Jump to content

ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட 8600 ஆண்டுகளுக்கு முந்தைய ரொட்டி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கியில் உலகின் மிகவும் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சேதமடைந்த அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடுப்பின் அருகில், உலகின் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தாவது:

பழங்கால மண் வீடுகள் நிறைந்த “மேகன் 66″ என்ற பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில் இருந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரொட்டியை ஆய்வு செய்ததில் அது 8,600 ஆண்டுகள் பழமையான மற்றும் சமைக்கப்படாத, புளிக்கவைக்கப்பட்ட ரொட்டி என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேடல்ஹோயுக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரொட்டி தான் உலகின் மிகப் பழமையான ரொட்டி. அந்த ரொட்டியின் நடுப்பாகத்தில் விரல் அழுத்தம் இருக்கிறது. அந்த ரொட்டி சமைக்கப்படவில்லை. ஆனால், அது புளிக்கவைக்கப்பட்டதால், இப்போது வரை நன்றாக இருக்கிறது. இதுநாள் வரை இதுபோன்ற ஒன்றை யாரும் கண்டுபிடித்ததே இல்லை” இவ்வாறு தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

https://thinakkural.lk/article/295245

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.