Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"தாந்திரிகம் / தாந்திர வழிபாடு" /  "Tantra"
 
ஆரியர் அல்லாதவர்களின் [ஆஸ்ட்ராலாய்ட், மங்கோலியன், திராவிடர் / Austrics, Mongolians, and Dravidians] ஆன்மீக அணுகு முறை பொதுவாக தாந்திர முறையாகும். இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறுபட்டது. இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறை ஆகும். ஆகவே ஆரியர்களின் அகநிலை உணர்வுக்குப் புறம்பான, வெளிப்புற சடங்கில் இருந்து மாறு பட்டது. தாந்திர வழிபாட்டு முறையின் வேர்களை அறிய வேண்டு மெனில் நாம் சிந்து சமவெளியில் இருந்து தொடங்க வேண்டும். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட சிலைகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று சிவன் தன் ஆண் குறி தெரியுமாறு அமர்ந்து இருக்க, அவரை சுற்றி மிருகங்கள் நிற்பது போல் வரையப் பட்டிருக்கும் சிற்பம். சிந்து வெளி மக்கள் யோகாவை அறிந்து இருந்தார்கள் என்பதற்கும் தாந்திரீக வழிபாட்டு முறைகளை பின்பற்றினார்கள் என்பதற்கும் இந்த முத்திரையை ஒரு சான்றாக எடுத்து காட்டுகிறார்கள். இரண்டாவது யோனி தெரியுமாறு அமர்ந்திருக்கும் ஒரு பெண் சிற்பம். மேலும் இந்த சிற்பம்,காணிக்கை, படையல் மூலம் புகை படிந்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் யோனி வழிபாடும், லிங்க வழிபாடும் இருந்தது என வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. முன்னோர்களின் நினைவாக நடுகல் தமிழகத்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. சைவ மதத்தின் கொள்கைப்படி இறந்தவர்களின் நினைவாக நடுகல் [memorial stone / Hero Stones] வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஒரு காலத்தில் தியானத்திலும், யோகத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவர்களின் நினைவாக லிங்க வழிபாடு இருக்கலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள். லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண் குறியைக் குறிப்பதாகவும்,வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங் காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. தாந்திரீகம், காமத்தின் வழியாக கடவுளை அடைய முன்னவர்கள் பின் பற்றிய வழிமுறை எனவும் கூறலாம்.
 
தாந்திர முறை , தியானம் யோகா இவைகளின் ஒன்று சேர்த்தலை விட மேல் அதிகமானது. யோகா உடலையும் மனதையும் தனித்தனியே பிரிக்க முற் படுவது. தாந்திர முறையின் படி, போட்டி, போராட்டம் வாழ்வின் சாரம்.எல்லா விதமான தடைகளுக்கும் எதிராக போராடி குறை பாடான, நிறைவுறாததில் இருந்து பூரணமாக்க, முழு நிறைவாக்க முயலும் முயற்சி, பிரயத்தனமே தாந்திர முறையின் உண்மையான மெய்பொருள் ஆகும்.
 
ஏறத்தாழ 4,500-5,000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கருதப்படும் சிந்து சமவெளி மக்கள் நாகரிகத்தின் உச்சியில் இருந்தார்கள். அவர்கள் தாந்திர முறையை மனதையும் உடலையும் ஒருங்கிணைப் பதற்கு அப்போதே பாவித்தார்கள். தாந்திர முறையில் உடம்பு, மனது, உணர்வு மூன்றையும் கட்டுப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் சக்தியை ஆன்மீக பரவச நிலையை அடைய பயன்படுத்துவதாகும். காணாத கடவுளை நினைத்து தவமிருப்பதற்கு [penance] பதிலாக நம் கண் முன்னே இருக்கும் பிடித்தமான உறுப்புகளை பார்க்கும் பொழுது நமது கவனச்சிதறல் குறைக்கப் படுகிறது. அந்தக் கணங்களில் நம் உள்ளுணர்வு விழிப் பாகவும், கவனம் ஒரு புள்ளியில் குவிக்கப் படுகிறது. இதுதான் தாந்திர முறையின் தொடக்கம்.அதாவது மனதும் உடலும் ஒன்று பட்டு இயங்குவதே தாந்திர முறையின் முக்கிய கூறு. உடலையும் மனதையும் தனித் தனியே பிரிக்க முற்படுவது தான் மற்ற வழி பாட்டு முறைகள் ஆகும்.
 
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளியில் பிறந்த தாந்திரா முறை பற்றி அல்லது தாந்திரீகம் பற்றி இன்று பலர் தவறான கருத்து கொண்டு உள்ளார்கள். அவர்கள் அது எல்லாம் பாலியல் [sex] பற்றியது என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் தாய் வழிபாடு சமூக மரபிலிருந்து தொடங்கிய இந்த தாந்திரீகம் மற்றைய சமய வழிகள் போலல்லாது மனித வாழ்க்கையில் உள்ள அனைத்தையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு விழிப்புணர்வு அடையும் நிலையினை போதிப்பது. ஆகவே தாந்திரீகத்தில் காமமும் ஒரு பகுதி ஆனால் காமம் தான் தாந்திரீகம் இல்லை. நடை முறையில் சாதாரண பாலுறவைத் தாண்டி அதைவிட கூடுதலாக உள்ளது. நீங்கள் இதை காம சூத்திரத்துடன் குழப்ப வேண்டாம். அது [காமசூத்ரா / Kama Sutra] பாலியல் உறவு நிலைகள் பற்றிய ஒரு வழிகாட்டி மாத்திரமே. தாந்திரா உண்மையில் அதில் ஈடுபடும் மக்களுக்கு எது நல்லதோ அதை செய்கிறது. அதாவது தாந்திரீகத்தின் நோக்கம் [குறிக்கோள்] ஆத்மீக விழிப்புணர்வு நிலையினை [spiritual awakening] அல்லது சுய விடுதலையை அடைவதாகும்.
 
தாந்திரா மனித உடலில் ஏற்படக்கூடிய அடிப்படை உந்தலை, பாலியல் ஆற்றலை [sexual energy] பாவித்து ஆன்மீக விழிப்புணர்வு நிலையை மேம் படுத்துதல் ஆகும். தாந்திரா ஒரு மதம் அல்ல. ஆனால் பண்டைய ஆன்மீக நம்பிக்கைகளின் தொகுப்பு ஆகும். ஏனென்றால், தாந்திரா, அதன் இயற்கை தன்மையால், மதங்களை மாதிரி, கொள்கைகளை நம்பிக் கொண்டு நம்பிக்கை அடிப்படையில் கற்பனை செய்யும் ஒன்று அல்ல. மதங்கள் மாதிரி எந்த ஆண்டவன் கட்டளையையும் அல்லது கடுமையான விதி முறைகள் ஒன்றையும் [commandments or strict rules] தாந்திர பின்பற்ற வில்லை. மேலும் நீங்கள் இங்கு கடினமான வழிபாடு அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பணிகளில் ஈடுபடத்தேவை இல்லை. தாந்திராவில் ஒவ்வொருவரும் தனக்கு சரியென படும் ஒரு பாதையை தெரிந்து எடுக்கலாம். தாந்திரா குருவிடம் இருந்து மாணவனுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குருவும் தனக்கெனெ ஒரு தனித்தன்மை வாய்ந்த அணுகு முறையை [unique approach] வைத்திருக் கிறார்கள். மேலும் மதங்களுடன் ஒப்பிடும் போது இதில் முக்கிய வேறுபாடு பாலியலில் ஆகும். மத போதகர்களின் அறிவுறுத்தலின் படி பாலியல் ஒரு புனிதம் அற்ற ஒன்று ஆகும். ஆனால், தாந்திரா, இதற்கு மாறாக இதை புனிதமானது [sacred] என நம்புகிறது. அந்த அடிப்படையில் மனித உடலின் ஒரு அத்தியாவசிய தேவையான உடலுறவு மூலமும் இறைவனை அடையும் வழியினையும் காட்டுகிறது.
 
தாந்திரீகத்தின் படி ஆணும் பெண்ணும் ஒரே வெளிப்பாட்டின் விம்பங்கள் போன்றவர்கள், பிரபஞ்ச ஆற்றலில் ஆண் தன்மையினை சிவம் என்றும் பெண்தன்மையினை சக்தி என்றும் அழைப்பர். இது ஒழுங்கமைக்கப் பட்ட மதங்கள் மாதிரி ஒரு ஒப்புயர்வற்ற ஒன்றை [supreme beings] அல்லது முழுமுதல் கடவுள் ஒருவரை வழிபடுவது அல்ல. மாறாக எம்முள் இருக்கும் இயற்கையான அடிப்படை உந்தலை மதிப்பளித்து, உயர்ந்த நோக்கத்தினை அடைவதற்கு அதை சாதகமாக பயன்படுத்திக்கொள்வது ஆகும். அதனுடன் சண்டை பிடிக்காமல் ஒத்துப்போய் அதனை வைத்தே அதை வெல்லும் சூட்சுமத்தினை சொல்லிக்கொடுக்கிறது.
 
அதாவது, எமது தெய்வீக இயல்பை [divine qualities] எம்மில் வளர்ப்பதற்கு நாம் சிவ, சத்தியை வசதியான சின்னங்களாக இங்கு பாவித்து கொள்கிறோம். பக்குவமற்றவர்களுக்கு [To the crude] இது ஒரு ஆபாசம் [பாலின்பம்/pornographic], ஒருதலைச் சார்பு உடையவர்களுக்கு [to the bias] இது ஒரு கொச்சையான [அநாகரீக மான] முற்காலத்திய மக்களின் பழக்கவழக்கம் [vulgar habits] ஆகும். இந்து [சைவ,சாக்த] ஆலயங்களில் வெறுக்கத்தக்க, அருவருப்பான சிற்பங்களை [objectionable sculptures] கோபுரத்திலும் சுவரிலும் கண்டு நாம் அடிக்கடி இது ஏன் என அதிசயப்படுகிறோம். இது இந்த தாந்திரீக மரபினால் ஏற்பட்டவையாக இருக்கலாம்? மனிதனின் இயற்கையான ஆற்றலான காமத்தை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன. ஆகவே அவை காமத்தை அறிவின் வழியாகக் கண்டன. அதன் பிரதிபலிப்பே இந்த கலவி [Mithuna / Maithuna / ‘(male/female) couple’] சிலைகள் போலும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
"Tantra"
 
The spiritual approach of the non-Aryans [the indigenous peoples - the Austrics, Mongolians, and Dravidians] was Tantra and it differed from the Vedic practices of the Aryans because it was fundamentally an introversive or introvertive process rather than an external ritual. In order to find the roots of the Tantra, we have to start from the Indus Valley. The two main statues found in the Indus Valley are prototype of Shiva seated on a throne in a version of the cross-legged lotus posture of Yoga with Yogi's penis is prominently visible. This seal is often cited as evidence that people of the Indus Valley culture knew Yoga and practiced Tantra. The second sculpture of a girl squats in birthing position lifting her dress to reveal her vagina, stained from offerings. The yoni is the creative power of nature and represents the goddess Shakti. The linga stone represents Shiva and hence it shows that vagina & lingam worshipping cults were existed there as per the opinion of historians. It also may be possible that the tradition of Nadu Kal [memorial stone / Hero Stones] by the ancient Tamils / Dravidians for men who died in battle may gave rise to the linga worship later.
 
Tantra is more than just a collection of meditation or yoga techniques. There is a particular world-view associated with it. According to Tantra, struggle is the essence of life. The effort to struggle against all obstacles and move from the imperfect to the perfect is the true spirit of Tantra.
 
Tantra is the original spiritual science found in Indus valley civilization more than 4,500 - 5,000 years ago. Tantra is the practice which elevates human beings in a process in which their minds are expanded. There is no meaning to undergo penance remembering a god which you have never seen, Instead if you see the body parts which you like very much, your focus will not be disturbed and mind & body will work together. This is the starting point of tantra. it is a fantastic tool for those on a primarily spiritual path. It adds the power of aliveness to the qualities of spirit and helps ground your spirituality into everyday life.
 
In today world people may misconcept that Tantra which is Born in Indus valley civilization over 5,000 years ago, is all about sex ,but the practice of Tantra has to do with much more than sex. It should not be confused with Kama Sutra, a literal guide to sexual positions. Tantra, instead, is the practice of what feels good to the people involved. The purpose of Tantra (in its overtly sexual and non-sexual forms) is for spiritual awakening, enlightenment or freedom. Tantra uses sexual energy - the primal force of our very existence (after all, without sex and fertility, none of us would be here!) - to develop a spiritual consciousness. Tantra is not a religion at all, but an ancient set of spiritual beliefs. Tantra has never become an actual religion, and it was never intended to be one — partly because by its very nature it is not conducive to the set of structured guidelines and formats associated with most religions.
 
With Tantra, there are no commandments or strict rules to follow. You are not required to maintain a rigid prayer schedule or attend services at designated times. Each Tantric practitioner dictates his or her own path based on what's right for that individual. Tantra was originally passed from guru to student, and each guru had his own unique approach to the Tantra beliefs. The most obvious way that Tantra differs from most religions involves sex.
 
Most modern religions view sex as something to be shared between husband and wife, and even then usually for the purpose of procreation. In fact, many people get the impression from religious advisors that sex is something bad or dirty. By contrast, Tantrics believe sex is a sacred gift. Today Tantric revere Shiva as the pure embodiment of the masculine force culminating in cosmic consciousness, and Shakti as the feminine principle embodying pure creative energy. This isn't worship of supreme beings as in most organized religions.
Rather, it is Tantra's way of honouring the forces of nature that exist within each of us. We simply use Shiva and Shakti as convenient symbols to focus the growth of our own divine qualities.
 
To the crude they are pornographic. And to the bias they are the vulgar habits of a primitive peoples. Yet they are in fact, opaque symbolic portrayals of the state of 'union' with God. We often wonder why do Hindu Temples have objectionable sculptures on walls. From Tantric perspectives, such sexual images serve as a stimulant messenger to convey the idea of creation, transformation, unity and harmony to the viewers. Within the vast confines of Hinduism one encounters many approaches to demonstrating spiritual ideas. Mithuna ['the state of being a couple'] carvings are just one!.
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல்  காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர்.  சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு  அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.     
    • இதை யாழ்களம் ஏற்றுக்கொள்ளாது.☝ 😃 ஆனால் நான் கர்மாவின் செயல்களை நேரடியாகவே அனுபவித்துள்ளேன். அடுத்தது மரணம் என நினைக்கின்றேன். ஒரு காலத்தில் தமிழன் எத்தனை நாடுகளுக்கு படையெடுத்து வெற்றிக்கொடி ஈட்டினான். ஆனால் இன்று துண்டு காணிக்காக போராடுகின்றான்.
    • நான் எங்கும் அசாத்திற்கு வெள்ளை அடிக்கவில்லை என்பதை இங்கு உறுதியாக கூறுகின்றேன்.  நான் மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதினால் ஏன் இவர் ரஷ்யாவில் தஞ்சம் கோரவில்லை என எழுதுகின்றார்கள். எனக்கு எதிராக எழுதுபவர்கள் ஒன்றும் இலங்கையில் இருந்து எழுதுபவர்களல்ல.  எனவே தாம் வாழும் புலம்பெயர் நாடுகளில் ஆட்சியில் இருக்கும்  அரசை விட மாற்றுக்கருத்து கட்சிகள் இல்லையா என யாராவது பதில் சொல்ல முடியுமா?  தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு செய்யும் நடவடிக்கைகளை மட்டும் ஆதரிப்பீர்களா? நீங்கள் ஆதரிக்கும் இந்த மேற்குலகுதானே முள்ளிவாய்க்கால் நிகழ்வை வேடிக்கை பார்த்தது. 👈 அப்போது வராத உணர்ச்சிகளும் வார்த்தைகளும் உக்ரேன்,சிரியா ,காஸா போன்ற நாடுகளின் கலவரங்களில் மேற்குலகு சார்பான கருத்துக்கள் வருகின்றனவே அது ஏன்? எப்படி? விடுதலைப்புலிகள் செய்தவை மாறானவை என்பதையே உங்கள்  அன்றைய மௌனம் சொல்லி நிற்கின்றது. மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கும் காசா அழிவிற்கும் சிரியா வீழ்சிக்கும் சந்தோசமாக ஆர்ப்பரிப்பவர்கள் ஏன் முள்ளிவாய்க்கால் அழிப்பை ஆர்ப்பரிக்கவில்லை?    அண்மைய மேற்குலகின் அழிவுகள் எல்லாம் நான், என் மண், என் தேசம், என்பவர்களை தான் தேடி அழித்தொழித்துக்கொண்டிருக்கின்றது. எல்லா மனிதர்களுடனும் எல்லா கருத்துக்களுடனும் ஒருமித்து நிற்க முடியாது.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.