Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"பாசக்காரப் பாட்டி"
 
 
எல்லா குழந்தைகளுக்கும், தமக்கு அன்பு செலுத்தவும், தாம் அன்பு செலுத்தவும் ஒரு சிலர் கட்டாயம் தேவை. அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக, ஏன் பலவேளைகளில் முதலாவராக இருப்பவர் தான் பாட்டி ஆவார். ஏன் என்றால் அவர்கள் பெற்றோர்களின் பங்கை இலகுவாக எடுக்கக் கூடியது தான், பொறுமையாக இருந்து ஆலோசனை வழங்குவதுடன், சேர்ந்து விளையாடி, கதைகள் சொல்லி ஒரு ஆசிரியர் போலவும், கூட்டாளி போலவும் செயற்படக் கூடியவர்கள் அவர்கள் ஒருவரே! அப்படியான ஒருவர் தான் என் பாட்டி!!
 
எங்க குடும்பம் ஓரளவு கூட்டு குடும்பம் என்பதால், தாத்தாவும் பாட்டியும் எம்முடன் இருந்தனர். அப்பா முழுநேர வேலையும், அம்மா பகுதி நேர வேலையும் என்பதால், என்னை கவனிப்பதில் பாட்டியே முதலாவதாக இருந்தார். பல மகிழ்வான நிகழ்வுகள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் இன்று பெரியவனாகி, படிப்பு முடித்து, வேலையும் செய்கிறேன். அடுத்த ஆண்டு எனக்கு திருமணம் கூட நடக்க உள்ளது. என் முதல் கனா, எனக்கு மூத்தப்பிள்ளை, மகளாக பிறக்கவேண்டும், அவளுக்கு பாட்டியின் பெயரை சூட்டிட வேண்டும். ஆமாம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன், என் பாசக்காரப் பாட்டி, சென்ற ஆண்டு திடீரென கொரோனாவால் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதற்க்கு முதல், என் வருங்கால மனைவியை [காதலியை] சந்தித்து அவருக்கு ஆசி வழங்கியது, அவரை பேத்தி என்று செல்லமாக கூப்பிட்டு அளவளாவியது இன்னும் மறக்க முடியாது!
 
என் சின்ன வயதில், பாட்டி பொதுவாக வீட்டிலேயே இருப்பதால், என்னுடன் அதிகமாக இருந்து உள்ளார். அதனால் அவரே, நான் எடுக்கும் சின்ன சின்ன தீர்மானங்களுக்கு நங்கூரமாகவும், அதே நேரம் எனது பாதுகாப்பாகவும் இருந்தார். அந்த நேரம் அதை என்னால் சரியாக உணரமுடியவில்லை. இடைஞ்சலாக இருக்கிறார் என அடம்பிடித்ததும் உண்டு. ஆனால் இன்று அதன் உண்மையான தன்மையை உணருகிறேன்
 
குறிப்பாக என் பாலர் பருவத்தில் பாட்டியின் பங்கு மறக்கமுடியாத ஒன்று. அவரின் பாசம், எந்த நிலையிலும் மனம் குழம்பாது ஒரு சிறு புன்னகையுடன் எடுக்கும் தீர்மானங்கள், மடியில் இருத்தி கதை சொல்லும் அழகு, தாலாட்டு பாடி நித்திரை ஆக்கும் பக்குவம், கணிதம், தமிழ், விஞ்ஞானம், பொது அறிவு போன்றவற்றை இலகுவாக உதாரணத்துடனும் செய்முறைகளுடனும் புகட்டும் அனுபவம் நான் இன்னும் வேறு யாரிடமும் கண்டதில்லை.
 
"பாசம் கொண்டு மகிழ்ந்து விளையாட
பாவம் பாட்டி இந்த வயதிலும்
பார்த்து படியில் கால் வைத்து
பாலும் சோறும் கொண்டு வாரார்"
 
"பாடி ஆடி விளையாட்டு காட்ட
பால் கொடுத்து கதை சொல்ல
பாயில் அணைத்து சேர்ந்து படுக்க
பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்"
 
பாயை விரித்து நீட்டி படுத்து
பாதி பல்லால் வெற்றிலை மென்று
பாதை காட்ட நல்ல கதைசொல்ல
பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்"
 
ஆமாம் இப்படித் தான் என் பாட்டி இருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் . அவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொலவ்து என்றால், அவர் என்றும் பாரம்பரிய உடையில் தான் இருப்பார். எம் பெற்றோர் , நாம் எல்லோரும் இன்றைய நவீன உடை அலங்காரத்துக்குள் தாராளமாக இருந்தாலும், அவர் தன் அலங்காரத்தை மாற்றவே இல்லை, ஆனால் எம்மை தடுக்கவும் இல்லை, அவர் எம்மை அதில் பார்ப்பதில் மிக்க மகிழ்வே காட்டினார் ! அது தான் அவரின் சிறப்பு !, இது யாருக்கு வரும் ??
 
அவர் பெரிதாக வண்ண நிற ஆடைகள் அணியமாட்டார். அது மட்டும் அல்ல தொழ தொழ என்றே மேல் சடடை இருக்கும். அது முழங்கை மட்டும் நீண்டும் இருக்கும். அதிகமாக பகலில் சேலை அணிந்து இருப்பார். மாலை வரும் பொழுது நைட்டி / இரவில் அணியும் ஆடை அல்லது மேல் சட்டையுடன் ஒரு வித பாவாடை அணிவார். ஆனால் மிகவும் கச்சிதமாக அழகாக உடுத்து இருப்பார்.
 
இன்று உடை கலாச்சாரம் சிறுவரில் இருந்து கிழவி வரை மாறி விட்டாலும், என் பாட்டி கிராமத்து கலாச்சார உடையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் எந்த ஒப்பனையும் செய்வதில்லை, என்றாலும் அவரின் இயற்கையான சாயல் உண்மையில் அழகே! ஏன், அவர் பெயர் கூட கனகம்மா தான்! அவர் சிறு வயதில், பாரமான தங்க தோடு அணிந்தவர் என்பதால், பிற்காலத்தில் அவரின் காது மடல்கள் நீளமாக வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்.
 
பாட்டி சொன்ன இரு விடயங்கள் எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு. அது அவரின் பண்பாட்டையும் அறிவையும் கட்டாயம் பறைசாற்றும். அது மட்டும் அல்ல அவரின் இனப்பற்றையும், ஒரு குடும்ப ஒழுஙகையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று தமிழ் இனம் இலங்கையில் பட்ட துன்பங்களும், அதனால் ஆயிரம் ஆயிரமாக இடம் பெயர்ந்து பரவலாக பல நாடுகளில் வாழும் சூழலில், தமது பண்பாட்டையும், மொழியையும் தொடர வேண்டிய அவசியம் இருக்கு என்பதை அவரின் சொற்கள் என் காதில் ஒலித்த படியே உள்ளது.
 
கலிகாலம் என்றால் என்ன? ஒரு சின்ன பிரசங்கமே எனக்கு வைத்தார். அந்த நாள் காலம் வேறு, இப்பத்தான் காலம் வேறு என்று ஆரம்பித்த அவர், கரிகாலம் என்று சற்று நிறுத்தி சொல்லி, அண்ணனும் தம்பியும் ஒரு முறை சந்தித்தார்கள், தம்பி, அண்ணா கரிகாலம் பிறந்து விட்டது என்று சொன்னான். உடனே அண்ணன், அது உன்னிலேயே தெரிகிறது என்று பதில் கொடுத்தார். காரணம் அன்றைய காலத்தில், மூத்தோருக்கு முன்னால், தோளில் இருக்கும் சால்வையை, ஒரு மரியாதை பொருட்டு, எடுத்துவிட்டு தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி அதை மறந்து வீறாப்புடன் அண்ணன் முன் கதைத்தது கரியன் பிறந்து விட்டான் என்பதை காட்டுகிறது என்றானாம், என்றார் என் பாட்டி. இது இன்று நகைப்புக்கு உரியதாக பலரால் கருதினாலும், கரிகாலம் என்ற சொல்லுக்கு ஒரு நல்ல விளக்கம் என்றே நம்புகிறேன் ! மற்றும் படி எனக்கும் அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை.
 
மேலும் குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்திய பாட்டி, பிதா மாதாவுக்கு கடமை செய்ய வேண்டும் என்றும் தாய் மொழியை எங்கிருந்தாலும் மறக்க வேண்டாம் என்றும், மொழி அழிந்தால் இனம் அழிந்ததுக்கு சமன் என்று சில வரலாற்று கதைகள் மூலம் விளங்கப் படுத்தினார். அதனின் உண்மையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் / காண்கிறோம்! அதனால் தான் என் பாட்டியை மீண்டும் என் மகளாக வரவேண்டும் என்று கனவு காண்கிறேன். நான் மறு பிறப்பில், இவை போன்ற மூட நம்பிக்கைகளில், எந்த உண்மையும் இல்லை என்று அறிவியல் ரீதியாக எண்ணுகிறவன் என்றாலும், என் பாசக்காரப் பாட்டியின் சாயலில் வரவேண்டும் என்பதே என் கனா!
 
"கட்டிலில் படுத்து பாட்டியை நினைத்தேன்
ஊட்டி வளர்த்த கதைகளை சுவைத்தேன்
போட்டி போட்டு கனவு வந்தது
பாட்டி உருவில் தேவதை வந்தது!"
 
"கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை தந்தது
குட்டி பாட்டி தவழ்ந்து வந்தது"
 
"மெட்டி ஒலி காற்றோடு கலக்க
முட்டி மோதி நிமிர்ந்து நடந்து
பொட்டக் குட்டி பாட்டி பெயரில்
லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது"
 
"ஒட்டி உடையில் அழகு காட்டி
சட்டம் போட்டு திமிரு காட்டி
பாட்டு படித்து இனிமை காட்டி
புட்டி பாலூட்ட மடியில் உறங்குது"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பி கு ;
என் அம்மாவை என் மகன் எழுதுவதாக கதை வடிவமைத்துள்ளேன்
297943814_10221424717270145_8289047939070825_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Od5jHBBTINcAb6VEhNw&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AfCBFiPd0cWZ7FiK1Hc37Ldp9Ur16e1x_sFPd8o0TiFFpg&oe=662354E7 May be an image of 1 person
 
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன்.    எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!   என்னிடம் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.     "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன"       இது தமிழீழ சுகாதார சேவைகளின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவ பிரிவின் இலச்சினையாகும்        இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:  
    • அந்த நாட்டில் தீவில் எல்லாமே இறக்குமதிதான் அதிலும் கடைசி திகதிகள் முடிந்த காலாவதியான உணவுகள் இதைத்தான் புலம்பெயர் தேடி போகினமா ? கொஞ்சமாவது சிந்திந்தியுங்க ? முதலில் உண்மையான தமிழனுடன் அரசியலை பேசி முடியுங்க அதுக்காக சிங்களம் உருவாக்கி வைத்து இருக்கும் குரங்கு சுமத்திரன் போன்ற நாய்களை கதைக்க வேண்டி அனுப்ப வேண்டாம் நாடு இனி உருப்பட வேணுமா வேண்டாமா ? 
    • உப்பிடித்தான் முன்பிருந்த பலரும் கூறி, தாம் மாத்திரம் வசந்தத்தை அனுபவித்து சென்றனர்.  இலை அசைவதை வைத்து வசந்தம் என்று கூறிவிட முடியாது. அது சூறாவளியாகவும் மாறலாம், எதுவுமே வீசாமல் புழுக்கமாகவும் இருக்கலாம். அதை அனுபவித்தபின் மக்களே கூறவேண்டும்.  கூறுவார்கள். முதலில் நிதி கிடைக்கிற வழியை பாருங்கள்.   
    • பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!
    • யாழ்ப்பாணம் 18 மணி நேரம் முன் சிறப்பாக இடம்பெற்ற நல்லூர் ஆலய கார்த்திகை குமாராலயதீப நிகழ்வு!   இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது. மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்தங மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு  இடம்பெற்றது. சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருக பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்றைய சொக்கபானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/article/சிறப்பாக_இடம்பெற்ற_நல்லூர்_ஆலய_கார்த்திகை குமாராலயதீப_நிகழ்வு!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.