Jump to content

வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அதிகரிக்கும் அரசியல் ஆதிக்கங்கள் : ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 APR, 2024 | 10:21 AM
image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக, வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ்.  மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவமொன்று இடம்பெற்றிருக்கிறது.

அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது அதிபராக நியமித்திருக்கின்றனர். அங்குள்ள அரசியல்வாதியான பிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.

தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும். 

எனவே, பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/182071

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜூனில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் - கல்வி அமைச்சினால் சுற்று நிரூபம் வெளியீடு 16 MAY, 2024 | 05:38 PM   (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024)  தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, உயர்தர வகுப்புகளை ஜூன் 4ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (15) நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே அறிவித்திருந்தார். பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெசாக் விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறிருப்பினும் பரீட்சைகளை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/183718
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09     1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]     பாலியல் நோக்குநிலை என்பது நீங்கள் யார் மீது ஈர்க்கப்படுகிறீர்கள் மற்றும் உறவு வைத்திருக்க விரும்புகிறீர்கள் பற்றிய உங்கள் பாலியல் நடத்தை ஆகும் எனலாம் [Sexual orientation is about who you’re attracted to and want to have relationships with]. அந்த பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் ஆகிறது.   எனவே தனிப் பட்டவர்களுக்கு குடும்பங்கள் ஒரு முக்கிய ஆதரவு அமைப்பை - குழந்தை பருவத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரிகள், மாமா, மாமி .... என தொடங்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிலையில் வழங்குகிறது. இப்படியான வெவேறு பல தனிப்பட்டவர்கள் பரஸ்பர நன்மைக்காக ஒன்றாக வேலை செய்யும் பொழுது அங்கு ஒரு சமூகம் உதயமாகிறது.   அது சிறிதோ பெரிதோ, அவர்களிற்கு இடையான தொடர்பு அல்லது இணைப்பு அந்த சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. இப்படியான குடும்பத்தின் பாத்திரங்கள் [roles] கலாச்சாரத்தை தொடர்ந்து நூற்றாண்டுகளாக வாழ, நிலைநாட்ட முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இதை உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் மூலம் இனப்பெருக்கத்தையும், மற்றும் சமூகம் மூலம் சமூகமயமாக்களையும் குடும்பங்கள் செய்கின்றன [biologically through procreation, and socially through socialization].   குடும்பம் சமூகத்தின் அடிப்படை சமூக அலகு என்பதால், ஒரு சமூகம், சமுதாயம் நிலைத்து, வலுவாக நிற்க, சில குறிப்பிட்ட இயல்புகளை கொண்ட தனிநபர்களினால் அமைக்கப்பட்ட வலுவான குடும்பங்கள் எமக்கு தேவைப்படுகிறது. இந்த நோக்கில் நாம் பார்க்கும் பொழுது கட்டாயம் ஒரு தனிப்பட்ட ஆணாலும் ஒரு தனிப்பட்ட பெண்ணாலும் அமைக்கப்பட்ட குடும்பம் ஒரு சிறந்த அமைப்பாக தென்படுகிறது, ஏனென்றால்,     1] குழந்தை தனது இயல்பான, உயிரியல் [natural, Biological] தந்தை மற்றும் தாயின் செல்வாக்கின் கீழ் வளர்க்கப் படுகிறது,   2] குடும்பங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை என்றால் அல்லது ஒரு இனம், இனப்பெருக்கம் செய்யவில்லை என்றால், அந்த குடும்பங்கள் அல்லது அந்த உயிர் இனங்கள் அழிந்து போகும் அல்லது இறந்து போகும், அதனுடன் அவர்களின் அல்லது அவைகளின் சமூகமும் அழிந்து போகும்.     கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து பூரணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார்.   "தண்டு ழாய்முடி யான்தனி நாயகற் கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான் உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ கொண்ட வேடம் இனிதென்று கூறினான்." [1458]   அதற்கு பாடல் 33 இல், திருமால்,சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று,   "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463]   என வினவினார். மேலும் கடவுள் சிலைகளை தாண்டி, பல வகையான கவர்ச்சிமிகு எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை நிர்வாண சிலைகள், இந்தியாவின் பெரும்பாலான பழைய இந்து கோவில்களின் கோபுரங்களில் மற்றும் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கஜுராஹோ - மத்தியப் பிரதேசம், மார்க்கண்டேஸ்வரர் கோவில் - மகாராஸ்டிரா, படவலி கோவில் - மத்தியப் பிரதேசம், ரணக்பூர் ஜெயின் கோவில் - ராஜஸ்தான், சூரிய கோவில் - ஓடிஸா, சூரிய கோவில் - குஜராத், ஓசியான் - ராஜஸ்தான், விருபாக்ஷா கோயில் - கர்நாடகா போன்றவை ஆகும். இது ஓரினச்சேர்க்கை அன்று புராண கதைகளில், கடவுள் துதிகளில் காணப்பட்டதற்கு சாட்சி பகிர்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.   சுமார் 400 மிருக இனங்கள் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண் அடங்கும். சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish] போட்டியாளர்களை ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி ,உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள்.     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்   பகுதி: 05 தொடரும்             
    • சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக, பொறுப்புள்ள நபராக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங்கிற்கு 17 வயதில் முதல் திருமணம் ஆன நிலையில், 3 முறை மறுமணம் செய்த அவர், தற்போது 5 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதில், முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகனுக்கு தான், கடந்தாண்டு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இளம் வயதில் பாட்டி ஆன இன்ஸ்டா பிரபலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/301763
    • Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 03:46 PM   யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை  கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெண்ணின் கணவரை நேற்று புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, தர்க்கம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் ,அடிப்படையில்  பெண்ணின் கணவரை பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/183669
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.