Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   18 JAN, 2024 | 09:47 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்களுக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு கிடையாது. அடுத்த வாரம் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக 224 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களுக்கு நாட்டு மக்கள் தேர்தல் ஊடாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தினர்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் காரியாலயத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சிவில் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

சுதந்திர ஊடக மையத்தின் செயலாளர் லசந்த சில்வா குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்பினால் நாட்டு மக்கள் சொல்லொன்னா துயரங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்குவதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காகவே மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகிறார்கள். ஆகவே, மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைகளுக்கு அமைய செயற்பட வேண்டும். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு மதிப்பளித்து மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்.

ஊடக மற்றும் பேச்சு சுதந்திரத்தை முடக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முன்னிலைப்படுத்தி மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும். மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயற்படும் தரப்பினருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் சட்ட வகிபாகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும்,பாராளுமன்றத்துக்கு மக்களாணை என்பதொன்று கிடையாது.

பல பொய்யான காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு தேர்தல்  பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை  மறுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழிக்கும் வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பொருளாதார காரணிகளுடன் தொடர்புப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுவதும் பயங்கரவாத செயற்பாடு என்று சித்தரிக்கும் வகையில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக சட்டங்களுக்கு கையுயர்த்துவதை மக்கள் பிரதிநிதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல்  நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நதீஷானி பெரேரா குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் ஊடாக  நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை முடக்கும் வகையில் சட்டமியற்றும் அதிகாரம் ஆட்சியாளர்களுக்கும், மக்கள் பிரநிதிகளுக்கும் கிடையாது. ஊழல் முறைகேடுகளினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்றும்,பொருளாதார படுகொலையாளிகள் யார் என்பதையும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.மாறாக மக்களின் உரிமைகளை முடக்கும் வகையில் சட்டமியற்றப்படுகிறது. இது முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகும் என்றார்.

மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிடுகையில், 

பாரதூரமான இரண்டு சட்டமூலங்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் கடும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அந்த சட்டத்தை உருவாக்க அரசாங்கம் உத்வேகத்துடன் செயற்படுகிறது. இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் பொருளாதார பாதிப்பு தீவிரமடையும்,ஆகவே மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.நிக்ஷன் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்க்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் மக்களின் கருத்து சுதந்திரத்தை முழுமையாக முடக்கும்.சமூக வலைத்தளங்களை இலக்காகக் கொண்டு இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.அரசாங்கத்துக்கு சார்பாக ஒருசில ஊடகங்கள் செயற்படுகின்றன நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளிக்கொணரப்படுகின்றன.

இந்த சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஆணைக்குழுவில் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார்கள்.இவர்களின் சுயாதீனத்தன்மை ஜனாதிபதிக்கு பொறுப்புடையதாக உள்ள நிலையில் 22 மில்லியன் மக்களின் கருத்து சுதந்திரத்தை ஐந்து பேர் எவ்வாறு தீர்மானிக்க முடியும். அத்துடன் இந்த சட்டமூலம் தொடர்பில் மக்களின் அபிலாசைகள் மற்றும் நிலைப்பாடு ஏதும் கேட்கப்படவில்லை.நாட்டு மக்களிடமிருந்து அரசியல்வாதிகளை பாதுகாப்பதற்காகவே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆகவே மக்கள் பிரதிநிதிகள் மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/174206

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலத்தை முற்றாக எதிர்க்கின்றோம் - ஐக்கிய மக்கள் சக்தி

Published By: RAJEEBAN   18 JAN, 2024 | 12:24 PM

image

உத்தேச நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாக பிரதான எதிர்கட்சியான ஐக்கியமக்கள் சக்தி தெரிவித்துள்ள அதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன  இது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் என்பது உடன்பட மறுப்பவர்களை சிவில் சமூகத்தினரை ஒடுக்குவதற்கான ஒரு வழிமுறை என தெரிவித்துள்ள உள்நாட்டு சர்வதேச அமைப்புகள் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளன.

எனினும் பலரின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் அரசாங்கம் தொடர்ந்தும் அந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவது குறித்து உறுதியாக உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களை முன்வைக்குமா என்ற  கேள்விக்கு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நாங்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

எனினும் அரசாங்கம் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால் நாங்கள் திருத்தங்களை முன்மொழிவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் கேள்வி எழுப்பியவேளை அவர் இந்த விடயம் குறித்து இன்னமும் தாங்கள் தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்னமும் ஆராயவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174223

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினை மக்கள் பிரதிநிதிகள் எதிர்க்கவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை

20 JAN, 2024 | 11:44 AM
image
 

முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்ட முன்வரைவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நாடாளுமன்றப்பிரதிகளுக்கும் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தினரால் நேற்று வெள்ளிக்கிழமை (19) இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான சி.சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா), இரா.சாணக்கியன்,   ஆகியோருக்கு இது தொடர்பான வேண்டுகோள் கடிதங்கள் அவர்களது அலுவலகங்களில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. 

கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் முன்வைப்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.

gbjkmnh.gif

அதே நேரம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்திற்கெதிராக மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் திங்கட்கிழமை (22) காலை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் போராட்டம் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதுடன், தாங்களும் அப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்திற்கு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எதிர்த்து வாக்களிப்பதுடன் மாவட்ட மக்களின் எதிர் நிலைப்பாடான கருத்துக்களையும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவேண்டும் என்ற வேண்டுகோளில், 

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு அவர்களே மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகம் சார்பாகத் தங்களுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கை யாதெனில் , இலங்கை அரசானது இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக விழுமியங்களையும் அடியோடு வேரறுக்கின்ற செயல்பாடுகள் காலங்காலமாக அரங்கேற்றிக்கொண்டே வருகின்றன.

lak.gif

குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கூறலாம். அதேபோன்று இவ்வாறான சட்டங்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகங்களைக் குறிவைப்பதோடு அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இல்லாது செய்வதற்க்குப் பயன்படுத்தப்படுகின்றமை யாவரும் அறிந்த யதார்த்தமாகும்.

அந்த வகையில் தற்போது வரைபு செய்யப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமானது இவ்வாறே காணப்படுகின்றது.

குறிப்பாகச் சிறுபான்மைச் சமூகமாக நாம் கருத்தில் கொள்வது யாதெனில் எதிர்காலங்களில் சுதந்திரமாகத் தகவல்களை அணுகுவதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் பாரியதொரு அச்சுறுத்தலாக இச்சட்டம் செயல்படும் என்பதில் எவ்வி மாற்றுக் கருத்தும் இல்லை. 

ஆகையால் சிவில் சமூகமாக மட்டக்களப்பு மாவட்டத்தி பிரதிநிதி என்ற வகையில் நாம் முன்வைக்கும் கோரிக்கையானது எதிர்வரும் 22,23 ஆம் திகதிகளில் இலங்கைப் நாடாளுமன்ற விவாதத்தில் எடுத்துக் கொள்ள இருக்கும் இன்நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட வரைபைத் தாங்கள் எதிர்ப்பதோடு, சிறுபான்மைச் சமூகத்தினுடைய பார்வையினையும் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இச்சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் தங்களை வேண்டிக்கொள்கின்றோம்.

இத்தருணத்தில் சிவில் சமூகம் என்ற அடிப்படையில் ஒரு விடயத்தை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம். மக்கள் பிரதிநிதி என்ற வகையில் குறிப்பாக சிறுபாண்மைச் சமூகங்களி பிரதிநிதி என்ற வகையில் எங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாப்பது தங்களது அடிப்படை கடமை என்பதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/174377

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் அரசாங்கத்தை மேலும் ஏதேச்சதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் - எரான்

Published By: RAJEEBAN   23 JAN, 2024 | 10:33 AM

image

நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் மக்களின் பேச்சுசுதந்திரத்திற்கு பாரிய அடியாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கங்களில் ஒன்று என அரசாங்கம் தெரிவிக்கின்றது எனினும் அந்த சட்டமூலத்தில் பெண்கள் சிறுவர்கள் என்ற வார்த்தையே இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் பொலிஸார் நீதிமன்ற உத்தரவின்றி பத்திரிகையாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகத்திற்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தில் ஜனநாயக விரோத அம்சங்கள் உள்ளன இந்த சட்டமூலம் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நேரடிகண்காணிப்பின் கீழ்; ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனையையும் இந்த சட்ட மூலம் முன்வைக்கின்றது இதுவரை காலம் நீதிமன்றங்கள் அனுபவித்த அதிகாரங்கள் எதிர்காலத்தில் இந்த ஆணைக்குழுக்களிற்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலம் அரசாங்கத்தை மேலும் அதிகளவு ஏதேச்சாதிகார தன்மை வாய்ந்ததாக மாற்றும் மக்களின் உரிமைகளிற்கு இது எதிரானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174583

  • கருத்துக்கள உறவுகள்

Parliament-Sri-Lanka-2.jpeg?resize=750,3

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பில் 83 ஆதரவு வாக்குகள்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்றும் (23) நாளையும் (24) நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

சில நிமிடங்களுக்கு முன், இந்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

சட்டமூலம் மீதான விவாதத்திற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இணையவழி  அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

https://athavannews.com/2024/1366898

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமூக ஊடகங்களில் ஆபாசபடங்கள் பல மடங்காக அதிகரிப்பு; சைபர் குற்றங்களும் மிகவும் அதிகம்; இதற்காகத்தான் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் - டிரான் அலஸ்

Published By: RAJEEBAN   23 JAN, 2024 | 02:37 PM

image

கடந்த வருடம் சமூக ஊடகங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேலான நிர்வாணப்படங்கள் பரிமாறப்பட்டன என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் 8000 சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து  உரையாற்றுகையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

2024 இன் முதல்வாரங்களில் சமூக ஊடகங்களில் 500க்கும் மேற்பட்ட ஆபாசபடங்களை தங்களிடையே பரிமாறிக்கொண்டுள்ளனர். கடந்த வருடம் 6690 இணையவழி குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த புள்ளிவிபரங்கள் சிஐடியினரால் பதியப்பட்டவை மாத்திரமே வெளிவராத சம்பவங்கள் பல இருக்கலாம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கிளர்ச்சிகள் இனமத ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குழப்பங்களை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டவை எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் பழிவாங்கும் நோக்கமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/174613

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: DIGITAL DESK 3   24 JAN, 2024 | 03:23 PM

image

(எம்.நியூட்டன்)

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்துக்கு எதிராக இன்று புதன்கிழமை (24) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

ஜனநாயகத்தை அச்சுறுத்தாதே, நிகழ் நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு, ஊடகங்களை சமூக ஊடகங்களை  நசுக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தை மீளப்பெறு போன்ற பல கோரிக்கைகள் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20240124-WA0034.jpg

IMG-20240124-WA0037.jpg

IMG-20240124-WA0038.jpg

https://www.virakesari.lk/article/174698

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் குறித்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பு - 97 வீதமானவர்கள் எதிர்ப்பு

Published By: RAJEEBAN   24 JAN, 2024 | 02:58 PM

image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து  மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர்.

sms_online.jpg

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து  மேற்கொள்ளப்பட்ட குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் தங்கள் கருத்துக்களை தெரிவித்தவர்களில் 97 வீதமானவர்கள் உத்தேச சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலைவரை குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பில் கலந்துகொண்ட 1531 பேரில் 1492 பேர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இலங்கையின் மக்களிற்கான தகவல்தொழில்நுட்ப துறையினர் என்ற குழுவினர் இந்த குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை நடத்துகின்றனர்.

தகவல்தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த குறுஞ்செய்தி ஊடான சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளிற்காக சிறைத்தண்டனையையும் அபராதத்தையும விதிக்க முடியும்இ இந்த சட்டமூலத்தினால் எதிர்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் முடக்கப்படலாம் ஊழல் குறித்த பத்திரிகையாளர்களின் செய்தியிடல் மௌனமாக்கப்படலாம் தகவல்தொழில்நுட்ப துறை மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளலாம்  என எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து தங்கள் கரிசனைகளை முன்வைத்துள்ள  தகவல்தொழில்நுட்ப துறைசார்ந்தவர்கள் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த மக்களின் கருத்தை அறிவதற்காக குறுஞ்செய்தி சர்வஜனவாக்கெடுப்பை ஆரம்பித்துள்ளனர்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த தங்களின் குரல்கள் செவிமடுக்கப்படுவதற்கான வாய்ப்பை பொதுமக்களிற்கு ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/174696

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி, சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

https://thinakkural.lk/article/289321

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது!

24 JAN, 2024 | 07:38 PM
image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சபைக்கு சமர்ப்பித்திருந்த நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று புதன்கிழமை (24) இரண்டாவது நாளாக இடம்பெற்ற நிலையில் மாலை 5மணியளவில்  விவாதம் நிறைவுக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. சட்ட மூலத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பைக் கோரினார். 

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் நிகழ்நிலை காப்புச்  சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 46 மேலதிக வாக்குகளினால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இதில் சட்ட மூலத்துக்கு ஆதரவாக அரசுடன் இணைந்து  எதிர்கட்சி தரப்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான துமிந்த திசாநாயக்க, சுயாதீன எதிரணி எம்.பி. யான நிமல் லான்ஸா , அலிசப்ரி ரஹீம், ஜோன்  செனவிரத்ன. எ.எல்.எம். அதாவுல்லா, அரச தரப்பு எம்.பி.யான ரொஷான் ரணசிங்க , ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான வடிவேல் சுரேஷ்  ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிராகவே வாக்களித்தன. 54பேர் வாக்களிப்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

அதன் பிரகாரம் நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் 46 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபைக்கு அறிவித்தார்.

https://www.virakesari.lk/article/174730

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20 ஆவது திருத்தத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்துக்கு நேரிடும் - கிரியெல்ல சாடல்

Published By: VISHNU  24 JAN, 2024 | 05:35 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்  என்பனவற்றில் சிங்கப்பூர் முன்னேற்ற நிலையில் இல்லை. ஆகவே சிங்கப்பூர் நாட்டின் மாதிரியிலான வகையில் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு நேர்ந்த கதியே நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கும் நேரிடும். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை குறிப்பிடும் சகலரையும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிக்கும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற உத்தேச நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/174712

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

25 JAN, 2024 | 11:53 AM
image

ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (25) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தின் முன் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெறும் இப்போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் அணி திரளுமாறு யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/174766

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் தமது கருத்துக்கு மாறுபாடான கருத்தை கூறுபவர்களின் தொண்டையை அரசு நசுக்குவதற்கு போதாது என்று மேலதிகமாக இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதோ.

இந்த சட்டம் நடைமுறையில் பிரயோகம் செய்யப்படும் போதே பலருக்கு இதன் தாற்பரியம் புரியக்கூடும்.

இணைய தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் சட்டம் பற்றி இங்குள்ள (யாழ்) கருத்தாளர்கள் கருத்து கூற ஆர்வப்படவில்லையோ. 

 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நியாயம் said:

இலங்கை நாட்டில் ஏற்கனவே உள்ள சட்டங்கள் தமது கருத்துக்கு மாறுபாடான கருத்தை கூறுபவர்களின் தொண்டையை அரசு நசுக்குவதற்கு போதாது என்று மேலதிகமாக இப்படி ஒரு சட்டம் வந்துள்ளதோ.

இந்த சட்டம் நடைமுறையில் பிரயோகம் செய்யப்படும் போதே பலருக்கு இதன் தாற்பரியம் புரியக்கூடும்.

இணைய தகவல் பரிமாற்றம் சம்மந்தப்பட்ட இந்த இலங்கை அரசின் சட்டம் பற்றி இங்குள்ள (யாழ்) கருத்தாளர்கள் கருத்து கூற ஆர்வப்படவில்லையோ. 

spacer.png

 

spacer.png

 

spacer.png

 

421916190_773401268158181_56809703744204

 

spacer.png

 

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் பற்றிய தெளிவூட்டல் தொடர்பான கலந்துரையாடல்

26 JAN, 2024 | 05:29 PM
image

நிகழ்நிலை காப்பு சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் பற்றி தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.

sxfdgx.gif

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் யாழ் ஊடக மையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.

jff-2.gif

இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார், உழைக்கும் பத்திரிகையாளர் சங்க தலைவர் துமிந்த சம்பத், சட்டத்தரணி கு.ஐங்கரன், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/174863

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிகழ்நிலை காப்பு சட்டம் நீக்கப்படும் - எதிர்க்கட்சித் தலைவர்

27 JAN, 2024 | 05:53 PM
image
 

அடக்குமுறைகளை செயற்படுத்தி, நாட்டில் சாதாரண மக்களின் அரசியல் உரிமைகளை பறித்து, அடக்குமுறைகளை மேற்கொள்ளும் பொருட்டே தேர்தல் வருடமொன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நிகழ்நிலை காப்பு சட்டம் குறித்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்து, இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த சட்டத்தின் ஊடாக இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் மீறப்படுகிறது. இதனூடாக அரசியல் அதிகார பீடத்தாலேயே பயங்கரவாதி என்பவர் யார்? தேசபற்றாளர் என்பவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும். பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்க முடியுமான உரிமை இங்கு முற்றாக மீறப்படுகிறது.

நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பல முறை தமது கருத்துக்களை வெளிப்படுத்தியது. பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், இவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரையும் பெயரளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசாங்கம் தான் விரும்பியதை நிறைவேற்றியுள்ளது.

பொது மக்களின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையும், சுயாதீன உரிமையும் இங்கு மீறப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் அமைக்கும் அரசாங்கத்தில் இந்தச் சட்டத்தை நீக்குவது முதல் கடமையாகும். பின்னர் நாட்டுக்கும் மக்களுக்கும் நலனளிக்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும், மனித சுதந்திரத்துக்கு இடமளிக்கும், உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கு அமைய யதார்த்தமான, நம்பகமான, நடைமுறை மற்றும் முற்போக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் மூலம் அரசாங்கம் தற்காலிக ஆறுதல் பெறலாம். இந்த ஆறுதல் சில மாதங்களுக்கு மட்டுமே தங்கும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களை ஒடுக்கும் இந்த சட்டமூலம் நீக்கப்படும்.

https://www.virakesari.lk/article/174942

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தால் சீனாவைப் போன்ற நிலைமையே ஏற்படும் - ஹிருணிகா

Published By: VISHNU   29 JAN, 2024 | 08:39 PM

image

(எம்.மனோசித்ரா)

நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் சீனாவைப் போன்ற நிலைமையே எமக்கும் ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனாவைப் போன்ற நிலைமையே இலங்கையிலும் ஏற்படவுள்ளது.

எனவே இளைஞர்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் இதனால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது. எனவே புதிதாக எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில்லை.

விஷ்வ புத்த உட்பட மதங்களை நிந்தித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் பைத்தியக்காரர்களாவர். எனவே அவர்களுக்கு பிரதான ஊடகங்கள் முக்கியத்துவமளித்தமை தேவைற்ற ஒரு விடயமாகும். இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய அரங்கேற்றப்படும் நாடகமாகும்.

அண்மையில் நிமல் லன்சா உள்ளிட்ட குழுவினர் ரணிலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறும் என இதனை அடிப்படையாகக் கொண்டு ஊகிக்க முடியும். இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பழைய அங்கத்துவ நாடாகும். அவ்வாறிருக்கையில் யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுத்துமாறு ஐ.நா. விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் டிரான் அலஸ் கூறுகின்றார். இவ்வாறு முட்டாள்தனமாக பேசும் இவர்களை தும்புத்தடியால் அடித்து துரத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/175098

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு

Published By: DIGITAL DESK 3   01 FEB, 2024 | 10:57 AM

image

ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை (01) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.

https://www.virakesari.lk/article/175293

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.