Jump to content

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 25
 
 
9] இல்லாமை தத்துவம் அல்லது நீலிசம் [Nihilism / Letting Yourself Go Culture]
 
 
நாம் வாழும் சமுதாயம் ஒழுக்கமானதாக இல்லாத போது, நாம் மட்டும் ஏன் ஒரு ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி ஒருவரிடம் எழும் பொழுது, அவர் ஒன்றிலும் கவலை இல்லாதவராக, "நான் எதையும் பற்றி கவலைப்படப் போவதில்லை, எனக்கு, என் வாழ்க்கையின் மீது, கட்டுப்பாடு இல்லை " என்று அவர் எந்த வெட்க உணர்வும் இன்றி அல்லது அதை இழந்து விட்டவராக சொல்லுவதைக் கேட்க்கிறோம். இது தான் எந்த மதிப்புகளையும் மற்றும் தரங்களையும் கொண்டிராத அழியும் ஒரு சமுதாயத்தில் பொதுவாக காண்கிறோம். இவர்கள் வாழ்க்கையின் அர்த்தமுள்ள அம்சங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டதை மறுத்தலைக் காண்கிறோம். இப்படியான நிலையை 'இல்லாமை தத்துவம்' அல்லது 'நீலிசம்' என்று அழைக்கலாம் என்று சொல்லுகிறார்கள். Nihilism [நிஹிலிசம் அல்லது நீலிசம்], என்பது ஒன்றுமில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொல் nihil இருந்து பிறந்த ஒரு சொல்லாகும்.
 
உன் வாழ் நாளில், நீ செய்த முயற்சிகளின் பின்னாலோ அல்லது நீ அனுபவித்த துன்பங்களின் பயனாலோ, 'வாழ்க்கை அர்த்தம் அற்றது' என்று சலிப்பு கொண்டு, 'நாம் ஏன் ஏதாவது செய்யவேண்டும், நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?' என உன் மனம், கட்டாயம் ஒரு கணம் கேட்டிருக்கும். எனவே நாம் அனைவரும் நீலிசம் [நிஹிலிசம்] என்ற தத்துவத்தின் தாக்கத்தை, அது என்ன வென்று தெரியாமலே, உணர்ந்து இருப்போம். அனுபவித்திருப்போம்.
 
ஒவ்வொரு முறையும் உங்கள் முன்னேற்றம் அல்லது முயற்சி வீணாகும் பொழுது, "என்ன பிரயோசனம்" [“what’s the point?”] என்று உங்களையே நீங்கள் கேட்டிருக்கலாம். ஏன் என்றால் நாம் ஒரு நாள் கட்டாயம் சாகத்தான் போகிறோம், எனவே அது எதுவும் எமக்குத் தேவையில்லை [none of it will matter] என, உங்கள் வாழ்வில் ஏற்பட்ட, தடைகள் மற்றும் திசைதிருப்பல்கள், துன்பம், ஏக்கம், அபத்தம், தனிமைப்படல் மற்றும் அலுப்பு உள்ளிட்டவையால், நீலிசத்துடன் [நிஹிலிசம்] தெரிந்தும் தெரியாமலும் நீங்கள் மோதியிருப்பீர்கள்.
 
உதாரணமாக இந்த கட்டுரையை உங்களுக்கு நான் எழுதும் பொழுது, சில வேளையில், சில சந்தர்ப்பத்தில், இந்த கட்டுரையை எழுதுவதால் என்ன பிரயோசனம் என்று நான் என்னை கேள்வி கேட்டிருப்பேன். நீலிசத்திற்கு ஊடாக போய், அதன் மறு பக்கத்தினூடாக வெளியே வந்து, என்னை இன்று நான் இப்ப இருக்கும் ஒரு நபராக வடிவமைத்துள்ளேன். அது மட்டும் அல்ல, நீலிசத்துடனான என் அனுபவம், என்னை முன்னையதிலும் பார்க்க மிகச் சிறந்த நபராக மாற்றியுள்ளது என்பதும் உண்மையே.
 
பொதுவாக உலகளாவிய இணைய தளத்தில், மற்றும் செய்திகளில், நீலிசம் [நிஹிலிசம்] பற்றிய கருத்துக்கள் பிழையாக அல்லது மோசமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன். இன்று நாம் வாழும் வாழ்க்கை ஒரு ஒரு மோசமான நிலைமையாக காணப்படுகிறது. ஏன் என்றால், மதம் மற்றும் பாரம்பரியம் [religion and tradition] எம் மனதை ஆணையிடுகிறது, அங்கு, 'தானே சிந்திக்கும்' ஒரு சுதந்திர மனிதனை காண முடியவில்லை. ஏனென்றால் எம் சமுதாயம் “மதிப்புகள்”, “ஒழுக்கம்”, “நல்லொழுக்கம்” மற்றும் “நன்மை” [“values”, “morals”, “virtue” and lastly “goodness”] என்ற போர்வைக்குள் எம்மை மூடி, அதற்க்கு கீழ்ப்படி என எமக்கு கோரிக்கை விடுகிறது. இதனால் எம்மில் பலர் கண்மூடித்தனமாக, எந்தவித விளக்கமும் இன்றி, சமுதாயம் அல்லது சமூகம் அல்லது குடும்பம் காட்டிய அந்த வழியை பின்பற்று கிறார்கள். அது மட்டும் அல்ல, உணர்வுபூர்வமாக அது ஏன் என்று தெரியாமல் அவர்களின் வாழ் நாள் முழுவதும் இருக்கிறார்கள். இந்த சங்கிலியை உடைத்து எறியும் முயற்சியையே நீலிசம் தருகிறது எனலாம்.
 
இந்த நீலிசம் என்ற தத்துவம், ரஷ்ய இலக்கியத்தின் நாயகரான 'இவான் துர்கனேவ்' [Ivan Turgenev] என்ற எழுத்தாளரால் தன் 'தந்தையரும் தனயரும்' [Fathers and Sons] என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானது எனலாம். அந்த நாவலில் முக்கிய பாத்திரமான, பஸாரவ் [Bazarov] ஒரு நீலிசவாதியாகும், இவர் அந்த நாவலில் வரும் தந்தையின் மகனான அர்க்காதியின் நண்பராவார். ஒரு கட்டத்தில், ஒரு போட்டியில், அர்க்காதியின் பெரியப்பாவை சுட்டுவிடுகிறான். அடுத்த கணம் உயிருக்குப் போராடும் அவரைக் காப்பாற்ற முனைகிறான். அவரோ போட்டியின் விதிப்படி நான் இறப்பதுதான் சரியாக இருக்கும் என்கிறார். பஸாரவ் தொடர்ந்து சிகிச்சை அளிக்கிறான். "போட்டி முடிந்துவிட்டது. இப்போது நான் போட்டியாளன் இல்லை, மருத்துவன்'' என்கிறான்.
 
இன்னும் ஒரு கட்டத்தில், நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவனைக் காப்பாற்றும் பொருட்டு போதிய தடுப்பு மருந்துகள் இல்லாமலேயே சிகிச்சை செய்ய இறங்கி, பஸாரவ் உயிருக்கே வினையாக வந்து நிற்கிறது. இப்படி ஆகும் என்பதை உணர்ந்தேதான் அந்தச் சிகிச்சை அளிக்க இறங்குகிறான் பஸாரவ். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய நோக்கமாக இருக்கிறது. மரணத்தை சுகமாக ஏற்கிறான். சாகும் முன்னர் அவனால் மறுக்கப்பட்ட காதலியைச் சந்திக்க விரும்புகிறான். அவளோடு பேசிக் கொண்டிருக்கிறான். "நோய் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. நான் உளறுவது போல தோன்றினால் பரிதாபம் பார்க்காமல் என்னிடம் சொல்லிவிடு. நான் சாகும்போதும் கவுரவமாகச் சாக விரும்புகிறேன்'' என்கிறான்.
 
நாங்கள் இன்று அதிகமாக அப்படியான ஒரு நீலிச காலத்தில் வாழ்கிறோம். இங்கு பலரிடம் வாழ்க்கை எந்தவொரு நோக்கமும் பொருளும், அல்லது உள்ளார்ந்த மதிப்பும் இல்லாமல் இருப்பதை காண்கிறோம். உண்மையில் நியாயம் என்று எதுவும் இல்லை, உருவாக்கப்பட்ட நியாயம் என்ற மதிப்புகள் உண்மையில் மாயையால் உருவாக்கப்பட்டவை என்று கருதும் காலமாக மாறுகிறது. உண்மையில் நீலிசம் அல்லது நிஹிலிசம் ஒரு கலாச்சார நிலை, அல்லது உளவியல் நிலை [cultural condition or the psychological state] ஆகும்.
 
அங்கே, ஏதேனும் உள்ளார்ந்த அல்லது தனித்துவமான மதிப்பு அல்லது பெறுமானம் கொண்டிருப்பதாக அவர்கள் உணரவில்லை. சிலவற்றிற்கு எந்தவொரு பண மதிப்பு என்று ஒன்றும் இல்லை என்று சொல்வதுடன் இதற்கு சம்பந்தம் இல்லை. ஒரு தோட்டம், ஒரு அன்பான செல்ல பிராணி, ஒரு அழகான கழுத்தணி, ஒரு ஆழமான நாவல் அல்லது படம், அல்லது ஒரு நபர், இவைகள் தனக்கு என ஒரு மதிப்பு கொண்டிருப்பதாக கருதவில்லை, அந்த மதிப்புகள் அல்லது பெறுமானம், அந்த மதிப்பை கொடுத்தவர்களுடன் தொடர்புடையது என்றாகிறது என்கிறார்கள். இதன் தீவிர போக்கை தீவிரவாத நீலிசம் [“radical nihilism”] என்று அழைக்கிறார்கள்.
 
உதாரணமாக ஒருவர் மதிப்பிற்குரியதாக கருதப் படுபவை எல்லாம், உண்மையில் ஒரு வழக்காறு அல்லது மரபு, அதை விட அதில் வேறு ஒன்றும் இல்லை என்கிறார்கள். ஒரு மௌனமான அல்லது மறைமுகமான, பரீட்சிக்கப்படாத சில அனுமானங்கள் மூலம் ஒருவரின் செயலையும் அவரின் சமூக நடத்தையையும் வழிநடத்தும் ஒரு மறைமுகமான கட்டளை [a tacit, unexamined set of assumptions that directs one’s actions and social behaviour] இது ஆகும் என்கிறார்கள்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 26 தொடரும்
 
92673287_10216560909357987_2154599360837451776_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=2XVo2oYtyfYQ7kNvgHwIH6c&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBjAFWFKp22SSsMkO5Xu53OXZPMcixu088zz97hFpLSFw&oe=66C07E51 92913275_10216560910918026_8169092706832744448_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=8dfFZHlwmV8Q7kNvgHp34jZ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDAPOwZE9T28eh2qDwiEpxOFz5L_prO3wyvbGvIknGDPw&oe=66C07D46 92747347_10216560912878075_1005347042496610304_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=uW41gW_lzmoQ7kNvgGJgPZy&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYDwn-WwrydQwcWF5iYd8SP2psS7IdbkTAe2USgXhAFgvw&oe=66C08C10
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 26
 
 
நீலிசவாதி [nihilist] என்பவன், எந்த அதிகாரத்திற்கும் தலைவணங்காதவன், விசுவாசத்தின் பெயரில், எந்த கொள்கையையும், அது எவ்வளவு மதிப்பிற்குரியதாக கருதப்பட்டாலும் ஏற்காதவன் [who does not accept any principle on faith, however much that principle may be revered.], இப்படித்தான் நான் அதை நம்புகிறேன். என்றாலும் நீலிசத்தைப் பற்றிய தப்பபிப்பிராயம், அதிகமாக 1860 ஆண்டில் ஏற்படுத்தப் பட்ட நீலிச இயக்கத்தால் [“Nihilist Movement”] ஏற்பட்டிருக்கலாம். இது அன்றைய சகல அதிகாரத்தையும் நிராகரித்ததால், அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக ஒரு வன்முறையை முன்மொழிந்தவர்கள் என ஐரோப்பா முழுவதும் இவர்களை அன்று அடையாளப் படுத்தினார்கள். இதனால் தான் நீலிசம் உண்மைக்கு புறம்பாக திரித்துக் கூறப்பட்ட ஒரு நிலையை [distorted idea of Nihilism] அடைந்தது எனலாம். பலவிதமான நீலிச வகைகளை நாம் காணலாம், என்றாலும் முக்கிய மூன்று வகைகளை இங்கு தருகிறேன்.
 
முதலாவது வகை நீலிசவாதிகள் [Epistemological Nihilist / அறிவாய்வியல் நீலிசவாதி], உண்மையான அறிவு என்று ஒன்றும் இல்லை என்றும், நீங்கள் ஒருபோதும் எதையும் உறுதியாக நம்ப முடியாது என்றும் நம்புகிறார்கள். ஏன் என்றால், என்றென்றும் நீங்கள், உங்கள் தலையில் அல்லது மனதில் சில கருத்துக்களை பதிந்து அல்லது ஒட்டி வைத்துள்ளீர்கள், அத்துடன் உங்கள் சூழலுக்கு, உங்கள் உணர்வு உறுப்புகள் சொல்லுவதனூடாகவே அணுகுகிறீர்கள் என்பதால் என்கிறார்கள் [you are forever stuck in your head and have access to the environment only via what your sense organs tell you],
 
இரண்டாவது வகை [Existential Nihilist / இருத்தலியல் நீலிசவாதி] நீலிசவாதிகள், வாழ்க்கை ஒரு உள்ளார்ந்த கருத்தையோ அல்லது ஒரு நோக்கத்தையே கொண்டது அல்ல என்கிறார்கள் [denies that life has any inherent meaning or purpose] பிரபஞ்சத்தின் கண்ணோட்டத்தில், எதுவுமே ஒரு மதிப்போ அல்லது நோக்கமோ கொண்டதல்ல [From the perspective of the universe, nothing has any value or purpose] என்கிறது.
 
மூன்றாவது வகை [Ethical Nihilist / நன்னெறி நீலிசவாதி], இவர்கள் சமுதாயம் அல்லது சமூகம் சொல்லுகிறதே என்பதற்காக, அதன் பொருட்டு மட்டுமே ஒன்றையும் செய்ய மாட்டார்கள் [who does not do what society says is ought to be done for just the sake of it.]. உதாரணமாக, ஏதாவது ஒன்று செய்ய எந்த காரணமும் இல்லை என்றால், அதைச் செய்வதால், சமூகம் அவர்களை எவ்வளவு மதிக்கக்கூடும் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல, அவர்கள் கட்டாயம் அதை செய்ய மாட்டார்கள் [If there is no reason do something, no matter how much society might value doing it, an Ethical Nihilist will not do it].
 
அவர்களுக்கு பின்பற்றவென்று உள்ளார்ந்த ஒழுக்கங்கள், மதிப்புகள் அல்லது விதிகள் [no inherent morals or values or rules] என்று ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு ஒன்றைத் தெளிவாகச் சொல்கிறேன், இதன் கருத்து அவர்கள் வன்முறை மற்றும் கொலையாளிகள் என்பதல்ல, இதன் கருத்து அவர்கள் நடத்தை ரீதியாக, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கவனத்தில் எடுக்காதவர்கள் [behaviorally immune to what others think] என்பதே ஆகும்.
 
இதனால் நீலிசவாதிகள் வன்முறை, சுயநலம் மற்றும் ஒழுக்கக்கேடானவர்கள் [violent, selfish and immoral] என்று பலர் எண்ணுகிறார்கள். ஆனால் அவர்கள் நீலிசவாதிகளும் மனிதர்களே என எண்ண தவறுகிறார்கள். மனிதர்கள் ஒழுக்க ரீதியாக நடந்து கொள்ள, உயிரியல் ரீதியாக பரிணமித்தவர்கள் [human beings have biologically evolved to behave “morally”] என்பதை மறந்து விட்டார்கள் . நீங்கள் மனிதனின் இயல்பான நடத்தையை, என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகளுடன், குழப்ப வேண்டாம் [Do not confuse natural human behavior with what ought to be done]. ஒரு நீலிசவாதி, தர்க்கரீதியாக நன்மை பயக்கும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று அவர் உணருவதால் செய்கிறார் [he does either because it is logically beneficial or because he feels an urge to do it], ஆனால் என்றென்றும் ஒரு சமுதாயம் சொல்லுகிறதே என்று மட்டும் செய்வதில்லை. அது தான் வித்தியாசம். பிரபலமான ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போல, நீலிசம் ஒரு அவநம்பிக்கை அல்ல, நீலிசவாதிகள் ஒரு மனநோயாளி அல்ல,
 
தர்மம் அல்லது தியாகம் அல்லது காணிக்கை [alms or sacrifice or offering] போன்ற ஒன்றும் இல்லை, நல்லது அல்லது தீய செயல்களின் [good or evil deeds] அடிப்படையில் புண்ணியம் என்று ஒன்றும் இல்லை. ஒரு மனிதன் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் கூறுகளால் [four elements] கட்டப்பட்டுள்ளது. அவன் இறக்கும் பொழுது பூமி பூமிக்கு போகிறது, நீர் நீருக்கு போகிறது, நெருப்பு நெருப்புக்கு போகிறது அதே போல காற்று காற்றுக்கு போகிறது. அவனின் உணர்வுகள் விண்வெளியில் மறைந்து விடுகின்றன. இந்த உலகில் இருந்து அவன் எந்த உலகிற்கும் போகவில்லை. மறுபிறவி என்று ஒன்றுமே இல்லை, தாய் அல்லது தந்தைக்கு ஆற்றும் சேவையிலிருந்து நீங்கள் ஒரு புண்ணியமும் பெறப்போவதில்லை. சரியான பாதையென ஒன்றில் சென்று, பரிபூரணத்தை [perfection] அடைந்தவர்கள் என எந்த துறவிகளும் பிராமணர்களும் [ascetics or Brahmins] இல்லை. இந்த உலகையும் இதற்கு அப்பால் உள்ளதையும் அறிந்தவர்களோ அல்லது அனுபவித்தவர்களோ இல்லை. நாலு பேர் உன் சவத்தை காவிச் செல்கிறார்கள். அவர்கள் சுடலைக்கு போகும் மட்டும் வீண் பேச்சு பேசுகிறார்கள். அவரின் எலும்பு கருகுகிறது. அவரின் தியாகங்கள் சாம்பலில் முடிகிறது. உடல் இறக்கும் பொழுது முட்டாளும் ஞானியும் [fool and wise] அழிந்துவிடுகிறார்கள். எனவே இவர்கள் பயனற்ற வெற்று பேச்சும் மற்றும் பொய்களும் பேசுகிறார்கள் என்கிறார் கி மு 600 ஆண்டை சேர்ந்த இந்தியாவின் அஜிதா கேஷாகம்பலி [Ajita Kesakambali] என்ற தத்துவவாதியும் முனிவரும்.
 
இவர் இந்த பதிலை, ஆற்றல் மிக்க கொடுங்கோண் அரசனாகவும் தனது தந்தை பிம்பிசாரனைக் கொன்று அரசை கைப்பறியவனனுமான, பேரரசர் அஜாதசத்ரு ஹரியங்காவின் [Ajatashatru Haryanka] கேள்விக்கு விடையாக கூறுகிறார். இங்கு நாம் ஒருவித நீலிசம் காண்கிறோம். மேலும் பழங்கால கிரேக்கர்களிடையே, உதாரணமாக கி மு 483-378 ஆண்டை சேர்ந்த கோர்கியஸ் [Gorgias] என்பவர் "எதுவும் இல்லை. ஏதாவது இருந்து இருந்தாலும் அதை அறிய முடியாது அல்லது தெரியாது இருக்கும். ஒரு வேளை அதை அறிந்திருந்தால், அது பற்றிய அறிவு பிறருக்குக் எடுத்து கூற முடியாததாக இருக்கும் " [“Nothing exists. If anything did exist it could not be known. If it was known, the knowledge of it would be incommunicable.”] என்று கூறியதை, நீலிசத்தின் [நிஹிலிஸின்] ஒரு அடிப்படைக் கொள்கையாகவும் கூறலாம்.
 
வாழ்க்கை அர்த்தமற்றது என்ற நம்பிக்கையில், அனைத்து மத மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளையும் [religious and moral principles] நிராகரிப்பது நீலிசம் எனப்படுகிறது. எனவே, வாழ்க்கை அர்த்தமற்றதாக இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் அல்லது மற்றவர்கள் செய்யும் எதையும் ஆதரித்து எந்தவிதமான வாதமும் நீங்கள் செய்யத் தேவையில்லை. உங்களிடம் எந்த ஒழுக்கக் கோட்பாடும் இல்லை என்றால், உங்களிடம் சரியோ பிழையோ என்று தீர்மானிக்கும் அளவுகோல் இல்லை. எனவே அது இல்லாமல், எந்த காரணத்தை கொண்டு, ஒரு சமுதாயத்தை ஆதரிப்பதற்கு, மக்களை ஊக்குவிக்க அல்லது அதை நம்பவைக்க முடியும்? அப்படி என்றால் நீலிசம் சமுதாயத்தை, அதன் கட்டுக்கோப்பை குலைக்க வழிவகுக்கலாம் என்பது பலரின் நம்பிக்கை. மேலும் நீலிசம் அதீதமாக மக்களை இன்பமே நோக்கம் என்ற கொள்கைக்கு [hedonism] வழி நடத்துவதாகவும், இந்த உண்மையை சமுதாயம் முழுவதும் ஓரளவு பார்க்கிறோம் என்பதும் ஒரு பொதுவான வாதமாகும்.
 
எனவே நீலிசம் ஒரு வன்முறை மற்றும் பயங்கரவாத தத்துவமாக [violent and even terroristic philosophy] கருதப்படுகிறது. மேலும் வன்முறைக்கு ஆதரவாக நிஹிலிசம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எதோ உண்மை தான். அது மட்டும் அல்ல பல ஆரம்பகால நீலிசர்கள் வன்முறை புரட்சியாளர்களாக [violent revolutionaries] இருந்தனர் என்பதும் உண்மைதான்,
 
உதாரணமாக ரஷ்ய நீலிசர்கள் [Russian Nihilists]. இவர்கள் பாரம்பரிய அரசியல், நெறிமுறை மற்றும் மத நெறிகள் [political, ethical, and religious norms] எந்தவொரு செல்லுபடியாகும் அல்லது கட்டுப்படுத்தும் சக்தியை தம் மேல் கொண்டு இருக்கவில்லை என்று நிராகரித்தனர். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததுடன், சமுதாயத்தின் ஸ்திரத்தன்மைக்கு எந்த வித அச்சுறுத்தலையும் கொடுக்கவும் வில்லை. ஆனால், அவர்களது வன்முறை, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலாக இருந்தது என்பது உண்மை தான்.
 
நீலிசத்தின் ஒரு வரையறை, மனித வாழ்க்கை அர்த்தமற்றது, எல்லா மதங்களும், சட்டங்களும், தார்மீக கோட்பாடுகளும், அரசியல் அமைப்புகளும் முற்றிலும் வெறுமையானது பொய்யானது [all religions, laws, moral codes, and political systems are thoroughly empty and false] என்பதாகும். எனவே, சமுதாயத்திற்கு நீலிசம் தீங்கிழைக்கிறதா? என்ற ஒரு கேள்வி எழுகிறது. "அவ்வாறு இருக்கலாம், ஆனால் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்றே இதற்கு நான், என் அனுபவத்தில் இருந்து பொதுவாக பதில் அளிப்பேன்.
 
உதாரணமாக, அடிப்படையில் மதத்திற்கு விரோதமாக என் வாழ்க்கை வாழ்ந்திருக்கிறது. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. எனவே ஒரு மதத்தை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. மற்றும் நான் எந்த மத தூண்டுதல்களையோ அல்லது மத உணர்வுகளையோ கொண்டு இருக்கவில்லை. ஆனால், நான் அடிப்படையில் அனைத்து சட்டங்களுக்கும் கீழ்ப்படிகிறேன், மற்றும் எனக்கு அர்த்தம் தருகிற தார்மீக கோட்பாடுகளையும், அரசியல் தத்துவங்களையும் [moral codes and political philosophy] கடைப்பிடிக்கிறேன். சட்டத்தை பொறுத்த வரையில், நான் அதை உடைக்க வேண்டும் என்று உணரவில்லை. அதே மாதிரி, ஒழுக்கம் சார்ந்த நெறிமுறையை [morals] பொறுத்த வரையில், நான் அவையை என் பெறோர்களிடம் இருந்து, ஆனால் நான் காரணங்களையும் அதில் உள்ள உண்மைத் தன்மையையும் உணாந்து நானாக கற்றுக் கொண்டேன். என்னை இரு பெறோர்களும் வளர்த்தார்கள். நாங்கள் ஒரு சராசரி குடும்பம். சில நேரங்களில் செலவிட போதுமான பணம் எம்மிடம் இருந்ததில்லை, ஆனால் என்றும் ஒருவரிடமும் இருந்து பணம் திருடவில்லை, ஏமாற்றவும் இல்லை. நான் நாள் முழுவதும், சந்திக்கும் எல்லோரையும், மரியாதையுடன் நடத்த முயற்சி செய்கிறேன். பெருபாலும் எந்த உரையாடலுடனும், நான் மக்களை சுற்றி நகைச்சுவை செய்ய விரும்புகிறேன், எனக்கு, வாழ்க்கை மகிழ்வாக வாழ்வதற்க்கே !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 27 தொடரும்
93780836_10216628843256292_6711583520436781056_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=vQ9UMMDB6SwQ7kNvgH9fwhg&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDB5mwTUYJlxrS8W6f3Z-oJynlnXVOQjkoBqX85qWPJsA&oe=66C9F67F  No photo description available.  No photo description available.  No photo description available.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 27

 


  10] அறநெறி சரிவு [decline of morality] / சுயக்கட்டுப்பாடற்ற ஒழுக்ககேடு:

 

முழு சமுதாயத்திற்கும் அல்லது ஒரு தனிநபரின் நம்பிக்கைகளுக்கும் ஏதாவது ஒரு ஒழுக்கம் இருக்கலாம். இவ்வகையான ஒழுக்க நெறிகள் ஒரு கதையில் இருந்தோ அல்லது அனுபவத்தில் இருந்தோ பிறக்கின்றன. எது சரி, எது பிழை என்பதை இந்த ஒழுக்க நெறிகள் அல்லது விதிமுறைகள் நிர்வகிக்கிறது. எனவே அறம் அல்லது ஒழுக்கநெறி (Morality) என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை, நல்லவை தீயவை என்பன தொடர்பில், ஒரு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடத்தைகளின் தொகுப்பு என்றும் கூறலாம்.

 

ஒழுக்க நெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்று போல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடு கின்றன. உலகளாவிய சில உதாரணங்களாக, பரீட்சையில் ஏமாற்றுவது ஒரு நற்செயல் அல்ல, அதற்கு எதிர்மாறாக தகுதிகள் அடிப்படையில் உயர் பதவிகளை அடைவது ஒரு சரியான வழி. இதே போல, இனவாதம் தவறானது மற்றும் கஷ்டப்படும் அகதிகளுக்கு அன்பு காட்டுவது உயர்ந்த நெறி முறை.


சமூகத்தில் முழுமையாக மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டு மெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுபாடுகளையும், ஒழுக்கங்களையும் விதித்துக் கொள்ளவேண்டும். வேறு வகையில் குறிப்பிடுவது என்றால், ஒரு தனிமனிதன் பிறரிடம் எந்த எந்தப் பண்புகளை எதிர்பார்க்கின்றானோ, அந்தப் பண்புகளைத் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணும்போது, அந்தப் பண்புகள் யாவும் அவன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் அறிநெறிகளாக ஆகிவிடுகின்றன.

 

ஒழுக்கத்தைப் பற்றி திருவள்ளுவர் தனது குறள்: 0131 இல், ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும் என்கிறார். ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி என்பது தனிச்சொத்து என்கிறார் தந்தை பெரியார், ஈ. வெ. இராமசாமி. ஏனென்றால் , பக்தி இல்லாவிட்டால் நட்டம் இல்லை; ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் என்பதாகும்.

 

ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. இதைத்தான் வள்ளுவர், குறள் : 0140 இல், உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே என்று ஆணித்தரமாக கூறுகிறார்.

 

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!" என்றார் விவேகானந்தரும்.


ஒரு விதையை நீங்கள பார்த்து, அது விதைக்கப் பட்டபின் எத்தனை சுவையான கனி, எத்தனை காலத்திற்கு கொடுக்கும் என்பதை எல்லாம் உடனடியாக ஊகிக்க முடியாது. அது விதையின் தரம், மண்ணின்  தன்மை, உரத்தின் இயல்பு, அங்கு நிலவும் இயற்கையின் ஆற்றல், மற்றும் கண்காணிப்பு போன்றவற்றின் சிறப்புகளை பொறுத்தே கூறமுடியும். அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதையாக இருக்கிறான். சமூகத்தில் அவன் நல்ல கனி கொடுக்க வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அதற்கு ஒவ்வொரு மனிதனும் நல்ல ஒழுக்கங்களைக் கொண்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம் ஆகிறது. ஒரு மனிதன் என்பவன் சமூகத்தின் ஒரு அங்கம். ஒரு உறுப்பில் ஏற்படும் புற்று நோய் அந்த உடலையே, நாளடைவில் பெரும்பாலும் அழிப்பது போல, ஒரு தனி மனிதனிடம் காணப்படும் ஒழுக்கக் கேடுகள், அவன் வாழும் சமூகத்தையே ஒருவேளை அழித்து விடும் ஆற்றல் படைத்தது என்பதையும் நாம் மறக்கக் கூடாது.


ஒவ்வொரு தனி மனிதனும் சமுதாயத்தின் ஒரு அங்கமாகும் . வன்முறை, இனவெறி, சமயவெறி இவற்றிலிருந்து விடுபட்டு வாழவேண்டிய கட்டாயத்திற்கு நாம் இன்று உள்ளோம். அதற்க்கு நாம் அன்பெனும் கயிற்றில் சமுதாயத்துடன் எம்மை பிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறேன்.

 

பொதுவாக தனிமனித ஒழுக்கம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமாகிறது. ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம்’ என்ற பழமொழிக்கேற்ப சமுதாயத்தில் ஒருவன் தீயவனாய் இருந்தாலும் சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அதனால் பெரும் துன்பம் ஏற்படும். இந்த ஒழுக்கக்கேடு ஒரு கொடியநோய். சமுதாயத்தில் ஏற்படும் குழப்பங்கள் எல்லாம் அந் நோயின் அறிகுறிகளே ஆகும்.

 

சமுதாயத்தில் நிகழும் குற்றங்களுக்குப் பொருளாதார வறுமையும் மற்றும் அறியாமை நிறைந்த மனமும் பெரும் காரணிகளாக அமைகின்றன. இவற்றில் பொருளாதாரத்தில் மாற்றம் செய்வது எளிது. ஆனால் உள்ளத்தில் படிந்துள்ள இருளை அகற்றுதல் அவ்வளவு எளிதன்று. எனவே, சமூகம் கட்டுப்பாடுகளையும் நெறிமுறைகளையும் மதித்து வாழும் போது தான் மீண்டும் உயரிய சமுதாயம் துளிர்விடும்.

 

மக்களுள் பலர் பணந் தேடும் நோக்கையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு, எவ்வழியிலும் பணம் தேட எண்ணுகிறார்கள். ஆனால் வாழ்க்கை என்பது எப்படியும் வாழலாம் என்பதில் அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்பதில் தான் உள்ளது. நம் முன்னோர்கள் உயரிய நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்தார்கள் என சங்க பாடல்கள் எமக்கு அறிவுரை கூறுகின்றன. சமூகச் சீரழிவுகள் மாறவேண்டுமெனில் குழந்தைகளிடத்திலிருந்தே மாற்றங்களை விதைக்க வேண்டும்.

 

இன்றைய சூழலில் சமுதாயத்தை மாற்ற ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளை நல்லமுறையில் உருவாக்குதலே இன்றியமையாததாகும். அதுவே நாம் நாட்டிற்குச் செய்யும் முதற்கடமையுமாகும். நல்ல கல்வியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களிடத்து மறைந்துள்ள ஆற்றல்களைக் கண்டறிந்து அவற்றை வெளிக்கொணர்ந்து, அறிவைப் பெருக்கி, இளம் உள்ளங்களில் நற்பண்புகள் என்னும் விதைகளைத் தூவி, அவர்களை வளர்த்தால் உறுதியாக நம் சமுதாயம் சீர்பெறும் என்று நம்புகிறேன்.

 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 


பகுதி: 28 தொடரும்

94393151_10216697491852464_7138407444643840_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=hf76Dh4JWskQ7kNvgGXdiD6&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=ATpK22OYfkMb_wUAwVvnCpW&oh=00_AYCXGilcv4cL1pm6mpGsRMwWLvxa7lQ4wWmjfMGYw2qCxA&oe=66CD797F  94425514_10216697498332626_1981770722954969088_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=bn49kodIVeAQ7kNvgH_SiEj&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=ATpK22OYfkMb_wUAwVvnCpW&oh=00_AYCv8ECuEDgeR1T2A0mc7jO0JLXCqAJa-LZEVLf7bnkTuA&oe=66CD708D  94262202_10216697496252574_2749693622596141056_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=RK4wyToQjHcQ7kNvgHU5Xob&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=ATpK22OYfkMb_wUAwVvnCpW&oh=00_AYApNgXsd0vBHV3cR1-1OeAKoWeMFbD-XhKuqtCX2E0-vw&oe=66CD5BF5  No photo description available.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 28
 
 
நமது சமுதாயத்தில் இன்று ஒழுக்க நெறிகளின் சீரழிவு ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது. அறநெறி மக்கள் இடையே, ஒரு ஆரோக்கியமான இணைப்பை வகிக்கிறது, ஒவ்வொருவருக்கு ஒருவர் ஒத்துழைக்க இது ஒத்திசைவாக உள்ளது. சரியான அல்லது தவறான நடவடிக்கைகளின் வேறுபாடு உணர்ந்து, ஒரு மதிப்பு நிறைந்த சமூகத்தை கட்டி எழுப்புகிறது.
 
குடும்பம், சமுதாயம், கலாச்சாரம், மதம் அல்லது அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூக மதிப்புகள் போன்றவை [family, society, culture,Religion or belief and social values etc] ஒழுக்கம் பேணுவதில் செல்வாக்கு செலுத்துகின்றன. என்றாலும் சமூக பொருளாதார காரணிகளால் பல குடும்பங்கள் நிலைதவறியும் ஒழுங்கற்றும் குழம்பியும் [disoriented, disorganised and confused] இன்று உள்ளன. இதனால் இவை ஒழுக்க நெறிகளை பேணுவதில் தவறிவிடுகின்றன.
 
எமது கல்விக்கூடங்கள் மிக திறமையான நபர்களை இன்று உருவாக்குகின்றன, ஆனால் நல்ல குடிமகனை அல்ல என்பது ஒரு கவலைக்குரிய விடயமாக இருக்கிறது.
 
இன்றைய சமுதாயம் பெரும்பாலும் வன்முறை, பேராசை, திருட்டு, போதைப்பொருள், மற்றும் பயங்கரவாதம் [violence, greed, theft, drug addiction, terrorism] போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. ஒழுக்காறு அல்லது கட்டுப்பாடு இன்று இளைஞர்களிடம் குறைந்து காணப்படுகிறது. அவர்கள் வயதில் மூத்தவர்களை மதிப்பதும் இல்லை, அவர்களின் சொற்களை கேட்பதும் இல்லை. இன்று பலர் தங்கள் சுயநலங்களை முன்னிறுத்தி செயல் செய்வதால், அவர்கள் பொதுவாக சுயநலவாதிகள் ஆகிவிட்டனர். எனவே பொதுவாக நெறிமுறை மற்றும் தார்மீக விழுமியங்களின் [ethical and moral values] வீழ்ச்சி, இன்று பெரும்பாலும் சமுதாயத்தில் காணப்படுவதாக அமைந்து விடுகிறது.
 
இந்த நவீன பொருள்முதல்வாத உலகம் [materialistic world] எமது வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளது, ஆனால் வாழ்க்கையின் மதிப்பை குறைத்து விட்டது. இன்று அதிகரிக்கும் சனத்தொகையுடன் அறிவும், குறிப்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் (science and technology) அதிகரித்து உள்ளது. அதே போல பொருளும் வசதியும் கூட அதிகரித்துள்ளது. இதனால் அவன் உலகின் பொருள் வசதிகளை உண்மையான மகிழ்ச்சியாக கருதி, பலவேளைகளில் பிழையான வழியில் செல்கிறான்.
 
இன்றைய சமுதாயத்தில் பரவலாக பரவியிருக்கும் பேராசை, தன் சக்தி, செல்வம், பதவிகளை பெருக்கும் ஆசை, கடுமையான அநீதி, மனித உரிமைகள் துஷ்பிரயோகம், அதிகாரத்தின் பரவல், சுரணையின்மை அல்லது இரக்கமின்மை, உணர்வற்ற தன்மை, வஞ்சகம், நேர்மையற்ற தன்மை, திருட்டு, லஞ்சம், கடத்தல், ஊழல், சுரண்டல் [greed, self-aggrandizement, gross injustice, abuse of human rights, pervasion of power, callousness, insensitivity, deceit, dishonesty, thefts, bribery, smuggling, corruption, exploitation] போன்றவற்றால் மனிதன் கவ்வப்பட்டுள்ளான்.
 
இதனால் அவனின் உணர்வு நிலை அல்லது விழிப்பு நிலை [consciousness] குறைந்தும் இருண்டும் காணப்படுகிறது. மதம் மற்றும் அறநெறியும் [Religion and morality] நழுவி செல்வதும் மனிதனின் சக்தி தவறாக பயன் படுத்தப்படுவதும் இப்போது சாதாரணமாகிவிட்டது. உதாரணமாக, மதங்கள் என்பது மனிதர்கள் துன்பம் இல்லாமல் வாழும் வழிகள் அல்லது துயர் இல்லாது வாழ வகுத்த பாதை எனலாம். அத்துடன் இது ஒரு அன்பின் அடையாளம்.
 
ஆனால் இன்று மதங்கள் மதம் கொண்டு விலகி அலைவதை, மோதுவதை காண்கிறோம். எனவே கல்விமுறையிலும் பிள்ளைகளை பெற்றோர் வளர்ப்பு முறையிலும், நாம் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு எது சரி, எது பிழை என்பதை அறியப் படுத்த வேண்டும். அதை அவர்களுக்கு போதிப்பதை விட, பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிபந்தனையற்ற அன்புகளின் மற்றும் மனித விழுமியங்களின் அல்லது நற் பழக்க வழக்கங்களின் படி வாழ்ந்து காட்டிட வேண்டும்.
 
விழுமியங்கள் [Values] வாழ்க்கைக்கு ஒரு கருத்தை கொடுக்கிறது. அது மட்டும் அல்ல அவை, எவை எவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை நிலை நாட்டுகின்றன. இன்று பல பாரம்பரிய மதிப்புகள் வேகமாக மாற்றமடைகின்றன, அவை மனித வாழ்வை பாதிக்காத வரை தவறு இல்லை. எனினும் உதாரணமாக, பாலியல் நெறிமுறைகள் இன்று மாற்றமடைகின்றன. இதனால் திருமணத்திற்கு புறம்பான பிறப்புகளின் பரவல் [“the prevalence of out-of-wedlock births”] மற்றும் குடும்பங்களின் உடைப்பு கூடுவது, கட்டாயம், தார்மீக சிதைவுகளின் வெளிப்படையான அறிகுறி எனலாம். இவ்வாறே வேறு பல நீண்டகால மதிப்புகள் அல்லது விழுமியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
நெறிமுறைகள் மட்டும் அல்ல, பாரம்பரியமாக இருந்து வந்த வலுவான பணி நெறிமுறையும் [strong work ethic] இன்று பாதிப்படைவதை காண்கிறோம். உதாரணமாக, வேலையாட்கள் சரியான நேரத்தில் வேலைக்கு வருவதும் மற்றும் வேலை செய்யும் அர்ப்பணிப்பும் குறைகிறது. அதேபோல பழக்கவழக்கங்கள் மற்றும் மரியாதையும் குறைந்து வியாபாரத்தில், முரட்டுத்தனமும் மோசமான வாடிக்கையாளர் சேவையும் அதிகரிக்கின்றன. இவை எல்லாம் அறநெறி சரிவுக்கு சில எடுத்துக் காட்டுக்கள் ஆகும்.
 
இறுதியாக நான் ஒன்று கூற விரும்புகிறேன். சமுதாயமும் அரசியலும் இரு ஒன்றோடொன்று தொடர்புடைய சொற்கள். ஒன்றில் ஏற்படும் மாற்றம் மாற்றத்திலும் தெளிவாகத் தெரியும். எனவே இரண்டும் தீமையிலிருந்து விடுபட்டு இருக்கவேண்டும். உதாரணமாக இன்று நாம் [தமிழர்] பெரும்பாலும் வாழும் நாடுகளான இலங்கை, இந்தியாவை எடுத்தால், நெறிமுறை விழுமியங்களை மீறி, சிறுபான்மையரான தமிழரை குறிவைத்தலை காண்கிறோம்.
 
பெரும்பான்மை மற்றும் மதத்தின் பெயரில் படுகொலையும் அடக்குமுறையும் தமிழருக்கு எதிராக நடைபெறுகின்றன. இவையும் நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறது என்பதற்கு சில உதாரணங்கள் ஆகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
பகுதி: 29 தொடரும்
95369528_10216767529523362_5729291102175887360_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=V0gvIr_goD4Q7kNvgFhqua9&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYBk0gdkkQyqjV42TJ9Sfuy4BHTvZSUtlIVfhTQpEgtHkw&oe=66D02624 95329355_10216767531003399_2226140691216465920_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Hj3bZgswj9AQ7kNvgFeo176&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDHcgrO3XoNGuErFkscD9gp1AiDQhLifpnPKipST0lNLw&oe=66D0363F 95462293_10216767531563413_9196713144783732736_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=eBRCCCnMROUQ7kNvgGiMlBi&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDZWAGNqxNUMn8SFok6UEGj-qlTGZZe-sLNhBUk_XOsaA&oe=66D00B21 95608249_10216767534323482_3367125356426297344_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=m9eY8VU-lzEQ7kNvgFNaE-4&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCq3CzgfyQTASJ909RhafWH2-KG_fokDf729T3e9iRfeg&oe=66D033F5 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 29
 
 
இது வரை நாம் அலசியத்தில் இருந்து பரவலாக நாம் அறிவது, இந்த நவீன சமூகம் ஒரு கூர்மையான வீழ்ச்சியில் இருப்பது போல் எமக்கு காணப்படுவதுடன், அதற்கு காரணமான பலவிதமான சமூக கெடுதிகளையும் அங்கு அடையாள படுத்தப் பட்டுள்ளதையும் காண்கிறோம். அவை பொதுவாக குற்றம், விவாகரத்து, இளம் வயது பாலுறவு, இளம் பருவ மகப்பேறு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், யுத்தம், மற்றும் அறநெறி மற்றும் மதநெறியில் ஏற்பட்டுள்ள சரிவு [crime, divorce, teenage sex, teenage births and drug abuse; war; and a general decline in personal morality and religiosity.] ஆகும்.
 
அது மட்டும் அல்ல, வளமான வளர்ந்த நாடுகளுக்கும் வறிய மூன்றாம் உலக நாடுகளுக்கும் இடையில், நவீன விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வாழ்க்கை நிலைமைகளும் மற்றும் கல்வி வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளும் ஆகும்.
 
இந்த கருத்து அல்லது நம்பிக்கை தான் மதச்சார்பற்ற இடதுசாரியையும் மதச்சார்பான வலதுசாரியையும் இன்று உண்டாக்கியுள்ளது. என்றாலும் சுருக்கமாக சொல்வதென்றால், விஞ்ஞானம் அல்லது தொழில் நுட்பம் தான் சமுதாய சரிவுக்கு காரணமென்றோ அல்லது மதம் தான் முழுக்க முழுக்க காரணம் என்றோ அறுதியிட்டு கூற முடியாது. மறுபுறம், பல திரு மணங்கள் இன்று விவாகரத்தில் முடிவடைகின்றன, அதே போல பல குழந்தைகள் திருமணத்திற்கு வெளியே பிறக்கின்றன, பல குழந்தைகள் ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்படுகின்றன, வர்த்தகத்தில் மிக அதிகமான மோசடி காணப் படுகின்றன, இனவெறியும் இன சமத்துவமின்மையும், மற்றும் பாலின வாதமும் பாலின சமத்துவமின்மையும் [Racism and racial inequality, and sexism and gender inequality] தொடருகின்றன. இவை எமது மனநிறைவுக்கு, உன்னதமான மனித வாழ்விற்கு முற்றிலும் பொருத்தம் அல்லாதவை ஆகும்.
 
நாம் இன்றைய உலகை - ஆயுட்காலம், கல்வியறிவு, பசி, ஆரோக்கியம் மற்றும் அரசியல் வன்முறை [life span, literacy, hunger, health, political violence] போன்றவற்றின் அடிப்படையில் பரவலாக உற்று நோக்கும் பொழுது, ஒட்டுமொத்த உலகமும் முன்பை விட கூடுதலான நாகரிகம் பெற்றுள்ளது. மேலும் நாம் எப்படி பண்டைய சமுதாயம் / நாகரிகம் அழிந்தது என்பதை ஆராய்ந்தால், அவை அதிகமாக, அவற்றின் சரிவின் போது அல்லது அதற்கு சற்று காலத்திற்கு முன்பு சுற்றுச்சூழல் அழிவு, முக்கிய வளங்களின் தட்டுப்பாடு [உதாரணமாக நீர், விளைநில மண் மற்றும் மரம்], பஞ்சம், அதிக மக்கள் தொகை, சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை, சமத்துவமின்மை, படையெடுப்பு, நோய் [environmental destruction, depletion of vital resources (such as water, arable soil and timber), famine, overpopulation, social and political unrest, inequality, invasion or other forms of devastating warfare, and disease.] போன்றவையே மேலோட்டமாக அடையாளம் காணக் கூடியதாக உள்ளது.
 
மற்றும், சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை, சமத்துவமின்மை போன்றவற்றிற்கான அடிப்படைக் காரணத்தையும் நாம் அறியவேண்டும். எனவே தொழில் நுட்பத்தின் முன்னேற்றம், உண்மையில் எந்த வித பெரும் பாதிப்பையும் அல்லது அச்சுறுத்தலையும் எமக்கு பொதுவாக ஏற்படுத்தாது என்று நம்புவதற்கு ஒரு சிறிய காரணத்தை அல்லது ஆறுதலை இது தருகிறது எனலாம்.
 
சீரழிவு என்பதற்கு, அதை சீர் + அழிவு என்று பிரித்து, தரம் கெடுதல்; தகுதிக் கேடு என்று பொதுவாக பொருள் கூறலாம். மனிதன் வேட்டை நாகரிகம் முடிந்து ஒரு இடத்தில் நிரந்தரமாக வசித்த போது கலாச்சாரம் அல்லது பண்பாடு என்ற ஒன்று ஆரம்பமாகியது அல்லது வளர்ச்சி அடைந்தது எனலாம்.
 
விவசாயம் செயத்த பின்னர் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் அவன் சிந்தனை வளர்ந்து, அதன் பயனாக உடை, கலை, மொழி, பழக்கம், சமயம், பண்பு, என்பன உருவாகி தொடர்ந்து வளர்ந்தன. இதுவே அவனின் கலாச்சாரமாகியது. என்றாலும் இன்று ஒரு உதாரணமாக, சீரியல் என்று சொல்லப்படும் நாடகங்களை எடுத்தால், அவை பொதுவாக, இவைகளுக்கு புறம்பாக அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது? அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது? மாமியாரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது? மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது? பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு செய்வது? எந்த தவறை எப்படி மறைப்பது? அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம் சண்டையிடுவது? மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம் பேசுவது? கணவருக்கு எப்படி ஒத்துப்போகாமல் நடப்பது? மனைவியை எப்படி அடிமை படுத்துவது? எப்படி பழிக்கு பழி வாங்கலாம்? ஆபாசமாக பேசுவது எப்படி? போன்ற விடயங்களுக்கு முக்கியம் கொடுத்து அழகாக, தெளிவாக சொல்லியும் கற்றும் தருபவையாக இருக்கின்றன.
 
பொழுதுபோக்கு என்ற பெயரில் "எதை" வேண்டு மானாலும் பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் இன்று உண்மையாகிவிட்டது. நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் தான் ஒரு சிறந்த சமூகத்திற்கான அடையாளம், ஆனால் ஒரு மாற்றமாக இப்படி புகுத்தி, பொதுவாக பெண்களை இதற்கு அடிமையாக்குகிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்சனைகளும் சீரழிவும் பல பலவாகும்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
பகுதி: 30 தொடரும்
96144742_10216821766639256_7548598317723156480_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Nos3Rn9IVS0Q7kNvgGMO4Gh&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=AiE5TyHn50cHugmKKwYlziZ&oh=00_AYD2NDc4EUJh9Qd9pkXgW091UWTKoW6mlHTNqZ35UP8HrA&oe=66D359A3 96254345_10216821767359274_348492220468297728_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=lN7vB8L8ST0Q7kNvgEJlYui&_nc_ht=scontent-lhr6-1.xx&gid=AiE5TyHn50cHugmKKwYlziZ&oh=00_AYBeBHRcc06t0JulTevobg14ycoScr1yJKQ-8zSab-9z3Q&oe=66D330B8 96746962_10216821767959289_251229864256864256_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=8fDnzOV91u0Q7kNvgGaYDd3&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=AiE5TyHn50cHugmKKwYlziZ&oh=00_AYBs50KLTK8_pPykA6mOTrZAG9Kz2E1KKBmaUtHi2hYGdw&oe=66D344B6 96377799_10216821769559329_2949431093876490240_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=pGlNOKq9TYMQ7kNvgE4_OhT&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=AiE5TyHn50cHugmKKwYlziZ&oh=00_AYCLLqLHgmcqYznzftnyFIsT6qXoWbgaQz0ses7e_zyr6Q&oe=66D330A2 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 30
 
 
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மை யுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் என "நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு" என்று கூறுகிறது குறள் 452. அதாவது சேர்ந்த இனத்திற்கு ஏற்ப பழக்கவழக்கமும் அறிவும் மாறும் என்கிறது.
 
நல்ல சமுதாய சூழ்நிலைதான் தனி மனிதனுக்கு பெருமை யையும், சிறுமையையும் சேர்க்கிறது. இதனை திருவள்ளுவர் தன் குறள் 460 இல் "நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்" என, அதாவது நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை என்கிறார்.
 
அது மட்டும் அல்ல , சமுதாய அடையா ளங்களை வைத்து தான், அங்கு வாழும் தனி மனிதனுடைய தரமும் முடிவும் செய்யப்படுகிறது. இதை திரு வள்ளுவரும் தமது குறள் 458 இல், "மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து" என, அதாவது மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும் என கூறுகிறார்.
 
ஆகவே சமுதாய பார்வையில் பண்புக் குறைவை உடைய சமுதாயம் என கருதப்பட்டால் அல்லது நிருவப்பட்டால், அங்கே மன அளவில் உயர்ந்த மனிதன் என்றாலும் ,அவனை பொதுவாக உயர்வாக கருதப்படுவதில்லை, உதாரணமாக ஆபிரிக்க அமெரிக்கரை இப்படி இன்னும் பலர் கருதுகிறார்கள். எனவே எம் சமுதாயத்தின் பெயரை கெடுக்காமலும் எம்மையும் எம் சமுதாயத்தையும் சீரழிக்காமலும் நாம் பார்த்து கொள்ள வேண்டும். இது ஒவ் வொரு சமுதாயத்தினதும் ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.
 
சமுதாயம் மேம்பாடு அடைய, சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் அதாவது, மனிதர்கள் நிர்வாணமாகப் பிறப்பதைப் போலவே நிர்மலமான மூளையுடனும், புலன்களுடனும் பிறக்கிறார்கள். பின் கற்றல், கேட்டல், சிந்தித்தல், செயற்படுதல் மூலம் புத்திக் கொள்முதல் செய்கிறார்கள் அறிவு பெறுகிறார்கள். எனவே முறையான அறிவு பெற்று அவர்கள் தம் வாழ்க்கை தரத்தை முறையாக உயர்த்தும் பொழுது, அவர்கள் சார்ந்த சமுதாயமும் மேம்படுகிறது எனலாம். மேலும் ஒளவையார் தனது ஒரு பாடலில்,
 
 
”நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையர் கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
 
 
என்று பாடினார், அதாவது, நிலத்திற்கு என்று தனியியல்பு ஒன்று இல்லை, எங்கு நல்லவர் வாழ்கின்றாரோ அங்கு நிலமும் வளமாகவே அமையும் என்கிறார். அது போலத்தான் சமுதாயமும், எங்கே மனிதர்கள் நல்லவராக முறையாக வாழ்கின்றாரோ அங்கு சமுதாயமும் முன்னேற்றமும் மேன்மையும் அடையும் எனலாம்.
 
எந்த ஒரு உயர்ந்த நாகரிகமும் ஒரு நாளில் ஏற்படுவதல்ல, அதே போல ஒரு நாளில் அழிவதும் அல்ல. சீரழிவு அங்கு படிப்படியாகவே நடந்து உள்ளது, எனவே அதன் தாக்கத்தை நேரத்துடன் உணரக் கூடியதாக, பார்க்கக் கூடியதாக கட்டாயம் இருக்கும்.
 
பொதுவாக அந்த சமுதாயமே அல்லது நாகரிகமே அதன் சரிவுக்கு பொறுப்பு ஆகும். உதாரணமாக ரோம பேரரசை எடுத்துக் கொண்டால், அது ஐந்து முக்கிய காரணங்களால் சரிந்ததாக கூறினாலும், ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளரான எட்வார்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) தனது ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) என்ற புத்தகத்தின் இறுதி தொகுதிகளில், அவர் மக்கள் தொகையை ஒரு காரணமாக கூறவில்லை, அதே போல், தொழில் நுட்பத்தின் பற்றாக்குறையையோ அல்லது பருவநிலை மாற்றத்தையோ கூறவில்லை. அவரின் முதலாவது அடிப்படை காரணம் குடும்பத்தின் முறிவு. அதன் பின் அவர் அதிகரித்த வரிவிதிப்பு, இன்பத்திற்கான ஒரு தீராத ஏங்குதல் [an insatiable craving for pleasure], பராமரிக்க முடியாத அளவில் ஆயுதங்களின் குவிப்பு [unsustainable buildup of armaments], மற்றும் மதத்தின் சரிவு என்கிறார்.
 
மேலும் அவரின் கூற்றின்படி, ரோம பேரரசின் சரிவுக்கான மூல கரணம் குடிமை நல்லொழுக்கமும், மற்றும் தனிப்பட்ட அறநெறி இழப்பும் [loss of civic virtue and individual morality] என்கிறார்.
 
அவரின் கூற்றும் காரணங்களும் இன்றும் எமது சரிவிற்கு சரியாக பொருந்துகிறது என்றே கருத வேண்டியுள்ளது. ஆகவே நாம் எம்மை தனிப்பட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் திருத்தினால் ஒழிய, மற்றும் படி எதிர்பார்க்கப் படும் சரிவை அல்லது சீரழிவை தடுக்க முடியாது என்பதே உண்மையாகும். அதையே நானும் நம்புகிறேன்.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
[முற்றிற்று]
97450957_10216881400410063_987820414833000448_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=uK7P6skfSDQQ7kNvgEvpMp6&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAq4vXGjPqrmUW71kJmcz0L_2HcapHYG3flSqusBERTDw&oe=66D42E6F 98167480_10216881400810073_5789600298506911744_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=e1WbwTYWpusQ7kNvgHsrg53&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDJ6thsE2sAB2caEoyy8jVGctFnyEXND1hwUVfz09_XEw&oe=66D42888 
 
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நியாயம்... அவர்,  பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே  அதை செய்யலாம். பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி  உங்கள் கதை இருக்கு.
    • தம் தலைவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா இயக்கம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஹமாஸ் இற்காக ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கப் போய் இன்று தன் தலைவரைக் கூட காப்பாற்ற முடியாமல் போய் கிடக்கிறது.
    • "தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"/ பகுதி: 05     வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டத்தில் சருக்கம் 73 முதல் 76 வரையிலான பகுதியில் சம்புக வதம் விவரிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் திடீரென இறந்து விடுகிறான். மகனை இழந்த பிராமணன் இராமனிடம் நீதி கேட்டு வருகிறான். அந்நேரத்தில் அங்கு வரும் நாரதமுனி, சூத்திரன் ஒருவன் உனது நாட்டில் தவம் இயற்றிக் கொண்டிருப்பதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கிறார். சம்புகனைத் தேடிச் சென்ற இராமன், ஒரு மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், ஒரு சாது ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டு இருப்பதை கண்டார். அவன் அருகில் சென்ற ராமர்,   ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல்' என்று கேட்க, அவன், 'மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர்' என விடையளித்தான்.   உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் அங்கேயே அவனைத் தனது வாளால் தலை வேறு முண்டம் வேறாக வெட்டி கொன்றான். தவம் இயற்றிய சூத்திரன் என்ற ஒரு காரணத்தால் மட்டும் இராமனால் கொல்லப்பட்டான் ?விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை - நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றிச் சம்புகனின் தலையைச் சீவிவிட்டான் இராமன்.   இராமனின் காரியத்தைப் பார்த்தீர்களா? தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டி ருந்ததைத் தடுத்துத் தண்டித்துச் சம்புகனைக் கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக பார்ப்பனர்கள் மகிழ்ந்தார்களாம்?   கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற்காரியத்திற்காக ? அவனைப் பாராட்டி னார்களாம்? எப்படி இருக்குது ராமன் கதை? இவனுக்கு தான் இந்த தீபாவளி? இவனைத்தான் கடவுளாம்? இவன் மாதிரி உத்தம புருஷனுக்காக அலைகிறார்களாம் இன்றைய சீதைகள்? எப்படியிருக்குது வேடிக்கை?   திருவிளையாடல் புராணத்தில் 26 வது கதையாக 'மாபாதகம் தீர்த்த படலம்' வருகிறது. அதில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயை நிர்ப்பந்தப்படுத்தினான். இந்தக் கொடுமை கண்டு மனம் தாளாத அவனது தந்தை, அவனைத் தடுத்தார், ஆனால் அவன் தந்தையையே கொன்று விட்டு, தனது காம பசி தீர்க்க, தாயை இழுத்துச் சென்று விட்டான். காமுகனாகத் திரிந்ததால் அவனது உடலில் கொடிய நோய் ஏற்பட்டது. என்றாலும், இறுதியில், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.     இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார்.   எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார்; எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?   இந்த அறிவுரை எமக்கு தேவைதானா? இப்படியான கடவுளும் எமக்கு வேண்டுமா?   பண்டைத் தமிழ் இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், விளக்கீட்டு விழா என்னும் விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கார்காலம் முடிந்தபின் அறுவடையை எதிர்நோக்கிய காலத்தில் அறுமீன் சேரும் முழுநிலா மாலையில் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்த ஒரு விழாவை அகநானூறு-141 கூறும். இந்த நிகழ்வு பிற்காலத்தில், ஆரியரின் நாகரிகக் கலப்பால், தீபாவளியுடன் இணைந்தது என்பார்கள்.   இதனால் கார்த்திகை தீபத் திருநாள்தான் தமிழர் தீபாவளி யானாலும் அதை தீபாவளி எனக் கூறுவதில்லை. விஜயநகர சாம்ராஜ்ய காலத்திலும் (14 முதல் 16ஆம் நூற்றாண்டு வரை) பிறகு நாயக்கர் ஆட்சியிலும் (16 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை) மதுரை நாயக்கர்களா லும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருநாள் இது எனலாம்? மேலும் தீபாவளிப் பண்டிகை, கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் பெற வில்லை. ஆனால் அங்கு ‘ஓணம்’ பண்டிகை மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.   "உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறுந் தண் நறுங்கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ கூழைக் கூந்தல் குறுந்தொடி மகளிர் பெருஞ்செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்" [அகநானூறு 141]   உழவுத் தொழில் முடிந்துவிட்டதால் உழும் கருவியான கலப்பை வேலையின்றிக் கிடக்கிறது. உழவுக்கு உதவியாக மேகமும் தக்கவாறு மழை பொழிந்து ஓய்ந்து விட்டதால் ஆகாயம், கருமேகம் சூழாத நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. ஆறு விண்மீன்கள் அருகிருக்கக் காயும் முழு நிலாவானது இருளை நீக்கி வானில் காணப்படுகிறது. இந்நாளில் வீடுகள்தோறும் மக்கள் பூமாலைகளைத் தொங்கவிட்டு விளக்குகளை ஏற்றி வைத்துக் கூட்டமாகக் கூடி விழா கொண்டாடு வார்கள். இக்கார்த்திகை விளக்கு நாளில் புது மணமகன் உண்பதற்காக பசிய அவலாலான இனிப்புப் பொருள் செய்வதற்காக வீட்டிலுள்ள பெண்கள் நெல்லின் கதிர்களைப் பறித்து அவற்றை உரலில் இட்டு உலக்கையால் குத்திப் பக்குவப்படுத்து கிறார்கள். அங்ஙனம் குத்தும் உலக்கையின் ஒலியைக் கேட்டுப் பயந்தப் பறவை தானிருந்த வாழை மரத்தை விட்டு வேறொரு பெரிய மரத்தில் தங்கி தன் குஞ்சுப் பறவைகளைக் கூவுகின்றன என்கிறது இந்தப்பாடல்.   உலகின் எங்கும் மரணம் கொண்டாடப் படுவதில்லை. ராமன் பெருமைக்குரிய மனிதனாக இருக்கலாம், ஆனால் அவன் சீதைக்கு செய்தது என்ன? சீதையின் வாழ்க்கை தனிமையில் வீணாகியது. அவள் அனுபவித்தது எல்லாம் துக்கமே. ராவணன் அரக்கனும் அல்ல, கடவுளும் அல்ல. அவன் ஒரு சாதாரண மனிதன். அவன் தவறுகள் விட்டுள்ளான். நான் அவனை மூடிமறைக்க முயலவில்லை. நான் பாரம்பரிய ராமாயணத்தை, அப்படியே, ராவணன், ராமனை சித்தரிக்க கையாளுகிறேன். அவ்வளவுதான்.   கடவுளாக கருதப்படும் ராமனையும் அரக்கனாக சித்தரிக்கப்படும் ராவணனையும் ஒப்பிடும் போது , ராமன் பல பல குற்றங்கள் புரிந்து உள்ளான். மிகப்பெரிய கொடுமை தன் மனைவியையே சந்தேகித்தது. அதனால் அவள் அடைந்து துன்ப வாழ்வு! இருவருமே நல்ல தீய செயல்கள், பண்புகள் கொண்டுள்ளனர். ஆனால் எப்படி ஒருவர் கடவுளானார்? மற்றவர் அரக்கன் ஆனார்?   ராமாயணத்தில் உள்ள உண்மைகளை அப்படியே சிந்தியுங்கள். ஒரு மனிதனின் இறப்பை நாம் கொண்டாடலாமா? இல்லை ராமனைத்தான் கடவுளாக்கலாமா? கடவுள் என கருதுபவர் மக்களுக்கு, எங்களுக்கு தார்மீக பிடிப்பை உண்டாக்கக் கூடியவராக இருக்கவேண்டும். அவர்கள் நாம் பின்பற்றக் கூடிய முன்மாதிரியாக இருக்கவேண்டு? இதையாவது நம்புகிறீர்களா?   ராமர் கதையில் அவரின் ஒரு பண்பு மட்டுமே மாறாமல் கதை முழுவதும் அப்படியே தொடருவதை காண்கிறோம். இதைத்தான் நாம் அவரிடம் இருந்து கற்கலாம். கண்மூடித்த தனமான கீழ்ப்படிதல் அல்லது பணிவு! அது மட்டுமே அவரிடம் இருந்து நாம் பெறலாம்?   ராமன் குழந்தையாக இருக்கும் பொழுது அவர் ஒரு நன்றாக நடந்து கொள்ளும் அன்பான குழந்தை, மற்றும் படி ஒரு சிறப்பும் அங்கு காணப்பட வில்லை! இளைஞனாக இருக்கும் பொழுது, அவர் ஒரு தந்தை சொல் தட்டாத பிள்ளை, ஆனால் மீண்டும் ஒரு நடுத்தர வயது மனிதனாக, யாரோ ஒரு வழிப்போக்கன் தனது அன்பு மனைவியின் 'கணவன் மனைவி' விசுவாசத்தை சந்தேகப்பட்டான் என்பதால் ஒரு அரசனாக தனது கடமையை, 'மக்கள் எவ்வழி அரசனும் அவ்வழி' என்ற கண்மூடித்த தனமான கீழ்ப்படிதலை திடீரென்று நினைவுக்கு கொண்டு வருகிறேன்.   இதனால் கர்ப்பணி சீதை பிரிந்து, காடு சென்று, இறுதியாக தற்கொலை செய்கிறாள். அவனின் பண்பில் நிலைத்து நின்று மாறாதது, 'மாற்றான் சொல்' கேட்டு நடக்கும் பண்பு மட்டுமே! தனக்கு என ஒரு புத்தி அவனிடம் என்றுமே காணப்படவில்லை?   அவன் வாழ் நாள் முழுவதும், பண்பான, இணக்கமான, கீழ்ப்படிதல்' நபராகவே, எந்த கேள்வியும் கெடுக்காமல் பிறர் புத்தி கேட்டு நடக்கும் ஒரு மனிதனாகவே வாழ்ந்து விட்டான்!! அவ்வளவுதான்!!!     [இதுவரையில் நாம் அறிந்ததிலிருந்து, ஆரியரின் தந்திரமான புராண செருகலின் விளைவாக, தமிழரின் தொன்மை வாய்ந்த தீப ஒளியேற்றும் விழா [விளக்கீட்டு விழா] என்பதின் பாதையையும், கருத்துக்களையும், அது அடியோடு மாற்றிவிட்டன என உணர்கிறோம். எனவே, உறவுகள் கூடி, எண்ணங்களில் நல்லொளி ஊட்டித் தீபம் ஏற்றித் தமிழ்த் 'தீப + ஆவளி', அதாவது, 'தீப' (என்னும் வடசொல்லும்) + 'ஆவளி' என்ற இரு சொற்கள் இணைந்து வெளிப்படும் 'தீபங்களின் வரிசை' என பொருள்படும், தீப ஒளித்திருநாளை கொண்டாடுவோம்! எங்கள் 'தீபாவளி' வேறு என ஆரிய தீபாவளிக் குப்பைகளை எறிந்திடுவோம்!!]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     [முற்றிற்று]      
    • தமிழினத்தின் தூய, படித்த, அறிவுள்ள, வெள்ளை வேட்டிகட்டின, வெளிர்நிற மனிசனைச் சீச்சீ இப்படிச் சந்தேகிக்கக்கூடாது. அவரு நல்லவராயிட்டாரு.  அவர் நாடாளுமன்ற  பதவியைத் துறந்து ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினரா இருந்து அறிக்கைவிட்டிருக்கிறார். ஆஆஆஆஆ.....னனனன....படியால் நாம் நம்பத்தான் வேண்டும். முயலுக்கு மூன்று கால்.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • TNA யின் கீழேதான் எல்லோரும் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். அதுதான் தமிழ்த் தரப்பை பலப்படுத்த உள்ள ஒரே வழி.  உதிரிகளாக, சுயேட்சைகளாக, தனித் தனி அரசியற் கட்சிகளாக அல்லது TNA தவிர்ந்த வேறு எந்த விதமான கூட்டாக இருந்தாலும் அது தமிழர் தரப்பைப் பலவீனப்படித்துவதாகவே அமையும். 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.