Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 23 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
 
சங்கத் தமிழரின் உணவு மரபை ஒரு இள மனைவியின் கதையாகவே கொடுக்கிறது கி மு 200 ஆண்டை சேர்ந்த குறுந்தொகை 167.
 
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல், கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக், குவளை யுண்கண் குய்ப்புகை கமழத், தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர், இனிதெனக் கணவ னுண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.”
 
என்று. மேலும் அந்த இளம் குடும்பப் பெண் தித்திக்கும் புளிச் சுவை நிறைந்த மோர்க் குழம்பை அல்லது புளிக் குழம்பை ஆக்குவதில் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டை ஒவ்வொரு வரிகள் ஊடாகவும், அதே நேரம் அந்த உணவு ஆக்கும் முறையையும் நாம் அதில் அறிய முடிகிறது.
தலைவனும் தலைவியும் பிறர் நன்கு அறியாத படி மறைவாக கண்டு காதல் கொண்டு, பெற்றோரின் சம்மதம் இன்றி, களவு மணம் செய்து இருவரும் தனிக் குடித்தனம் சென்றனர். துடித்துப் போனாள் மணப் பெண்ணின் தாய். பொறுப் பேதுமின்றி, செல்வச் செழிப்புடன், உலாவித் திரிந்தவளால் தனக் குடித்தனம் நடத்த முடியுமா? அடுப்பங்கரையே தெரியாதவள் எப்படி ஆக்கிப் போடுவாள்? அமைதி கொள்ள முடியாத தாய், தன் தோழியை அழைத்து மகளின் தனிக் குடித்தனத்தின் சிறப்பை கண்டு வருமாறு கேட்டுக் கொண்டாள். அதன் படி, எப்படி இல்லறம் நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான காட்சி இங்கு கவிதையாகிறது.
 
தலைவன் வெளியே சென்று விட்டான், தன் தலைவனுக்காக உணவு ஆக்கும் பணியில் இறங்கினாள் அந்த இளம் தலைவி. முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். நன்கு முற்றிய கட்டியாகியிருந்த தயிரை உறியிலிருந்து இறக்கி எடுத்து, அந்த கெட்டித் தயிரை தன் மெல்லிய விரல்களால் பிசைகிறாள்; அவ்வேளை, அவள் திடுமென எழுகிறாள். அப்பொழுது, அவள் அணிந்திருந்த சேலை நழுவி விட்டது. கை கழுவிப் பின் சேலையைச் செருகி மீண்டும் தயிரைத் தொட்டால் தயிரின் பதம் கெட்டு விடும் என்பதால், அது அழுக்காகி விடும் என்று தெரிந்தும், உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக் கொள்கிறாள்.
 
நெய்யோடு கடுகு மிளகு என்பன இட்டுத் தாளித்துப் பின் பிசைந்த தயிர் ஊற்றி மோர்க் குழம்பு செய்தாக வேண்டும். அப்படி முறைப்படி தாளிக்கும் போது, கடுகும் மிளகும் இன்ன பிறவும் நெய்யில் வதங்கிப் பொரிய, புகை பொங்கி எழுந்தது, கண்களில் புகை நிறைகிறது; எனினும் அதனை அவள் பொருட்­ ப­டுத்­தாது கண்ணைக் கசக்கியபடி துழாவி துழாவி இத­மாகச் சமைத்தாள். தாளித்த [கறி] சட்டியை விட்டு அவள் விலகவே யில்லை. சற்றே விலகினாலும் சுவை மாறி விடும் என்பதால். இவ்வாறு புளிக் குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில் தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான். தலைவியின் முகத்தில் சொல்ல முடியாத மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே பேச்சுக் குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி இது அன்பினால் இயக்கப் பட்ட ஒரு மௌன நாடகம் ஆகும்.
 
தமிழில் எழுதப்பட்ட சமையல் நூல் ஒன்று சங்க காலத்தில் இருந்ததாக சிறுபாணாற்றுப்படை, வரிகள் 238 - 241,
 
“கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப், பூ விரி கச்சைப் புகழோன் தன்முன், பனிவரை மார்பன், பயந்த நுண் பொருள், பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில்,"
 
குறிப்பிடுகிறது. அதில், ஒய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் [இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன்] பாணர்களுக்கு விருந்து படைக்கும் போது இந்த நூலிலுள்ள முறைமை வழுவாமல் சமைக்கப் பட்ட உணவை இட்டானாம் என்கிறது. இந்த நூல் அருச்சுனனின் அண்ணன் வீமனால் எழுதப் பட்டதாம். ஆகவே இது வடமொழி நூலைத் தழுவியதாக இருக்கலாம். எனினும் இலக்கியத் தொகுப்பிற்கு முன்பாகவே இந்நூல் அழிந்து விட்டது போலும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமையல் தொடர்பாகத் தனித்துவமான ஒரு நூல் இருந்தது என்ற செய்தியால், நாம் அக்கால தமிழரின் உணவு மரபின் சிறப்பைக் காணக் கூடியதாக இருக்கிறது.
 
மேலும் அங்கு காணப்பட்ட உணவு மரபு வளர்ச்சியின் உன்னதமான நிலை, வீடுகள் தோறும் தனியாக ‘சமையலறை’ என்று ஒன்று அமைய காரணமாக இருந்திருக்க கூடும். அவற்றை அட்டில் என சங்க தமிழர் அழைத்தனர். அது மட்டுமா, மிக நுணுக்கமாக உணவருந்தும் முறைகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் பொருத்தமாக உணவு உண்ணும் பன்னிரெண்டு முறைகளை தந்துள்ளார்கள் என்பதும் அவர்களின் அக்கால உணவு மரபின் சிறப்பைக் காட்டுகின்றது.
 
அருந்துதல் - மிகச் சிறிய அளவு உட்கொள்ளல்,
உண்ணல் - தாராளமாக பசிதீர உட்கொள்ளல்.
உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு திரவத்தை உறிஞ்சி உட்கொள்ளல்.
குடித்தல் - திரவ உணவை (கஞ்சி போன்றவை) மெல்ல மெல்ல பசி போக்க உட்கொள்ளல்.
தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
துய்த்தல் - மகிழ்ந்து,சுவைத்து உட்கொள்ளுதல்.
நக்கல் - நாவினால் துலாவி உட்கொள்ளுதல்.
நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல். பருகல் -திரவிய பண்டத்தை சிறுகக் குடிப்பது.
மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல். மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல் ஆகும்.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 24 தொடரும்
 
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 23 "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
Kuzhambu (குழம்பு / curry), is a dish common in South Indian and Sri Lankan Tamil cuisines, and is a gravy based on a broth made with tamarind, urad (bean) dal and toor dal, and can include vegetables. The dish is very popular as a side for rice among Tamils. The number of varieties of kuzhambu are countless, one of which is a tamarind based gravy, puzhi kuzhambu, which people ate even 2200 years ago!
 
It is a thick gravy with tamarind pulp. It has a tangy flavour combined with the special spices. We found this curry in Kurunthokai 167 [2nd century B.C], penned by Koodalur Kizhaar. The verse is situated in the forest regions of ‘Mullai’ and speaks in the voice of the lady’s foster-mother to the birth-mother, narrating events that transpired in the lady’s marital home.
 
The verse opens with the words ‘முளி தயிர் பிசைந்த’ meaning ‘kneading well-set curd’ and talks about a well-known food item in Indian cuisine, known as ‘curd’ here, and goes by the alias of ‘yoghurt’ in an international scene, which purists will declare as different. Whatever that may be, here’s an evidence of the usage of curd, known for its probiotic wealth, in Sangam times. Next, the final dish being prepared appears in ‘தீம் புளிப் பாகர்’ meaning ‘sweet and sour gravy’.
 
What is really cooking in this verse? The context reveals that Hero & Heroine have fallen in love and without parents consent. They have eloped and married. After few days the girl's parents send the foster mother to check out if the girl is doing well & happy.
 
The foster mother goes to her place and observes and reports back to their parents. So this situation usually results in poem of how the young girl has taken up responsibility of running the family and how she does really well even though she is young and used to luxurious conditions in her parents home.
 
Here is the poem where the foster mother recounts her observations to Heroine’s mother.
 
“After kneading the thick curd with her flame-lily-like, soft fingers, as her well-washed attire slipped away, even without washing her fingers, she touched her attire and wore it. With her blue-lily-like, kohl-streaked eyes, filled with cooking smoke, she served the sweet and sour curry that she stirred on her own to her husband, who savouring it, declared it to be delicious. Hearing that, a subtle joy spread on that face, decked with a luminous forehead.”
 
With these words, the foster-mother passes on the news to the birth-mother that their daughter is leading a happy life with her husband.
 
Sangam poem, Sirupanatruppadai, which were written by the poet Nathattanaar in praise of a minor Velir chieftain named Nalliyakkotan, a Naka king of Naka Nadu (ancient Malabar North Ceylon) - mentioned that there were cook book in Tamil during Sangam period, may be written based on sanskrit [saṃskṛtam] book, wrote by Bhima of mahabharata. It is also understand from Mahabharata that he is the first to have cooked a dish much loved in South India, Aviyal, which is a thick stew of vegetables, curd and coconut, While he served at the court of King Virata as disguise himself as a cook named Vallabha.
 
"He will serve you many different foods that have been created from cookbooks written by Bheeman with a chest like that of a snow-covered mountain, older brother of Arjunan who wears a breast cloth with flower designs, famed for his archery skills, the one who received a quiver with arrows from the fire god after burning a forest." [Sirupanatruppadai: 238-241]
 
It is surprised to understand that during the Sangam period or even before that every Tamilian houses had separate kitchen called attil [அட்டில்] and further We come to know from Sangam literature that ancient Tamilian consumed food or drink in twelve different ways. They are
 
Arunthuthal [அருந்துதல்] - consuming very very little like medicine,
Unnal [உண்ணல்] - eating,
Urinchal [உறிஞ்சல்] - suction,
Uudiththal [குடித்தல்] - Drinking,
Thinral [தின்றல்] - eating,
tuyttal [துய்த்தல்] - Eating anything with satisfaction or pleasure,
Nakkal [நக்கல்] - Things eaten by licking,
Nunkal [நுங்கல்] - devouring,
parukal [பருகல்] - drinking, liquid food,
maantal [மாந்தல்] - eating drinking,
Mellal [மெல்லல்] - Mastication or chewing -food is crushed and ground by teeth and,
vilunkal [விழுங்கல்] - deglutition
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 24 WILL FOLLOW
438725400_10225067787264618_824004867768790707_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=P7HiHwNK7iEQ7kNvgFtOPNu&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDzjLdliva_Qcs-2tW8cV3V4tORLelut6lUBQCzcNQd8Q&oe=66903E4B 438721473_10225067786704604_8883463975075270321_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=hgZl7_FKEGcQ7kNvgH2L3n8&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAonjLdIVrGGLiI32S3KwhH0dhnGD3woPA51ppY84Rq_w&oe=66901B60 438815030_10225067786984611_270447586083713223_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=eIwXvesN-aoQ7kNvgFvcPhi&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAmXDNH7lhuslX59gX8PfpjuNJ_ZiVntkUNCb5or9usfw&oe=66901E18 438769558_10225067787664628_4904276101267187978_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jpDYzuvtJJ4Q7kNvgH5iHWt&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYA7eCV70yh_tht2ygOV7o5HQlN_Zy-tKufC6O_DFyYUrg&oe=66901E38
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 24 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
கறியை பற்றி நாம் மேலதிகமான விபரங்களை தேடினால், கறியில் பல வடிவங்கள் இன்று இருப்பதை காண்கிறோம். உதாரணமாக, இந்திய கறி, தாய் சிவப்பு பச்சை கறி, மலேசியன் கறி, சீனா கறி, ஜப்பான் கறி, கரீபியன் கறி, இலங்கைக் கறி, மொரிஷியன் கறி, பங்களாதேஷி கறி , பாக்கிஸ்தான் பால்டி கறி, பர்மிய கறி இப்படி பல இன்று உள்ளன, ஏன் பிரிட்டிஷ் கறி கூட இன்று உண்டு. அப்படி என்றால், எது உண்மையானது? இது ஒரு தீர்க்கமான வினாவாக இன்று காணப்படுகிறது. நீங்கள் ஆக்ஸ்போர்டு அகராதியை கொஞ்சம் பார்த்தீர்கள் என்றால், தமிழ் சொல் கறி, பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் நாட்டுக் குடிமக்கள் மூலம் ஆங்கில மொழிக்கு வந்தது தெரிய வருகிறது. அப்படியே கறி பிரியர்களின் இன்னும் ஒரு உணவின் ஆங்கில பெயரான பப்படமும் தமிழ் பெயரே, அதேபோல ஆங்கில பெயரான ரசம், கஞ்சி, மாங்காய் எல்லாம் தமிழ்ப் பெயரே.
தமிழர்கள் கருமிளகை தமது கறியை மசாலா ஆக்க பாவித்தார்கள். ரோமானியர்கள், கிரேக்கர்கள், சீனர்கள், அரேபியர்கள் [இவர்கள் எல்லோரையும் கூட்டாக ஜவனர்கள் என அழைக்கப் பட்டார்கள்] மற்றும் ஆபிரிக்கர்களுக்கு தமது மசாலா அல்லது நறுமணப் பொருள்களை கிருஸ்துக்கு முன்பே இருந்து பல நுறு ஆண்டுகளாக ஏற்றுமதி செய்தார்கள் என வரலாறு கூறுகிறது. மேலும் 520 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பிரதேசங்களுக்கு போர்த்துக்கேயர் மிளகாயை முதல் முதல் அறிமுகப்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியே பல 130 மரக்கறிகளையும், உதாரணமாக, கோதுமை, தக்காளி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், மற்றும் பூசணி போன்றவற்றையும் அறிமுகப் படுத்தினார்கள். சுருக்கமாக எத்தனை விதமான கறிகள் இருந்தாலும், மூல கறி - தமிழ் கறி ஆகும். அதைத்தான் நாம் பகுதி 23 இல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல் மூலம் பார்த்தோம்.
 
அசைவ உணவுகளான -மீன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மான்கறி ,போன்ற உணவுகளின் குறிப்புகள் சங்க பாடல்களில் புதைந்து கிடைக்கின்றன. என்றாலும் நீரும் நிலமும் சேர்ந்து உண்டாக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தன. அதாவது சைவ உணவுகளான - சோறும் மற்றும் காய்கறி உணவுக்கும் ஆகும். எனினும் சைவ, அசைவ உணவுகளுக் கிடையில் வேறுபாடு ஒன்றும் பெரிதாக அங்கு எடுத்துக் காட்டப் படவில்லை. அது மட்டும் அல்ல, பெரும் பாலான குறிப்புகளில் இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிடுவதாகவே உள்ளன. இதை அங்கு கண்டு எடுக்கப் பட்ட புதிய கற்காலம், பெருங்கற்காலம் [Neolithic and megalithic] சார்ந்த தொல்பொருள் சான்றுகள் மேலும் உறுதிப் படுத்துகின்றன. அது மட்டும் அல்ல, வேட்டை யாடும் கருவிகள், இறைச்சி வாட்டப் பட்டதை உறுதிப்படுத்தும் கருகிய எலும்புகள், எலும்புகளிலுள்ள மச்சை [marrow] அகற்றப் பட்டதற்கான அடையாளமாக, வெட்டப் பட்ட காயங்கள் உள்ள எலும்புகள் போன்றவையும் அங்கு கண்டு எடுக்கப் பட்டன. இது சமயம் அவர்களின் உணவை கட்டுப் படுத்த வில்லை என்றும் அல்லது அவர்களின் உணவு பழக்கங்களில் சமயம் ஈடுபடவில்லை என்றும் காட்டுகிறது. தமிழர்கள் மாட்டிறைச்சியை ஒரு உணவாக சாப்பிட்டதில் இருந்து, மாட்டை [பசுவை] தெய்வமாக்கி அதன் இறைச்சியை சாப்பாட்டில் இருந்து தவிர்த்தது, பொதுவாக வரலாற்று இடைக் காலத்தில், தமிழரின் சமயம், இந்து சமயத்திற்குள் உள்வாங்கப் பட்டதை தொடர்ந்து மாறிய சூழ்நிலையில் ஏற்பட்டது ஆகும்.
 
கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன் [கூத்தன்] ஒருவன் பரிசு பெற்று வந்தான். அவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும் வகையில் தனது அனுபவத்தை பகிருகையில், அந்த கவிஞன் வரைந்து காட்டுவது போல மிக நுணுக்கமாக ஒவ்வொரு விவரங்களையும் வரிசைக் கிரமமாக பாடினான். அதில், அவன் மாறுபட்ட இயற்கை வனப்புடைய நிலங்களுக் கூடாக காஞ்சிபுரத்தை நோக்கி போகையில், அந்த ஒவ்வொரு நிலத்திலும் வாழும் பண்டைய தமிழரின் வாழ்வை பற்றியும் அவர்களின் உணவு பழக்கங்கள் பற்றியும், தான் பாடிய சிறப்பு மிக்க பெரும்பாணாற்றுப்படையில் கூறிவைத்துள்ளான். இதில் சமையல் குறிப்புகளை அல்லது சேர்மனங்களைப் பற்றி விபரமாக கூறாவிட்டாலும், அந்த பண்டைய கால சமையல் பண்பாடு [கலாச்சாரம்] பற்றிய ஏராளமான தகவல்களை அங்கு அறியக் கூடியதாக உள்ளது.
 
விசாலமான காட்டு வழியினூடாக சங்க கால கவிஞன் போகும் போது அங்கு ஈந்தின் [ஈச்சஞ் செடி] இலையாலே வேயப்பட்ட கூரை குடிசைகளை காண்கிறான். ஈந்தின் இலை முள் போன்று இருக்கும். எனவே கூரையில் அணிலும் எலியும் ஓடாமல் இருக்க ஈந்துக் குரம்பை குடிசைகளை பாலை நிலத்தில் வாழும் வேடுவர் பயன் படுத்தினர் .[ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை-88]. இப்படிப் பட்ட குடிசையில் வாழும் வேட்டுவப் பெண்களின் அன்றாடச் செயல்களை அழகுற வருணிக்கும் கவிஞன், அவர்களின் செயல்களை கண்ணாற் காண்பது போல, வரிகள் 92-94, இல் சித்திரிக்கிறான். இரும்புப் பூண் பிடித்த வலிமையான பாரையால் நிலத்தை புழுதி பறக்கக் கிண்டி, அந்தக் கரம்பு நிலப் [பயிரிடப்படாத மேட்டு நிலப்] புழுதியை அளைந்து [துழாவி] அதில் கிடை க்கும் மென்மையான புல்லரிசியை [Grain of cluster grass] எடுத்து, பின்னர்க் குடிசைக்குத் திரும்பி, குடிசை முன்றிலில் விளாமர நிழலில் நிலத்திலேயே உள்ள பாறை உரலில் அந்த அரிசியை இட்டு, உலக்கையால் குற்றிக் கொழித்தெடுப்பர் என்கிறார். [உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி, நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றி யர், பார்வை யாத்த பறைதாள் விளவின், நீழல் முன்றில் நிலவுரல் பெய்து].
 
பின்னர் பாலை நில மகளிர், கிணற்றில் ஊறியிருக்கின்ற உவர்நீரை எடுத்து வந்து, பழைய விளிம்பு உடைந்து போன வாயை உடைய பானையில் ஊற்றி, உடைந்த அடுப்பில் வைத்து, அரியாது சமைத்த சோற்றை, காய்ந்த மாமிசத்துடன் சேர்த்து உண்பர் என்கிறார். [குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல், 97-100]. நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அவன் செந் நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன், நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம். என்று சொன்னாலே போதுமானது. நீங்கள் தெய்வத்திற்குப் பலியிடுமாறு போலத் தேக்கிலையிலே மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள் என்று மேலும் கவிஞன் அறிவுரை வழங்கினான். [செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்,பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்,103-105 ].
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
 
பகுதி : 25 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 24 "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
If you go more details about curry, there are many versions now available in the market and the curry lovers are confused. It began as Indian Curry and then we have Thai red and green curries, Malaysian Curry, Chinese Curry, Japanese Curry, Caribbean Curry, Sri Lankan Curry, Mauritian Curry, Bangladeshi Curry, Pakistan Balti Curry, Burmese Curry to name a few. And we now have the British Curry too. So, Which one is authentic? A billion dollars question!. A quick check in the Oxford dictionary shows that the ‘Tamil’ word curry came into the English language via Portuguese in the 16th century. Another popular item with curry lovers, Poppadom is a Tamil word too. Rasam, Congee [கஞ்சி], and Mango are all Tamil words in the English language too. An article “How India changed the English language” appeared on the culture section of BBC’s website on the 22nd of June 2015, had confirmed this fact as well.
 
The Tamils were using black pepper to spice up their curry and the Romans, Greek, Chinese, Arabs (collectively referred to as Yavanas in these ancient Tamil works of literature) and Africans were trading with the Tamils for the spices for a long. However nearly 520 years ago, in 1498, just after the medieval period, the Portuguese came to these Tamils with chili. The Portuguese who brought chilies, also introduced at least 130 other vegetables and plants including wheat, tomatoes, potatoes, cassava, beetroot, and pumpkins to name a few. While there are so many versions of curries from different countries, the mother of all is the Tamil Curry. It is the traditional heritage of the Tamils for more than 2000 years as mentioned in part 22.
 
Eating of fish, mutton, beef, venison, meat in general is found in many references in the ancient Tamil literature. Though, emphasis has been given for food produced with the combination of water and earth and thus, rice eating or vegetarian food. It is evident that a differentiation between vegetarian and non - vegetarian food was not made in those days. Surprisingly, there have been many references which reveal about mixing of both vegetarian and non - vegetarian food together and taking by the ancient Tamils. There are many archaeological evidences found at Neolithic and megalithic burials prove the mixed food habit of the ancient Tamils. Also found different hunting implements, charred bone showing roasting of meat, cut marks on the bones proving the extraction of marrow from them etc. This again goes to prove that religious restriction was not there or religion did not play any role in the food habits. The transition from beef - eating to cow deification leading to banning of the former must have taken place during the complete change over of the social factors with the strong religious and political conditions and compulsions during the Medieval period, when, the society should have been conducive and favourable enough to accept such change.
 
In one of the Sangam poem Perumpanattuppadai [பெரும்பாணாற்றுப்படை], the poet gives graphic details about the life of ancient Tamils and their food habits as the bards travel through various landscapes on the way to the capital city Kanchipuram. There are no detailed recipes in these poems, but they provide abundant information of the culinary culture of the time. As the bards go through the spacious forest paths, there are huts with roofs made of thatched leaves of eenthu (dates) palms [ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குர ம்பை]. The women of these huts dig the ground with spades with caps of iron and raise the dust of black - soiled barren lands and take out the soft rice grains stored in the ground [உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி, நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்]. They pound this rice with ulakkai (pestles) short and strong in urals (mortars) made in the ground. They draw water from the wells and add to the un-sifted rice along with white meat in an old pot with a broken rim on a broken stove [நீழல் முன்றில் நில உரல் பெய்து, குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்]. The minstrel advices the panars [minstrel] that if they say they are the subjects of the lord of the hills who wears war anklets on his legs, the forest women will feed them abundant food served on teak leaves [செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும், பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்].
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
 
PART : 25 WILL FOLLOW
440399490_10225101396904838_2073870515482241542_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OqYcrP8GkBIQ7kNvgEX8X08&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBH9PXlYS5EmoHkLGtY691r-XuZwVXEJYx5860GFLgscQ&oe=66946C65 440589251_10225101396784835_4648674556713797372_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=9EqiVvcuDBoQ7kNvgGgfXvl&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYA0nER_l7XHCvtM1SXbOdc6ceRVVNVb5RsfXUsTahfR-w&oe=669466DC 440566096_10225101396944839_169789543538222912_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=xuUEdorPVUwQ7kNvgEIG50O&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDFMR6SnhFkmLbXbzyIivoXTm07C0k4J5WvjCNI1LsdKA&oe=669448B0 440389183_10225101397304848_2561962852690733645_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=XHqlUvNkVQIQ7kNvgEgUZHI&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD9cGAQ-AvPtzKPk5AtYMRcBjq5E-16VH5KwRsWSLyT1g&oe=669445BE 440436451_10225101397504853_7327616082556141574_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=zlwVBBtZo0gQ7kNvgEethE5&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBO4JkRa0SXs5Q0J38i1O_D945XxFpeLQOjT8EMWH6eyg&oe=66944F84 May be an image of 3 people
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 25 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப் படுத்துவதாக அமைந்த, பழைமை வாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன் படுத்தியுள்ளனர் என்ற தொழில் நுட்பத்திறனும் கூட புலனாகின்றன.
 
நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால், அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் ஓசை கேட்கும். அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள். ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப் சாறு பருகலாம் என்று அறிவுறுத்துகிறார்.[எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை தொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின், 260-262]
 
மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து, தாழை நாரினைக் கொண்டு கட்டி, அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வாழும் நெய்தல் நில மீனவர், தாமே குற்றாத அரிசியில், பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தயாரித்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக படைப்பர், நீயதை உண்ணலாம் என்று கூறுகிறார். அது மட்டும் அல்ல, அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக்கருவிகள் எப்போதும் கிடக்குமாம் என்று அடையாளமும் காட்டுகிறார். [வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர், 279-281].
 
தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது, நறிய நெற்றியினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார். [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறு குவிர், 304-310].
 
பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற் கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது, குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார். [குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர், 344-345].
கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும். அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை, இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு [Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது. [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும், 355-360].
 
இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது, அரசன் தொண்டைமான் இளந்திரையன், உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கி விட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான். மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார். [நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை நீக்கி, ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழு ங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும், 468-475].
 
500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், மதுவின் செய் முறை விளக்கப் பட்டு இருப்பதுடன் [275-281], பட்டிணப்பாலையில் [106 -110], கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.
 
"அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குறும்பி ஏய்க்கும்
பூம்புற நல்அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த
வெம்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி"
பெரும்பாணாற்றுப்படை (275-281)
 
அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும் படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப் பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது.
 
"துணைப் புணர்ந்த மடமங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்து,
மட்டு நீக்கி மது மகிழ்ந்து,
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்,
மகளிர் கோதை மைந்தர் மலையவும்"
பட்டிணப்பாலை [106-110]
 
அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 26 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 25 "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
Though the people of New Guinea were probably the first to domesticate sugarcane, sometime around 8,000 BC. the extraction and purifying technology techniques were developed by Indians. Originally, people chewed sugarcane raw to extract its sweetness, but later they discovered how to crystallize sugar, probably carried out through the simple process of crushing cut-pieces of cane by a heavy weight and boiling the juice extracted and stirring until solids formed. These solids being of uneven shapes and sizes were called jaggery [Sarkara / chakkarai]. Even Perumpanattuppadai describes one of such sugar cane mills found during the Sangam period in Tamil Nadu, in lines 260-262, as "they will also get sugarcane juice, as much as they desire from the noisy sugar cane mills where cane juice was boiled to make jaggery" [எந்திரம் சிலை க்கும் துஞ்சாக் கம்பலை, விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும், கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்]. In the neithal region where fishermen live, they will see short roofed huts covered with thatched tarpai grass. Fish baskets lie in front of the huts and when the bards stay there, fisherwomen will serve them a drink made from a mash of un-pounded boiled rice mixed with fine powdered sprouts of rice, cooled in large wide mouthed pots for two days to sweeten it along with fried fish [வல்வாய்ச் சாடியின் வழை ச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி, தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்]. When they get to the Brahmin settlements at sunset they will get well cooked rice that bears the name of a bird along with fresh pomegranate cooked with butter made from the milk of a red skinned cows, and fresh curry leaves and black pepper. They will also give fragrant pickles made with tender green mangoes [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்]. At the seashore town there are many storied mansions where there is abundant food. They will get abundant toddy with fatty meat of the boar with short legs [குறுந்தாள் ஏற்றைக், கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்]. When they leave these behind and go to the groves where farmers live in huts with roofs made of thatched coconut palm leaves, they will get big jackfruits that grow in clusters and sweet water from young coconuts and alluring plantain fruits. They will also receive young pulpy fruit of the palmyra palms and other dainty sweets to eat [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரு ம்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் ]. And finally when the bards reach the palace of the patron, he will ask them to remove your old clothing and give fine clothing with bright threads and then serve them meat dishes cooked by a talented cook with strong hands. He will also serve large fine red rice and special sweet dishes that are spread in silver bowls [நின் அரைப், பாசி அன்ன சிதர்வை நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்].
 
Also we found from Perumpanatruppadai [275-81], a recipe for brewing & from Pattinappaalai [106 -110], how young women at nights, enjoy with their husbands at bed, while they drinking toddy.
 
"when you are hungry, you will receive cool fish dishes and fine, fragrant liquor that is made by making a mash of unpounded, boiled rice spread on pots with wide mouths to cool, mixed with fine, tender leaves whose back sides look like the combs of termite mounds where snakes live, stirred twice morning and night with fingers in a jar with firm mouth, and aged and filtered with warm water" Perumpanatruppadai [275-281]
 
"Delicate women who unite with their husbands wear cotton instead of silk and drink wine instead of toddy. Men wear women’s garlands and women wear men’s garlands" Pattinappaalai [106 -110]
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 26 WILL FOLLOW
442440060_10225137691532181_7684617615466708098_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=CP3htjhiiQoQ7kNvgHBTnjS&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAGH5rquuNbmOphV8ozkpDA9CA05h8dAhjLppOhM5UZZQ&oe=669D9272 441953309_10225137691332176_997109678630723283_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=X1yWbLwkvEcQ7kNvgEQVgrB&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBkOwPDaJv4ySXr7j8yedrtbmVe1br2POA-z03nqINjcg&oe=669D8D0D 441521889_10225137691372177_2796374617553887661_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=6UOPPLK3zCwQ7kNvgFiAw4F&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYD2YMwa2sMOUW6OM3P_na4t8zfAVHSnd3Ysqbn2LlAnQw&oe=669D76A8 
 
442439329_10225137691852189_1069784890195984314_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=QvDD2sRkCkIQ7kNvgG0hXV3&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAjVFbFRVgmzrukDsZSDl1PRdARLAS7VRDxqcZ_dZBwUg&oe=669DA40D  442398153_10225137692092195_8661345130032331107_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=uJt8n5OviRsQ7kNvgGWU5Hx&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDNI_ON07KJ87kfcNuIMHVuKIeCioylK4okhetMWupgaw&oe=669D7B36  
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 26 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
தொல்காப்பியர் வாகைத் திணையில் “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்“ எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது, நறிய நெற்றியினையும், வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி, இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும், மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார். [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறு குவிர், 304-310].
 
பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற் கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது, குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார். [குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர், 344-345]. கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும்.அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை, இளநீர், மரத்திலேயே பழுத்த வாழைப்பழம், பனை நுங்கு, முதிர்ந்த சேப்பங் கிழங்கு [Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது. [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும், 355-360].
 
இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது, அரசன் தொண்டைமான் இளந்திரையன், உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கி விட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான். சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான். மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார். [நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை நீக்கி, ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழு ங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும், 468-475].
 
500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும், மதுவின் செய் முறை விளக்கப் பட்டு இருப்பதுடன் [275-281], பட்டிணப்பாலையில் [106 -110], கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம். "அவையா அரிசி அம்களித் துழவை, மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி, பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும், பூம்புற நல் அடை அளைஇ தேம்பட, எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி, வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த, வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" பெரும்பாணாற்றுப்படை (275-281) அதாவது, குற்றாத தவிடெடு படாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும் படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப் பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது.
 
"துணைப்புணர்ந்த மடமங்கையர், பட்டுநீக்கித் துகிலுடுத்தும், மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும், மைந்தர்கண்ணி மகளிர் சூடவும், மகளிர்கோதை மைந்தர் மலையவும்" பட்டிணப்பாலை [106-110] அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.
 
கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட, 248 அடிகளைக் கொண்ட, பொருநராற்றுப்படையில், அடிகள்: 102 – 108, எப்படி பண்டைய தமிழன் இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டினான் என்பதை [சங்க கால கேபாப்?] சுட்டிக் காட்டுவதுடன் பலவகையான மாவுப் பலகாரங்களையும் மேலும் குறிப்பிடுகிறது.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 27 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 26 "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
When they get to the Brahmin settlements at sunset they will get well cooked rice that bears the name of a bird along with fresh pomegranate cooked with butter made from the milk of a red skinned cows, and fresh curry leaves and black pepper. They will also give fragrant pickles made with tender green mangoes [வயின்அறிந்து அட்ட, சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம், சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்].
 
At the seashore town there are many storied mansions where there is abundant food. They will get abundant toddy with fatty meat of the boar with short legs [குறுந்தாள் ஏற்றைக், கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்]. When they leave these behind and go to the groves where farmers live in huts with roofs made of thatched coconut palm leaves, they will get big jackfruits that grow in clusters and sweet water from young coconuts and alluring plantain fruits. They will also receive young pulpy fruit of the palmyra palms and other dainty sweets to eat [தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின், தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம், வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர், கவை முலை இரு ம்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும், குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் ].
 
And finally when the bards reach the palace of the patron, he will ask them to remove your old clothing and give fine clothing with bright threads and then serve them meat dishes cooked by a talented cook with strong hands. He will also serve large fine red rice and special sweet dishes that are spread in silver bowls [நின் அரைப், பாசி அன்ன சிதர்வை நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம், இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ, கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை, வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின், தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல், அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்].
 
Also we found from Perumpanatruppadai [275-81], a recipe for brewing & from Pattinappaalai [106 -110], how young women at nights, enjoy with their husbands at bed, while they drinking toddy. "when you are hungry, you will receive cool fish dishes and fine, fragrant liquor that is made by making a mash of unpounded, boiled rice spread on pots with wide mouths to cool, mixed with fine, tender leaves whose back sides look like the combs of termite mounds where snakes live, stirred twice morning and night with fingers in a jar with firm mouth, and aged and filtered with warm water" Perumpanatruppadai [275-281]. Also we find from Sangam literature that "Delicate women who unite with their husbands wear cotton instead of silk and drink wine instead of toddy. Men wear women’s garlands and women wear men’s garlands" Pattinappaalai [106 -110]
 
The Sangam period poem, ”Porunaratruppadai, Which were written by the poet Mutathaamakkanniyaar in praise of the Chola king Karikala Chola, read like travelogues, in which poets who were returning with gifts received from a king, encourage other poets to do the same by describing in glowing terms the king and his country. Here, lines 102 – 108, Indicate how ancient Tamils roasted meat on iron rods.- may be a Sangam period kabab? - and many, different shapes of pastries.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 27 WILL FOLLOW
442416263_10225179601659908_3490515654554815614_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=RqFbRVRL_TcQ7kNvgE6ybV-&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDVpUYs4guKp32AocPvuOq6rkzlZqTlhS-QWKRvtPRQug&oe=66A44D50 442409758_10225179601259898_9042718260697655692_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BnXEvcM8VdEQ7kNvgHj40Bb&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDYLHJmiVL6L1-tjrGQigsZCGAF3Ekjyib5YSKT5XNERw&oe=66A44C80 442425222_10225179602219922_5431952657473633231_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=XBqt1sFdXYAQ7kNvgFMT0T-&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBhucLkL_I0cJOylnVdhLzgagutn_g7umHTljyotV9_Bg&oe=66A43EC1
 
442494563_10225179602339925_8704859225132595336_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=fwec6-JB7YoQ7kNvgHWz6Es&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBUYIrY5iFJoiqmvq2dHM1RFK6VzAuf0T1uBfgnimaXXQ&oe=66A46C64 May be an illustration of 1 person 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 27 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
இறைச்சியை இரும்பு கம்பி ஒன்றில் கோத்து வாட்டி சங்க கால தமிழன் உண்டு அனுபவித்த, சங்க கால கேபாப்பை இனி விபரமாக பார்ப்போம்.
 
"பதன் அறிந்து, துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின், பராஅரை வேவை பருகு எனத்தண்டி, காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை, ஊழின் ஊழின் வாய் வெய்து ஒற்றி, அவை அவை முனிகுவம் எனினே சுவைய, வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ."
 
அதாவது கயிறு போல் திரிக்கப் பட்ட அருகம்புல் கட்டை தின்ன கொடுத்து கொழுக்க வைக்கப் பட்ட செம்மறி ஆட்டின் பருத்த மேல் தொடை இறைச்சியையும், இரும்புக் கம்பியில் கோர்த்துச் சுடபட்ட இறைச்சி துண்டுகளையும் (கேபாப்? / kebab - a dish of pieces of meat, fish, or vegetables roasted or grilled on a skewer or spit.) உண்ணச் சொல்லி பல முறை வலியுறுத்திக் கொடுத்தான் கரிகாலன். அதன் சூடு தாங்க முடியாது வாயின் வலப் புறமும், இடப் புறமும் கறித் துண்டுகளை மாற்றி, மாற்றி உண்டார்கள். அதன் பின் சோற்றில் நிரம்ப கறித் துண்டுகளை போட்டு கொடுத்தான் கரிகாலன். இனி வேண்டாம் என மறுக்கையில், இனிமையுடைய வெவ்வேறு பல வடிவினையுடைய பணியாரம் கொண்டு வந்து அவற்றைத் தின்னும் படி எங்களையிருத்தினான் என்கிறது.
 
அது மட்டும் அல்ல, அது விருந்தோம்பும் முறையையும் அடிகள் 74-78 மூலம் விளக்குகிறது.
 
"கேளிர்போல கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறி,கண்ணில் காண நண்ணுவழி இரீஈ பருகு அன்ன அருகா நோக்கமொடு"
(பொருநராற்றுப்படை, 74-78),
 
அதாவது, விருந்தினரிடம் நண்பனைப் போல உறவு கொண்டு, இனிய சொற்களைக் கூறி, கண்ணில் காணும்படி தனக்கு நெருக்கமாக இருக்கச் செய்து, கன்று ஈன்ற பசு கன்றிடம் காட்டும் அன்பு போல விருந்தினரிடம் அன்பு காட்டி, எலும்பே குளிரும் படியான, அன்பால் நெகிழச் செய்யதான் என்கிறது இந்த அடிகள்.
 
மேலும் உபநிடதம்,
 
"பிரபஞ்சத்தில் இருப்பது எல்லாம் உணவே. நாம் சிலவற்றை உண்ணு கிறோம். சில எம்மை உண்ணுகின்றன"
 
என்று அறிவுபூர்வமாக சொல்லுகிறது. அத்துடன் புலால் உண்ணுதலையும், கள் [ஒரு வகை மது] உண்பதையும் சங்ககாலச் சான்றோர்கள் கூட கடிந்துரைக்க வில்லை. ஆனால், தமிழர்கள் அல்லது திராவிடர்கள் மத்தியில் பிராமணிய இந்து மதம், சமணம், புத்த மதம் போன்றவை பெரும் பிரபல்யம் பெற்ற போது "கொல்லாமை", "புலால் உண்ணாமை" மற்றும் கள்ளுண்ணாமை அங்கு வரவேற்கப்பட்டது.
 
இன்றைய சமையலில் அவ்வளவு பிரபலமற்ற அல்லது முற்றாகவே வழக்கொழிந்த சங்க கால சமையல்களான - ஈயல் [சிறகு முளைத்த கறையான்], மாதுளை விதைகளை வெண்ணெய்யில் பொரித்தல் [வறுத்தல்] போன்றவற்றை இனி பார்ப்போம்.
 
அகநானுறு 394, நற்றிணை 59, புறநானுறு 119 போன்ற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல்கள் மிக தெளிவாக தமிழர்கள் "மோரில் ஈயலை ஊறப் போட்டு புளிக் கறி சமைப்பது" போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளை எடுத்து காட்டுகிறது. அது மட்டும் அல்ல கொங்கு நாட்டு பழங்குடிகளான, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் வாழும் இருளர்கள், மலசர்கள் இன்னும் ஈயலை உட் கொள்ளுகிறார்கள். சிறகு முளைத்துப் பறக்கும் கறையான் அல்லது ஈசல், பொதுவாக குறைந்த ஆயுட் காலத்தை கொண்டவை என நம்பப்படுகிறது.
புற்றில் இருந்து வெளி வருகிற ஈசல்களில் பெரும்பாலானவை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு இரையாகி விடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக் கொண்டும் உள்ளே புகுகின்றன. இப்படி இறகு உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற தவறான கருத்து பரவியிருக்கலாம்? உண்மையில்,இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய கறையான் காலனியை உருவாக்குகின்றன என்பதே உண்மை!
 
மழை பெய்து முடித்த மறுநாள் காலை பொதுவாக பெருவாரியான ஈசல்கள் கூட்டமாக மொய்த்துக் கொண்டிருக்கும். அவ்வேளையில் அதை இந்த மலை வாழ் பழங்குடியினர் பிடிப்பார்கள். இந்த ஈசல்களை பகலில் காய வைத்து, பின் வேறு சேர்மானங்களுடன் [கடலை மற்றும் உப்பு போன்றவற்றுடன்] வறுத்தும் அல்லது அதனுடன் பச்சரிசி, வெல்லம் போட்டு சமைத்தும் உண்பார்கள். இனி அகநாநூறு [394] விரிவாகப் பார்ப்போம்.
 
"சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து, ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு, சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, இளையர் அருந்த, பின்றை, நீயும்" -அகநானூறு - 394.
 
சிறிய தலையையுடைய செம்மறி ஆட்டினது பழுப்பு நிறம் போன்ற முற்றிய தயிரிலே, கொல்லையில் விளைந்த வரகின் குற்றிய அரிசி யோடு, கார் காலத்து மழையில் நனைந்து ஈரமான வாயிலையுடைய புற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஈயலையும் சேர்த்துச் சமைத்த இனிதான சூடான புளியஞ்சோற்றினைப், பசுவின் வெண்ணெயானது வெப்பம் காரணமாக உருகிக்கொண்டிருக்க, உன் ஏவலாளர் அருந்துவர் என்கிறது.
 
அது போலவே, மாதுளம் பிஞ்சைப் பிளந்து, மிளகுப் பொடியும், கறிவேப்பிலையின் நல்ல இலையையும் கலந்து நல்ல மோரிலிருந்து எடுத்த வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும், மாங்காய் ஊறுகாயுடன் உண்டு மகிழலாம் என்கிறது.
 
"சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து, உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர், நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த, தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்" -பெரும்பாணாற்றுப்படை (306-310).
 
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 28 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 27 "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
Let's take a closer look at the Sangam-era Kebab, which was enjoyed by the Sangam-era Tamils after roasting the meat on an iron rod.
"knowing the time to eat, he urged me to eat cooked, thick thigh meat of sheep that were fed arukam grass twisted to ropes, and fatty, big pieces of meat roasted on iron rods. I cooled the hot meat pieces, moving them from one side of my mouth to the other. He gave more and more even when I refused them again and again. He served us many tasty pastries in many shapes, and urged me to stay."
 
Not only that, it also explains hospitality in lines 74-83:
 
"The king treated me like a relative, was one with me desiring friendship, made me stay near him with hospitality and kind words, and looked at me with unending kindness that melted me and chilled my bones. He removed my torn clothes drenched in sweat, patched with different threads and ruled by lice and nits, and gave me clothing filled with flower designs, so fine like the skin of a snake, that I was unable to see the weave."
 
Further, Upanishad well said that , “Everything in the universe is food. We eat some. Some eat us" and In Sangam era, We understand that, no poet speaks bad of meat - eating & liquor drinking. Only the growth of Brahmanical Hinduism, Jainism, and Buddhism made Tamils value vegetarianism and non - drinking as good qualities worthy to follow.
Moving from dishes more popular to others less popular or almost not in use in today’s kitchen, we come to few recipes such as winged termites, and pomegranate seeds fried in butter [pomegranate curry].
 
In Sangam poem, Akananuru 394, Natrinai 59 and Purananuru 119 clearly mentioned about the habit of consuming termites, which is still continued even to this day among the Irula tribes of the Nilgiri mountains, in the states of Tamil Nadu and Kerala, India, as well as malasar tribes of the foothills of the Anamalai hills in southern India. Malasar may be the corrupt form of Malai Arasar meaning king of the hill (malai meaning hills and arasar meaning king). They are distributed in the Palghat district of Kerala and the Coimbatore district of Tamil Nadu.
 
winged termites, [Eeyal / ஈயல்] have a very short life span? They are all over the place when it has rained in the night, Early in the morning they are found in good quantity in anthills. These mountain-folks catch these termites and eat them even today. I am giving below one of the poem, Akananuru 394, which clearly states that termites from red mounds were cooked in curries with tamarind and sweet buttermilk and enjoyed by the ancient Tamils.
 
"Your servants eat mature curds, the off-white color of sheep with small heads, with fine threshed millet and white ants from termite mounds after the rains, mixed with sweet tamarind in the meal with melted white butter from red cows." [lines,2-7]
 
Similarly, Perumpanatruppadai describes pomegranate curry, cooked by pomegranate seeds fried in butter, as below. A pomegranate is a delicious fruit commonly eaten throughout India & Sri Lanka. It has a hard outer covering encasing bright ruby red seeds, which are the edible portion of the fruit. Pomegranates are considered a super food because they are a wonderfully rich source of Vitamin A, Vitamin C, folic acid & antioxidants. Dried pomegranate powder (known as anardana powder) is a commonly used spice especially in North Indian cuisine. However, in this ancient dish, fresh pomegranate seeds were used.
 
"and you will be given dishes made with freshly opened pomegranates mixed with warm butter from fragrant buttermilk of tawny cows, mixed with fresh curry leaves and black pepper.
 
You will also receive fragrant vadu mango [Maavadu / Baby Mangoes] pickles from tender green mangoes from tall trees." [lines,306-310]
 
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
 
PART : 28 WILL FOLLOW
444952250_10225225137238269_7749246324764159987_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=dxFtLUpnj6wQ7kNvgGVkqAx&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBT4b1NXLXBx7LB2f7Ib3UlBQpuKdgjRSUkOCZHVItU4w&oe=66A91872  445095762_10225225137278270_969410966385920297_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=WTYvQDNQ-1gQ7kNvgG3VXUh&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCmR9TDq5c7Lw4gWwAKlKZIEMp83GesWGmnCq25l9SmjQ&oe=66A93DA1  444946901_10225225137718281_8198816427759456840_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=G2IJaKU9BD8Q7kNvgHg-QPy&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYCXS9xVOAb8Aq3VIe8X_A5vEuwFlboECuu4XXtQbbryRQ&oe=66A9289E  445000857_10225225137838284_3259888030433150639_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MvbO0wsT84kQ7kNvgGi1ruZ&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDThN40p71L0dn9w0PgH0svIhm2siISieegYU458E0osw&oe=66A932CE 444150215_10225225137318271_6256625795481685478_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=eLD0NfRtH1MQ7kNvgFzP3YR&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCpeWB5gdqmHbXtBMGgqhul4TWBAEJqqc5nwZON29dRxw&oe=66A9153D
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 28 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
ஒருவர் கடல் உணவைப் பற்றி எண்ணும் போது, தமிழர் அல்லது திராவிடர் மனதில் முதலில் தோன்றுவது யாழ்ப்பாணமும் கேரளமும் தான். மேலும் தமிழகமும், இலங்கையும் நீண்ட கடற் கரையைக் கொண்டுள்ளதால், தமிழர்கள் உணவில் கடல் உணவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் இவை பற்றிய அரிய தகவல்களை இன்று எமக்கு தருகிறது. உதாரணமாக, வரால் மீன் [murrel or a fresh-water fish], சுறா மீன் கறிகளை புறநானுறு 399 கூறுவதுடன், சிறுபாணாற்றுப்படை [193-195] நண்டு கறியை கூறுகிறது. இரண்டு பாடல்களும் கிழே விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.
 
"அடுமகள் முகந்த அளவா வெண்ணெல், தொடி மாண் உலக்கைப் பருஉக்குற்றரிசி, காடி வெள் உலைக் கொளீஇ நீழல், ஓங்கு சினை மாவின் தீங்கனி நறும் புளி, மோட்டி வரு வராஅல் கோட்டு மீன் கொழுங்குறை, செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகல், பாதிரி யூழ் முகை அவிழ் விடுத்தன்ன, மெய் களைந்து இனனொடு விரைஇ, மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், அழி களிற் படுநர் களியட வைகின், பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக், காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக், கிள்ளி வளவன் உள்ளி அவன் படர்தும், செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்"
புறநானூறு 399 [1-14]
 
கிள்ளிவளவனின் சோழ நாட்டில், சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக் கொண்டு வந்த வெண்ணெல்லை, பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப் பட்ட அரிசியால் ஆக்கிய சோற்றை, புளித்த நீருள்ள உலையில் பெய்து, மிகுந்த நிழல் தரும் கிளைகளையுடைய மாமரத்தின் இனிய மாம் பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக் குழம்பும், பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறா மீனின் துண்டுகளும், வயலில் விளைந்த வள்ளைக் கீரையும், சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும், பாதிரி [அம்பு, அம்புவாகினி,பாடலம்,புன்காலி எனவும் அழைப்பர்] அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி, கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்து அவித்த சோறும் உண்பர். வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப் படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின், விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர் என்கிறது.
 
"இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த, அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு, கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்." சிறுபாணாற்றுப்படை (193-195).
 
இரும்பாலான உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாக குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்றினைப் பிளந்த காலினையுடைய நண்டின் கறியோடு கலந்து சோற்றுக் கட்டியாகத் தர, நீவீர் உண்பீர் என்கிறது. மேலும் நாம் மலைபடுகடாம் மூலம் மலை வாழ் குரவரின் விருந்தோம்பலை அறிவதும் மட்டும் அல்ல, விருந்தினர் அங்கு காலை தொடக்கம் மாலை வரை, வீடுதோறும் பெற்று உண்டு மகிழ்ந்த பானங்களும், உணவுகளும் கூட அறியமுடிகிறது.
 
"ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு, வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல், குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை, பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர, அருவி தந்த பழம் சிதை வெண் காழ், வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை, முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை, பிணவுநாய் முடிக்கிய தடியொடு விரைஇ, வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின், இன் புளிக் கலந்து மா மோர் ஆக, கழை வளர் நெல்லின் அரி உலை ஊழத்து, வழை அமல் சாரல் கமழத் துழைஇ, நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக், குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி, அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ, மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்!"
மலைபடுகடாம் (170 – 185)
 
மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிய தேறலை நிரம்பவுண்டு, பின்னர், நெல்லாற் காய்ச்சி வடித்த, மகிழ்ச்சி தரும் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற பின்னர், அருவி அடித்துக் கொண்டு வந்த பழங்களின் விதைகளையும், மற்றும் அம்பு ஏவி கொல்லப் பட்ட கடமானின் கொழுத்த தசையினையும், கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முள்ளம் பன்றிக் கறி, பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டு வந்த உடும்பு கறி, இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய் போட்ட மோர்க் குழம்பு, இவற்றுடன் நறிய மலரைச் சூடுகின்ற மணமிக்க கரிய முடியினையுடைய குறமகள் துழாவி ஆக்கிய வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்த நெல்லரிசிச் சோறும் பெறுவீர்கள். அவள் உங்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டு கேட்டு இந்த உணவுகளை படைப்பாள் என்கிறது. இறுதியாக கலித்தொகை 65 மூலம், வெத்திலை பாக்கு போடும் பழக்கத்தை அறிகிறோம்.
 
"திருந்து இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும், பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே, மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல், அம் துகில் போர்வை அணிபெற தைஇ நம், இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத், தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும், காரக் குறைந்து கறைப்பட்டு வந்து நம், சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத், தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே, பாராக் குறழாப் பணியாப் பொழுது அன்றி, யார் இவண் நின்றீர் எனக் கூறிப் பையென, வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது, தையால் தம்பலம் தின்றியோ என்று தன், பக்கு அழித்துக் கொண்டீ எனத் தரலும் யாது ஒன்றும், வாய்வாளேன் நிற்பக் கடிது அகன்று கைமாறிக், கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான், ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின், இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்" [கலித்தொகை 65]
 
மொட்டைத்தலையும் முக்காடும் கொண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும் கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன் அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக் காண போர்வை ஒன்றைப் போர்த்திய படி இரவு நேரத்தில் நின்றிருக்க, அவன் என்னைக் குனிந்துப் பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்; நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு. யான் ஆண் பிசாசு. என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசி விட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன். அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும் படியும் ஆயிற்று என்றுப் பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப் பெற்றுள்ளது.
 
இனி 'இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள்' பற்றி பார்ப்போம்
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 29 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 28 "Food Habits of Ancient Sangam Tamils continuing"
 
 
When one thinks of seafoods, coastal cities such as Jaffna & Kerala comes to the mind, Still, the mix of fishing culture — the Jaffna city survives as a major fishing port today — has created the perfect storm for seafood. International travel website Go Backpacking put Sri Lanka as #1 on its “5 Countries for Seafood Lovers” guide, above seafood powerhouses such as Chile and Japan [January 2, 2013 By Mark Wiens] — and especially called out Jaffna for its great seafood. “Surrounded by sea, you bet [it] catches some high - quality creatures,” the article stated. according to Sri Lankan tourism website yamu.lk. Specialties there include local crab, which can be turned into traditional crab curry. While Purananuru 399 mentioned about fried murrel fish & fatty meat pieces of shark, Sirupanatruppadai, line,193-195 mentioned about crab curry with rice. Both of these ancient Tamil poems given below.
 
"We were on our way to see Killi Valavan of unending great fame, the lord of the Kāviri River, where fields are filled with water, and farm workers working among haystacks happily drink, relax and eat old rice, along with rice brought by a female cook without measuring, that was pounded with a large pestle with a ring, its husks removed, looking like the mature buds of pāthiri flowers that had just opened, and cooked in a bright pot with fermented gruel, with vallai leaves from fields, fatty big pieces of horned fish, large pieces of vāral fish, and sour fragrant pulp of mango fruits growing on tall branches that provide shade."
[Purananuru 399,lines,1-14]
 
"will serve cooked white rice balls, from rice finely pounded with an iron pestle whose ends have been blunted, served with split-legged crabs,"
[Sirupanatruppadai,line,193-195]
 
Also from Malaipadukadam, We come to know, not only the hospitality of the mountain kuravars, the people of foothills, But also Drinks & food enjoyed by the guest from morning to evening, by. lines 170 – 185.
 
"Along with food that they bring climbing mountains, they will give you sweet liquor aged in bamboo pipes which you can drink without limits, and for your hangover to go, in the morning, they will serve you scattered seeds of fruits brought down by waterfalls, big pieces of meat of bison killed ruining arrows, chopped up pieces of fatty meat of porcupines mixed with fuzzy-topped, sweet tamarind and buttermilk, seeds growing on bamboo added to the boiling liquid, and white rice cooked by a mountain woman wearing flowers on her huge hair knot, their fragrances spreading all over the mountains with surapunnai trees. They, along with their children, will be greatly hospitable in all the houses, and prevent you from leaving."
 
Finally ,We come to know from Kalithokai 65, the tradition of Chewing the mixture of areca nut and betel leaf is very old & practice even in Sangam period, 700 BC-300 AD. In both India and Sri Lanka, it was a custom of the royalty to chew areca nut with betel leaf. Kings had special attendants whose duty it was to carry a box with all the necessary ingredients for a good chewing session. There was also a custom for lovers to chew areca nut and betel leaf together. Not only that Betel leaves (Thamboolam,) is usually exchanged whenever marriages are finalised, when guests leave after their stay, while inviting for the weddings and while offerings are made to the Deities. and To the visitors it is offered as a mark of courtesy.
 
"that lame old Brahmin, the one you warned me about, showed up, spotted me, bowed to me and asked, “Why are you here at this unsightly hour?” Slowly, he stuck to my side like an old buffalo that had sighted hay. “Lady, will you eat my betel leaves and betel nuts?” he asked me as he opened his pouch, and said again, “Take these,” as he tried to hand then to me.
I was speechless. He spoke without restraint, and said “Girl, you have fallen into my hands! if you are one spirit, I am the other spirit. You better be gracious to me."
Let us now look at the 'Food Habits Of Medieval period Tamils'
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 29 WILL FOLLOW
446809769_10225262560173819_793590504612498267_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MzFW80XkcPoQ7kNvgEaRv5e&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCxnaehr0eju6SaBr5tjee2BCryEC-Vw8B42zxOZ7nGcw&oe=66ABDB4F 445602388_10225262560413825_999053629597802994_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=_Dv3pqPlsY0Q7kNvgFhBYU2&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAyFbc54WoAR3-ePD1HTBXTbpZUbcfvglSbeH5pefnPCA&oe=66ABE102
 
447034208_10225262560253821_4759543273072259847_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=BSIxpfNp5BAQ7kNvgHaMd9O&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDh0rC3IzDGO0SRLVLdBXJ7GdY18Lc0G06V3eEzYCbVMQ&oe=66ABD67C 441868073_10225262560853836_2543205807737570058_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MHd0_SmOQTIQ7kNvgEWwVAU&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYA8VvEwH8DBLDi-VTXuJggkB7WBrKszXDugH5bEYxauJQ&oe=66ABE35F  
 
446611353_10225262560973839_1322761373813244178_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=SowP6Q02gtMQ7kNvgGJX6oJ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYA3ot4DdI_ajA77prARF2Dhp35e5y3GkbIm1m7wPH6DUg&oe=66ABE561  
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 29 "இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits Of Medieval period Tamils"
 
 
சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு ஏழாம் நூற்றாண்டில் இருந்து கி பி மூன்றாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு அது முடிவுறும் இறுதி காலத்தை, பிந்தைய சங்க காலமாக அடையாளப் படுத்தப்பட்டது. கி.பி.250 அளவில் வேங்கடத்திலிருந்து வந்த களப்பிரர் சிறிது சிறிதாகச் சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்னும் மூன்று தரைப் பகுதிகளையும் கைப்பற்றி ஆண்ட காரணத்தால் களப்பிரர் தங்களை முத்தரையர் என அழைத்தும் கொண்டனர். பொதுவாக களப்பிரர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அங்கிருந்து படை யெடுத்து வந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆண்டனர் என்றும் வரலாற்றாசிரியர்கள் பலர் கருதுகின்றனர். இருப்பினும் இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. எம் மதமும் சம்மதம் என்ற தமிழர்களின் உன்னதமான மனப்பான்மை இப்படியான மாற்று கொள்கைகளுக்கும் பிற மதத்திற்கும் இடம் கொடுத்தன. மேலும் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படியும் இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதுடன் சமயம், சமுதாயம் பண்பாட்டுத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களையும் தோற்று வித்தது. உதாரணமாக, நல்ல நடத்தைக் குரியவை பற்றியும், உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றியும் மற்றும் நீதிகளைப் பற்றியும் உரைக்கும் நூல்களான இன்ன நாற்பது, இனியவை நாற்பது, நாலடியார் போன்றவை தோன்றின. களப்பிரர்கள் கி பி ஆறாம் ஆண்டு வரை, முன்னூறு ஆண்டுகாலம் தமிழகத்தை ஆண்டார்கள். என்றாலும் இவர்களைப் பற்றி அவ்வளவு பெரிதாக அறிய முடிய வில்லை. இதனால் தான் இதை இருண்ட காலம் என பொதுவாக அழைக்கப் படுகிறது. தமது இறுதி காலத்தில் களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக் கொண்டனர். எப்படியாயினும் இவர்கள் கொடுங்கன் பாண்டியனாலும் சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் தோற்கடிக்கப்பட்டு இவர்களின் ஆட்சி நிறைவுக்கு வந்தது. இவர்களின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் தளைத்தோங்க தொடங்கியது. இந்த பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது.
 
காலப் போக்கில் உணவைப் பற்றிய சில சுவாரஸ்யமான கருத்துக்கள் தமிழகத்தில் தோன்றின. தமிழ் நாட்டிலோ அல்லது சங்க காலத்திலோ இல்லாத மரக்கறி உணவுக் கொள்கை அல்லது புலால் உண்ணாமை, சமணம், பெளத்தம் போன்றவற்றின் செல்வாக்கால் அங்கு வெளிப்பட தொடங்கின. இது தமிழர்களின் உணவு பழக்கங்களில் மிகப் பெரிய மாற்றமாக அமைந்தது. மேலும் சுவைகளை ஆறு வகையாக, துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு என்ற அறு சுவையாக பிரித்தனர். அத்துடன் எல்லா உணவுகளையும் இரண்டு பரந்த பிரிவுகளில், சூடு, குளிர் சாப்பாடுகளாக வகுத்தார்கள். இன்றும் தமிழர் உணவுகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கின்றன. ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவை உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் [இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர்] இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. அது மட்டு அல்ல களப்பிரர்கள் கால தமிழ் இலக்கியமான நாலடியார்:
 
"அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட, மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச், சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின் செல்வம்ஒன், றுண்டாக வைக்கற்பாற் றன்று." என்ற பாடலில் அறுசுவையை குறிப்பிடுகிறது. அதாவது, அறுசுவைகளான கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு என்பவற்றைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவினை அன்புடன் மனைவி வழங்க, ஒரு உருண்டை (கவளம்) உணவு போதும் என்று, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியவராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத் தக்கதன்று என்கிறது.
 
மேலும் அங்கு கிராமப்புறங்களில் தினை முக்கிய உணவாக இருந்தன. அது அண்மைய காலம் வரை தொடர்ந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. உண்மையில் இப்பவும் தொலை தூர அல்லது பழைமையான தமிழ் நாட்டு கிராமங்களில் திணை அவர்களின் பிரதான உணவாக இருப்பதுடன், அங்கு எப்போதாவது சில வேளையே சோறு உண்ணப்படுகிறது. அதிகமாக கொண்டாட்ட நாட்களிலேயே இந்த நெல்லுச் சோறு உண்ணப்படுகிறது. எப்படியாயினும் நாளடைவில் உணவு பழக்கங்கள் மாற்றம் அடைந்து திணை இப்ப மெல்ல மெல்ல கிராமப் புறங்களில் இருந்தும் மறைய தொடங்கு கின்றன. முருகனுக்கு தேனும், தினை மாவும் உகந்த பிரசாதம் என்பார்கள். அதனால் அவனுக்கு கொடுக்கும் வழிபாடு "தேனும் தினை மாவும்" என்ற அடிகளுடன் ஆரம்பிக்கின்றன. இது எமது மூதாதையர்கள் திணைக்கு கொடுத்த முக்கியத்தை கொடுக்கிறது. பண்டைய தமிழர்களின் பிரதான உணவாக திணை கஞ்சி இருந்தது. இதை களி, கூழ் என அழைத்தார்கள். இது சங்க காலத்திலும் கூட உட்கொள்ளப்பட்டது.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 30 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 29 "Food Habits Of Medieval period Tamils"
 
 
The Sangam Age came to an end during the middle of the Third century A.D. The closing years of the Sangam Age was called the post-Sangam period. Then the Kalabhras captured the Tamil country from the Chera, Chola and Pandyan rulers and These Kalabhras had occupied the Tamil country from the middle of the Third century A.D. to the end of the Sixth century A.D. The North Indian religions, namely Buddhism and Jainism began to spread in the Tamil region. The traditional religious beliefs of the Tamil people gave way to the new religious ideas. The impulse of these works was oriented towards reforming the society. For example, morality in political and social life had been strictly insisted in the poems of InnaNarpathu, Iniyavai Narpathu and Naladiyar [இன்ன நாற்பது,இனியவை நாற்பது,நாலடியார்]. We have very few sources to study the history of the Kalabhras. This is one of the reasons to call this period as Dark Age. By the end of the Sixth century A.D. the Pandyan ruler Kadungon had liberated the southern part of the Tamil country from the Kalabhras. By the same period, the Pallava king, Simhavishnu had captured Tondaimandalam and Cholamandalam from the Kalabhras. Thus, the Kalabhra rule in Tamil country came to an end. During the end of the Kalabhra rule, the Bakthi-cult [devotional cults] flourished in the Tamil country through which both Saivism and Vaishnavism began to flourish there.
 
Over the years, certain interesting concepts in food appeared. A tradition of vegetarianism, which was largely absent from ancient Tamil Nadu or among the sangam tamils began to emerge, mainly as a result of the popularity of Buddhism and Jainism. Taste was classified into six groups, and all food commodities were divided into two broad categories, hot and cold. The whole of Tamil cuisine is still largely based on this classification which also influenced indigenous medicinal practices: Even a Tamil poetic work, Naladiyar of the Kalabhra age, speaks about six tastes [அறுசுவை]. It says,"While the wife feeds the husband, with love and desire, the different types of foods prepared with six tastes; Being rich and pompous, He takes only one handful leaving the rest untouched, from the varieties of food prepared, the remaining food is wasted".
 
Further, Millets formed a major part of the food in rural areas, consumed until recently. In fact, in remote villages of Tamil Nadu, food items made of millets were staple food and rice was consumed occasionally. They had nelluchoru (food made of rice) once in a while during festival periods. However, Over a period of time, the eating habits drastically changed and millets started disappearing from the plates in rural areas too. The prayer offered to Lord Muruga in Tamil starts with the words "Thaenum Thinai Maavum" (I offer honey with Thinai flour ie. Foxtail millet) shows how millets were valued by our ancestors. The gruel made of Thinai was the staple food of ancient Tamils and is called "kali and koozh".It was consumed even during the Sangam era.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 30 WILL FOLLOW
447287531_10225298915962691_4432076806253035955_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=M9HU5BIkKmAQ7kNvgGijITC&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=Axw1D0aZtwUj2QsCvAr0GPC&oh=00_AYCn6kaqpkb9gyrfWViR8QgVUx8uNIVX6Hfj-pTOTbYIBQ&oe=66AFD1E3 447287848_10225298916602707_2982976832676463475_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=YeBYefP7xH4Q7kNvgFK5U3k&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=Axw1D0aZtwUj2QsCvAr0GPC&oh=00_AYCyXeM536NoigC58b9T76fKth69QCNrDknKJ_i8oRLFGg&oe=66AFDF93 447741244_10225298916722710_7489039661642257118_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=RQkaJLUQHeMQ7kNvgGt-kPT&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=Axw1D0aZtwUj2QsCvAr0GPC&oh=00_AYDglJPMWAoD6XO19LL54I1trYFow2kQtmRs7uW9-XAa1Q&oe=66AFE300  
 
 
447889435_10225298917842738_5369885414316600445_n.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=6mw0HRsdIdgQ7kNvgF17Oyd&_nc_ht=scontent-lhr8-2.xx&gid=Axw1D0aZtwUj2QsCvAr0GPC&oh=00_AYAwY505p5oJC-t1HJinalasKIk_EBzlGbRuD9R-bce37A&oe=66AFE046  447564483_10225298917442728_7478608364023271363_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=FsfqoCOgsnUQ7kNvgEswdcr&_nc_ht=scontent-lhr8-2.xx&gid=Axw1D0aZtwUj2QsCvAr0GPC&oh=00_AYCgantyzLjupK9yKV38u0J-Eg37tztCREHdv0brWXfo8w&oe=66AFD1F2
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 30 "இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits Of Medieval period Tamils continuing"
 
 
கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்பட்ட அப்பர், தமது தேவாரத்தில் ஆமை உணவாக உட்கொள்ளப் பட்டத்தை தெரிவித்துள்ளார்.
 
"வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத், தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில், திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன், இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே."
 
ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப் பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்த விட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக் கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத் தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்டு முறையிடும் இந்த தேவாரத்தில் ஆமையை நீரில் வேக வைப்பதை உதாரணமாக அவர் கையாளுவதன் மூலம் இந்த உணவு முறையையும் நாம் அறிகிறோம்.
 
9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, திருவாசகம் தந்த, மாணிக்கவாசகர் காலத்தில் நடந்த கதை ஒன்று பரஞ்சோதிமுனிவர் அருளிச் செய்த திருவிளையாடற் புராணத்தில் வருகிறது. "பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்" என்பது இந்த அறுபத்தி ஒன்றாவது திரு விளையாடல் ஆகும். இதன் மூலம் பிட்டு அங்கு தமிழர்களின் உணவாக இருந்ததை அறிய முடிகிறது. அந்த மண் சுமந்த படலத்தில் இருந்து ஒரு பாடல் உதாரணமாக கிழே தரப்படுகிறது.
 
"பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற்
சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம்
இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக்
கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார்."
 
ஒரு முறை, வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதையடுத்து ஆற்றின் கரையை அடைப்பதற்காக வீட்டுக் கொருவர் மண் சுமந்து வர வேண்டு மென மன்னர் உத்தரவிட்டார். ஆனால், பிட்டு விற்று பிழைப்பு நடத்திய சிவ பக்தையான வந்தி எனும் மூதாட்டிக்கு மண் சுமந்து வர யாருமில்லை. ஆகவே, அங்கு வந்த கூலி இடம், "தனக்குப் பதில் நீ மண் சுமக்க வந்தால், பசி தீரச் சுடச் சுட, உனக்குக் கூலியாகப் பிட்டுத் தருவே னென்று கூறினள்; எல்லையில்லாத இறைவர் அதற்கு உடன் பட்டு,பெரிய பசித்தீ என்னைச் சுட அதனால் யான் மிக இளைத்தேன்; யான் வேலை செய்தற்கு முன்னரே, சுவை மிக்க பிட்டில் உதிர்ந்த பிட்டு முழுதும், தருவாயாக; அதனைத் தின்று நான் சிறிது இளைப்பாறிக் கொண்டு, நினது பங்குக் கரையைக் கட்டுவேனென்று கூறினர்." என்கிறது இந்த பாடல்.
 
ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டு ஔவையார், வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் விரும்பி அளித்த விருந்தை வியந்து பாடிய பாடல் "வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்" ஆகும். சாதாரண வரகரிசிச் சோறு [வரகு அல்லது வரகரிசி / KodoMillet ]; கத்தரிக்காய்ப் பொரியல்; மிகவும் புளித்த மோர். இவ்வளவுதான் அந்த விருந்து! என்றாலும் இந்த விருந்துக்கு ஈடாக உலகம் முழுவதையும் தந்தாலும் தகும் என்கிறார் ஔவையார்.
 
“வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமு ரெனவே புளித்த மோரும்-தரமுடனே
பல்வேளூர்ப்பூதன் புகழ்ந்து பரிந்திட்ட சோறு
எல்லா உலகும் பெறும்”
 
வழுதுணங்காய் = கத்தரிக்காய், பரித்து = அன்பு கொண்டு.
 
இதன் மூலம் நாம் அங்கு வரகரிசிச் சோறு, கத்தரிக்காய்ப் பொரியல், புளித்த மோர் போன்றவை உணவாக இருந்ததை அறிகிறோம். மற்றும் ஒரு பாடலில், அவர் கீரைக்கறி உணவை கூறுகிறார்.
 
"வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதுவாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள்
கடகம் செறிந்தகை யாள்"
 
இங்கு, "என்ன இந்தப் பெண்கள் கீரைக்கறி என்று சொல்லி, அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் குளிரில் வெப்பமுடையதாய், நல்ல மணமுடையதாய் நெய் நிறைய பெய்து, வேண்டு மட்டும் உண்டாலும் கெடுதியை உண்டாக்காததாய் அமுதத்தை அளித்துள்ளார்களே!" என்று வியக்கிறார்.[அடகு = கீரை]
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 31 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 30 "Food Habits Of Medieval period Tamils continuing"
 
 
7th century Appar refers to eating tortoise in his devotional songs, thevaram. The tortoise ["Amai"] is put in a big vessel of water. It feels a bit cold. When people start to cook it, ironically the tortoise feels happy because the water gets to be warm and cozy, It swim and dance in water. It does not realize the oncoming disaster! When the water reaches a certain degree of heat, that tortoise sudden feel the pain and before it could realize that it is in danger, it will suddenly die as water will begin to boil in few seconds gap.
 
"The five organs of sense which are like robbers. remaining surrounding me. draw near me and make me tremble. trying the feet. setting a pot of water on the fire for cooking rice. in the water which was heated by burning fire. I who have no clarity like the tortoise which bathes in the water without ceasing. I am enjoying this life, being exhausted."
 
The 9th - century Thiruvilayadal Puranam talks at length about the adventures of Lord Shiva, One among the three gods of the Hindu pantheon. In one of the stories, as a Sixty - first Thiruvilayadal, Lord Shiva, in order to help a poor woman, a puttu (pudding) seller by profession, takes the form of a sand - bearer when a dam is being built under instructions from the king that every citizen, regardless of sex, be pressed into action. From this story we came to know that food Pittu or puttu was one of the popular food during Medieval period. One of the poem, from this Thiruvilayadal puranam, which mentioning food pittu, is given below. This pittu poem mentioned recently in Sri Lanka parliament session too.
 
"பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற், சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம், இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக், கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார்."
 
From Sixty-first Tiruvilliadel] An old lady Vanthi, being a poor lady said that she will give him "Pittu" instead of money if he is ready to throw mud into bank of Vaigai river to stop flood. He, God Siva as a labourer [cooly] accepted and the agreement is, she need not give him the 'Pittu' which is in good shape, but only the Pittu which break & falls off from the main portion of Pittu. The old lady agreed. He, god Siva promised that after ate what ever falls off, He will carry mud in his head and throw it into the waters of Vaigai river to build embankment.
 
The great poet of ancient times, Avvaiyar wrote about the use of millets ["varaku" rice] and "brinjal curry" during the chola age itself. Millets were a staple food for Tamilians and was eaten everyday. Here is the story about varagu / kodo millet written by Avvaiyar. She writes, A person named Velur Boodhan gave food with much love to the very hungry Avvaiyar. He had made and served Varagu Rice and Brinjal stir fry. Along with that he also served a foamy frothy fermented butter milk. The food was so good and so worthy, that in return, it would be fair to give the whole world to him as per the ninth or tenth century, Avvaiyar. "வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும், ... "
 
In another poem Avvaiyar mentioned about the curry made out of spinach. "வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதுவாய், நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யா, அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள், கடகம் செறிந்தகை யாள்" Here Avvai praise the little girl, who gave food to her as "Oh! It is truly a dish from heavens, and not the spinach [keerai / அடகு = கீரை] that she claims"]
 
 
Thanks
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
 
PART : 31 WILL FOLLOW
448317590_10225337029035494_3436561862397537684_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Gjt2zqxro4oQ7kNvgEi9rGg&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=AfL29ntvFOEOX89A8Tu3pUk&oh=00_AYBDIKBVpG4kb7naGFHgMLRTmT3FVL-xnalTihip9xkhSg&oe=66B142F6 448273887_10225337028915491_3395961654932101463_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=FzBQClYlzd8Q7kNvgFHbRqY&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=AfL29ntvFOEOX89A8Tu3pUk&oh=00_AYBVrdu2v8rXbrBlOpn7YEun8p4LGSjYnfv_zdfHDh_Z6w&oe=66B1345A 448245133_10225337028835489_2228729890825982607_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=0PsbCxB5uzsQ7kNvgEXX3TO&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=AfL29ntvFOEOX89A8Tu3pUk&oh=00_AYBD5wbB3K_pO07sxsdW7vDBASDpNjnW5eZq1nR-kFq3iw&oe=66B14B85 
 
448244391_10225337029595508_7053457357925010300_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=mvQpnt-3cBEQ7kNvgFb7ni7&_nc_ht=scontent-lhr6-1.xx&gid=AfL29ntvFOEOX89A8Tu3pUk&oh=00_AYBCO1kSCdxu5v1lKREYYK-cG19dZXYotf6vamFxMYB5eA&oe=66B12D50 448317841_10225337029515506_8397210278985511007_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=_U1PSe4W-mkQ7kNvgE0mWFD&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=AfL29ntvFOEOX89A8Tu3pUk&oh=00_AYDA4TOL7o4RkyTmgSK3T5zTxyMbHul0UqJsVryRtwL2AA&oe=66B14EB7
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 31 "இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits Of Medieval period Tamils continuing"
 
 
பன்னிரெண்டாம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு கொழுப்பில் இட்டுப் பொறிக்கப்பட்ட இனிப்பு பணியாரம் பற்றி குறிப்பிடுகிறது. இனிப்பின் ஆதாரப் பொருட்களாக கரும்பு, பனை வெல்லங்கள் இருந்திருக்கின்றன. திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு,(கி.பி.1070 முதல் கி.பி.1110) ‘திருப்பணியாரத்துக்குத் தேங்காய், கருப்புக்கட்டி’ எனக் குறிப்பிடுகிறது. கருப்புக்கட்டி [கருப்பட்டி] என்றால் கரும்பில் இருந்து எடுக்கப் பட்டது என்றும் பொருள் படும். இந்த பணியாரத்திற்கு, பாண்டிய அரசன் வாழைப் பழம், சீரகம், உலர் இஞ்சி, மிளகு, கரும்பு போன்றவற்றை சேர்த்து ஆண்டவனுக்கு படைத்தார். அதிரசம் என்ற இன்னும் ஒரு படையலும் அறியப்படுகிறது. கிருஷ்ண தேவராயன் கல்வெட்டுச் செய்தி, அதிரசத்துக்கு என்று அதிரசப்படி எனும் அரிசி வகை இருந்ததாகவும் அத்துடன் வெண்ணெயும், சர்க்கரையும், மிளகும் வழங்கியதாகவும் கூறுகிறது. தமிழனின் உணவு எளிமையானதாகவே இருந்துள்ளது. வேகவைக்கப் பட்டது மிகுதியாகவும், எண்ணெயில் பொரிக்கப் பட்டது அபூர்வமாகவும் இருந்துள்ளன. அந்த பண்டைய காலத்தில் மாட்டு வண்டிலில் பிரயாணம் செய்தார்கள். அது பல கிழமைகளும் எடுக்கும்.ஆகவே அவர்களுக்கு பல நாட்கள் பழுதாகாமல் இருக்கக் கூடிய உணவு தேவை பட்டது. அப்படியான உணவுகளில் இந்த அதிரசமும் ஒன்றாகும். இதற்கு பொதுவாக மூன்று முக்கிய பொருட்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அவை அரிசி, வெல்லம், ஏலக்காய் ஆகும். என்றாலும் தயாரிப்பதற்கு இது கூட நேரத்தையும் அதே நேரம் செய்முறை சிக்கலானதாகவும் உள்ளது.
 
இரண்டாம் நுற்றாண்டில் வாழ்ந்த தொலெமி அல்லது தாலமி (Ptolemy, /ˈtɒləmi/) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெ மாயெஸ் (Claudius Ptolemaeus ], தனது வரலாற்றுக் குறிப்பில் அரிசி, வர்த்தக பொருளாக இலங்கையில் இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அரிசி முதலாம் நுற்றாண்டில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் இருந்து எகிப்திற்கு இறக்குமதி செய்யப் பட்டதாக செங்கடல் செலவு (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன. பெரிப்ளசு (பெரிப்ளஸ்) (Periplus) என்பது "கடல் வழிப்பயணம்" ( கடல் பயண விவரிப்பு) என்னும் பொருள் தருகின்ற பண்டைய கிரேக்கச் சொல் ஆகும். இந்த பெரிப்ளசு என்ற கையேட்டு நூலை எழுதியவர் ஒரு கிரேக்க மாலுமி ஆகும். இவரது பெயர் தெரியாததால் இவரையும் அவரது நூலின் பெயரால் பெரிப்ளசு என்றே அழைக்கின்றனர். மேலும் எகிப்தின் பண்டைய துறை முகமான, வெரெணிகே அல்லது பர்ணிஸ் / பெரெனீசு [Berenike or Berenice] துறைமுகத்தில் கண்டு எடுக்கப் பட்ட தொல்பொருள்களும் இதை மெய்ப்பிகின்றன.
 
இத் துறை முகம் தற்போது மெதினெத் எல் ஹரஸ் [Medinet-el Haras] என அழைக்கப் படுகிறது. 1994 தொடங்கி இங்கு டெலவேர் பல்கலைக் கழகம் பிற அமைப்புகளுடன் இணைந்து மேற்கொண்டுள்ள அகழாய்வுகளில் பண்டைத் தமிழகத்துடன் இத் துறைமுகம் கொண்டுள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் பல பல சான்றுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சோழப்பேரரசின் ஆட்சி தமிழகத்தில் ஒன்பதாம் நுற்றாண்டில் இருந்து பதின் மூன்றாம் நுற்றாண்டு வரை மேலாதிக்கம் செலுத்தியது. சோழ கல்வெட்டுக்கள் அரிசி முதன்மை பயிராக வளர்க்கப்பட்டதையும் அதுவே தமிழர்களின் பிரதான உணவாக இருந்ததையும் காட்டுகிறது. இந்த சோழ காலத்தில் எழுதப் பட்ட இலக்கியமும் இதை உறுதிப் படுத்துகின்றன. உதாரணமாக இடைக்கால அல்லது சோழர் கால ஔவையார், "வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்" என்று குலோத்துங்க சோழ மன்னனை வாழ்த்துகிறார். இது - அரிசி அல்லது அதில் இருந்து பெறப்பட்ட பொரி, அவல், மா போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவே அங்கு பிரதான உணவாக இருந்ததைக் சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் பால், நெய், தயிர் போன்றவற்றையும் முதன்மையாக உட்கொண்டார்கள்.
 
கிழக்கு ஆசியா [கீழ் திசைக்குரிய அல்லது கிழக்கித்திய East Asia / oriental] சமையல்களில் நீராவியில் வேக வைத்தல் முக்கிய இடத்தை வகுக்கிறது. இவர்களின் பிரதான உணவான அரிசி இதற்கு மிகவும் உகந்ததாக உள்ளதும் இதற்கு ஒரு காரணம் ஆகும். சீனர்கள் மூவாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே ஆவியில் வேகவைத்து சமையல் செய்ததற்கான சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் சீனாவின் மாகாணங்களில் ஒன்றான யுன்னானில் [province of Yunnan] கிடைத்துள்ளன. இது கல்லாலான நீராவிப் பாத்திரம் [stone steamers] ஆகும். எட்டாம் நுற்றாண்டில் சீனர்கள் ஒரு வகை ஊசி இலை [புன்னை / cypress] மெல்லிய மரத் துண்டில் இருந்து நீராவிப் பாத்திரம் செய்தார்கள். இது இப்ப மூங்கிலால் மாற்றிடு செய்யப் பட்டுள்ளது. நீராவி சமையல், உணவின் / சேர்மானங்களின் அமைப்பு, சுவை, ஊட்டச்சத்து [போஷாக்கு] போன்றவற்றை பத்திரப் படுத்துகிறது. மண் பானையில் சமைப்பது பாரம் பரியமாக தமிழகத்தில் உள்ள வழக்கம். இங்கு மண் பானைகளில் உள்ள நுண் துளைகள் மூலம் நீராவி, காற்று உணவில் ஒரே சீராக ஊடுருவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் மண் பானைகளில் சமைக்கும் உணவு ஆவியில் வேக வைத்த உணவைப் போன்ற தன்மையை பொதுவாக பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீராவியில் வேக வைக்கும் போது, கொதிக்கும் நீர் எந்த சந்தர்ப்பத்திலும் உணவுடன் நேரடியாக தொடர்பு கொள்வதில்லை.
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி : 32 தொடரும்
 
 
"FOOD HABITS OF TAMILS" PART: 31 "Food Habits Of Medieval period Tamils continuing"
 
 
A 12th century inscription from the reign of Kulotunga Chola mentions the popular deep fried sweet Paniyaram. It mentions the use of coconuts and palm sugar. Interestingly, the inscription mentions it as Karuppatti – the name hasn’t changed in 1000 years. The Pandya kings seemed to have added banana, Cumin [Jeerakam], dry ginger, pepper and sugarcane to this sweet when they offered it to the god. Adhirasam is another offering mentioned, in the recipe. in ancient days people used bullock cart to travel that required several weeks. They had to keep the food for several days for travel. Adhirasam is one such kind of food. Its prepared only three ingredients rice, jaggery and Cardamom. But the preparation requires lot of time and the process is quite complicate. We can keep this food for several days.
 
The Mediterranean author Ptolemy noted in the second century A.D. that rice came from the island of Sri Lanka as an item of trade. Rice was exported from India’s western coast to Egypt as documented in the first-century A.D. Greek merchant’s text The Periplus of the Erythrean Sea and as demonstrated by archaeological finds from the Roman port site of Berenike on Egypt’s eastern coast. In the southern Tamil speaking region, the Cholas were the dominant polity from the ninth through 13th centuries A.D. Stone inscriptions also show that rice was the principal crop grown in the Chola period, and that it was “the staple food of the population”. South Indian literature written during this period highlights rice as a landscape motif, basic food, and ceremonial comestible. Medieval period Famous Poetess, Avvaiyar, while giving the formula for development, also indicate importance of paddy as "When the rice-bunds are high, the irrigation water will rise; When the water rises, the paddy will grow; When the paddy grows, the inhabitants will thrive; When the inhabitants thrive, the kingdom will flourish; When the kingdom flourishes, the king will prosper." [வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்], Meaning: If the "bund" of field is raised the water level increases, if the water level is increased the paddy will be taller, taller the paddy the citizen will grow, if the citizen grow the king grows. this once again point out that Rice as well as any food made out from crushed or pounded rice were still staple food of the people even during the Bakthi [devotional cults] period. They had also consumed milk, ghee, and curd.
 
Steaming has played a major role in Oriental cooking as their staple - rice - is best suited for this method. The Chinese have used steaming devices for more than three thousand years, as evidenced by archaeological finds of stone steamers from the province of Yunnan. By the 8th Century, the Chinese had mastered the art of making steamers from thin cypress strips, which have been replaced by bamboo today. Steam best preserves the texture, flavour and nutrition of the ingredients. Steam cooking should not be confused with pressure cooking. The differentiating factor is that boiling water never comes in contact with the food in steam cooking whereas in ordinary pressure cooking the food is immersed in water.
 
Thanks
 
 
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
 
PART : 32 WILL FOLLOW
448790119_10225378214425103_2105029619495615001_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=yc826V5cL60Q7kNvgGn8HZm&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAAv_4sIEr1o1-pciM2diar5f8IAcgaIl9H_an0avwbAg&oe=66B271BD  448760363_10225378214505105_4157279646158945601_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=HN4UiDXlW00Q7kNvgF1lAwJ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYCy_oucmJ0zNy7Zd3_5JEjrFjMadRUfU4zPjq-sTyhIFg&oe=66B2794F  448686458_10225378214345101_9173071413927580296_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=LO2DFFWw3UoQ7kNvgHiEhPL&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDcu8lf2bghsxIB_asp08BVUtbaY6GZNN6yOIFXvAN6DQ&oe=66B27192  448686456_10225378214785112_1474751417474575571_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=318PwtymmLsQ7kNvgFp_tN1&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDU2t7kyqlJf_sy09AXNhFQp9Fb6Ha-_UrBzFyunJcDDg&oe=66B29F61  
  
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆக்கிரமிப்பாளர்களாயினும் சரி ஆட்சியாளர்களாயினும் சரி அவரவர்களுக்கென வீரர்களும் ஆதரவாளர்களும் இருப்பார்கள்.
    • (தரநிலை அறியில்லை) குன்றன் (மாவீரர்)    
    • இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டமாஸ்கஸில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து புகை எழுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது. அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது. ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர். இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது? ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது. வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல்கள் "சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்" அழித்து வருவதாகவும், "சிரியா மீதான உரிமை மீறல்" என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் "பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை" தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. சிரியா: பஷர் அல்-அசத்தின் வீழ்ச்சியால் ரஷ்யாவுக்கு என்ன அடி?10 டிசம்பர் 2024 காட்ஸிலா: 70 ஆண்டுகளாக மிரட்டும் மான்ஸ்டர் - ஜப்பானால் மட்டுமே உருவாக்க முடிந்தது ஏன்?7 டிசம்பர் 2024 ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த 2018ஆம் ஆண்டில், டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தியதாக அசத்தின் ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டது. ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது. சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது. சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார். "சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்" என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார். "இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது" என்று விளக்கினார். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது? படக்குறிப்பு, சிரியாவில் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டும் வரைபடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார். "அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது" என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார். "அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு" என்றார். ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை "சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்" என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன. கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி?11 டிசம்பர் 2024 இலங்கையில் திடீரென அதிகரித்த விலைவாசி - ரூ 260க்கு விற்கப்படும் ஒரு கிலோ அரிசி10 டிசம்பர் 2024 கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது. கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது. ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர். இந்தக் கட்டமைப்புகள் 'சட்ட விரோதமானவை' என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை. உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷுக்கு ஊக்க மருந்து சோதனை செய்தது ஏன்? செஸ் விளையாட்டில் அவசியமா?11 டிசம்பர் 2024 இந்தியாவில் ஸ்விக்கி, ஓலா, உபெர் ஊழியர்களை வாட்டும் வருமான சிக்கல், அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்11 டிசம்பர் 2024 இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகளின் மஜ்தல் ஷம்ஸ் அருகே இஸ்ரேலிய ராணுவ வாகனம் நிறுத்தப்பட்டது. கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்" என்று அவர் தெரிவித்திருக்கிறார். "சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன," என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார். "இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்" என அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார். "அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்" என்றார். எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், "சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது" என்றார். இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார். "லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்" என அவர் தெரிவித்தார். "இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக" அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/cn7rv5ej8lzo
    • 👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
    • “தாய்லாந்து மசாஜ்”….. ஐயோ, ஆளை விடுங்கடா சாமி. 😂 தலை தப்பினது, தம்பிரான் புண்ணியம். 🤣 ஆபத்து எங்கை இருந்தெல்லாம் வருகுது.  இனிமேல்… உசாராக இருக்க வேணும். 😁 😃
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.