Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   10 MAR, 2024 | 11:58 PM

image

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும், கைது செய்தோரை  உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி திங்கட்கிழமை (11) மாலை 04 மணியளவில் நல்லை ஆதீன முன்றலில்  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்தப் போராட்டத்தில் அனைவரையும் அணிதிரளுமாறும் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்புச் சார்பாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு. அகத்தியர் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

வெடுக்குநாறி மலை லிங்கேஸ்வரர் கோவில் மகா சிவராத்திரி பூசையின் போது பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கி இருக்கின்றது. சைவர்களின் வழிபாட்டு உரிமை மிகப் புனிதமான விரத நாளில் அப்பட்டமாக மறுக்கப்பட்டு மிக மோசமாக சைவ சமய விழுமியங்களை புனித சடங்குகளை அவமதிக்கும் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.

அதன் உச்ச கட்டமாக தவறேதும் செய்யாத சிவனடியார்கள் எண்வர் விரதமிருந்து பூசையில் ஈடுபட்ட தருணம்  மோசமாக கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பூசை மற்றும் படையல் பொருட்கள் சப்பாத்து கால்களினால் சீருடை தரித்த நபர்களால் தட்டி அகற்றப்பட்டுள்ளது. பூசகர் சிவத்திரு மதிமுகராசா மீளக் கைது செய்யப்படுள்ளார்.

இந்த ஈனச் செயல்கள் மிகப் பாரதூரமான சைவத்தமிழர்களின் மனதை காயப்படுத்தியுள்ளதுடன் அடிப்படை வழிபாட்டுரிமையை மீறும் செயல் என்பதை உலகிற்கும், அரச உயர் பீடத்திற்கும் சொல்ல வேண்டியது ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும்

உலகம் பூராகவும் உள்ள சைவர்களின் மிக உன்னதமான முதன்மையான விரதம் சிவராத்திரி ஆகும். அந்த வகையில் இந்த சிவராத்திரி தினத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தொன்றுதொட்டு தமிழ்ச் சைவர்கள் வழிபட்டு வரும் ஆதி சிவன் கோவிலில் தடைபெற்ற   மோசமான சம்பங்களைக்  கண்டித்தும் கைது செய்யப்பட்ட பக்தர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் நாம் அணிதிரண்டு எதிர்ப்பை பதிவு செய்வோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/178384

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

11 MAR, 2024 | 05:47 PM
image
 

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று (11) மாலை 4 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மதகுருமார், சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரி பூஜையின்போது வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வழிபடச் சென்றவர்கள் மீதான பொலிஸாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெற்றது.

f1886b7a-848a-4dc1-b867-3630b86bed63.jpg

a278b1cf-5e5c-4d84-a704-c5d5ea878f61.jpg

d52706f8-36d6-483b-a0ed-6ad099a61a86.jpg

904263c5-ad89-417a-ab97-1348d016b0ac.jpg

7f49a4ea-e37e-42e0-b7c5-ce29ebb20b90.jpg

20240311_164450.jpg

 

20240311_163509.jpg

20240311_163502.jpg

20240311_163214.jpg

20240311_163101.jpg

https://www.virakesari.lk/article/178453

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீது தொடந்தும் தாக்குதல்கள் தடுத்த நிறுத்த அயல் நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் - தவத்திரு அகத்தியர் அடிகளார்

Published By: VISHNU   12 MAR, 2024 | 12:29 AM

image

(எம்.நியூட்டன்)

வடக்கு, கிழக்கில் தமிழர்கள் மீதும் இந்து ஆலயங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் தடுத்த நிறுத்த அயல்நாடு வெளிநாடுகள் உதவிசெய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் தெரிவித்தார்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாடுகளை முன்னெடுத்தவர்களை அநாகரிக முறையில் தூக்கிவீசி, கைதுசெய்து, வழிபாட்டைக் காட்டுமிராண்டித்தனமாகக் குழப்பிய பொலிஸாரின் படுபாதகச் செயலைக் கண்டித்தும், வழிபாட்டு உரிமையை நிலைநாட்டும் வகையிலும் நல்லூர் ஆதீன முன்றிலில் திங்கட்கிழமை (11) கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது இப் போராட்டத்தின் போதே இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழர்கள் மீதும் அவர்கள் வழிபாட்டு இடங்கள் மீதும் தொடர்ந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது் நீதிமன்ற கட்டளையை மதிக்காத நாடாகவே எமது நாடு விளங்குகிறது இதனை அருவருக்கத்தக்கதாகவே நாங்கள் உணருகின்றோம் அத்தகைய நீதியைத்தான் நாங்கள் அடுக்கடுக்காக கண்டுகொண்டு இருக்கிறோம் இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல அரசுக்கு ஆரோக்கியமானதல்ல எனவே நாங்கள் எங்கள் உரிமையை நிலை நிறுத்துவதற்காக எத்தகைய முயற்சிகளை நாங்கள் எடுப்போம் இதனை அயல்நாடு, வெளிநாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. காந்தி தேசம் பார்த்துக்கொண்டிருக்கிறது வெளிநாடுகள் ஒன்றிணைந்து நாம் உரிமையுடன் வாழ வழிசெய்ய வேண்டும் அதுவரை ஜனநாயக முறையில் போராடுவோம் என்றார்.

https://www.virakesari.lk/article/178476

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.