Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    13 APR, 2024 | 01:58 PM

image
 

அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

வணிக வளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பிவெளியேறிய வண்ணமுள்ளனர்.

BBOcHh9L.jpg

அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன.

பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர்.

வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

தாக்குதலை மேற்கொண்ட நபர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலில் மேலும் சிலர் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள காவல்துறையினர் மற்றுமொரு சந்தேகநபரை தேடிவருகின்றனர்.

7hWzf0B-.jpg

வெஸ்ட்பீல்ட் வணிகவளாகத்தில் ஆண் ஒருவர் கத்தியுடன் ஓடி திரிந்து தாக்குதலை மேற்கொண்டார் காயமடைந்தவர்களில் குழந்தையொன்றும் தாயும் உள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வணிகவளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜேசன் என்ற நபர் பெரிய வாளுடன் நபர் ஒருவரை பார்த்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வணிகவளாகம் மூடப்பட்டுள்ளது பாதுகாப்பாக பதுங்கியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.

https://www.virakesari.lk/article/181048

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி மாலில் மக்களை சரமாரியாக கத்தியால் குத்திய நபரை துணிச்சலுடன் எதிர்கொண்ட பெண் அதிகாரி - என்ன நடந்தது?

ஆஸ்திரேலியா: மாலில் நுழைந்து கத்தியால் 6 பேரை கொன்ற நபர் - நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போண்டியிலிருந்து டிஃபானி டர்ன்புல்&கேட்டி வாட்சன், லண்டனிலிருந்து டௌக் ஃபால்க்னர்
  • பதவி, பிபிசி
  • 27 நிமிடங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மால் ஒன்றில் ஆயுதம் தாங்கிய ஒருவர் கத்தியால் தாக்கியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை விவரித்துள்ளனர்.

"இந்த செயல் பைத்தியக்காரத்தனம்," என வருத்தத்துடன் விவரித்தார் ஒரு பெண்.

போண்டியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மாலில் சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி 3 மணிக்கு மேல் இச்சம்பவம் நிகழ்ந்தது. வழக்கம் போல அந்நேரத்தில் வணிக வளாகத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்திருந்தனர்.

நேரில் பார்த்த ஒருவர் தனது இரண்டு சிறிய குழந்தைகளுடன் கடை ஒன்றின் அருகில் இருந்தபோது, ஒரு நபர் "மக்களைக் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தியதைக்" கண்டார்.

"இது படுகொலை" என்று பெயர் வெளியிட விரும்பாத அவர், ஏபிசி நியூஸ் ஆஸ்திரேலியாவிடம் கூறினார்.

அந்த ஆயுததாரி உள்ளூர் நேரப்படி 3:10 மணிக்கு வணிக வளாகத்திற்குச் சென்று சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டதாக காவல்துறை கூறுகிறது.

அவர் வணிக வளாகத்தில் இருந்தவர்களை ஏன் தாக்கினார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தீவிரவாதம் ஒரு நோக்கமாக இருக்கலாம் என்ற யூகம் நிராகரிக்கப்படவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

அருகில் பணியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்நபரை நேராக எதிர்கொண்ட போதுதான் இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தது. அப்போது, அந்நபர் போலீஸ் அதிகாரியை நோக்கி கத்தியை உயர்த்தினார். அப்போது அந்நபரை போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

"மக்கள் அலறிக்கொண்டே ஓடினர்" என்றும் பின்னர் போலீஸ் அதிகாரியை மக்கள் பின்தொடந்து சென்றதாகவும் பெயரிடப்படாத மற்றொரு நேரில் பார்த்த சாட்சி கூறினார்.

"பெரிய கத்தியுடன்" ஆயுதம் ஏந்திய அந்த நபர் "எங்களை நோக்கி வரத் தொடங்கினார். அப்போது 'கீழே போடு' என்ற சத்தத்தைக் கேட்டோம். பின்னர், அந்த அதிகாரி அந்நபரை சுட்டார்" என அவர் கூறினார்.

"அவர் சுடவில்லை என்றால், அந்த நபர் தொடர்ந்து பலரை கொன்றிருப்பார். அவ்வளவு வெறித்தனத்துடன் அந்நபர் இருந்தார்."

 

‘எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தோம்'

ஆஸ்திரேலியா: மாலில் நுழைந்து கத்தியால் 6 பேரை கொன்ற நபர் - நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,APTN

தாக்குதல் நடந்த வெஸ்ட்ஃபீல்ட் மால், சிட்னியின் மத்திய வணிக மாவட்டத்தின் கிழக்கில் உள்ள ஒரு பெரிய வணிக மையமாகும். இது, புகழ்பெற்ற போண்டி கடற்கரைக்கு அருகில் உள்ளது.

இது நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான வணிக வாகளங்களுள் ஒன்றாகும். வழக்கமான சனிக்கிழமைகளைப் போலவே இன்றும் இந்த மாலில் நூற்றுக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். இதில் பலர் சிறு குழந்தைகள் ஆவர்.

இந்த தாக்குதல்கள் நடந்தபோது அதைத் தடுக்க சக்தியின்றி பார்த்துக் கொண்டிருந்ததாக, இதனால் அதிர்ச்சியில் உள்ள கடைக்காரர்கள் விவரிக்கின்றனர்.

நியூ சௌத் வேல்ஸ் மத்திய கடற்கரையில் இருந்து வருகை தந்த 33 வயதான ஜானி, தனக்கு அலறல் சத்தம் கேட்டதாகவும் திரும்பிப் பார்த்த போது, ஒரு பெண்ணும் அவரது குழந்தையும் தாக்கப்படுவதைப் பார்த்ததாகவும் கூறினார்.

"அவர் கத்தியால் குத்தப்பட்டார். எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர், என்ன செய்வது என்றே தெரியவில்லை," என்று அவர் கூறினார்.

காயமடைந்த பெண், டாமி ஹில்ஃபிகர் கடைக்கு ஓடினார், உள்ளே நுழைந்தவுடன், ஊழியர்கள் விரைவாக கதவுகளைப் பூட்டினர் என்றார்.

“மற்ற கடைக்காரர்களில் சிலர் உடைகளைப் பயன்படுத்தி, ரத்தப்போக்கை நிறுத்த முயற்சித்தனர்," என்று அவர் கூறினார்.

"குழந்தைக்கு சிறிய காயம் மட்டுமே இருந்தது, ஆனால் அந்த பெண் மிகவும் மோசமாக இருந்தார் ... நிறைய ரத்தம் வெளியேறியது, அப்பெண் பீதியடைந்திருந்தார்," என்று அவர் கூறினார்.

 
ஆஸ்திரேலியா: மாலில் நுழைந்து கத்தியால் 6 பேரை கொன்ற நபர் - நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இச்சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், ஒருவர் காயமடைந்து கிடந்ததைக் கண்டதாகவும், என்ன நடக்கிறது என்பதையே அப்போது உணர முடியவில்லை என்றும் கூறினார்.

"அப்போது மக்கள் அனைவரும் எங்களை நோக்கி ஓடிவருவதை நாங்கள் பார்த்தோம். பின்னர் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. என் கணவர் எங்களை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்றார். அப்போது அக்கடையில் இருந்த பெண் ஒருவர் கதவைப் பூட்ட முயற்சித்தார். அவரால் முன் கதவைப் பூட்ட முடியவில்லை. அதனால் நாங்கள் அலுவலகத்திற்குள்ளே சென்றோம். அலுவலகம் முழுவதும் பூட்டப்பட்டிருந்தது, பின்னர் போலீசார் எங்களை அழைத்துச் செல்லும் வரை நாங்கள் உள்ளேயே இருந்தோம்” என்றார் அவர்.

சம்பவம் குறித்து தமக்கு விளக்கமளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.

"துரதிர்ஷ்டவசமாக, பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் அனைத்து ஆஸ்திரேலியர்களின் எண்ணங்களும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன" என்று அவர் ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

"காயமடைந்தவர்கள் குறித்து நாங்கள் வருத்தம் கொள்கிறோம். அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கும், எங்கள் துணிச்சலான காவல்துறை மற்றும் முன்களத்தில் இருந்தவர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/clke0ddxke0o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனோநிலை பாதிக்கப்பட்டவரே சிட்னியில் நேற்று கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார் – அவுஸ்திரேலிய காவல்துறையினர்

Published By: RAJEEBAN   14 APR, 2024 | 01:19 PM

image
 

சிட்னியின் பொன்டி வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்தவர் குயின்ஸ்லாந்தை சேர்ந்த 40 வயது ஜோ கௌச்சி என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் மனோநிலை பாதிப்புக்குள்ளானவர் சில மாதங்களிற்கு முன்பே சிட்னியில் குடியேறினார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் வன்முறை மிகவும் பயங்கரமானது என தெரிவித்துள்ள குடும்பத்தவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களிற்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

கௌச்சி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்திய பெண் காவல்துறை உத்தியோகத்தருக்கு அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

கௌச்சி பெண்களை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய வன்முறையில் ஐந்து பெண்கள் உட்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

https://www.virakesari.lk/article/181070

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது மகனை உடனடியாக சுட்டுக் கொன்றிருப்பேன் - சிட்னி வணிக வளாக தாக்குதலில் ஈடுபட்டவரின் தந்தை தெரிவிப்பு - கண்ணீர் மல்க மன்னிப்பும் கோரினார்

Published By: RAJEEBAN    15 APR, 2024 | 12:53 PM

image
 

அவுஸ்திரேலியாவின் பொன்டி வணிகவளாகத்தில் சனிக்கிழமை கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தனது மகனின் செயலிற்காக கண்ணீர் மல்க மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் நான் பொலிஸ் உத்தியோகத்தராகயிருந்திருந்தால் நான் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொன்றிருப்பேன் என ஜோல் கவுச்சியின் தந்தை அன்ரூ கவுச்சி தெரிவித்துள்ளார்.

தனது 40 வயது மகனின் செயலினை தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனது மகன் செய்த செயலினால் ஏற்பட்ட வலிகளை வேதனைகளை போக்க கூடிய விதத்தில் என்னால் எதனையும் தெரிவிக்க முடியவில்லை தெரிவிக்க முடியாது என தந்தை தெரிவித்துள்ளார்.

bondi_killer.jpg

அவர் ஒரு வேதனையான ஆன்மாவாக காணப்பட்டார் வேதனைப்பட்டார் விரக்தியடைந்தார் என தெரிவித்துள்ள அன்ரூ உங்கள் குழந்தைகளிற்கும் தேசத்திற்கும் அவர் செய்தமைக்காக வருந்துகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

 அவுஸ்திரேலியாவின் சிட்னி வணிகவளாகத்தில் கத்திக்குத்தில் ஈடுபட்டவர் தனது மனோநிலை பாதிப்பை கையாள்வதற்கு உரிய உதவிகள் அனைத்தையும் வழங்கியதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

அவன் என் மகன் நான் ஆபத்தான ஒருவனை நேசித்தேன் உங்களிற்கு அவன் ஆபத்தானவன் எனக்கு அவன் ஒரு நோயாளி என அவர் தெரிவித்துள்ளார்.

அறிகுறி ஏதாவது தென்பட்டிருந்தால் நான் வேறு ஏதாவது செய்திருப்பேன் எனவும் கத்திக்குத்தில் ஈடுபட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

நான் முன்னர் ஒரு உணவுவிடுதிக்கு கொண்டுசென்றேன் அவர் என்னை முழுமையாக தழுவிக்கொண்டார் கடவுளே இது எனது மகன் என நான் தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மகன் 18 வருடங்களாக மருத்துவசிகிச்சை பெற்றுவந்தார் என கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டவரின் தாயார் தெரிவித்துள்ளார்.

35 வயதுவரை அவர் வீட்டில் இருந்தார் அதன் பின்னர் பிரிஸ்பேர்ன் சென்றுவிட்டார்  மருத்துவர்களிடம் செல்வதை கைவிட்டுவிட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.

சிறுவயதில் அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர் அவர் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் உதவினார்கள் எனவும் அவர் தாயார் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181111

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல் - பலர் படுகாயம்

15 APR, 2024 | 04:42 PM
image
 

சிட்னியில்  கிறிஸ்தவதேவலாயமொன்றில்  இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கிறிஸ்தவ மதகுரு உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

சிட்னியின் தென்மேற்குபகுதியில் உள்ள கிறிஸ்தவதேவலாயத்தில் ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் திடீரென முன்னோக்கி சென்று மதகுருவை பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.

மார் மரி இமானுவெல் என்ற ஆயர் ஆராதனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை நபர் ஒருவர் அவரை நோக்கி பல தடவை கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் அங்கு காணப்பட்டவர்கள் மீதும் அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

தேவலாயத்தில் ஆராதனைகள் நேரடியாக ஒலிபரப்புசெய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/181146

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா

18 APR, 2024 | 05:05 PM
image
 

பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார்.

பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார்.

முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181371

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் விசேட நடவடிக்கை - 17 வயதிற்குட்பட்ட ஏழு பேர்கைது

24 APR, 2024 | 02:49 PM
image
 

சிட்னிதேவாலயத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் சிட்னியின் பல பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

பாரிய நடவடிக்கை இடம்பெறுவதாக அவுஸ்திரேலியாவின் பொலிஸ் ஆணையாளர் ரீஸ் கேர்சோவ் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிர சிந்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டடிருந்தஏழு பேரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

13இடங்களில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றன 15- 16- 17 வயதுடைய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் பொதுவான நோக்கத்திற்காக இணைந்திருந்தனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் சமூகத்திற்கு உடனடி ஆபத்து இல்லை என காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181844

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.