Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெண்முரசு நாவல் 16: “குருதிச்சாரல்”

 

large.IMG_6975.jpeg.f407a38e4b750664e754d09e64955d01.jpeg

ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன்.

குருஷேத்திரப் போருக்கு முன்னரான களநிலையில், போரினை தவிர்ப்பதற்காக கிருஷ்ணன் துரியோதனனிடம் மூன்று முறை செல்லும் தூதுகளையும், தம் மைந்தரையும், கொடிவழியினரையும் போரின் மூலமாக இழக்காமல் பாதுகாக்க முயலும் பாண்டவ, கெளரவ தரப்பு அரசியர்களின் முயற்சிகளையும் “குருதிச்சாரல்” நாவல் விரித்துச் செல்கின்றது.  

large.IMG_6978.jpeg.018e833c6f362065932d4bac8fc285c9.jpeg

 

முன்னர் வெறும் பெயர்களாக அறியப்பட்ட அரசியர்களின் - தேவிகை (தருமர்), விஜயை (சகாதேவன்), பிந்துமதி (பீமன்), கரேணுமதி (நகுலன்), பலந்தரை (பீமன்), துச்சளை (கெளரவர்களின் சகோதரி - சிந்து நாட்டரசன் ஜயதத்ரனின் அரசி) , பானுமதி (துரியோதனன்), அசலை (துச்சாதனன்), தாரை (விகர்ணன்), விருஷாலி (கர்ணனின் சூத அரசி), சுப்ரியை (கர்ணனின் ஷத்திரிய அரசி) -  ஆளுமைகளும், உளநிலைகளும், அகத்தளத்தில் இருந்து வெளியே வந்து அரசசூழ்தலில் (ராஜதந்திரங்களில்) அவர்கள் பங்குகொள்ளுவதும் நாவலை நகர்த்துகின்றது.

துரியோதனனின் அஸ்தினபுரியைத் தலைநகராகக் கொண்ட குருநிலம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற மண்ணாசையை தடுக்கமுடியாத புத்திர பாசத்தில் திருதராஷ்டிரர் இருக்கின்றார். அவர் அசலை, மற்றைய அரசியர்களின் வேண்டுதலாலும், தூண்டுதலாலும் மைந்தர்களையும், கொடிவழியினரையும் காக்க அணுக்கன் சஞ்சயன் மூலமாக பாண்டவர்களிடம் ‘போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட’ என்ற ஆணையை மன்றாட்டாக வைக்கின்றார்.

சஞ்சயன் தூதுச்செய்தியை தெரிவித்தபோது திரெளபதி தான் துகிலுரியப்பட்டவேளை உரைத்த வஞ்சினத்தை துறந்துவிட்டதாகச் சொன்னாள். சகாதேவன் பாண்டவர் கொண்டுள்ள வஞ்சம் இப்புவியில் எழுந்த அத்தனை பெண்டிருக்காக எனவும் தனியே திரெளபதிக்கு மாத்திரமல்ல எனவும், போரைத் தவிர்த்தல் என்பது அவ்வஞ்சத்தை துறந்து மீளவும் கானேகுவதை ஏற்பதில் முடியும் என்றான். எனினும்  மூத்த தந்தையான திருதராஷ்டிரரின் ஆணையை பாண்டவர்கள் தட்டாமல் ஏற்கின்றனர்.

கிருஷ்ணர் முதலாவது தூதில் கெளரவரின் அரசவைக்குச் சென்று, நால்வேதத்தின் காவலனாக நிற்பதாகச் சொல்லும் துரியோதனனிடம் அவன் முன்னர் கொடுத்த சொல்லுறுதியாகிய அஸ்தினபுரி அரசின் மேற்குநிலம், பாதிக் கருவூலம், இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றை பாண்டவர்கள் சார்பில் கேட்கின்றார். பாண்டவர்கள் நாடாளும் தகுதியற்றவர்கள் என துரியோதனன் அக்கோரிக்கையை மறுதலித்தும்,  தந்தை திருதராஷ்டிரரை விலக்கியும், தன்னை கலிதேவனுக்கு முழுதளிக்கின்றான்.

போருக்கு ஒருங்கும் ஷத்திரிய அவைக்கு இரண்டாம் முறையாகத் தூது வந்த கிருஷ்ணர் அஸ்தினபுரி நாட்டின் வடகிழக்கெல்லைக் காட்டின் அருகே ஐந்து ஊர்களை பாண்டவர்களுக்காகக் கோருகின்றார். பாண்டவர்கள் ஷத்திரியர் அல்ல, அவர்கள் நாலாம் வர்ணமாகிய சூதர்களே என்று பாண்டவர்களின் பிறப்பை இழிவுசெய்து, குந்தி அவைக்கு வந்து பாண்டவரின் தந்தையர் எவர் எனக் கூறவேண்டும் எனவும் துரியோதனன் சிறுமை செய்கின்றான். அஸ்தினபுரியின் ஒரு பருமணலையும் கொடுக்கமுடியாது என கிருஷ்ணரை வெறுங்கையுடன் திருப்புகின்றான்.

போரின் வெற்றிக்காக துரியோதனன் ஏற்பாடு செய்த புருஷமேத யாகத்தின் (யாகங்களில் உச்சமாக தூய அந்தணனை எரிகுளத்தில் அனலுக்கு பலிகொடுப்பது!) வேத அவைக்கு மூன்றாவது தூதுடன் சாந்தீபினி குரு நிலையின் ஆசிரியராக வந்த கிருஷ்ணர், ஷத்திரியர் வேலிகட்டிப் பாதுகாக்கும் நால்வேதங்களை மட்டுமல்ல, அசுரவேதம், நிஷாதவேதம் என இன்னும் பலவேதங்களின் நற்கூறுகளை எடுக்கும் வேதமுடிபே தூயது என்று வேத அவையில் வேதியரோடும், முனிவர்களோடும் தத்துவவிசாரணைகளில் ஈடுபடுகின்றார். எனினும் எவரும் வேதமுடிபை ஏற்காததால் தோல்வியே வருகின்றது. இந்த தத்துவ விசாரணைகளின்போது கிருஷ்ணர், துரியோதனனால் வேள்வியின் துணைக்காவலனாக இருத்தப்பட்ட கர்ணனை அவன் சூதன் என்பதால் ஷத்த்ரியர்களையும், அந்தணர்களையும் கொண்டே அகற்றச் சூழ்கை செய்கின்றார். வரவிருக்கும் போரில்   கர்ணன் போர்த்தளபதியாக ஆகமுடியாத நிலையை இது உருவாக்குகின்றது.

கிருஷ்ணர் வேள்வியை ஏற்காமல் அவையிலிருந்து வெளியேறும்போது துரியோதனனிடம் கொடையாக பாண்டவர்களை அஸ்தினபுரியின் குடிகள் என ஏற்று அவர்களுக்கு ஐந்து வீடுகளைக்  கோருகின்றார்.  அதனையும் துரியோதனன் தொல்வேதங்களின் நெறிகளைக் காரணம்காட்டி மறுக்கின்றான்.

இவ்வாறாக, கிருஷ்ணர் மூன்று தூதுகளிலும், வேதமுடிபை ஏற்கச் செய்வதிலும் தோல்விகளைத் தழுவி அஸ்தினபுரிக்கும், அரசகுடிக்கும் தான் இனி பொறுப்பல்ல என்று கூறித் திரும்பும்போது, திருதராஷ்டிரர் அவர் முன்னர் பாண்டவர்கள் தன்மைந்தரை களத்தில் எதிர்கொள்ளலாகாது எனக் கொடுத்த ஆணையைத் திரும்பப் பெறுவதாகக் கிருஷ்ணருக்குச் செய்தி அனுப்புகின்றார். 

போருக்கான தடைகள் இல்லாமல் போவதோடு, கிருஷ்ணரின் மூன்று தூதுகளினூடாக பாண்டவர்கள் ஒருபோதும் போரை விரும்பவில்லை என்பதும், துரியோதனனின் மண்மீதான பேராசையும் உறுதிப்படுத்தப்படுகின்றன.

நாவலில் போரைப் பற்றிய பீஷ்ம பிதாமகரின் கூற்று.

“ போர் என ஒன்று எழுமென்றால் நாம் ஆடைகளை என நாம் பெற்றும் கற்றும் உற்ற அனைத்தையும் கிழித்துவீசிவிட்டுத்தான் முன்செல்வோம். தந்தையர் நெஞ்சில் உதைப்போம். ஆசிரியர்களின் முகத்தில் உமிழ்வோம். உடன்பிறந்தார் தலைகளைக் கொய்வோம். இளமைந்தர் குருதியில் குளித்துக் களியாடுவோம்.”

மனித உரிமைகளும், மனித நேயமும் நிலவுவதாகச் சொல்லப்படும் இந்நவீன உலகில் நடக்கும் போர்களில் இழைக்கப்படும் அநீதிகளும், போர்க்குற்றங்களும் அன்றைய குருஷேத்திரப் போருக்குச் சற்றும் குறைவானதல்ல!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஆசான் ஜெயமோகனின் மகாபாரத காப்பிய மறு ஆக்கமான வெண்முரசு நாவல் வரிசையில் உள்ள 26 நாவல்களில் 16 ஆவது நாவல் “குருதிச்சாரல்” வரை வாசித்துவிட்டேன்.

பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே,  இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்நாவலை வாசிக்க வெளிக்கிட்டு ஒரு வருடமாக இப்பதான் 

நீலம் - 24

பகுதி எட்டு**: 2.** பொருள் ஒன்று

யமுனைக்கரையில் அந்தணர்சேரியில் மதியவெயிலெழுந்த நேரம் திண்ணைகளிலும் அப்பால் ஆலமரத்து நிழல்மேடைகளிலும் ஆண்களெல்லாம் துயில பின்கொல்லைப் படிகளிலும் பசுக்கொட்டில்களிலும் பெண்கள் அமர்ந்து சொக்கட்டான் ஆடியும் சிறுசொல்பேசியும் சிரித்துக் கொண்டிருந்தனர். நெய்க்குடமேந்திய ஆய்ச்சியர் நால்வர் நடமிடும் இடையுடன் தெருவில் வரக்கண்டு “ஆய்ச்சியரே, இங்கு வருக!” என்று ஒருத்தி கூவினாள். “வெயிலெழுந்த பின்னர் நெய்கொண்டு வருகின்றாள். விடிந்தபின்னும் துயிலும் வீண்வழக்கம் கொண்டிருப்பாள்” என்றாள் ஓர் அந்தண முதுமகள்.

 இதில் நிக்கிறேன்......வாசிக்கத்தொடங்கினால் நிறுத்த  மனம் வராது.....அப்படி ஒரு எழுத்தின் ஆளுமை.....ஆனால் நேரம் இருக்காது.....கடந்த சில மாதங்களாக வாசிக்கவில்லை.....இனி வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.......அதற்கு முன் யாழுக்கு 26 அகவைக்கு  ஒரு கதை எழுதவேண்டும் இன்னும் ஐடியா வரவில்லை .....பார்க்கலாம்......கிருபன்......ம்......சொல்லி வேல இல்ல .......ஜெயமோகனின் சிறந்த சிஷ்யன் ......வாழ்த்துக்கள் ......!   🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kavi arunasalam said:

பெரிய பெரிய கட்டுரைகளையே ஒரே மூச்சில் வாசிக்கும் உங்களுக்கே,  இதை வாசிப்பதற்கு இன்னும் சில வருடங்கள் வேணும் என்றால் எனக்கு இன்னும் ஒரு ஆயுள் வேண்டும்.

வாசிக்க ஆர்வம் இருந்தால் நேரம் ஒரு பிரச்சினையேயில்லை! நான் 2017 இல் வாசிக்க ஆரம்பித்தேன்!

 Kindle பதிப்பாக வந்த பின்னர் வாசிப்பது இலகுவாகிவிட்டது. ஆனாலும் 6வது நாவலாகிய “வெண்முகில் நகரம்” வாசிக்க ஆரம்பித்தபோது வெண்முரசு படிப்பதைக் கைவிடலாமா என்று யோசித்தேன்! எனினும் ஒரு இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பித்து வருடத்திற்கு 4 வெண்முரசு நாவலாவது  படிக்க முயல்கின்றேன்.

இனி எல்லாம் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் என்பதால் வாசிப்பதில் நிறைய ஆர்வம் இருக்கும்😁

 

21 hours ago, suvy said:

இதில் நிக்கிறேன்......வாசிக்கத்தொடங்கினால் நிறுத்த  மனம் வராது.....அப்படி ஒரு எழுத்தின் ஆளுமை.....ஆனால் நேரம் இருக்காது.....கடந்த சில மாதங்களாக வாசிக்கவில்லை.....இனி வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்.......அதற்கு முன் யாழுக்கு 26 அகவைக்கு  ஒரு கதை எழுதவேண்டும் இன்னும் ஐடியா வரவில்லை .....பார்க்கலாம்......கிருபன்......ம்......சொல்லி வேல இல்ல .......ஜெயமோகனின் சிறந்த சிஷ்யன் ......வாழ்த்துக்கள் ......!   

யாழுக்கான கதையை முதலில் எழுதுங்கள் சுவி ஐயா!

நீலம் பிள்ளைத்தமிழில் எழுதப்பட்டது. எனக்கு ஆரம்பத்தில் கிருஷ்ணரை (அவர் ஒரு மனிதர், கடவுளாக பின்னர் மாற்றப்பட்டவர்) பிடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து படிக்கும்போது கிருஷ்ணரின் மீது பெரு விருப்பம் வருகின்றது. எந்த நிலையையும் புன்னகையுடன் எதிர்கொள்வது காரணமாக இருக்கலாம்.


 

வெண்முரசு இலவசமாகப் படிக்க;

https://venmurasu.in/?utm_source=www&utm_medium=jeyamohan&utm_campaign=blog

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

MeenaJanuary 30, 2024

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%

அன்புள்ள நண்பர்களுக்கு

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தின் மறுஆக்கமான வெண்முரசு வெளிவந்த நாள் முதல் அதன் அனைத்துத் தொகுதிகளும் வாங்கக் கிடைக்குமா என்னும் கோரிக்கை இருந்துகொண்டிருக்கிறது. வெண்முரசு கடந்த பத்தாண்டுகளாகவே அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கிறது, ஆனால் முழுத்தொகுதிகளும் உடனே கிடைக்கும் நிலை உருவானதே இல்லை. காரணம் இந்நூல் பெரியது என்பதனால் அச்சிட்டு தயாரிப்பது பெரும்பணி. கிட்டங்கியில் சேமிக்கவும் நிறைய இடம் தேவை. ஆகவே ஓரிரு நூல்கள் விற்பனைக்கு வரும்போது ஏற்கனவே வெளிவந்தவை விற்கப்பட்டு முடிந்திருக்கும்.

முதல்முறையாக இப்போது வெண்முரசின் எல்லா தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக வெளியிடும் பெருந்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளோம். வெண்முரசு மொத்தம் 26 பாகங்கள் கொண்டது. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த 500க்கும் மேற்பட்ட வண்ண ஓவியங்களும்  ஏறத்தாழ 21000 பக்கங்களும் கொண்ட இந்நீண்ட நாவல் தொகுப்பு செம்பதிப்பாக விஷ்ணுபுரம் வெளியீடாக இந்த ஆண்டு ஜுலை மாதத்தில் வெளிவரவுள்ளது.

தனித்தனி புத்தகங்களாக அச்சிடுவதில் ஏற்படும் விலை உயர்வை இந்த மொத்தப்பதிப்பில் தவிர்க்க முடியும் என நம்புகிறோம். நூல்களை மொத்தமாக தங்கள் நூலகத்திற்காக வாங்குபவர்கள், அன்பளிப்பாக பிறருக்கு அளிக்க விரும்புபவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

வெளிவரவிருக்கும் வெண்முரசு முழுத்தொகுப்பின் விலை ரூ.38000/-. முழுத்தொகுப்பு வேண்டுவோர் ரூ.15000/- கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜுன் மாதம் 15ம் தேதிக்குள் முழுத்தொகையும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். முழுத்தொகையும் செலுத்திய பிறகே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

தமிழகத்திற்குள் மட்டும் தபால் செலவு இல்லை. பிற மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தபால் செலவு தனி. வெளிநாடுகளில் இருந்து வாங்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் அல்லது வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நூலகங்களுக்கு அல்லது முதியோர் இல்லங்களுக்கு நன்கொடையாக அளிக்க விரும்புபவர்கள் அளிக்கலாம். அவர்களின் பெயர் நூலில் எழுதப்பட்டு ஆசிரியர் கையெழுத்துடன் அளிக்கப்படும்.

நூல்களில் ஆசிரியர் கையெழுத்து  வேண்டுவோர்  பெயர் குறிப்பிடவும்.

மூத்தவர்களுக்கு பரிசாக அளிக்க விரும்புபவர்கள் அதை குறிப்பிட்டால் பரிசுப்பொட்டலமாக உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தங்களிடமிருப்பதில் விடுபட்ட நூல்களை முன்பதிவு செய்து பெற விரும்புபவர்கள் venmurasubooking@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தனியாக எழுதலாம்.

புத்தங்கள் அனைத்தும் ஜுலை முதல் வாரத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும்.

முன்பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 15, 2024

முன்பதிவு விவரங்கள்: 

முழுத்தொகுப்புக்கான மொத்தத்தொகையும் முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு அதன் ஸ்க்ரீன்ஷாட் அல்லது Ref No, தங்கள் முகவரி மற்றும் கையொப்பம் பெற வேண்டிய பெயர் விவரங்களை venmurasubooking@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கவேண்டும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் தங்களது பதிவு எண் கொடுக்கப்படும்.

***

ரூ 15000 செலுத்தி முன்பதிவு செய்ய விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் பணம் செலுத்தியபின் அதன் விவரம்  (Reference No, Screenshot) பணம் செலுத்தியவர் பெயர், முகவரி, வாட்ஸப் எண் ஆகிய தகவல்களுடன் venmurasubooking@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். பணம் பெற்றுக்கொண்ட இரண்டு நாட்களுக்குள் பதிவு செய்து கொண்டதற்கான பதிவு எண் அனுப்பி வைக்கப்படும்.

Curr Acc Name: VISHNUPURAM PUBLICATIONS

Curr Acc No: 214205001589

Bank: ICICI Bank Ltd

IFSC: ICIC0002142

Branch: Vadavalli, Coimbatore, Tamilnadu

Ph: 9080283887

Upi-code.jpg
***venmurasu-1-to-5.jpg
 
B No Book Name MRP Net
1 முதற்கனல் 1500 1350
2 மழைப்பாடல் 2500 2250
3 வண்ணக்கடல் 2000 1800
4 நீலம் 1100 990
5 பிரயாகை 2600 2340
  Round off   -30
  மொத்தம் 9700 8700

***

venmurasu-6-to-10.jpg

B No Book Name MRP Net
6 வெண்முகில் நகரம் 1800 1620
7 இந்திரநீலம் 1700 1530
8 காண்டீபம் 1400 1260
9 வெய்யோன் 1700 1530
10 பன்னிரு படைக்களம் 2000 1800
  Round off   -40
  மொத்தம் 8600 7700

***

venmurasu-11-to-15.jpg

B No Book Name MRP Net
11 சொல்வளர்காடு 1900 1710
12 கிராதம் 2200 1980
13 மாமலர் 1700 1530
14 நீர்க்கோலம் 2000 1800
15 எழுதழல் 1700 1530
  Round off   -50
  மொத்தம் 9500 8500

***

venmurasu-16-to-20.jpg
B No Book Name MRP Net
16 குருதிச்சாரல் 1600 1440
17 இமைக்கணம் 1000 900
18 செந்நா வேங்கை 1700 1530
19 திசைதேர்வெள்ளம் 1700 1530
20 கார்கடல் 1800 1620
  Round off   -20
  மொத்தம் 7800 6300

***

venmurasu-21-to-26.jpg

B No Book Name MRP Net
21 இருட்கனி 1300 1170
22 தீயின் எடை 1100 990
23 நீர்ச்சுடர் 1200 1080
24 களிற்றுயானைநிரை 1500 1350
25 கல்பொருசிறுநுரை 1500 1350
26 முதலாவிண் 400 360
  மொத்தம் 7000 6300

***

மேலும் விவரங்கள் அறிய 9080283887 என்ற (வாட்ஸப்) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

நன்றி

மீனாம்பிகை

விஷ்ணுபுரம் பதிப்பகம்

https://www.jeyamohan.in/195700/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது சிறு குறிப்பு ஆசான் ஜெயமோகனின் தளத்திலும் வந்துள்ளது😃

https://www.jeyamohan.in/197234/

போருக்கு முன்…

February 27, 2024

kuruthi-chaaral.jpg

 

 

 

  • 7 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசானின் தளத்தில் மீண்டும் எனது பதிவு வந்துள்ளது!

குருதியெழும் பொழுது

https://www.jeyamohan.in/203918/

 

“செந்நா வேங்கை” நாவல் படிக்க மூன்று மாதம் எடுத்தது. இது குருஷேத்திரம் நோக்கி படைகள் ஒருங்குவதும் முதல்நாள் போரைப் பற்றியும் சித்தரிக்கும் நாவல்.  அடுத்த நாவலான “திசைதேர் வெள்ளம்” பதினொரு நாட்களில், விடுமுறை எடுக்காமலேயே, படித்துமுடித்தேன்! பத்தாவது நாள் போருடன் இந்நாவல் நிறைவடைகின்றது.  போர்களற்ற உலகை விரும்பும் எனக்குப் போர்களிலும் விதம்விதமாகக் கொல்வதிலும் உள்ள ஆர்வம் பயத்தை உருவாக்கியது. அதனால் ஒரு மாதத்திற்கு மேலாக அடுத்த நாவல்களைப் படிக்காமல்  இருக்கின்றேன்!

படித்து முடித்த “செந்நா வேங்கை”, “திசைதேர் வெள்ளம்” பற்றி நயப்புரை எழுதவேண்டும்!

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.