Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.
திகதி: 12 May, 2024
breaking

12.05.2024

 

 

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையை அழிக்க முனையும் எதிரிகளின் சதிவலைப்பின்னல்களை முறியடிப்போம்.

 

அன்பார்ந்த தமிழீழ மக்களே! 

                             

தமிழீழத்தில் சிறிலங்கா அரசு நடாத்திய தமிழின அழிப்புப்போரில், 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரைநிகழ்த்தப்பட்ட பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்டமக்களை நினைவேந்திடும்,தமிழின அழிப்பு நினைவுநாள்- மே18 இன் பதினைந்தாம் ஆண்டு நிறைவில், வையகம்முழுவதும் பரந்துவாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியோடுநினைவேந்திட தயாராகும் வலிநிறைந்த காலத்தில் நாம்நின்று கொண்டிருக்கிறோம். 

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்அவர்களின் சிந்தனையில்> கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைக்கான மாபெரும் விடுதலைப்போராட்டமாகஎமது போராட்டம் விளங்குகின்றது. பல்லாயிரக்கணக்கான  மாவீரர்களையும் பலஇலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கிவளர்த்தெடுத்த, தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டுக்கனன்று தேசவிடுதலையை நோக்கிநகர்ந்துகொண்டிருக்கிறது. 

 

சிங்களப் பேரினவாத அரசிற்குப்பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப உதவிகளைவழங்கியதன் காரணமாக, 2009 மே 18 இல் தமிழீழநடைமுறை அரசின் தேசிய இராணுவம் ஒரு தற்காலிகப்போரியல் பின்னடைவைச் சந்தித்தது. பல நாடுகளின்ஒத்துழைப்போடு நடாத்தப்பட்ட ஒரு பெருஞ்சமரின்  பின்னடைவை, ஒரு பாரிய வெற்றியாகச் சிங்கள அரசுஇறுமாப்புடன் கொண்டாடியது. ஆனால், தமிழினத்தின்அசைவியக்கமும் பலமும் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக் கோட்பாடுதான்  என்பதை, சிறிலங்காவின் பேரினவாத அரசும் அதன்அடிவருடிகளும் கணிக்கத் தவறிவிட்டனர். 

 

உலகின் அசைவியக்கதில் சுயமாக உருவாகிய எதனையும்எவரும் அழித்ததாக வரலாறுகள் கிடையாது. ஒருஇனத்தின் விடுதலைக்காக ஆயிரம் ஆண்டுகள்தன்னுள்ளே அடக்கி வைத்திருந்தபேராண்மையை, தமிழன்னை ஓரிடத்தில் இறக்கினாள். தமிழ்த்தாயின் ஆற்றல்கள் அத்தனையையும் தன்னுள்ளேஉள்வாங்கி, தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டதமிழினத்தின் வழிகாட்டியே தமிழீழத் தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்கள். ஆகவே, அவர்இயல்பாகவே உருவாகிய தலைவர், உருவாக்கப்பட்டவர்அல்ல. தமிழீழக் கோட்பாட்டின் சிந்தனைச் சிற்பியும்அவர்தான். இந்த ஒப்புவமையற்ற தமிழீழ விடுதலைச்சிந்தனையை அழிக்கவேண்டுமாயின், தேசியத்தலைவர்மேதகு வே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு எனஅறிவித்து,விளக்கேற்றி, தமிழீழக் கோட்பாட்டிற்குச்சாவுமணி அடிக்க வேண்டும்.  இவ்வறிவிப்பின்ஊடாக,தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களைவழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை, தமிழினம்இழந்து விட்டது என தமிழ்மக்களின் ஆழ்மனங்களில்பேரிடியாக இறக்கி, அவர்களின் உளவுரணைச்சிதைத்தழிக்க வேண்டுமென்பதே எதிரிகளின் திட்டமாகும். 

இவையெல்லாம் சரிவரநடந்தேறினால், தேசியத்தலைவரின்சிந்தனைக்கேற்ப, மாவீரர்களின் உயிர்விதைகளால்அத்திவாரமிட்டு, மக்களின் அர்ப்பணிப்புக்களால்உறுதியாகக் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழவிடுதலைப்போராட்டம், தன்னைத்தானே அழித்துவிடும்என எதிரிகள் கனவுகாண்கின்றனர். இதுதான்> எமதுஎதிரியான சிங்களப் பேரினவாதத்தின் தெளிவானநிகழ்ச்சிநிரலாகும். 

 

தமிழீழக் கோட்பாட்டை அழிக்கவல்ல, நுணுக்கமானஇப்புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மைவாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடையபூகோள, வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத்துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்தியவாதமும் இணைந்து ஒத்துழைப்பு வழங்குகிறது.

 

இது இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின்இயங்குவிசையையும் தளத்தையும் செல்நெறியையும்மடைமாற்றம் செய்வதற்காக, தேசியத்தலைவரின் குடும்பஅங்கத்தவர்கள் சார்ந்தும்; புதல்வி துவாரகா,அரசியல்தலைமைத்துவத்தை ஏற்றுச் சனநாயக ரீதியில்போராட்டத்தைக் கொண்டு நடாத்தப் போகிறார் எனவும்சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சிலநடவடிக்கைகள்  களமிறக்கப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் ஊடாகப் பலரிடம் நிதிதிரட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இந்தக்குழுவின்அரசியல் கட்டுக்கதைகளைமுத்திரையிடுவதற்காக, உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (WTCC) என்னும் புலம்பெயர் தேசத்தில் செயற்பாடற்றகாகித நடவடிக்கை அமைப்பொன்று,மக்கள் மத்தியில்குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில்,மட்டுப்படுத்தப்பட்டசமூக ஊடக வெளிப்பாடுகளையும் செய்துவருகிறது. தேசியத்தலைவரின் விடுதலைப்போராட்டப்பாரம்பரியங்களையும் கட்டுக்கோப்புகளையும்சிதைத்து,தமிழீழ விடுதலைக்கோட்பாட்டைஅழித்து, தேசியத்தலைவரின் பெருமதிப்பைஇல்லாதொழிக்கவே இவர்கள் முயற்சித்துவருகின்றார்கள்.

 

அன்பார்ந்த மக்களே! 

 

ஒருபுறம், தமிழீழத் தேசியத்தலைவரின் புதல்வியின்வருகை என்னும் தமிழீழவிடுதலைப் போராட்டமரபுகளைத்தாண்டிய தமிழீழக் கோட்பாட்டுச் சிதைப்புநடவடிக்கை,மறுபுறம் தமிழீழத்தின் வாழும்சித்தாந்தமாகிய தமிழீழத் தேசியத்தலைவர் மேதகுவே.பிரபாகரன் அவர்களை வீரச்சாவு என்னும்சொல்லாடலினுள் அடக்கி,விளக்கேற்றுதல் என்னும்நடவடிக்கை. இவ்விரண்டு நடவடிக்கைகளும் தமிழீழக்கோட்பாடு என்னும் தேசியத்தலைவரின்  சிந்தனைமூலோபாயத்தை அழிப்பதற்காக, எதிரிகளினால்திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில்தயாரிக்கப்பட்டவையாகும். இந்நடவடிக்கைகள்,தமிழீழவிடுதலைப்போராட்டத்தில் ஏற்படுத்தப் போகும்பின்னடைவுகளைவிளங்கிக்கொள்ளாமல்,உணர்வெழுச்சியினால்உந்தப்பட்டு சில தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள்மடைமாற்றப்பட்டுள்ளமை எமக்குக் கவலையளிக்கிறது. ஆனால், தேசியத்தலைவரின் சிந்தனையானதுஇதிலிருந்து அவர்களை மீட்கும் எனத் திடமாகநம்புகிறோம். 

 

பேரன்புமிக்க எமது மக்களே !

 

காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டுஉருவாக்கப்படும் பொய்ப்பரப்புரைகளை நாம்கண்டறிந்து, முறியடித்து வருகிறோம். எனவே இவ்வாறானஉண்மைக்குப் புறப்பான கதையாடல்களைப்புறந்தள்ளி,இச் சூழ்ச்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல்விழிப்புடன் இருக்குமாறு அன்புரிமையுடன்வேண்டிக்கொள்கின்றோம்.

 

காலநதியில் கரைந்து போகாத எமது விடுதலைப்பயணங்கள்,தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்என்னும் பேராளுமையின் சிந்தனையின்வழிகாட்டலில், தமிழீழ விடுதலையை  நோக்கித்தொடர்ந்தும் பயணிக்கும். அது,எந்நிலையிலும் எதிரிகளின்சதிவலைப்பின்னல்களில் அகப்படமாட்டாது. எனவே, தமிழினத்தை அழிப்பதற்கான எதிரிகளின்சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுக்காமல், மாவீரர்கள்காட்டிய வழித்தடத்தில், தமிழீழத் தேசியத்தலைவரின்ஒளிரும் சிந்தனைப் பாதையில் உறுதியுடன்வழிநடந்து, தமிழீழ விடுதலை நோக்கித் தொடர்ந்தும்போராடுவோமென உறுதியெடுத்துக் கொள்வோம்.

 

``புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

 

XRxBQZMVFo49TBQwNwrj.jpg

 

hxqgzfwSwWQmOZ35DUbt.jpg

https://www.thaarakam.com/news/1e76217f-f8c4-4ac6-8d5b-a3ff75860a06

  • கருத்துக்கள உறவுகள்+

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களை முட்டாள்களாக நினைத்துக்கொள்வதைப் போன்ற கேனைத்தனம் வேறெதுவும் இல்லை. 

😏

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எவர் வந்து எமக்கு அரசியல் நடாத்தினாலும் எடுபடாது, அனைத்துலகத் தொடர்பகம் மற்றும் தமிழர் ஒருங்கமைப்புக்குழு ஒரு சில கோமாளிகளால் நடாத்தப்படும் பஜனைக்கோஸ்டி இவர்களால் தாம் ஒரு காகிதப்புலிகள் எனத் தம்மை நிரூபிப்பதைவிட வேறு எதுவும் செய்ய முடியாது. புலிகளது காசை அடித்தவர்களைப் பார்த்து வடை போச்சே எனக் கொட்டாவி விடுபவரும், புலிகளது காசை அடித்தவர்களைச் சனம் கேட்டால் இப்படி அமைப்புகளுக்குப் பின்னால் நிண்டால் கேக்கிற சனம் பயப்பிடும் எனவும் உலவும் இரண்டும் கெட்டான் கூட்டங்களது கூட்டணிதான் இவர்கள்.

அதுக்காக தலைவருக்கு திவசம் செய்யுறன் என இவ்வளவு நாளும் இருந்திட்டுப் புறப்பட்டவர்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. அவர்களுக்கும் ஏதோ ஒரு தேவை இருக்கு, காணொளிகளில் தனது நேர்காணல் தொடர்ந்து வந்ததில பயபுள்ளை புளகாங்கிதம் அடைந்து அகலக்கால் வைக்கிறார். மேற்கூறியவர்களுடன் கனகாலம் பயணம் செய்தவயளில கனபேர் விட்டுட்டு ஓடிப்போயிட்டினம் இப்ப மிஞ்சி இருக்கிறவையள் தேவையில்லாமல் மாட்டுப்பட்டுட்டம் என முளிச்சுக்கொண்டு நிக்கினம், இவையளை உசுப்பேத்திவிடுகிறது பழைய காசடிக்கூட்டம் தங்கட பாதுகாப்புக்கு  புலிகள் பெயரில  ஒரு முகாம் தேவை இல்லையெண்டால் கண்டவன் நிண்டவன் எல்லாம் தெருவில போக விடமாட்டாங்கள் என்பது இந்தக் கள்ளக்கூட்டத்துக்குத் தெரியும். 

ஆனால் அண்ணன் மகனும் தேவையில்லாது இதுக்குள்ள மாட்டுப்பட்டு நிக்கிற கள்ளஙள் அங்கையும் ஒளிஞ்சு விளையாட மடம் கட்டுகிறார்.

இல்லாதுவிடில் பதினைந்து வருசம் இல்லாது சித்தப்பா பாசம் இப்ப எங்க வந்தது. நாலு காணொளியோட தம்பிக்கு மண்டைக்குப் பின்னால ஒளிவட்டம் தெரியுது என யாரோ உசுப்பேத்திவிட்டுட்டாங்கள். பையன் டென்மார்க்கில ஒரு பாடசாலை வைத்து நடாத்திறதாக் கேள்வி கவனம் "கட்டியிருக்கும் கோமணமும் பறிபோயிடும்"

  • கருத்துக்கள உறவுகள்+

அம்மன் சல்லிக்குப் பிரியோசனம் இல்லை, அம்மளவு தான்.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.