Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நாவினால் சுட்ட வடு( சிறுகதை)
 
 
அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார்.
 
அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கேட்கிறான். அது அதிகம் பேசாமல் நீ உன் பைக்கை எடுத்துக்கொண்டு வந்து என்னைக் கூட்டிட்டுப்போ” என்றார்அதற்கு இவர் சொன்னார்.
 
”அது சிரமம் நீ பேசாமல் அவர் கேட்டதொகையை தருகிறேன் என்று சொல்லி அந்த ஆட்டோவில் ஏறிவா நீ இங்கு வந்ததும் பணத்தை நான் தருகிறேன்” என்று சொன்னார் அதற்கு அவரும் ”சரி அதுபோல் செய்கிறேன்” என்றார்.
ஆனால் அவர் சொல்லி 45 நிமிடம் ஆகியும் அவர் வந்து சேரவில்லை. எனவே யோசித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர்
“ நான் நடந்து வந்துகொண்டிருக்கிறேன் நீ கொடுத்தாலும் காசு தான் நான் கொடுத்தாலும் காசுதான் ஆனால் அவன் கேட்பது அநியாயம் அதனால் நடந்து வந்துகொண்டிருக்கிறேன் பக்கத்தில் வந்துவிட்டேன் இங்கேயாவது வந்து அழைத்துப்போ” என்று சற்று கோபத்துடன் சொன்னார்
அதைக்கேட்டு இவருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. சரி நடந்து போய் அழைத்து வருவோம் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அழைக்கப் போனார்
வீட்டுக்குக்கொஞ்சதூரத்தில் அவர் பெரிய பையைத் தூக்கமுடியாமல் தூக்கிக் கொண்டு சற்றே நொண்டியபடி நடந்து வந்துகொண்டிருந்தார்.
 
அவரைப் பார்த்ததும் இவர் சொன்னார்” வீணாக ஏன் சிரமம் ஆட்டோ பிடித்து வரவேண்டியதுதானே? “ என்றார்
அதற்கு அவர் இவரைத்திட்டத்தொடங்கிவிட்டார்.
”சரியான கஞ்சன் நீ காசுசெலவாகும் என்று அத்தனை சொல்லியும் திரும்ப நடந்தே வந்திருக்கிறாய் மனுசனா நீ இந்தா இந்தப்பையை பிடி “ என்றார்
இவரோ”கொஞ்சம் சிரமம் பார்க்காமல் நீங்களே உங்கள்பையைக்கொண்டுவாங்க” என்றதும் அவர் கோபம் உச்சமடைந்தது.
“உன்னப்போய்ப்பார்க்கவந்தேனே அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு ஜமுக்காளத்தில் வடிகட்டிய கஞ்சனா இருக்க மனுசனா நீ மனுசன் கஸ்டத்தைப்புரிஞ்சிக்கமாட்டியா” என திட்டத் தொடங்கினார்.
 
அப்போது இவர் சொன்னார் ”வாங்க வீட்டுலபோய் பேசிக்கலாம் திட்டுறதை வீட்டுல வந்து திட்டுங்க என்றார் அழமாட்டாத குறையாக
அவர் கோபம் தனியவில்லை கோபத்துடனே வீட்டுக்கு வந்து உள்ளே வந்தவுடன் இவரின் மனைவியிடம் கோபத்தோடு சொன்னார்
”இந்தக் கஞ்சனுடன் எப்படிம்மா குடித்தனம் நடத்துற” என்று கோபத்துடன் கத்தினார்
அப்போது அவர் மனைவிசொன்னாள் “ அது கிடக்கட்டுமுங்க அண்ணா இந்தாங்க தண்ணி சாப்பிடுங்க “ என்று சொல்லி தண்ணீர் கொடுத்தாள்
இவர் அதை கையில்வாங்கிக்கொண்டு மீண்டும் ஏதோ சொல்லதொடங்கியவுடன் அவள் சொன்னாள்
“ ””உங்களுக்கு விசயம்தெரியுமா நேற்றுத்தான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ச்சார்ஜ் ஆகி வந்தார் அவர் பைக் கார் எதையும் ஓட்டக்கூடாது அதுமட்டுமல்ல பாத் ரூமில்கூட கதவைப்பூட்டக்கூடாது தனியாக எங்கும் போககூடாது”” என்றவுடன்
”என்னம்மா சொல்ற அதிர்ச்சியா இருக்கு என்ன ஆச்சு அவருக்கு?”” என்று கண்கலங்ககேட்டபோது அவள் சொல்லத்தொடங்கினாள்
“போனமாசம் இன்னேரம் எங்க இருந்தோம் தெரியுமா?” என நடந்ததைச் சொல்லத் தொடங்கினாள்
அந்தச் சிறப்பு மருத்துவத்திற்காகப் பெயர்பெற்ற அந்த மருத்துவமனையின் நோயாளிகளின் உடனிருக்கும் உறவினர்கள் காத்திருக்கும் பகுதியில் அவள் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள். அவளின் கணவன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். தன்னுடைய இஸ்டதெய்வம் குலதெய்வம் இன்னும் கண்ணில் கண்ட மற்றும் தோன்றிய தெய்வங்களை யெல்லாம் வேண்டிக்கொண்டு கவலையோடு காத்திருந்தாள். அவளின் கணவன் நிலை மிகவும் மோசமாக இருந்தது இன்னும் என்ன வியாதி என்று கண்டுபிடிக்கப்படவில்லைஇது ஆரம்பித்து ஒரு 10 நாட்கள் இருக்கும்.
 
அன்றய தினம் பணிக்குப்போய்விட்டு வீடு திரும்பிய அவர் வரவேற்ப ரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டி ருந்தார். இவள் சமையல் அறையில் சமைத்தபடி பேசிக் கொண்டிருந்தாள். பேசிக்கொண்டிருந்த அவரிடம் இருந்து கொஞ்சநேரமாகச் சப்தம் எதுவும் வரவில்லை. ”பேசிக்கொண்டே தூங்கிவிட்டார் போல” என்று நினத்துக்கொண்டு சமையலைத் தொடர்ந்தவள் ஏதோ ஒரு வேலையாக வரவேற்பரைக்கு வர அவர் சோபாவில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவர் கிடந்த கோலம் ஏதோ வித்யாசமாகத்தெரிய போய் தூக்கிப் பார்த்தபோது அவருக்கு சுயநினைவு இல்லை
உடனே இவளுக்கு படபடப்பாகி என்ன செய்வது என்று தோன்றாமல் அழ ஆரம்பித்தாள். வீட்டிலிவர்கள் இருவர் மட்டுமே இருக்க என்ன செய்வதென்று தெரியவில்லை உடனே அவரது கைப்பேசியை எடுத்து கடைசியாகப் பேசிய நண்பரை அழைத்தாள் பதட்டத்டோடு” அண்ணா இவர் மயங்கிவிழுந்துட்டார் என்னன்னு தெரியல உடனே வாங்க “ என்று திக்கித்திணறிச்சொல்லி முடிக்குமுன் அழுகை
 
முந்திக்கொண்டது ஆனால் அவர் உடனே ஏதோ ஆபத்து என்று உணர்ந்து தன் நண்பரையும் வரச்சொல்லிவிட்டு அங்கு விரைந்தார்
சில நிமிடங்களில் அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்து சூழ்நிலை பார்த்துவிட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டு அவர் முகத்தில் நீர்தெளித்து அவரை நினைவுக்குக் கொண்டுவர முயன்றார்கள். ஆனால் நினைவு திரும்ப வில்லை. அதற்குள் ஆம்புலன்ஸ் வர அவரை இரண்டாவது மாடியில் இருந்து ஒரு சேரில் அமரவைத்து கீழே கொண்டு வந்து பின் ஆம்புலன்ஸில் ஏற்றினர். அவர்கள் பல்ஸ் சோதனை செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
 
அந்த மருத்துவமனை ஒரு அரசு மருத்துவமனை. அங்கே கொண்டுசென்றதும் அவருக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில் அவருக்கு நினைவு திரும்பியது ஆனால் அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. எனவே அங்கு அனுமதிக்கப்பட்டு கண் காணிப்பில் வைக்கப்பட்டார். அதற்குள் இவரை அறிந்தவர்கள் நண்பர்கள் என தகவல் பறந்து பெரும் கூட்டம் அங்கே கூடிவிட்டது.
வந்தவர்கள் எல்லாம் தங்களுக்குள் இவரைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள் ” நல்ல மனுசன் எல்லோருக்குக் உதவ ஓடிவருவாரு இவருக்குப்போய் இப்படியா” என்றும் “ ஒரு கெட்டபழக்கமும் இல்ல சிகிரெட் தண்ணி கிண்ணி எதுவும் தொடமாட்டாரு அதுவுமில்லாம மலையேறும் பயணம் ( ட்ரெக்கிங்) அடிக்கடி போறவரு அதுனால ஹார்ட் பிராபளம் இருக்குக்காது கொஞ்சவயசு வேற என்னதான் ஆச்சுன்னு தெரிய்லையே” என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குள் மருத்துவமனை ஊழியர்கள் ”அவர் நல்லாயிட்டார் ஒன்னும் பிரச்சனை யில்லை தொந்தரவு செய்யாமல் போங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
 
நேரம் இரவு 8 மணிக்கு மேலாக கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்தது. 24 மணிநேரக் கண்காணிப் பில் அவர் வைக்கப்பட்டார். அன்று இரவு அவருக்குக் கடுமையான காய்ச்சல். அதனால் அதற்கு மருந்துகள் கொடுத்து கவனித்துகொண்டிருந்தார்கள். காய்ச்சல் குறையவில்லை. மறுநாள் இரத்தம் யூரின் மற்றும் எக்ஸ்ரே எல்லா டெஸ்ட்டுகளுமெடுத்தபின்னே மருத்துவர் இவளை அழைத்துச்சொன்னார் “ அவருக்கு ஹீமோகுளோபீன் இறங்கிட்டே இருக்கு காரணம் தெரியவில்லை அதனால அவரை மேல் சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்போகிறோம் தயாராகிக்கொள்ளுங்கள் “ என்று அவளிடம் சொன்னார்
அவளுக்கு படப்படப்பாக வந்தது . கூட வந்திருந்த நண்பர்களிடம் பேசக்கூட முடியாமல் அழத் தொடங்கினாள். அதற்குள் அவள் பெண் நண்பர்கள் வந்து விசாரித்துக்கொண்டிருந்தார்கள். அவரை சிறப்பு மருத்துவ மனைக்கு அழைத்துச்செல்லப்போகின்றார்கள் என்று தெரிந்தவுடன் அதில் ஒரு பெண் இவளிடம் சொன்னாள்”” நீயும் கூடப்போகனுமே உனக்கு வேண்டிய துணிமணி பணம் வீட்டில் போய் எடுத்து வந்து தயாராக இருக்கனுமே வா வீட்டுக்குப்போய்ட்டு வரலாம்” என்று சொல்லி இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றாள் வீட்டுக்குபோய் வேண்டிய வற்றை எடுத்துக்கொண்டு சாமி அறையில் போய் காசு முடிந்துபோட்டு வேண்டிக்கொண்டு மீண்டும் மருத்துவமனைக்கு வந்தாள்.
அங்கு சிறப்பு மருத்துவமனைக்குப்போக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தகவல் அறிந்து அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது.
 
ஆம்புலன்சில் அவருடன் இவள் மற்றும் நண்பர்கள் இருவர் ஏறிக்கொள்ள சிறப்பு மருத்துவமனை விரைந்தது
அங்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால் அங்கு அனைத்தும் தயார் நிலையில் இருந்ததன அங்கு போய் சேர்ந்ததும் அவர் சிறப்பு கண்காணிப்பு பிரிவு( ஐ.சி.யூ)வில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிகிச்சை தொடங்கியது. ஆனால் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை
சிறப்புமருத்துவமனையில் பலவிதமான மருத்துவப்பரி சோதனைகள் நடத்தப் பட்டன.ஆனாலும் வியாதி என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஹீமோ குளோபின் மாத்திரம் குறைந்து கொண்டிருந்தது மீண்டும் அவருக்கு மயக்கம் வந்து போய்க் கொண்டி ருந்தது
மருத்துவர்களுக்கே ஒரு சவாலாக விளங்கியது. என்ன வென்று கண்டுபிடிக்கப் படவில்லை.இவளுக்கு அழுது அழுது கண்கள் வீங்கிவிட்டது. கூட இருந்தவர்கள் வற்புறுத்திச் சாப்பிடச்சொன்னார்கள். அவள் மனசு ஏற்காததால் முடியவில்லை அப்போது கூட இருந்தவர்கள் சொன்னார்கள்.” அவருக்குப்பிரச்சனை நீயும் போய் ப் படுப்பது என்று முடிவு செஞ்சுட்டயா ஏதாவது பேருக்காவது சாப்பிடு ””
என்று திரவ உணவாக பழரசம் போன்றவற்றை வற்புருத்திக்கொடுத்துக் குடிக்கச்சொன்னார்கள். கொஞ்சம் சாப்பிட்டாள்.
 
இப்போதும் சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை பிரச்சனை கண்டு பிடிக்கப் படவில்லை. இதற்கு நடுவே இவரை அனுப்பியமருத்துவமனையில் இவரைப் போலவே அறிகுறியுடன் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கும் இதே பிரச்சனை. மயக்கம் ஹீமோ குளோபிபின் குறைவு என்ற பிரச்சனைகளுடன் .
அது மருத்துவர்களை யோசிக்கவைத்தது. அவருடைய வீடு ஏற்கனவே வந்தவரின் வீட்டின் பின்புறம் இருந்தது. ஒரே பிரச்சனையில் இருவர் ஒரே இடத்திலிருந்து. இது மருத்துவர்களை யோசிக்கவைத்தது. இவரும் சிறப்பு சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
சிறப்புமருத்துவமனையிலும் இது பிரச்சனையை உருவாக்கியது. அங்கு மருத்துவ நிபுனர்கள் கூடி ஆராய்ச்சி செய்தனர். இதற்குஇடையில் முதலில் வந்த நோயளிக்கு நிலைமை மிக மோசமாக அவர் சிறப்பு தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார்
அதற்குள் அடுத்த திடுக்கிடும்தகவல். அதே பிரச்சனை யுடன் மூன்றாவதாக ஒருவர் மருத்து வமனைக்கு வந்தவுடன் பிரச்சனை பெரிதாகியது அப்போது அது தனிமனிதனின் பிரச்சனையில் இருந்து சமூகப் பிரச்சனை ஆகியது.இந்தத்தகவல் பரவ அந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் பீதிக்குள்ளானார்கள் எல்லோர் மனதிலும் கவலை அப்பியது. இன்னும் யாருக்குப்பிரச்சனை வரப்போகிறதோ என்று பரபரப்பாகியது. மருத்துவமனைகள் எச்சரிக்கை செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டன.
 
தகவல் சிறப்பு மருத்துவமனைக்கும் பறந்தது. அங்கும் இதைப்போல ஓரிரு நோயாளிகள் வந்திருந்தார்கள்இது அனைவரையும் கலக்கமடையச்செய்தது
இப்பொழுது இவள் மிகவும் பீதிக்குள்ளானாள். அதி தீவிர கண்காணிப்புசிகிச்சைப் பிரிவுக்கு அவள் கணவன் மாற்றப்பட்டதும் மேலும் இரு நோயாளிகள் அதே பிரச்சனையுடன் வந்ததும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போதுதான் அவள் தெய்வங்களை வேண்டத்தொடங்கினாள்.
 
இதற்கு நடுவே இளம் மருத்துவர் ஒருவர் வந்து நோயாளியைப் பார்த்து விட்டுச்சொன்னார். ”இது ஒரு விதப்பூச்சிக்கடியினால் வரும் பிரச்சனை,எனவே அந்தக்கோணத்தில் சிகிச்சையை தொடங்கலாம் என்று அறிவுருத்தினார். பின் முதலில் வந்த நோயாளியிடம் ”சமீபத்தில் பூச்சி கடி ஏதாவது ஏற்பட்டதா ?”எனக் கேட்டார் அப்போது அவர் நினைவுக்கு வரவில்லை எதுவும் . அதனால் அவரின் மனைவி வர வழைக் கப்பட்டுவிசாரித்தார். “ சமீபத்தில் உங்கள் கணவரைப் பூச்சிகள் ஏதும் கடித்ததாகச்சொன்னாரா? “ எனக்கேட்கஅவள் யோசித்துவிட்டுச்சொன்னாள்
“ அவரது கம்புக்கூட்டில் சின்னதாக ஒரு பூச்சி கடித்த தடம் அவர் காண்பித்தார் ஒருநாள் லேசாகச்சிவந்து வீங்கியிருந்தது ஆனால்மறுநாள் சரியாகிவிட்டது” என்றாள்.
 
அதேபோல் மற்ற இரண்டுநோயாளிகளும் விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கும் இதே அனுபவங்கள் இருந்தன. ஒருவருக்கு தொடையிலும் இன்னொருவருக்குக் கழுத்துப்பகுதியிலும் கடித்ததாக அறியப்பட்டது
இந்தத்தகவல்கள் பரிசீலிக்கப்பட்டுபின் பூச்சிக்கடி நிபுனர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டபோது பல தகவல்கள் வந்தன.
“ இது ஒருவகைப்பூச்சிக்கடியால் வருவது அந்தப்பூச்சிக்கு லெப்டோரொம்பீடியம் என்றுபெயர் அதைசிக்கர் என்றும் சொல்லுவார்கள்(Leptorombidium also known as chigger) மருத்துவ உலகில், என்றும் அந்தப்பூச்சி எலிவளைகளுக்கு அருகே கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் என்றும் பெரும்பாலும் அது லார்வா நிலையில் இருந்து வளரும்போது எலிகளைத்தான் தாக்கும் சில நேரங்களில் எலிகள் இல்லாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்து மனிதனையும் கடிக்கும். இது மனிதர்களைக் கடிக்கும்போது குறிப்பிட்ட சில இடங்களில் தான் கடிக்கும் அதவாது கைஅக்குள் தொடைஇணையுமிடம் கழுத்துப்பகுதி போன்ற இடங்களில் கடித்து உள்ளே சென்று இரத்தத்தில்கலந்து பின் ஹீமோகுளோபினை சாப்பிட ஆரம்பிக்கும். “ என்று தெரியவந்தது ””மேலும் சொல்லத்தொடங்கினாள்
””இப்போது பிரச்சனை தெரிந்துவிட்டது. மருத்துவம்?
 
அதுவும் பலவித கலந்தாய்வுகளுக்குப்பின் கிடைத்தது மருந்துகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்தது. கிட்டத்தட்ட 21 நாட்கள் சிகிச்சைக்குப்பின் சரியாகத் தொடங்கியது. நல்ல வேளையாக இது பரவும் நோய் அல்ல என்பது நிம்மதி. மேலும் லார்வா நிலை கடந்து பூச்சி ஆகிவிட்டால் அது இவ்வளவு பாதிப்பைத்தராது என்றும்,ஆராய்ச்சிகள் சொன்ன தகவல் நிம்மதி அளித்தது
இப்போது ஓரளவு சகஜ நிலைக்குத்திரும்பினார்கள் மூன்று நோயாளிகளும். அதற்கிடையில் அந்த பூச்சிகளை ஒழிக்கும்மருந்துகள் வரவழைக்கப்பட்டு அந்தப்பகுதிகளில் தெளிக்கப்பட்டன.அதன் பின் யாரும் பாதிக்கப்படவில்லை. இது பெரும்பாலும் மழைக் காலங்களில் வருவதாக அறியப்பட்டது
 
ஓரளவு சரியானபின்னே வீட்டுக்கு அனுப்பினார்கள் அப்போது சொன்னதுதான்இவை 1) தொடர்ந்து மருந்துகள் சாப்பிடவேண்டும்2) தனியாகப்பயணம் கூடாது 3)வண்டிகள் எதுவும் ஓட்டக்கூடாது 4) பாத் ரூமில்கூட தாப்பா போடக்கூடாது 5)மற்றவர் பார்வையிலேயே இருக்க வேண்டும். பொழைச்சது பெரும்பாடாப்போச்சுது ஏதோ வேண்டிக்கொண்ட சாமிகள் மருத்துவர் வடிவில் வந்துகாப்பாற்றின”” என்றாள்
இதைக்கேட்டவுடன் வந்தவர் கண்களில் நீர் வழியத்தொடங்கியது. “வெவரம் தெரியாம நான் கண்டபடி பேசிட்டேனே என்னை மன்னிப்பாயா” என்று கைகளைப்பிடித்துக்கொண்டு அழுதேவிட்டார்
அப்போது இவர் சொன்னார். “ பரவாயில்லை நடந்தது அறியாமல்தானே பேசினீர்கள் தவறில்லை”
‘’ என்ன இருந்தாலும் நான் அப்படிப்பேசி இருக்கக்கூடாது “என்று சொல்லும்போது அவர் கண்களில் இருந்து வழிந்தநீர் இவர் கைகளை நனைத்தது
 
அ.முத்துவிஜயன்
May be an image of 2 people and baby
 
 
 
 
All reaction
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பல சந்தர்ப்பங்களில் நாங்களும் அப்பிடித்தான், மற்றவர் நிலைமை தெரியாமல் பேசுவது.
பகிர்விற்கு நன்றி அக்கா.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.