆனால் ஒரே இரவில் ஜனாதிபதி கோட்டா முதலில் நாட்டை விட்டு வெளியேறியதும், அதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா என்பதை மக்கள் போராட்டம் உண்மையில் அடைந்ததை, இராணுவ எல்லையின் கவனமற்ற மெத்தனப் போக்குடனான கடமையின் அலட்சியமே அடையவைத்ததாக பலவீனமான குரல்கள் இருந்தன.

சில வாரங்களுக்குப் பிறகு அவர் நாடு திரும்பியபோது மக்கள் நடந்துகொண்ட விதம் அல்லது தவறாக நடந்துகொள்ளாத தன்மை (!) மக்கள் போராட்டம் என்பது கோத்தாவைத் தாக்குவதற்காக அல்ல, ஆனால் அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்காக மட்டுமே என்பதைக் காட்டுகிறது. இது போராட்டத்தின் குறிக்கோள் மற்றும் நோக்கம் குறித்து சில வினாக்களை எழுப்பியது. அந்த வினாக்களுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.

இது தற்செயல் நிகழ்வாயினும் அல்லது என்னவாக இருப்பினும், ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளரான அனுரகுமார திஸாநாயக்க, தெஹிவளையின் புறநகர் பகுதியில் நடைபெற்ற அரசியல் பேரணியில் உரையாற்றும் போதே, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய அரசியல்-தேர்தல் உரையாடலில் "சமூகப் புரட்சியை" மீண்டும் புகுத்தலாம் என்று நினைத்திருக்கலாம்.

செய்தி அறிக்கைகளின்படி, AKD, என பிரபலமாக அறியப்பட்ட அவர், ஒவ்வொரு நாளிலும், நாட்டின் "அரசியல் ஒரு சமூகப் புரட்சியை நோக்கி விரைவாக முன்னேறுகிறது" என்று கூறினார். “அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் சமூகப் புரட்சிகளை அடைய முடியாது. சமூகப் புரட்சியின் மாற்றத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்” என்று கூறினார்.

ஏற்கனவே மறக்கப்பட்ட அரகலய போராட்டத்தின் நீண்ட வாரங்களில் என்ன நடைபெற்றது மற்றும் இன்னும் சொல்லப்பட்டவை அனைத்தின் மறைந்துபோகும் நினைவுகளை மீளப்பெறவும், புதுப்பிக்கவும், ஜே.வி.பி மற்றும் AKD ஆகியவை வெகுசன இயக்கத்தை அமைப்பு மாற்றத்திற்கான ஓர் "சமூகப் புரட்சி" என்று குறிப்பிட்டு பேசின. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இறுதியில் ஜனாதிபதி கோட்டாபாய ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்த பின்னரும், அவர்கள் "சமூகப் புரட்சி" என்ற கோஷத்தை தொடர்ந்து முழங்கினர். கோட்டாவின் இடத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றம் கூடியபோதும், பிரதமர் மற்றும் பதில் ஜனாதிபதியான விக்கிரமசிங்கவின் SLPP-UNP வேட்புமனுவை அங்கீகரித்த போதும், அவர்கள் மட்டும் கடந்த காலத்தில் செய்ததைப் போலவே, தங்களது துப்பாக்கிகளுடன் தொடர்ந்தும் விடாப்பிடியாகவும் சிக்கிக்கொண்டதுடன், ஜே.வி.பி. கடந்த 60 வருடங்களாக கட்சியாக முதலில் ஒரு பிரத்தியேக-கிளர்ச்சிக் குழுவாகவும் பின்னர் ஒரு சராசரியான, மெலிந்த ஜனநாயகப்படுத்தப்பட்ட பதிப்பாகவும் இருப்பில் இருந்து வந்துள்ளது.

நாட்டின் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு "சமூகப் புரட்சி" தொடர்பான திசாநாயக்கவின் புத்துயிர் பெற்ற குறிப்பு அதிக கவனத்தை கோருகின்றது. வெளியிடப்பட்ட சில தனியார் உளஎண்ணம் தொடர்பான தேசிய கருத்துக்கணிப்பின்படி, அவர் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைகளில் புதிய உயரங்களை எட்டியுள்ளார்.

நாட்டின் வாக்காளர்களில் 51 சதவீதம் பேர் இப்போது AKD அடுத்த ஜனாதிபதியாக வருவதை விரும்புகிறார்கள் என்று ஒரு கருத்துக்கணிப்பாளர் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கை கணிசமானதாகும், ஏனெனில் அது தனித்த பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் முதல் முழு அளவிலான சோசலிச ஜனாதிபதியாக ஆவதற்கான குறைந்தபட்சமான 50%+1 வாக்குகளை விட இந்த எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. ஜே.வி.பி.யின் மற்ற தோல்விகள் எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் இப்போதைக்கு, சோசலிச சித்தாந்தத்தில் முற்றுமுழுதாக வளர்ந்த ஒரே அரசியல் கட்சி அவர்களுடையது தான்.

நிச்சயமாக, இந்த குறிச்சொல் ஒரு காலத்தில் SLFP க்கு சொந்தமானது என்பதுடன், பின்னர் பிரிந்த SLPP க்கு சொந்தமானது, ஆனால் பாதையில் நீண்ட காலமாக, அவர்களின் சோசலிச நிலைகள் நீர்த்துப்போயின. இது அவ்வப்போது நிதியியல் உதவிக்காக கடந்த IMF நிபந்தனைகளை ஏற்கும் தவிர்க்க முடியாத தன்மையை குறிப்பிடவில்லை அல்லது தொடர்புபடுத்தவில்லை - அல்லது, மாறாக, அங்கேயே முடிவடைகிறது.

நிச்சயமாக, ஜே.வி.பி.யும், கடந்த காலத்தில் SLFP தலைமையிலான ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க-குமாரதுங்க, சி.பி.கே, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சியின் ஒரு பகுதியாக, சில கருத்தியல் விழுமியங்களில் சமரசம் செய்து கொண்டது, ஆனால் அவை முற்றிலும் "மாசுபடுத்தப்படுவதற்கு" முன்பே வெளியேறியது.

இன்றைய வினா என்னவெனில், அதன் பாரம்பரியமான 3-5 சதவீத வாக்குப் பங்கை 50-க்கும் மேற்பட்ட சதவீதத்திற்கு கொண்டு செல்லுகின்ற சாத்தியமற்ற உயரத்தை எட்டும் முயற்சியில், ஜே.வி.பி, அவர்களின் அடிப்படைக் கொள்கைகளை இல்லையென்றால் சித்தாந்தத்தை அதற்க்கு நடுநிலைப்படுத்த வேண்டும் அல்லது சமரசம் செய்ய வேண்டும். 

நாட்டின் தேர்தல் கடந்த காலம் வெளிப்படுத்தியபடி, நடுத்தரப் பாதையில் செல்வதன் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் ஜனநாயக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். நிச்சயமாக, ஒரு தொலைதூர முன்மாதிரி உள்ளது. 1956 ஆம் ஆண்டு SLFP தலைமையிலான முதலாவது அரசாங்கம், அங்கு அனைத்து இடதுசாரி சார்புக் கட்சிகளும் --- ஜேவிபியினதும் உருவாக்கம் ஒரு தசாப்த தூரத்தில் இருந்த நிலையில், ஜனாதிபதி S. W. R. D. பண்டாரநாயக்கா, அதனை ஒரு நீல இரத்தம் கொண்ட சோசலிச ஆட்சி என்று அழைத்தார். மிகவும் வழமையான இடதுசாரி/சோசலிச கடந்த காலத்தைக் கொண்ட அவரது SLFP யின் சக பயணிகளில் சிலர் சர்வதேச கம்யூனிச சித்தாந்தத்திலிருந்து விலகி, "சிங்களம் மட்டும்" சட்டம் என்ற மேலாதிக்க காரணத்துடன் அடையாளம் காணப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அங்கு "சோசலிசப் புரட்சி" ஏற்கனவே அதன் தூய்மையை இழந்துவிட்டது.

அழகு அல்லது பரிதாபம் என்னவென்றால், அந்த பாரம்பரிய இடதுசாரிகள், அவ்வப்போது, மூன்று மொழி கொள்கை போன்றவற்றைப் பற்றி பேசுகிறார்கள். SLFP/SLPP அரசாங்கத்திற்கு அவர்களில் யாரேனும் அல்லது அனைவரும் கையொப்பமிட்ட போதெல்லாம், அவர்கள் ஒரு கருத்தை நிரூபிப்பது போல உத்தியோகபூர்வ மொழிகள் அமைச்சு அவர்களில் ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதை உறுதிசெய்தனர். இலங்கை வாக்காளர்கள் இப்போதும், வாக்களிக்கும் நாளுக்கும் இடையில் புதிய ஜனாதிபதிக்காக வேறு எங்கு தேடினாலும், வரவிருக்கும் வாரங்கள், மாதங்கள் மற்றும் சில ஆண்டுகளில் AKD மற்றும் JVP பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே இருவேறுபட்ட கருத்தாகும்.

ஒன்று அவர்கள் தங்கள் வேரூன்றிய இடதுசாரி நிலையிலிருந்து விலகி, குறிப்பாக பொருளாதாரப் பிரச்சினைகளில் மிதமான நடுத்தர பாதைக்கு நகர்கிறார்கள் அல்லது பெரிய வாக்காளர்களை குறுகிய மற்றும் நடுத்தர பாதையில் தங்கள் சிந்தனைக்கு மாற்றுவதுடன், சுயமாக பேச்சுவார்த்தை நடாத்த அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். எது அதிகமாக எவ்வாறு அடையக்கூடியது என்பதை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

வேறொன்றுமில்லை என்றாலும், "முதலாளித்துவ, வலது பிற்போக்குத்தனமான" அமெரிக்காவிற்குச் செல்வதற்கான AKDயின் விருப்பம், அமெரிக்கத் தூதர் ஜூலி சுங்கைச் பலமுறை சந்திப்பதற்கான அவரது ஆர்வம் மற்றும், IMF உடன் பேச்சுவார்த்தை நடத்த அவர் வெளிப்படுத்திய விருப்பத்திற்கு அப்பால் (நிபந்தனைகளை மறு வரைவு செய்வது) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஜே.வி.பி.யின் தலைமை ஒரு கட்டம் வரையில் கூட பேச்சுவார்த்தை நடத்த மற்றும்/அல்லது முன்னெடுக்கத் தயாராக இருக்கும் எதிர்காலப் போக்கைக் குறிக்கிறது.

யோசனைகள், சித்தாந்தங்கள் மற்றும் விவரங்கள் ஆகியன கலந்துரையாடப்பட்டு தீர்மானமெடுக்கப்பட வேண்டியிருக்கும் போது, பல தடைகள் இருக்கலாம், ஆனால் அவை அனைத்தும் மறைக்கப்பட்ட தீர்வுகள், விபரிப்புகள் மற்றும் நியாயப்படுத்தல்களை கொண்டு வரலாம், இருப்பினும் கட்சியின் கடந்தகால ஒருதலைப்பட்ச விருப்பத்தால் நம்பத்தகாததாகும்.

வெற்றி அல்லது தோல்வி?

இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு அப்பால் உள்ள ஜே.வி.பி.யின் உருவாக்கம், சித்தாந்தம் மற்றும் செயன்முறை ஆகியவை ஒரு தேசத்திற்கு அவர்களால் உருவகப்படுத்தப்பட்ட மற்றும் குறிப்பிடப்பட்ட (இருப்பதற்கு) "சோசலிச இலங்கைக்கு" உரியவை உட்பட, அதன் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் இன்னமும் ஜேவிபிக்கு மட்டுமே பொருந்துகிறது.

பிந்தையது, இலங்கை அரசு அவர்களின் இரண்டாவதும் இறுதியுமான கிளர்ச்சியை நசுக்கியதுடன் கட்சி மிக நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டதுடன், இது கட்சி / இயக்கத்தின் ஸ்தாபகரான ரோஹன விஜேவீரவின் மரணத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.

கட்சியானது அதன் இடத்தை மிதவாதிகள் கைப்பற்ற அனுமதித்ததுடன், உள்ளடக்கலான ஜனநாயக அரசியல் மற்றும் தேர்தல்கள் எப்பொழுதும், ஒரு புதிய முகமான ஜேவிபிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களாக, ஜே.வி.பி ஜனநாயக மிதவாதம் அல்லது மிதவாத ஜனநாயகத்தின் பயனையும் பொருத்தப்பாட்டையும் கண்டறிந்துள்ளதுடன், இல்லாவிடின், தமிழ் இன முன்னணியில் புலிகளுக்கு நடந்தது போல், 2009 ஆம் ஆண்டு மே மாதம் போருக்குப் பின்னராக, நிறுவுனர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒழிப்புடன், நூற்றுக்கணக்கான, இல்லாவிடின் ஆயிரக்கணக்கான அவரது கடைசிக் குழு உறுப்பினர்களும் அழிக்கப்பட்டது போல கிளர்ச்சிக்குப் பின்னராக இயக்கம் அழிக்கப்பட்டிருக்கும்.

உரையாடல் இன்னும் அரகலயவைப் பற்றியதாக இருக்கும்போது, அது வெற்றியடைந்ததா அல்லது தோல்வியடைந்ததா, அல்லது அது அடைய விரும்பியதை அடைந்ததா என்ற வினா இன்னமும் உள்ளது. இது அரகலயாவின் நோக்கங்கள் மற்றும் இலக்குகள் பற்றிய முதன்மையான மற்றும் ஆரம்பநிலை வினாவிற்கு இட்டுச் செல்கிறது.

இது இன்னமும் ஓர் அடிப்படையான வினாவிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது: அரகலயவின் ஒழுங்கமைப்பாளர்கள் யார்? அரகலய ஒரு சுய-தீர்க்கதரிசனமும், சுய-உந்துதலும் கொண்ட வெகுசன இயக்கம் மற்றும் அது தானே உருவானது என்பது இப்போது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 'அரபு வசந்தம்", "ஆரஞ்சுப் புரட்சி" போன்றவற்றில் சமீபத்திய உதாரணங்களை மேற்கோள் காட்டலாம், ஆனால் அவற்றின் வெற்றிகள் (அல்லது, சில சந்தர்ப்பங்களில் தோல்வி) மேற்கத்திய நாடுகளின் கூற்றுகளால் தகுதி பெற்றதுடன், குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் புலனாய்வு அமைப்புகள் ஜனநாயகக் காரணத்தை நிறுவுதல் அல்லது மீட்டெடுப்பதற்கான தங்களது அர்ப்பணிப்புடன் திரைக்குப் பின்னால் இருந்தன (முந்தைய நூற்றாண்டில் நடந்த இரண்டு பெரும் போர்களுக்குப் பிறகு பல தசாப்தங்களில் மேற்குலகம் புரிந்துகொண்டு பிரச்சாரம் செய்தது போல).

இலங்கையைப் பொறுத்தவரை, அரகலய என்பது தலைநகரின் "நகர்ப்புற நடுத்தர வர்க்கம்" மற்றும் நகரத்தின் "படித்த உயரடுக்கினரால்" வீட்டுக்கு வீடு, தெருவுக்குத் தெரு ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்ததுடன், அவர்கள் கடந்த பல தசாப்தங்களாக, மற்றும் பல நூற்றாண்டுகளாக காலனித்துவ அதிகாரத்தின் கீழ் இருந்ததுடன், உள்ளூர் விடயங்களைப் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டனர். அரசியல் மற்றும் பொது நிர்வாகம் அவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. அவ்வப்போது, முக்கியமாக மேற்கத்திய நாடுகளால் நிதியளிக்கப்பட்ட INGOக்கள் மற்றும் NGOக்கள் அவர்களின் வெறுப்பு மனப்பான்மையை தூண்டிவிட்டன.

உள்ளூர் ஊடகங்களின் ஒரு பகுதியும் சேர்ந்து செயற்பட்டது. இவை அனைத்தும் ஒருபுறம் நகர்ப்புற உயரடுக்கலும் மறுபுறம் கிராமப்புற வெகுசனங்களின் நடத்தையிலும் அணுகுமுறையிலும் ஆழமான பிளவை பிரதிபலித்தது.

கடந்த கால அரசாங்கங்களாக இருந்தாலும் சரி, அது முதலாளித்துவமாகவோ அல்லது சோசலிசமாக இருந்தாலும், நாட்டின் அபிவிருத்திப் பாதையில், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில், கிராமப்புற மக்களுக்கு பகுதியளவான திறனுடைய வேலை வாய்ப்புகளை வழங்கல் மற்றும் அடுத்தடுத்த தலைமுறைகளில் வாழ்க்கை முறை மேம்பாடு ஆகியவற்றில் அவர்கள் செய்த பங்களிப்புகளில் அவர்கள் அனைவரும் குறிப்பாக அரசியல் வர்க்கம் அதை கவனிக்காமல் கடந்த பத்தாண்டுகளில் ஒரு புதிய "கிராமப்புற நடுத்தர வர்க்கத்தை" உருவாக்குவதற்கு பங்களித்துள்ளனர். தகவல் தொடர்பாடல் என்பது சாதனைகளுக்கு மட்டுமல்லாது, அபிலாஷைகளுக்கும் முக்கியமாகவுள்ள இந்த தகவல் தொழில்நுட்ப சகாப்தத்தில், ஒரு எண்கணித முன்னேற்றமாக ஆரம்பித்து வடிவியல் நிலைகளை அடைந்தது.

எவ்வாறு வீதிகளில் இருந்த போராட்டக்காரர்கள், பசுமையான காலி முகத்திடல் கடற்பரப்பிற்குச் சென்று ஜனாதிபதி செயலகத்தைச் சுற்றி வளைத்தார்கள் என்பதுதான் வினாவாகும். இத்தகைய செயற்பாட்டின் ஆரம்ப நாட்களில் கூட, பல போராட்டக்காரர்கள் இரவு முழுவதும் தங்கியதாக எந்த அறிக்கையும் இருக்கவில்லை.

உண்மையில், சில சமூக ஊடகப் பதிவுகள் குடும்பங்களுக்கான கடற்கரை முகப்பில் உல்லாசப் பயணம் என்று கூட விவரித்தன, ஏனெனில் அவர்கள் தங்களின் பிள்ளைகளையும், ஏன் கைக்குழந்தைகளையும் கூட, வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் கொண்டு வந்தனர். இது இன்னுமொரு முன்னணியில் இலங்கை அரசின் முழுமையான தோல்வியில், அனைவரும் ஒன்றாக ஒன்றிணைந்த நிலையில் கோபம், வேதனை மற்றும் எரிச்சல் ஆகியவற்றின் உண்மையான வெளிப்பாட்டை காட்டும் ஒரு மோசமான, மாறாக மதிப்பற்ற முறையாகும்.

ஏற்கனவே, கொழும்பு நடுத்தர வர்க்கத்தினர் அரசியல் வர்க்கத்தை பல காரணங்களுக்காக முற்றிலுமாக வெறுக்கிறார்கள்  அல்லது, இல்லையெனில், அவர்களுக்கெதிராக  முறையிடுகிறார்கள். ஆயினும்கூட, சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் அவர்களின் நிரல்களில் இல்லை, இருப்பினும் எப்போதும் அதிகரித்து வரும் விலைகள் குறித்து முணுமுணுப்புகள் இருந்தன. அவர்கள் தினசரி இரவு உணவு-மேசை கலந்துரையாடல்களில் அல்லது உள்ளக உரையாடலின் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அது "எப்படியும் ஒரு உலகளாவிய நிகழ்வு" என்றும், அவர்களும் "அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்... மற்றும் வரும் ஆண்டுகளில் இன்னும் மோசமாகலாம்" என்று தீர்மானிக்கும் கல்வி வெளிப்பாடுகளின் மூலமும் திருப்திப்படுவார்கள்.

ஆரம்பத்தில், அறிக்கைகளின்படி, நகர்ப்புற நடுத்தர வர்க்கம் இறக்குமதி செய்யப்பட்ட பால் பக்கற்றுக்கள் மற்றும் பின்னர் அவர்களின் காலை உணவான பாண் மற்றும் பிற கோதுமை பொருட்கள், கடை அலமாரிகளில் இருந்து மறையத் தொடங்கிய போது பீதியடைந்தது. தீவின் பிரதான உணவாக அரிசி இருந்த போது கொழும்பின் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஐரோப்பிய காலை உணவை எவ்வாறு, எப்போது தங்களது சொந்த உணவாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர் என்பது அனைவரும் யூகிக்கக்கூடியதாகவுள்ளது. 

சுதந்திரத்திற்கு உடன் முன்னாகவும் பின்னரும் சில வருடங்களில், லண்டனில் குளிர்காலமாக இருக்கும் போது, கொழும்பு மேல்தட்டு மக்கள் தங்களது கம்பளிகளை வெளியே எடுப்பார்கள் என்று சொல்லப்படுவது வழக்கமாகும். பிந்தைய தசாப்தங்களில், அவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், அவர்கள் அட்லாண்டிக் முழுவதும், வாஷிங்டனிலும் குளிர்காலமாக இருக்கும் போது தங்களது கம்பளிகளை தூசி தட்டி உலர்த்துவார்கள்.

அந்தளவிற்கு, அவர்களின் பிரதான உணவின் திடீர் வெளியேற்றத்தின் போதான அவர்களின் பீதி புரிந்துகொள்ளத்தக்கது. சமைப்பதற்கும் வாகனம் ஓட்டுவதற்கும் எரிபொருள் முதலில் பற்றாக்குறையாகத் தொடங்கியதும், பின்னர் உடனடியாக கிடைக்காமல் போன போது அவர்களின் அவல நிலையும் அப்படித்தான் இருந்தது.

இலங்கை மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் கூற்றுப்படி, பாரம்பரிய உணவுகளான புட்டு, அப்பம் மற்றும் இடியப்பம் மற்றும் உள்நாட்டு தேநீர் (பாலுடன் அல்லது பால் இல்லாமல்) நாட்டின் தெற்கு மற்றும் வடக்கில், எந்த விலை உயர்வும் இல்லாமல் மிக அதிகமாகக் கிடைக்கும் என்பது அவர்கள் நாடு முழுவதும் சென்றமையால், கடந்த கால வருகை மற்றும் அறிக்கையிடல் மூலம் அவர்களில் பலருக்கு நன்கு தெரிந்திருந்தது. உண்மையில், கொழும்பு கடற்கரை முகப்பில் நாளாந்த கூட்டங்கள் ஒவ்வொரு நாளும் பெரிதாகவும், அதிக நோக்குடையதாகவும், உறுதியாகவும் ஆரம்பித்தமையால், "மோசமான விடயம்" கூரையைத் தாக்கும் என்று காத்திருந்தனர்.

அப்போது எங்கிருந்தோ “கோட்டாகோகம” எதிர்ப்பு தளம் தோன்றியதுடன், அது பொதுவாக "கம" அதாவது "கிராமம்"என்ற சிங்கள வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. அவர்கள் தங்களுடைய இலக்குகளை அடையும் வரை இங்கேயே இருந்தார்கள். கொழும்பின் தெருக்களில் தமக்கு அறிமுகம் இல்லாத, தமக்குத் தெரியாத மனிதர்களால் தாங்கள் மூழ்கியிருப்பதாக நகரவாசிகள் உணர ஆரம்பித்ததும் அப்போதுதான்.

அவர்களில் சிலர் பின்வாங்கினர், மற்றவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை, இன்னும் சிலர் நிலைமை கட்டுப்பாட்டை மீறுவதற்கு சாட்சியாவதால் மிகவும் பயந்து தங்களது இருப்பு நடவடிக்கைகளை மிதப்படுத்தும் என்று நம்புவதற்கு குறைந்தபட்சம் தேவை ஏற்பட்டது. தேசத்தின் பிரதான பேரணித் தளமாக விளங்கும் காலி முகத்திடலில் மக்களின் கோபத்தின் வெளிப்பாட்டிலிருந்து, ஜனாதிபதி செயலகத்தின் "ஏற்றுக்கொள்ளக்கூடிய" முற்றுகை வரை வன்முறை மற்றும் தீ வைப்பு வரை, அவர்கள் ஏதோ தவறாக இருப்பதையும், தங்களது கைகள் முற்றிலுமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டிருப்பதையும் கண்டறிய ஆரம்பித்தனர்.  

இவர்கள் யார், அவர்களை வழிநடாத்தியது யார்? அவர்களுக்கு யார் என்ன செய்தி(களை) கொடுத்தனர், ஏன், எவ்வாறு? என்பதுதான் வினாவாகும். நகரவாசிகள், ஆரம்ப கட்டங்களில், தங்கள் கோபத்தையும் விரக்தியையும் வெளிப்படுத்துவதைத் தவிர வேறு எந்த அடையாளம் காணக்கூடிய குறிக்கோளையும் கொண்டிருக்கவில்லை, இது சுமார் ஒரு வாரம் அல்லது இரு வாரமாக முற்றிலும் உதவியற்றதாக காணப்பட்டது. அவர்களின் தலைமுறை தலைமுறையாக நன்கு வளர்க்கப்பட்ட ஜனநாயக விழுமியங்களுக்கும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் நாடு தழுவிய தேர்தல்கள் மூலம் மட்டுமே அரசாங்கங்களையும் ஜனாதிபதிகளையும் மாற்றும் செயன்முறைக்கும் வெளிச் சென்று, யாரேனும் அவர்களிடம் கோத்தா இப்போது இங்குதான் போக வேண்டும் என்று அவர்கள் காதுகளில் சொன்னாலோ அல்லது கிசுகிசுத்திருந்தாலோ கூட அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயம் வேறுவிதமாக போய்க்கொண்டிருந்தது.

https://www.virakesari.lk/article/173504

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரகலய : ஒரு வருடம் கழிந்த நிலையில் - பகுதி II

Published By: VISHNU   11 JAN, 2024 | 01:40 PM

image

சத்திய மூர்த்தி

கோட்டாகோகமவில் பல மாலை நேரப் பேச்சாளர்கள் கோட்டா தலைமைத்துவமும் அரசாங்கமும் வெளியேற வேண்டும் என்ற உடனடித் தேவைகளைத் தவிர வேறு எதனையும் பேசவில்லை. அவர்களில் புத்திக்கூர்மையானவர்கள் ஏற்கனவே போராட்டத் தளத்தின் ஓரங்களில் தங்களுக்குள் கோத்தா வெளியேறிய பிறகு கிடைக்கக்கூடிய மாற்று வழி  தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்ததுடன், அவர்கள் தீர்மானிப்பதும் உடனடியாக, சுயமாக மக்கள் எதிர்ப்பின் அழுத்தத்தின் கீழ் ஏற்பட உள்ளதாகும்.

ஜனாதிபதி பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டால், கோட்டா ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்வதற்கு பாராளுமன்றம் யாரையாவது தெரிவு செய்வதற்கு பிரதமர் முன்வருவார் என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே, பிரதமர் மஹிந்தவை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோட்டாவின் கோரிக்கையை அவர்கள் மனதார வரவேற்றனர்.

அவர்களின் பார்வையில், பதவியில் இருந்த கோட்டா செய்தது போல், அவர் ஒரு "மக்கள் சதி"யில் இருந்து தப்பிக்க முடியும் என அவர்கள் நம்பாததால், அது தேசத்திற்கு ஒரு நல்ல நகர்வாக இருந்தது. அவர்களின் கணக்கிடுகையில், முதலில் அவர்கள் மஹிந்தவின் இடத்தில் ஒரு "நல்ல / சிறந்த" பிரதமரைப் பெறுவார்கள், பின்னர் பாராளுமன்றம் அவரை முறையாகத் தேர்ந்தெடுத்தவுடன் அவர் வெளியேறும் ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு முதலில் தற்காலிகமாகவும் பின்னர் நிரந்தரமாகவும் கோட்டாவின் இடத்தை பிரதியீடு செய்வார், அல்லது அவர்கள் அவ்வாறே நம்பினார்கள். SJB அல்லது எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச என்பது அவர்களின் இயல்பான தேர்வாகும்.

நிர்வாகம் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார முகாமைத்துவம் (விலை, கட்டணங்கள் மற்றும் வரி உயர்வு போன்றவை) ஆகியவற்றின் தற்போதைய தேக்கநிலைக்கு சஜித்தின் தயக்கமே முக்கியக் காரணம் என்று தொடர்ந்து விமர்சனங்கள் இருந்த போதிலும், அவர் தனது கணக்கீடுகளைச் சரியாக மேற்கொண்டதாகத் தெரிகிறது. சுற்றயலில் இருந்து கனவு காண்பவர்களைப் போலல்லாமல், அந்த இடத்தின் மீதும் அந்த இடத்திலும் இருப்பவர், பிரதமராக இருந்தாலும் சரி, அதற்கும் மேலாக ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, பாராளுமன்ற பெரும்பான்மையை தன்னால் திரட்ட முடியாது என்பதை அறிந்திருந்தார். நாட்டை ஆளும் நோக்கத்திற்காக அல்ல, ஒரு வழி அல்லது வேறு.

ஓராண்டுக்கு மேலாகியும், ஒரு காலத்தில் தேசிய அரசியலின் தந்திரக்கார நரியாக இருந்த தனது மறைந்த உறவினரான ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்குப் பிறகு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால், ஒரு காலத்தில் வேறு பெயரில் ஐ.தே.க முத்திரையின் கீழ் இருந்த எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி கூட்டணியை பிளவுபடுத்த முடியவில்லை. தனிப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ராஜபக்ச (வாசிக்க: மஹிந்த) தலைமைத்துவத்திற்கு மோசமான மதிப்பெண் இருந்தபோதிலும், "ஆளும்" SLPP கூட்டணியை அவரால் பிரிக்க முடியுமா என்ற வினா பலமாக இருந்தாலும், அது எழவில்லை.

முடிவில், அரகலய எதிர்ப்பாளர்களின் நோக்கமும் இலக்கும் தலைமைத்துவ மாற்றமா? ஆம் மற்றும் இல்லை. அந்த நேரத்தில் கூட, கோட்டாகோகம மைதானத்தில் வெகுசனங்களுடன் திறம்பட கலந்திருந்த ஜே.வி.பி தலைமையும் அங்கத்தவர்களும் "தலைமைத்துவ மாற்றம்" அல்லது அதேயளவு நம்பிக்கையுடன் குறைந்தபட்சம் "அமைப்பு மாற்றத்தை" விரும்பினர்.

அதிலும், கடந்த தசாப்தத்தில் ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த பிரிவான, அதிகம் அறியப்படாததும் விரைவில் மறக்கப்படக் கூடியதுமான முன்னணி சோசலிஸ்ட் கட்சி (FSP), ஒரு காலத்தில் போராளியாக இருந்த பிரேம்குமார் குணரட்னத்துடன், இதன் தலைவரான அவுஸ்திரேலிய பிரஜையான நோயல் முதலிகே என்ற சந்தேகப் பெயருடன் ஸ்தாபிக்கப்பட்டது. ஜே.வி.பி.யின் மாணவர் மற்றும் ஆசிரியர் பிரிவு அனைத்தையும் FSP தன்னால் எளிதில் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்று அதிகமாக கூறினாலும், அவர்களின் பலம் உணவு மற்றும் எரிபொருளைக் கோரி, கொழும்பில் நடந்த பன்முகப்படுத்தப்பட்ட அரகலய வீதிப் போராட்டங்களில், எதுவித அதிகாரமும் உரிமையும் இல்லாமல் வெளிப்பட்டதுடன், கோட்டகோகம கிராம கைகலப்பில் மட்டும் இணைந்தது.

அப்படியானால், அனைத்து வன்முறை மற்றும் தீக்குளிப்புகளுக்குப் பின்னால் யார் இருந்தனர்? சரத் வீரசேகர இனவாதமாக தமிழர்களை அடிக்கடி நியாயப்படுத்த முடியாத வகையில் இலக்கு வைத்து கூறும் பலவற்றை நீங்கள் ஏற்காமல் இருக்கலாம் அல்லது நிராகரிக்கலாம். ஆனால் அரகலய வன்முறை பற்றிய அவரது வினாக்களுக்கு, தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பின் பாரிய நலன் அடிப்படையில் ஊக்குவிப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் பதில்கள் அவசியமாகும்.

"சமூகப் புரட்சி" தளத்தில், வாக்குப்பெட்டி மூலமாக சட்டப்பூர்வமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஜே.வி.பி.க்கு ஒரு விடயமாகும். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடாத்தப்படும் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து போட்டியிடுவதன் மூலம் கட்சி அதைத்தான் செய்து வருகிறது. சில முகம் தெரியாத தலைவர் அல்லது தலைவர்கள் ஒரு "நகர்ப்புற கிளர்ச்சியை" உருவாக்க முயற்சிப்பதும் அதைவிட மோசமானதுடன், கடந்த ஆண்டு இடம்பெற்ற மே 9 தீவைப்பு மற்றும் பிற விடயங்கள் அவ்வாறு தோற்றமளிக்கத் தொடங்கியது.

ஜே.வி.பி., ஜனநாயக முன்னெடுப்புகளுக்கானது என்று தொடர்ந்து சுட்டிக்காட்டும் போது, அதுவே இலக்காக இருந்தால் "சமூகப் புரட்சி"க்கான அவர்களின் அழைப்பும் தோட்டா மூலம் அல்லாது வாக்குச் சீட்டில் இருந்து பாய வேண்டும், வேறு எந்த சக்தி அதை வேறு வழியில் விரும்பியது. அரசாங்கம் தனது கட்டளையின் பேரில் பரந்த மற்றும் ஆழமான புலனாய்வு இயந்திரத்தின் மூலம் முதலில் கண்டறிந்து, அடுத்ததாக தேசத்தை நம்பிக்கைக்கு எடுத்துக் கொள்ளாத வரை, யாரையும் குறிப்பிடுவது முறையற்றதுடன் சாத்தியமற்றதாகும்.

சில மாதங்களுக்கு முன், ஒன்றுக்கும் மேற்பட்ட அரசாங்க அமைச்சர்கள், நவம்பர் மாதம் நடந்த வன்முறைக் கிளர்ச்சி குறித்த உளவுத்துறைத் தகவல் தங்களிடம் இருப்பதாகவும், அதற்காக சதி-அமைப்பாளர்கள் பயிற்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியதாகவும் பதிவு செய்தனர். அரசாங்கம் குறிப்பிட்ட காலக்கெடு வந்தது, ஆனால் அதுபோன்ற குறிப்பிடப்பட்ட செயற்பாடு எதுவும் இருக்கவில்லை.

எண்பதுகளின் பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் நகர்ப்புறக் கிளர்ச்சியில் இத்தகைய முயற்சிகளை முறியடித்ததற்காக நீங்கள் உளவுத்துறை பொறிமுறைக்கு நன்றி கூறுவதுடன், நீங்கள் குறைந்தபட்சம் இப்போதைக்கு கட்சியின் ஈடுபாட்டையும் தவிர்க்க முடியும். FSP க்கு அதற்கான உள்நோக்கமும் பொறிமுறையும் இருக்கிறதா அல்லது மார்க்சிய-லெனினிச சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வேறு கூறுகள் தங்களின் நேரம் நன்றாக இருக்கும்போது தாக்குவதற்காக இறக்கைகளில் காத்திருக்கின்றனவா? என்பதுதான் வினாவாகும். கோட்பாட்டளவில், அவர்கள் சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதிகள் உட்பட தீவிர வலதுசாரிகளாக இருக்கலாம்.

குறைந்த பட்சம், LTTE யின் மறுமலர்ச்சி அல்லது புதிய தமிழ் போராளிக் குழுக்களின் நுழைவு பற்றி யாரும் பேசவில்லை, அவை கிளர்ச்சி செயன்முறையில் குறைவாகவும், அதிகளவில் பயங்கரவாத அமைப்புகளாகவும் செயற்படுகின்றன. தொண்ணூறுகளில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் LTTE அதைத்தான் முயற்சித்து, பிரதேசத்தையும் நகர்ப்புற-பணயக் கைதிகளையும் நீண்டகாலமாக வைத்திருக்க தவறிய போதிலும், நகர்ப்புற கொரில்லாக்களிடமிருந்து அவர்களின் நோக்கங்களும் முறைகளும் எப்படி, ஏன் முற்றிலும் வேறுபட்டவை என்பதை வல்லுநர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். 

LTTE க்குப் பின்னரான பகுப்பாய்வுகள், எந்தவொரு சர்வதேச அங்கீகாரமும் இல்லாமல் பிரதேசத்தை வைத்திருப்பதும், நிர்வாக அமைப்பை நடாத்த விரும்புவதும் அதன் ஆரம்பகாலத் தோல்விகளில் ஒன்றென்பதுடன், இது இறுதியில் அதன் முடிவைத் தேடியது என வெளிப்படுத்துகின்றன. 

அப்படியானால், யார் அதனை செய்தார்கள், ஏன்? இது பரந்த அர்த்தமும் தலைப்பும் கொடுக்கப்பட்ட "ஆட்சி மாற்றத்திற்கான" ஒரு பாரிய திட்டமாக இருந்ததா, அது முந்தையதை விடவும் பிந்தையதை விட அதிகமாகவும் விரும்பும் உள்ளூர் நலன்களை ஈர்க்க மட்டுமே இருந்ததா? அப்படியானால், இது வேறு ஒரு பெயரில், அதிகமான உள்ளூர் அரசியல் மற்றும் மக்கள் கண்ணுக்குத் தெரியாத (வெளிநாட்டு?) கைகளால் இயக்கப்பட்ட வேறு வடிவத்திலான, "ஆட்சி மாற்றம்" மட்டும்தானா? 2015 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியது போல், மாறாக கௌரவமாக? அப்படியானால், வரவிருக்கும் "அமைப்பு-மாற்றம்" பற்றிய இந்த விரிவான திட்டங்கள் மற்றும் கிசுகிசுப்பான பிரச்சாரம் ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக, கோட்டாகோகம மைதானத்தில் கூடியிருந்த, ஆனால் சோர்வாக இருந்த திரளான மக்கள் கரகோசத்துடன் அல்லது மகிழ்ச்சியாக, கோட்டாபய நாட்டை விட்டு (தாய்லாந்து செல்லும் வழியில் மாலைத்தீவுக்கு) வெளியேறினார் என்ற நிமிடச் செய்தி தெரிய வந்ததும் பரவலடைந்து செல்ல ஆரம்பித்தனர். அப்போது, அவர்கள் திடீரென்று தோன்றியதால், போராட்டத் தளத்தில் இருக்கத் தீர்மானித்த அமைப்பு மாற்றகாரர்களும், பாதுகாப்புப் படையினரின் அனுதாபமற்ற சில தூண்டுதலுக்குப் பிறகு, சென்று விட்டனர். அரகலய வென்றது, ஆனால் அது வெல்லவும் இல்லை.

இது நம்மை விக்கிரமசிங்கவின் ஜனாதிபதிப் பதவி விடை காண்பதாக உறுதியளித்த கடைசி வினாவிற்கு அழைத்துச் செல்கிறது. அவரது குடும்ப வீட்டை தீக்கிரையாக்கியது உட்பட, பல தீவைப்பு சம்பவங்கள் தொடர்பான முழு அளவிலான விசாரணைகளுக்கு உத்தரவிடுவதன் மூலம், ஜனாதிபதி சில வட்டாரங்களில் சில நம்பிக்கைகளையும், மற்றவர்களுக்கு சாத்தியமான வெளிப்பாடுகள் பற்றிய அச்சத்தையும் ஏற்படுத்தினார். அரசாங்கத்தின் வாக்குறுதி மற்றும் அத்தகைய விசாரணைகளின் ஆரம்ப முன்னேற்றத்தைத் தொடர்ந்து, SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் எரிக்கப்பட்ட சொத்துக்களுக்கு இழப்பீடு கோரி நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தனர்.

பின்னர், அரகலய போராட்டங்கள் வன்முறையாக மாற ஆரம்பிக்கும் போது, மேலிருந்து கீழாக, மோசமான கீழ்ப்படியாமையின் மீதுள்ள கட்டளை தோல்வி பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க, தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆயுதப்படைகளின் சிரேஷ்ட தலைவர்களின் மூவரை கொண்ட குழுவின் அறிக்கையும் சமமாக மறக்கப்பட்டு உள்ளது.

இந்த கண்டறிவு தீவைப்புச் சம்பவங்களில் சிலவற்றைத் தணிக்குமாறு பொலிசாரால் கோரப்படும்போது, உள்ளூர் களக் குழுக்களின் விருப்பமின்மையை ஓரளவுக்கு விளக்கலாம். தீவைக்கப்பட்ட இடங்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் முடக்கப்பட்ட இருப்பினும் தாமதமான செய்தி அறிக்கைகள் கூட, பதவியில் உள்ள அமைச்சர்களின் வீடுகளுக்கு வெகு தொலைவில் அல்லாத இடங்களில் நிலை கொண்டிருந்த இராணுவப் பிரிவுகள் சொத்துக்கள் தீயிடப்படும் போது குடும்ப உறுப்பினர்களோ அல்லது ஏன் உள்ளூர் பொலிசார்  கேட்ட போது கூட குறுக்கிட மறுத்துவிட்டதுடன், குற்றவாளிகள் தங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு தங்களுடைய செயலைச் செய்தனர்.

இங்கிருந்து எங்கே? இவை அனைத்தும் பல வினாக்களை எழுப்புகின்றன.

அரகலய போராட்டத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் மற்றும் அது எடுத்த அல்லது எடுக்கப்பட்டதாகக் காணப்பட்ட வடிவம் போன்றவற்றை ஆராய்வதற்கு ஜனாதிபதி / பாராளுமன்றம் ஏன் ஒரு ஆணைக்குழுவை நியமிக்கவில்லை? 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக குறைந்தது இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்ற விசாரணைகள் இடம்பெற்றன (தற்போதைய ஜனாதிபதி ரணில் குறைந்த மக்கள் ஆதரவுள்ள அதிகமாக தலையிடுகின்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் கீழ் சக்திவாய்ந்த பிரதமராக இருந்த போது சட்டமன்றம் நிறைவேற்று அதிகாரத்தை நம்பாதது போல்? ஏன், சிறிசேனா மற்றும் அவரது உயர்மட்ட உதவியாளர்கள் மீது கோவையிடப்படாத சித்திரவதை சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வ மற்றும் நிதியியல் பொறுப்புக்கூறலை நிர்ணயிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூட இப்போது உள்ளது.)

நேர்மையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை  அப்போது ஆட்சியிலிருந்த , இன்னமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியை சீர்குலைக்கும் இயலளவுடைய ராஜபக்ஷக்களின் குற்றத்தை அம்பலப்படுத்தக்கூடும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறதா / பயப்படுகிறதா? அல்லது, இவ்வாறான விசாரணைகள் அனைத்தையும் தாண்டி, முன்னாள் ஆளும் முன்னணி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவ்வப்போது பேசிக் கொண்டிருக்கும் ஒரு வெளிநாட்டுக் சக்தி / சக்திகளை "அம்பலப்படுத்த" போகின்றதா? 

அப்போதைய பாதுகாப்புப் படைகளின் பிரதானியான (CDS) ஜெனரல் சவேந்திர சில்வா, அச் சந்தர்ப்பத்தில் செயற்படவில்லை என்பது மட்டுமல்லாமல், பாதுகாப்புச் செயலாளரும், ஒரு காலத்தில் சக ஊழியருமான ஜெனரல் கமல் குணரத்ன, மேலும் ஆயுதப் படைகளின் அதிஉச்ச தளபதியாக இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை அலட்சியப்படுத்தி அல்லது புறக்கணித்துவிட்டார் என்ற மூன்று உறுப்பினர்களைக் கொண்ட படைத்தரப்பின் விசாரணை தொடர்பாக புலனாகும் நடவடிக்கை ஏன் இல்லை? அல்லது அது இந்த விடயத்தில் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் உள்ள சம்பிரதாயப் பதவி மாத்திரமா? தேசிய பத்திரிக்கையின் ஒரு பிரிவினால் "தேர்ந்தெடுக்கப்பட்ட" அறிக்கையை விட ஜெனரல் சில்வா வேறொரு பதிப்பை வழங்குகிறாரா?

தற்போதைய ஜனாதிபதி விக்கிரமசிங்க உட்பட அரசியல்வாதிகளின் சொத்துக்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தொடர் தீவைப்பு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரின் பல விசாரணைகளுக்கு என்ன நடந்தது? விக்கிரமசிங்க வீட்டின் மீதான தீவைப்புத் தாக்குதலுக்கு தலைமை தாங்கியதற்காக/பங்கேற்றதற்காக ஒரு முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை, நீதிமன்றங்கள் அவருக்கு பிணை வழங்கும் வரையில் (அவர் மீது வேறு வழக்குகளும் இருந்தன) அரசாங்கம் தடுத்து வைத்துள்ள போது, ஏன் அந்த வழக்குகளில் ஒன்று நீதித்துறையின் மனநிலையையும் செயன்முறையையும் சோதிப்பதற்காக ஆவது  நீதிமன்றங்களுக்கு, எடுக்கப்படவில்லை?. முன்னர் அறியப்படாத அரகலயா வகையின் வெகுஜன இயக்கங்களுக்கு மத்தியில் குற்றவியல் தவறை சரிசெய்வதில் குறைந்தளவு முக்கியத்துவமாக உள்ளதா?

இந்த வினாக்களுக்கான பதில்கள், அரகலய ஆட்சி மாற்றத்திற்கான ஓர் அப்பாவி இயக்கம் மட்டுமே வேறு ஒன்றுமல்ல, ஓர் அமைப்பு மூலமான ஒரு "சமூகத் தீர்மானத்தை" தூண்டுவதற்கான அல்லது அமைப்பு-மாற்றம் மூலமாக "சமூகப் புரட்சியை" வசதிப்படுத்துகின்ற கருத்தியல் முன்முயற்சியா அல்லது அதனுள் அறியப்படாத பல விடயங்கள் உள்ளனவா? ஆகியவற்றில் எதைப் பற்றியது என்பது தொடர்பான அறிவை வழங்குவதாக இருக்க வேண்டும்.

ஆயுதப் படைகளில் இருந்து வெளியேறுவது அதிகரித்து வருவதாகவும், தப்பியோடியவர்கள் குற்றவாளி குழுக்களில் சேர்வது அல்லது அவற்றை உருவாக்குவது குறித்த கரிசனங்கள் மற்றும் துப்பாக்கிகளை வாடகைக்கு எடுப்பதை அவர்கள் செய்வது போல் வருகின்ற செய்திகளுக்கு மத்தியில், வெளிப்படையானதை விட அதிகமாக அடையாளப்படுத்தக்கூடிய இந்த பல சமிக்ஞைகளில் எதையும் தேசம் புறக்கணிக்கவோ அல்லது ஓரம்தள்ளவோ முடியாது.

"ஆளும்" SLPP இன் அதிருப்தி உறுப்பினரான கடந்த ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும, கடந்த இரண்டு ஆண்டுகளில் முப்படைகளிலிருந்தும் 27,000 இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர் என்று சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது "ஆபத்துகளை" ஏற்படுத்தினால், இப்போது பல வாரங்களாக பதவிகளில் CDS இல்லை, இது ஒட்டுமொத்த இராணுவ நிர்வாகத்திலும் ஒரு பரந்த இடைவெளியை விட்டுச்செல்கிறது.

வெளிப்படையான சாத்தியக்கூறு என்னவென்றால், அரசியல்-உந்துதல் கொண்ட இலக்கு-நடைமுறைகளைத் தவிர பணத்திற்கான-கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு அப்பால், இந்த தப்பியோடியவர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இயல்பில் தங்களது சேவைகளை வழங்குவதில் உண்மையான ஆபத்து உள்ளது. இனப் போரின் முடிவிலும் அதற்கு அப்பாலும், சில மேற்கத்திய நாடுகள் உடனடியாக பல படைப்பிரிவுகளை குறைக்க அல்லது கலைக்க சிபாரிசு செய்தபோது, அது இலங்கைக்கு “உயர்வாக பத்திரப்படுத்தப்பட்ட தேசம்" என்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. 

நிச்சயமாக, அந்த ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நாடு என்ன செய்ய முடியும் என்பதற்கு மேற்கு நாடுகளிடம் பதில் இல்லை.

தலைநகர் கொழும்பில் ஆரம்பித்து நகர்ப்புற புனரமைப்பு மற்றும் அழகுபடுத்தல் போன்ற குடியியல் செயற்திட்டங்களில் அவர்களின் சேவைகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கும், போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாவின் முடிவு அவர்களை கவர்வதற்கு தவறிவிட்டது. நிச்சயமாக, அந்த உத்தரவுகளை சவாலுக்குட்படுத்தாத படையினர், விடுதலைப்புலிகளை ஒழிப்பதற்கான தேசிய நோக்கத்திற்காக கையெழுத்திடவில்லை என்பதில் தெளிவாக இருந்ததுடன், நகரின் சாக்கடைகளை நிர்மாணித்து சரிசெய்வதில் நிறைவாக இணைந்தனர். 

2010ஆம் ஆண்டு போருக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தலில், படையினரின் ஒருகாலத்தில் தலைவராக இருந்தவரான, “பீல்ட் மார்ஷல்” சரத் பொன்சேகா மற்றவருக்கு சவால் விடுத்தபோது, இலகுவாக வெற்றிபெற்ற அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவுக்கு அந்த வாக்குகள் 2015 இல் கிடைக்கவில்லை. 2010 இல் மஹிந்த வெற்றி பெற்றார், 2015 இல் தோல்வியடைந்தார். 

ஜனாதிபதிக்கும் அரசியலமைப்புச் சபைக்கும் (CC) இடையே நடந்து கொண்டிருந்த பல்நிலையான,  பல் அடுக்கான கடுமையான போருடன் ஒப்பிடும் போது, உள்ளக, வெளியக அல்லது இரண்டாக இருந்தாலும், பாதுகாப்புப் துறையில் முதற் தடவையாக நாட்டின் உயர்நிலை பொலிஸ் அதிகாரியான பொலிஸ்மா அதிபர் (IGP)க்கு மீண்டும் மீண்டும் நீட்டிப்பு வழங்கப்பட்டதும் தவிர்க்க முடியாத வகையில் அவருக்கு பதிலாக "பதில் பொலிஸ்மா அதிபர்" நியமிக்கப்பட்டதாக பாராளுமன்றுக்கு அறிக்கை இடப்பட்டமை, ஓர் சிறிய சமரசமாக இருக்கலாம். 

இவை அனைத்திற்கும் இடையே இறுதியான வினாவான, அரகலய ஒரு தவறான நிர்வாகத்தால் துளிர்விட்ட புரட்சியா, அல்லது ஒரு சீர்குலைந்த பாதுகாப்பு நிர்வாகமா, ஆனால் வெளிப்படுத்தப்படாத அளவிற்கு தெளிவற்ற இலக்குகள் மற்றும் வாக்குறுதிகள் எதுவாக இருந்தாலும் சரி, எதற்காக வெகுசனப் போராட்டம் அது அங்கிருந்து அடைய வேண்டியதை அடையவில்லை? என்பதற்கான பதிலில் தங்கியிருக்கின்றது. 

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

https://www.virakesari.lk/article/173671

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.