Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதத்தை இராணுவத் தீர்வின் அடிப்படையில் தீர்க்க வேண்டும்: ஐ.தே.க. வலியுறுத்தல்

Featured Replies

ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

பயங்கரவாதத்தை இராணுவத் தீர்வின் அடிப்படையிலேயே தீர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பிரிவினைவாதத்திற்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க

  • தொடங்கியவர்

இலங்கை இனப்பிரச்சனைக்கு சமஷ்டி முறையை முன்வைத்த ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அந்நிலைப்பாட்டிலிருந்து மாறியிருப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலம்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வை உருவாக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "ஈழநாதம்" நாளிதழின் தலையங்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க

சரியான சமயத்தில் நாடாளுமன்றில பாடம் புகட்டுவதற்கு திடசங்கட்பம்.

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு சம~;டி முறையில்தான் என்ற நிலைப்பாட்டிலிருந்து ரணில் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி குத்துக்கரணம் அடித்துவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்திகள் த.தே.கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள பல கட்சிகளையும் கடுஞ் சீற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றன எனத் தெரியவருகின்றது.

நாடாளுமன்றில் உரிய சந்தர்ப்பம் வரும் போது ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சித் தரப்பினருக்கு இவ்விவகாரத்துக்கான நல்ல பாடம் புகட்டும் திடசங்கற்பத்தில் தமிழ் கட்சிகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றன.

ஐ.தே.க தலைமயிலான அரசு த.வி.புலிகளுடன் பேச்சு நடத்திய சமயத்திலேயே 2002 டிசம்பரிலேயே சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் குறித்து

ஆராய்வதற்கு இணக்கம் எட்டப்பட்டது.ஆனால், அந்த நிலைப்பாட்டிலிருந்து ஐ.தே.கட்சி முற்றாக 'பல்டி' அடித்து, பழைய ஏனைய தென்னிலங்கைத் தரப்புகளைப் போல அதுவும் பேரினவாத மேலாண்மைத் திமிருடனும், மேலாதிக்கப் போக்குடனும் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றத. இதுவே

தமிழ்க் கட்சிகளைப் பெரும் விசனத்துக்குள்ளும், எரிச்சலுக்குள்ளும், அதிருப்பதிக்குள்ளும் ஆழ்த்தியிருக்கிறது எனக் கூறப்படுகின்னது.

அடுத்த மாதம் நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது மற்றோரு எதிர்க்கட்சியான ஜே.வி.பியுடன் சேர்ந்து, ஜனாதிபதி மஹிந்தன் அரசைக் கவிழ்பபதற்கு ஐ.தே.கட்சித் தலைமை தீவிர முயற்சி எடுத்து வருகின்றது எனக் கூறப்படுகின்றது.

இதற்காக ஜே.வி.பியைச் சாந்தப்படுதி, தனது தரப்பின் பக்கம் கூட்டிவந்து, தனது வலைக்குள் வீழ்தும் உத்தியாகவே தமிழர் தரப்புக்குக் குறைந்த பட்ச நீதியையாவது வழங்கக் கூடிய சமஷ்டித் தீர்வு என்ற நியாயத்தை ஐ.தே.க. பொத்தெனக் கைவிட்டது எனவும் கூறப்படுகின்றது.

அதே சமயம், ஐ.தே.க தலைமையுடன் நெருக்கமான வட்டாரங்கள் சில, மேற்படி வரவு-செலவுத் திட்ட சமயத்தில் அரசைக் கவிழ்க்கும் முயற்சிக்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்.பிகளினதும் முழு ஆதரவையும் திரட்டித் தாங்கள் ஒன்றாக ஐ.தே.கட்சிக்குப் பெற்றுத் தருவர் என்று உறுதி கூறி வருகின்றனராம்.

ஆனால், அந்தச் சமயத்தில், ஐ.தே.கட்சிக்கு நல்ல படிப்பினை ஒன்றைப் புகட்டி, மீண்டும் பேரினவாதப் பக்கம் தலைசாய்ந்தமைக்காக அக்கட்சியைப் பழிதீர்க்க வேண்டும் என்ற முனைப்பு தமிழ்க் கூட்டமைப்புத் தரப்பினரிடையே முளைவிட்டு வருகின்றது என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

'தமிழர் விரோத மஹிந்த சிந்தனையை ஜனாதிபதி மஹிந்த அரசு கடைப்பிடிக்கும் போது, அதே போக்கை ஐ.தே.கட்சியும் ரணிலும் வரிந்து கொண்டால் ஆட்சி மாற்றம் தமிழருக்கு ஏன்? மஹிந்தன் போய் ரணில் வந்தாலும் ஒன்று தான் மஹிந்தன் இருந்தாலும் ஒன்றுதான். எனக் கூட்டமைப்பின் எம்.பி ஒருவர் தெரிவித்தார்.

சமஷ்டி தீர்வு தொடர்பான விடயத்தில் ஐ.தே.கவின் குத்துக் கரணம் தமிழ்க்கட்சிகளை மட்டுமல்லாமல் பிரதான முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையகத்தமிழ்க் கட்சிகள் ஆயகியவை இடையேயும் கடும் எரிச்சலை ஐ.தே.கட்சிக்கு எதிராக உருவாக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

இதனால் வரவு - செலவுத்திட்டத்தின் போது நாடர்ளுமன்றப் பலப்பரீட்சை மூலம் மஹிந்தரின் அரசை தோற்கடிக்கும் ஐ.தே.கட்சியின் எத்தனம் முளையிலேயே கருகும் நிலைமையும் ஏற்பட்டுவிட்டதாக அரசியல் அவதானிகளின் வட்டாரம் தெரிவித்தன.

நன்றி : சுடர் ஒளி

பேரினவாதம் வெட்டிய குழிக்குள் விரும்பி வீழ்ந்த ரணில் விக்கிரமசிங்க - இடதுசாரி முன்னனி.

பேரினவாதம் வெட்டிய குழிக்குள் வீ;ழ்ந்துள்ளது. ஐ.தே.கடசியின் தலைவர் ரணில் உட்பட அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும், நாம் ஒருபோதும் சமஷ்டி முறையை தமிழர் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வாகக் கூறவில்லையென தற்போது அறிவித்துள்ளனர். தன்னை ஒரு மிகப் பெரிய ஜனநாயகவாதியகவும், பின் நவீனத்துவரகாகவும் காட்டி வந்த ரணில், இன்று ஜே.வி.பியுடன் கூட்டுச்சேர்வதற்காக இத்தகைய நாடகத்தை மேடையேற்றியுள்ளார்."

இவ்வாறு இடதுசாரி முன்னனி அனுப்பிய ஊடக அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அது அனுப்பியுள்ள அறிக்ககையில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-

இத்தகைய காட்டிக் கொடுப்பு நடவடிக்கைகள் இலங்கைக்கு புதியதொன்றால்ல. டி.எஸ். சேனநாயக்காவிலிருந்து, பண்டாரநாயக்கார்கள் வரையான சகல தலைவர்களும் இனவாதிகளிடம் சரணடைந்து, தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போரட்டடங்களை காட்டிக் கொடுத்தனர் என்பதே வரலாறு. இதையே 1960 களில் இடதுசாரித் தலைவர்களும் செய்தனர்.

ஜே.வி.பியின் பேராசைக்கு ரணில் அடி பணிந்து, விட்டு கொடுப்பதானது, ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரை ஆட்சிப்பீடத்தில் ஏற்றியமைக்கு ஒப்பானதாகும், எரிகின்ற நெருப்பை அணைப்பதற்கு வைக்கோலை எவ்வளவு போட்டடாலும் நெருப்பு மேலும் மேலும் எரிந்து கொண்டே இருக்கும். அதே போல் தான் பேரினவாதமும்.

பேரினவாதத்தின் போராசைக்கு தலைவணங்கினால் நாடு மேலும் பாரிய அழிவுக்குள்ளேயே செல்லும். பேரினவாதம் வெட்டிய குழியில் மஹிந்த ஏற்கனவே வீழ்ந்துள்ளார்.

அதேபோன்று ரணிலும் தனது முழு விருப்பத்துடன் அந்தக் குழிக்குள் வீழ்நதுள்னார்.கடந்த காலங்களில் ரணில் தன்னை ஒரு கொள்கைவாதியாகவும், அரசியலில் தீர்க்கதரிசியாகவும் காட்டி வந்தார். ஆனால், இன்று அவர் எடுத்திருக்கும் முடிவானது, அவரிடம் கொள்கையோ ஆனுபவமோ இலலாத வெற்றிடம் இருப்பது போலவே தோன்றுகிறது. என்று அதில் உள்ளது.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-02

ஐ.தே.கவின் குத்துக்கரணம் தமிழருக்குத் தரும் சிந்தனை

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு சமஷ்டி முறை யில்தான் என்ற நிலைப்பாட்டிலிருந்து ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குத்துக்கரணம் அடித்து விட்டதாக வெளி வந்தி ருக்கும் செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்ற பல கட்சிகளையும் கடுஞ் சீற்றத்தில் ஆழ்த்தியிருக் கின்றன எனத் தெரியவருகின்றது.

நாடாளுமன்றத்தில் உரிய சந்தர்ப்பம் வரும்போது ரணில் தலைமையிலான ஐ.தே.கட்சித் தரப்பினருக்கு இவ் விவகாரத்துக்காக நல்ல பாடம் புகட்டும் திட சங்கற்பத்தில் அக்கட்சிகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

தென்னிலங்கையில் ஆட்சி அதிகாரப் போட்டா போட் டியில் தமது தரப்பை வலுப்படுத்திக் கொள்வதற்காக பலப்படுத்திக் கொள்வதற்காக சிங்களத் தலைமைகள் தமிழர் தயாகத்தையே முதலில் கைவிட்டு, காலில் மிதிப் பது மிதிப்பதுண்டு என்பதை இப்பத்தியில் ஏற்கனவே பல தடவைகள் தெளிவுபடுத்தியாகிவிட்டது. அந்தச் சிங்களப் பேரினவாதத்தின் அச்சொட்டான பிரதிநிதியே ஐ.தே.கட் சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் என்பது இப்போது தெளிவாக நிரூபணமாகும்போது, ஏற்கனவே கடந்த ஜனா திபதித் தேர்தலின்போது அத்தேர்தலை தமிழர் தாயகம் பகிஷ்கரிக்காமல், தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிக்க அவர்களை வழிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையைப் பலமாக "உள்வீட்டுக்குள்' முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களே, இப்போது வெட்கித் தலைகுனி யும் நிலைக்கும் ஆத்திரத்துக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள்.

அதேநேரம், தற்போதைய ஜனாதிபதி மஹிந்தரின் அரசு தமிழர் தாயகம் மீது தொடுத்திருக்கும் கொடூரப் போர் காரணமாக, தமிழ் மக்கள் தமிழ் மக்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இந்த அரசின் மீது கடும் விசனமும், சீற்றமும் உற்றிருக்கின்றனர் என்பதும் உண்மையே.

அதன் காரணமாக மஹிந்தரின் அரசைக் கவிழ்ப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. எடுக்கும் முயற்சிகளுக்கு வேறு வழியின்றி தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களும் முழு ஆதரவு தருவார்கள், அதை விட அவர்களுக்கு வேறுவழி யில்லை என்ற மனக் கணக்கில்தான் ரணிலின் கட்சி, இப் படிப் பேரினவாதத்தைக் கைக்கொள்ளும் விதத்தில் கொள் கைக் குத்துக்கரணத்தோடு காய் நகர்த்தல்களை முன்நகர்த் துகின்றது என்று தெளிவாகத் தோன்றுகின்றது. ஆனால் அதுதான் அத்தரப்பு விடும் மகா தப்பு.

இதே தப்பைத்தான் தவறைத்தான் ரணில் விக்கிரம சிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இழைத்தார். அத னால்தான் அத் தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோற்று, எதிரணியே நிரந்தரம் என்று அல்லற்படும் அவ லப்படும் நிலைமை அவருக்கு நேர்ந்திருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஆளும் தரப்பின் வேட் பாளரான மஹிந்த ராஜபக்ஷ பேரினவாதக் கட்சிகளான ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் "தேசத்தைக் காப் பாற்றும் தேசிய முன்னணி' போன்றவற்றுடன் உடன் பட்டு, இணங்கிப் போகின்ற காரணத்தினால், சிறுபான்மை யினரான தமிழருக்குத் தமக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்று கருதி, தமிழரைப் பொருட்படுத்தா மல் ஒதுக்கி நடந்துகொண்டார் ரணில். தமிழர் தரப்புடன் தேர்தலுக்கு முன்னரே ஓர் ஆக்கபூர்வமான உடன்பாட்டுக்கு வரும் வாய்ப்புகளை, உதாசீனப்படுத்தி, தூக்கி எறிந்து அவர் நடந்து கொண்டமையின் பின்னணி இதுதான். அதன் விளைவாகத் தமிழர் தரப்பின் ஆதரவு வங்கியை இழந்து, அரசியல் அந்தகார நிர்க்கதிக்கு உள்ளாக வேண்டியவரானார் ரணிலார்.

இப்போதும் அதே தவறை அவர் புரிகின்றார் என்றே கொள்ளலாம்.

தமிழர் தாயகத்தின் மீது கொடூர யுத்தத்தைத் திணித் திருக்கும் மஹிந்த அரசு, தமிழர்களைப் படுகொலை செய்து, சித்திரவதைக்கு உள்ளாக்கி, கடத்திக் காணாமற் போகச் செய்து, துணைப் படைகள் மூலம் அட்டூழியங்களை அவிழ்த்துவிட்டு அட்டகாசங்களைப் புரிந்து வருகின்றது. "பயங்கரவாதத்தை முழுமையாக அழித்தல்' என்ற பெயரில் வன்னியைப் பூரணமாகக் கைப்பற்றும் ஒரு சதி நாசகாரத் திட்டத்தை முழு முனைப்புடன் அது முன்னெடுக்கின்றது.

இந்தப் பின்னணியில் மஹிந்த அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு ஆதரவு தருவதைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 எம்.பிக்களுக்கும் வேறு மாற்று மார்க் கமே இல்லை என்பதுதான் ரணில் தரப்பின் எண்ணம் போலும். அந்தத் திமிர்தான் செருக்குத்தான் தானே முன் னர் ஒப்புக்கொண்ட"சமஷ்டி அடிப்படையிலான தீர்வு' என்ற நிலைப்பாட்டிலிருந்து குத்துக்கரணம் அடித்து ஏனைய பெரும்பான்மை இனக் கட்சிகளோடு பேரினவாத சகதிக் குள் அப்பட்டமாகக் குதிப்பதற்கு அத்தரப்புக்கு உந்துதல் கொடுத்திருக்கின்றது.

பேரினவாத மேலாதிக்கப் போக்கில், இராணுவத் தாக்கு தலை போரியல் போக்கை தமிழர் தேசம் மீது கட்ட விழ்த்துவிடும் முழு வெறியில் தீவிரத்தில் நிற்கும் ஜனாதி பதியையும்

தான் இணங்கிய "சமஷ்டித் தீர்வை விட்டுக் குத்துக்கர ணம் அடித்து' பேரினவாதத்தில் சிக்கிக்கொண்டு, தமிழர் களுக்கு எதிராக சர்வதேச வலைப்பின்னல் என்ற பொறியை வசமாகப் பின்னித் தமிழர்களை அரசியல், இராணுவ ரீதி யாக அமுக்கி நெருக்கும் தகுதியையும், திறமையையும் நிரூபித்த மாற்றுக் கட்சிப் பிரகிருதியை பிரதமராகவும்

ஒரே சமயத்தில் அதிகாரத்துக்கு வர விடுவது தமிழரைப் பொறுத்தவரை எவ்வளவு முட்டாள்தனமானது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரியாததல்ல.

ஆகவே, ரணில் எதிர்பார்க்கும் நாள் வரும்போது அவ ருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தில் "நல்ல பதிலடி' தருவார்கள் என்று நம்பிக்கையாக எதிர் பார்க்கமுடியும்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.