Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காலப்போக்கில் மனித மூளை சுருங்கி வருவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜாஸ்மின் ஃபாக்ஸ் - ஸ்கெல்லி
  • பதவி, பிபிசி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தற்கால நவீன மனிதர்களின் மூளை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையைவிட 13% சிறியதாகிவிட்டது. காலப்போக்கில் மனித மூளை சுருங்கியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

மனித மூளை மற்ற உயிரினங்களின் மூளையைவிடப் பெரியது. இன்னும் சொல்லப்போனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு இந்த "பெரிய மூளை" என்று கருதப்படுகிறது. சிந்திக்கும் திறனும் கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்ளும் ஆற்றலும் இருப்பதால்தான் மனித இனத்தால் முதல் கலையை உருவாக்கவும், சக்கரத்தைக் கண்டுபிடிக்கவும், சந்திரனில் இறங்கவும் முடிந்தது.

உருவ அளவில் மனிதர்களோடு ஒத்துப்போகும் விலங்குகளுடன் ஒப்பிடும்போதும், மனிதர்களின் மூளை மிகப்பெரியதுதான். கடைசியாக, நமது இனம் சிம்பன்சிகள் உடன் பொதுவான மூதாதையரைப் பகிர்ந்துகொண்டு ஆறு மில்லியன் ஆண்டுகள் கடந்த நிலையில், மனித மூளையின் அளவு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அதேநேரம் ஆய்வுகளின்படி மனித இனத்தின் மூளை அளவு ஒரு கட்டத்துக்குப் பிறகு சுருங்கத் தொடங்கியது. கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில் சராசரி மூளை அளவுகள் சுருங்கிவிட்டன.

நியூயார்க் நகரத்தில் உள்ள அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பழங்கால மானுடவியல் நிபுணர் மற்றும் ஓய்வுபெற்ற அருங்காட்சியக கண்காணிப்பாளரான இயன் டாட்டர்சால், 2023ஆம் ஆண்டு, காலத்தின் அடிப்படையின் பண்டைய ஹோமினின்களின் (hominins - நவீன மனிதர்கள், அழிந்துபோன மனித இனங்கள் மற்றும் நமது உடனடி மூதாதையர்கள் அடங்கிய இனக்குழு) மூளையின் அளவை ஆய்வு செய்தார். அவர் பழமையான உயிரினங்களுடன் தொடங்கி, நவீன மனிதர்கள் வரை ஆய்வு செய்தார்.

ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதிலும் இருந்து வெவ்வேறு வகையான ஹோமினின் இனக்குழுக்கள் மத்தியில் மூளை அளவு தானாக அதிகரித்துள்ளதை அவர் கண்டறிந்தார். ஆய்வின்படி, ஆஸ்ட்ராலோபிதேகஸ் அஃபாரென்சிஸ் , ஹோமோ எரெக்டஸ், ஹோமோ ஹைடெல்பெர்கென்சிஸ் மற்றும் ஹோமோ நியன்டதாலென்சிஸ் ஆகிய இனங்களுக்கு காலப்போக்கில் மூளை அளவு அதிகரித்தது.

மனித மூளையின் அளவு அதிகரிக்கும் இந்தப் போக்கு, நவீன காலகட்டத்தில் தலைகீழாக மாறியது. கடந்த பனியுகம் (Ice age) காலத்தில் வாழ்ந்த ஹோமோ சேபியன்களின் மண்டை ஓடுகளைவிட இன்றைய ஆண் மற்றும் பெண்களின் மண்டை ஓடுகள் சராசரியாக 12.7% சிறியதாக உள்ளது.

"இன்றைய காலகட்டத்தில் வாழும் மனிதக் குழுக்களில் மண்டை ஓடுகளின் வடிவம் சற்று வித்தியாசமானது. எனவே ஆரம்பக்கால மனித மூளையை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் எளிதானது. மேலும் மனித இனத்தின் ஆரம்பக் கால மூதாதையர்களுக்கு மூளையின் அளவு மிகவும் பெரியதாக இருந்துள்ளதாகவும்," என்று டாட்டர்சால் கூறுகிறார்.

டாட்டர்சால் ஆய்வில் வெளியான கண்டுபிடிப்புகள் மற்ற ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறது. எடுத்துக்காட்டாக, 1934ஆம் ஆண்டில், இல்லினாய்ஸில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த ஜெர்மன் விஞ்ஞானியான ஜெர்ஹார்ட் வான் போனின் என்பவர், "கடந்த 10,000 - 20,000 ஆண்டுகளில் ஐரோப்பாவில் மனித மூளையின் அளவு குறைந்துவிட்டது. ஆய்வுகளில் இதற்கான உறுதியான சான்றுகள் உள்ளன," என்று குறிப்பிட்டுள்ளார்.

படக்குறிப்பு,`ஹோமோ நியாண்டர்தலென்சிஸ்’ போன்ற புதிய மனித இனங்கள் தோன்றியதால் மூளையின் அளவு மாறியது

மூளை அளவு சுருங்குவதை எப்படி விளக்குவது?

டாட்டர்சால் கூற்றுபடி, ``மனிதர்களின் மூளை அளவு சுருங்கும் நிலை சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியுள்ளது. அந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள் மிகவும் உள்ளார்ந்து சிந்திக்கும் பாணியிலிருந்து "குறியீட்டு தகவல் செயலாக்கம்”(symbolic information processing) என்னும் முறைக்கு மாறினர். அதாவது மனிதர்கள் சுற்றி உள்ளவற்றைப் புரிந்துகொள்ள ஆழமாகச் சிந்திக்காமல், சுருக்கமான வழியில் சிந்திக்கத் தொடங்கினர்.

மனிதர்கள் அர்த்தமுள்ள வடிவியல் படங்களைக் கொண்ட சித்திரங்களையும் குறியீட்டு கலைப்பொருட்களையும் உருவாக்கத் தொடங்கிய காலம் அது. என்னைப் பொறுத்தவரை மனிதனின் சிந்தனை பாணியில் இந்தப் பெரும் மாற்றம் நிகழ முக்கியக் காரணமாக இருந்தது `மொழி’யின் கண்டுப்பிடிப்புதான். மொழிப் பயன்பாடு, மூளையின் நரம்பியல் பாதைகளில் திறன் வாய்ந்த வளர்சிதை மாற்றங்களுடன் ஒழுங்கமைக்கப் படுவதற்கு வழிவகுத்தது. இது மனிதர்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்க வழிவகுத்தது."

இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், சிறிய அளவிலான சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட மூளைகள் மிகவும் சிக்கலான கணக்கீடுகளைச் செய்தது. வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் பெரிய இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெரிய மூளை வெறுமனே தேவையற்றதாக மாறியது.

"அநேகமாக நமது முன்னோர்கள் ஒரு தகவலை `முரட்டுத்தனமான’ முறையில் செயலாக்கியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நமது சிந்தனை முறை அவர்களிடம் இருந்து வேறுபட்டது. நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைச் சுருக்கக் குறியீடுகளாக மாற்றி அதை வைத்து சொற்களஞ்சியமாக மறுகட்டமைத்து வைத்துவிட்டோம். எனவே ஒரு தகவலைச் செயலாக்கம் செய்ய இந்தக் குறியீடுகளை நினைவில் நிறுத்திப் புரிந்துகொள்ள முற்படுகிறோம்."

"இந்த வகையான குறியீட்டு சிந்தனை முறைக்கு, முன்பு இருந்ததைவிட மூளைக்குள் மிகவும் சிக்கலான இணைப்புகள் தேவைப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கூடுதல் சிக்கலான இணைப்புகள் மூளையை மிகவும் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட அனுமதித்தது என்பது என் புரிதல்," என்று டாட்டர்சால் விளக்கினார்.

இருப்பினும், சில பழங்கால ஆராய்ச்சியாளர்கள் கூற்றுபடி, டாட்டர்சால் ஆய்வு குறிப்பிட்ட காலகட்டத்தைக் காட்டிலும், மனித மூளை சுருங்கும் நிலை மிகவும் சமீப காலமாகத்தான் தொடங்கியது என்று புதைபடிவ பதிவு காட்டுகிறது, அதாவது மூளை அளவு மாற்றத்தை மொழியுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடியாது என்கின்றனர். டாட்டர்சால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மொழி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதிலும் முரண்பாடுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கலிபோர்னியாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அறிவாற்றல் விஞ்ஞானி ஜெஃப் மோர்கன் ஸ்டிபெல் கூறுகையில், "இந்தக் கோட்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது, இது உண்மையில் புத்திசாலித்தனமானது என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மூளை அளவில் மாற்றம் ஆரம்பமானது என்பதைக் காட்டக்கூடிய எந்தத் தரவுகளையும் நாங்கள் பார்க்கவில்லை, அந்த ஆய்வின்படி ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறியது என்று சொல்வது சரியல்ல, அந்த ஆய்வின்படி மூளையின் அளவு சுருங்குகிறது, மீண்டும் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே அவரின் கருத்துகளுடன் தரவுகள் ஒத்துப் போகவில்லை, பொருந்தவில்லை,” என்கிறார் ஸ்டிபெல்.

மேலும் ஸ்டிபெல்லை பொறுத்தவரை, மூளை அளவின் மாற்றம் நிகழ்வதற்கு மொழி காரணம் அல்ல, மாறி வரும் காலநிலைதான் (climate) காரணம்.

ஸ்டிபெல் 2023ஆம் ஆண்டு ஆய்வில், கடந்த 50,000 ஆண்டுகளில் வாழ்ந்த 298 மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். கடந்த 17,000 ஆண்டுகளாக மனித மூளை சுருங்கி வருவதை அவர் கண்டறிந்தார் - கடந்த பனி யுகத்தின் முடிவில் இருந்து இது தொடங்கியது. அதேநேரம் அவர் காலநிலை மாற்றங்களையும் கவனமாக ஆய்வு செய்தார், மூளை அளவு சுருங்குவது, காலநிலை வெப்பமயமாதல் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருப்பதைக் கண்டறிந்தார்.

"நான் கண்டறிந்தது என்னவெனில், வெப்பமான காலநிலையில் மனிதர்களின் மூளை அளவு சுருங்குகிறது மற்றும் குளிர்ந்த காலநிலையில் மனித மூளை பெரியதாக இருந்திருக்கிறது," என்று ஸ்டிபெல் கூறுகிறார்.

வெப்பமான சூழலில் மூளை அளவு சிறிதாக இருந்தால் மனிதர்களின் உடல் விரைவாகக் குளிர்விக்க அனுமதிக்கும். வெப்பமான காலநிலையில் உள்ள மனிதர்கள் உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த மெலிந்த மற்றும் உயரமான உடல்களைக் கொண்டிருப்பர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நமது மூளையும் இதே பாணியில் உருவாகியிருக்கலாம்.

"இன்றைய காலகட்டத்தில் நாம் இருக்கும் சூழல் வெப்பமாக இருந்தால், அதைத் தணிக்க டி-ஷர்ட்டை அணியலாம், நீச்சல் குளத்தில் குதிக்கலாம் அல்லது ஏர் கண்டிஷனர் பயன்படுத்தலாம். ஆனால் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் இருந்திருக்காது. மனித உடலே வெப்பத்தைத் தகவமைத்துக் கொள்ள ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கும்" என்று ஸ்டிபெல் விளக்குகிறார்.

"அனைத்து உறுப்புகளைக் காட்டிலும் மூளை மிகப்பெரிய ஆற்றல் கலன். ஏனெனில் அது நமது உடல் எடையில் 2% எடையை ஆக்கிரமித்துள்ளது. ஓய்வில் இருக்கும் வளர்சிதை மாற்ற ஆற்றலில் 20%க்கும் மேல் மூளை பயன்படுத்துகிறது. எனவே, ஆற்றல் மற்றும் வெப்பத்தை நமது மூளை மிகப் பெரியளவில் நுகர்கிறது என்றால், அதன் அளவு காலநிலைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சிறிய மூளைகள் வெப்பத்தைச் சிறப்பாகக் கையாள்கின்றன. மேலும் உடலின் வெப்பத்தைக் குறைக்கும்.

இன்றைய சூழலில் வேகமாக வெப்பமயமாதல் நிகழ்கிறது. இது நமது மூளையை மேலும் சுருங்கச் செய்யும் என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன,” என்றார்.

பட மூலாதாரம்,GETTY

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்களின் எழுச்சி

படக்குறிப்பு,மிகவும் மேம்பட்ட திறன் கொண்ட சமூகங்களின் வருகை - மற்றும் சுமேரியன் போன்ற எழுத்து மொழிகளின் கண்டுபிடிப்பு - மூளையின் அளவு சுருங்குவதற்கு காரணமாக இருக்கலாம்

மனிதர்களின் மூளை சுருங்கி வருவதை விளக்குவதற்கு முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான கோட்பாடு நம் தொழில் சார்ந்ததுதான். நமது முன்னோர்கள் வேட்டையாடும் தொழிலை நிறுத்தி, வேர்களை ஊன்றி, மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட சிக்கலான சமூகங்களை உருவாக்கத் தொடங்கியபோது, மூளை அளவிலும் மாற்றம் நிகழ ஆரம்பித்தது.

கடந்த 2021ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள டார்ட் மவுத் கல்லூரியின் மானுடவியலாளர் ஜெர்மி டிசில்வா வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த மண்டை ஓடு படிமங்களை ஆய்வு செய்தார்.

அவர் `மியோசீன் ஹோமினிட் ருடாபிதேகஸ்’ (9.85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்) முதல் நவீன மனிதர்கள் (300,000 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனம்) வரையிலான மண்டை ஓடு படிமங்களை ஆய்வு செய்தார்.

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் தொடங்கிய அதே நேரத்தில் நமது மூளை சுருங்கத் தொடங்கியது என்று அவர் கண்டறிந்தார் (பின்னர் தனது மதிப்பீட்டைத் திருத்தி, 20,000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு மூளை அளவு சுருங்க ஆரம்பித்தது என்றார்).

டிசில்வா கூற்றுபடி, ``மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் மற்றும் பேரரசுகளின் பிறப்புக்குப் பின்னர், அறிவும் பணிகளும் பரவலாக அனைவராலும் பகிரப்பட்டன. மக்கள் இனி எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை, அதேநேரம் தனிநபர்கள் இனி உயிர்வாழ அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை, எனவே அவர்களின் மூளை அளவு குறைந்தது,” என்றார்.

இந்தக் கோட்பாடும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் மாறியது போல அனைத்து வேட்டையாடும் சமூகங்களும் மாறவில்லை. ஆனால் இந்தச் சமூகங்களிலும் மூளையின் அளவுகள் சுருங்கின" என்கிறார் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஈவா ஜப்லோங்கா. இவர் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் கோன் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஹிஸ்டரி ஆஃப் சைன்ஸ் அண்ட் ஐடியாஸ் துறையில் பணியாற்றியவர்.

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமா?

மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் தோன்றியபோது மூளை சுருங்க தொடங்கியிருந்தாலும், இது ஒரு தகவமைப்பு எதிர்வினையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று ஜப்லோங்கா கூறுகிறார்.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய மேம்பட்ட சமூக அமைப்புகளைக் கொண்ட மனித நாகரிகங்கள் தோன்றியிருந்தால், மூளை சுருங்கியதை சமூக வர்க்கங்களில் உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளுடன் தொடர்புபடுத்தலாம். அதாவது வர்க்க வேறுபாட்டின் விளைவாகப் பெரும்பான்மையான மக்கள் ஏழைகளாக இருந்தால், வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதுபோன்ற விஷயங்கள் மூளை அளவைப் பாதித்திருக்கக்கூடும்.”

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மனித பரிணாம ஆய்வுகளுக்கான லெவர்ஹுல்ம் மையத்தைச் சேர்ந்த மார்டா லஹர், நமது மூளை சுருங்குவதை ஊட்டச்சத்துக் குறைபாடுடன் தொடர்புபடுத்த முடியும் என்கிறார்.

கடந்த 2013ஆம் ஆண்டில், அவர் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். மிகப்பெரிய மூளை கொண்ட ஹோமோ சேபியன்கள் 20,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், மனித மூளை 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சுருங்கத் தொடங்கியது என்றும் அவர் கண்டறிந்தார்.

இந்தக் காலக்கட்டத்தில்தான் நம் முன்னோர்கள் வேட்டையாடுவதை நிறுத்திவிட்டு விவசாயத்திற்கு மாறியதாகக் கருதப்படுகிறது. விவசாயத்தை நம்பியிருப்பது வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறையை உருவாக்கியிருக்கலாம். இதன் விளைவாக வளர்ச்சி குன்றியிருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.

இதற்கிடையில், சில விஞ்ஞானிகள் சுயமாக வீடுகளில் வளர்வதன் (self-domestication) விளைவாக மனித மண்டை ஓடு சிறியதாகிவிட வாய்ப்பிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்களின் கூற்றுபடி, நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற வளர்ப்பு இனங்கள் அவற்றின் மூதாதையர்களைவிட 10-15% சிறிய மூளையைக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில், வீடுகளில் சுய வளர்ப்பு முறையின் விளைவாக மனித மண்டை ஓடுகள் சிறியதாக இருப்பதாக முன்மொழிந்தனர். ஆனால் இந்தக் கோட்பாட்டில் பல விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை இல்லை.

"சுய வளர்ப்பு’ (self-domestication) கோட்பாட்டை நான் ஏற்கவில்லை" என்கிறார் ஜப்லோங்கா.

"சுய வளர்ப்பு மூலம் மூளை சுருங்குவது நிகழ்ந்திருந்தால், 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்க வேண்டும், மேலும் அந்த நேரத்தில் மனித மூளை சுருங்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை."

மனித மூளை

பட மூலாதாரம்,GETTY IMAGES

துரதிர்ஷ்டவசமாக, மூளை ஏன் சுருங்கியது என்பதைப் புரிந்து கொள்ள, அது எப்போது தொடங்கியது என்பதை நாம் சரியாகக் குறிப்பிட வேண்டும். ஆனால் புதைபடிவ பதிவுகள் இதைக் கிட்டத்தட்ட சாத்தியமற்ற பணியாக ஆக்குகிறது. பழைய புதைபடிவங்களைக் கண்டுபிடிப்பது கடினம், எனவே ஆய்வுகள் சமீப கால மாதிரிகளை வைத்து முடிவுக்கு வருகிறது. சில பண்டைய கால மனித குழுக்களின் மண்டை ஓடுகள் சரியாகப் பாதுகாக்கப்படாத காரணத்தால் மோசமான நிலையில் உள்ளன. எனவே மூளை அளவு சுருங்கும் நிலை ஆரம்பமானதைத் துல்லியமாக கண்டுப்பிடிக்க இயலவில்லை.

டாட்டர்சால் கூற்றுபடி "ப்ளீஸ்டோசீனில் (Pleistocene), மனித மூளை நியண்டர்தால் மனித இனத்தின் மூளை அளவைப் போலவே இருந்தது, இது இன்றைய மனித மூளையின் சராசரி அளவைவிட சற்று பெரியது.

சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அனைத்து மனித இனங்களின் மூளை அளவின் சராசரியும் அதிகமாக உள்ளது. ஆனால் அளவு குறைவது எப்போது தொடங்கியது என்பது முற்றிலும் தெளிவாக இல்லை, ஏனெனில் புதைபடிவங்களும், ஆய்வு பதிவுகளும் தெளிவாக இல்லை. எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் முன்னர் மூளை பெரியதாக இருந்தது, இன்று அவை 13% சிறியதாக உள்ளன," என்கிறார்.

புத்திசாலித்தனம் குறைந்துவிட்டதா?

மூளை சுருங்குகிறது என்றால், மனித அறிவும் சுருங்கி வருகிறதா? நீங்கள் எந்தக் கோட்பாட்டை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும், சிறிய மூளை நம்மை புத்திசாலியாக மாற்றும் அல்லது புத்திசாலித்தனத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

மூளை அளவு அனைத்தையும் நிர்ணயம் செய்யாது என்பது உண்மைதான். ஆண்களின் மூளையானது பெண்களின் மூளையைவிட 11% பெரியது. இதற்கு இருபாலரின் ஒட்டுமொத்த உடல் அளவு காரணமாகk கூறப்படுகிறது. இருப்பினும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான அறிவாற்றல் திறன்கள் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.

ஹோமோ ஃப்ளோரெசியென்சிஸ் மற்றும் ஹோமோ நலேடி போன்ற சிறிய மூளை அளவுடைய ஹோமினின் மனித இனங்கள், மேம்பட்ட திறன் கொண்டவை என்பதற்கான சில சர்ச்சைக்குரிய சான்றுகள் உள்ளன. மூளை எவ்வாறு இணைப்புகளால் உருவாக்கப்படுகிறது என்பதே புத்திசாலித்தனத்தின் அளவீடு.

“நமது மூளையின் அளவு கணிசமாகக் குறைந்து வருகிறது என்பது, அதிக நுண்ணறிவுக்கான நமது திறன் சுருங்குகிறது, அல்லது குறைந்தபட்சம் வளரவில்லை என்ற தர்க்கரீதியான முடிவை அளிக்கிறது."

"இருப்பினும், கடந்த 10,000 ஆண்டுகளாக நம் அறிவாற்றலை பயன்படுத்தி கலைப் பொருட்களை உருவாக்க கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளோம். கணினிகளில் தகவல்களைச் சேமித்து, நமக்கான விஷயங்களைக் கணக்கிட இயந்திரங்களைப் பயன்படுத்துகிறோம். எனவே நமது மூளையின் நுண்ணறிவுத் திறன் குறைவாக இருக்கலாம். அதற்காக, நாம் ஓர் இனமாகக் குறைந்த புத்திசாலித்தனத்துடன் வளர்கிறோம் என்று அர்த்தம் இல்லை," என்கிறார் ஸ்டிபெல்.

https://www.bbc.com/tamil/articles/c722w8jdgwpo

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

இன்று புதிது புதிதாக வரும் கம்யூட்டர் processor எல்லாம் முன்னிருந்தவையை விட சின்னதாகவும், ஆனால் வினைத்திறன் அதிகமாக இருப்பவையாகவும் வருகின்றன. அப்படித் தான் மனித மூளைக்கும் நடந்து கொண்டிருக்குதோ என்று நினைத்த படியே கட்டுரையை வாசித்தால்.......... மூளையின் அளவு மட்டும் குறையவில்லை, மூளையின் வினைத்திறனும் குறைந்து கொண்டே வருகின்றது என்றும் சில ஆராய்ச்சிளார்கள் சொல்லியிருப்பது கொஞ்சம் ஏமாற்றமாகப் போய்விட்டது.....

மூளையின் அளவு சிறிதாவற்கு  Climate Change ஒரு காரணமாக இருக்கலாம் என்பது உண்மையாகக் கூட இருக்கலாம், ஆனாலும் எல்லாவற்றுக்கும் அதையே ஒரு காரணமாக சொல்வது சில வேளைகளில் ஒரு பகிடியாகவும் தெரிகின்றது.....😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.