Jump to content

கதிர்காம காட்டுப்பாதை திறக்கும் திகதியில் மாற்றம் : குழப்பத்தில் யாத்திரிகர்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 JUN, 2024 | 03:55 PM
image

கதிர்காமம் ஆலயத்தின் ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆலயம் நோக்கிய பாத யாத்திரையினை மக்கள் தற்போது ஆரம்பித்துள்ளனர். 

எதிர்வரும் 30ஆம் திகதி லாகுகல பிரதேச செயலாளர் பகுதியில் அமைந்துள்ள உகந்தை காட்டுப்பாதை பக்தர்களுக்காக திறக்கப்பட்டு, ஜூலை 11ஆம் திகதி மூடப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (07) உகந்தை முருகன் ஆலயத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, கதிர்காமம் ஆலயத்தில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட கூட்டத்தில் உகந்தை காட்டுப்பாதை திறக்கும் திகதி பிற்போடப்பட்டு, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்பட்டு, 14ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட சேவற்கொடியோன் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டபடி, 30ஆம் திகதியினை கருத்திற்கொண்டு பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிலையில், இந்த திகதி மாற்றமானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.  

காட்டு வழியாக பாதயாத்திரை மேற்கொள்ள தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கால எல்லை போதாமல் உள்ளதாகவும் சமூக அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 2024.07.06 அன்று கதிர்காம கொடியேற்றம் நடைபெற்று, 22ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் கதிர்காமம் ஆலய உற்சவம் நிறைவடைகிறது.

காட்டுப்பாதை திகதி மாற்றங்கள் தொடர்பில் லாகுகலை பிரதேச செயலாளர் நவேந்திரராஜா நவநீதராஜா கருத்து தெரிவிக்கையில், கதிர்காம உற்சவம் தொடர்பான கூட்டங்கள் மூன்று கட்டமாக இடம்பெறும் என குறிப்பிட்டார்.

அதன்படி, முதலாம் கட்ட கூட்டமானது கதிர்காமத்தில் இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவிக்கப்படும் கால எல்லைக்குள் காட்டுப்பாதை திறந்து மூடப்படும் கால எல்லை மற்றும் ஏனைய விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

அதன் பின்னர், அம்பாறை மாவட்ட ஆரம்ப கட்ட கூட்டம் உகந்தையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடத்தப்பட்டு கதிர்காமத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கருத்துக்கள் பெறப்படும். மூன்றாம் கட்டமாக, உகந்தையில் விளக்கமளிக்கப்பட்ட முடிவுகள் கதிர்காமத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்ட இறுதிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர், இவ்வருடத்துக்கான இறுதி முடிவுக்கான கூட்டம் கடந்த 12 ஆம் திகதி கதிர்காமத்தில் நடத்தப்பட்டபோது,  பாதயாத்திரைக்கான உகந்தை காட்டுப்பாதை  எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி திறக்கப்பட்டு, ஜூலை 14ஆம் திகதி பூட்டப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லாகுகல பிரதேச செயலாளர் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/185989

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப் பாதையை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது - செந்தூரன்

Published By: DIGITAL DESK 7

16 JUN, 2024 | 06:11 PM
image
 

கதிர்காம பாத யாத்திரையின்போதான காட்டுப் பாதைய‍ை திறக்கும் தினத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணசேனை அமைப்பின் தலைவரும் திருக்கோணேசர் பாத யாத்திரை குழுவின் வேல்சாமியுமான செந்தூரன் தெரிவித்தார். 

திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவசரமாக சென்று யாத்திரை கடமைகளையும் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்ற முடியாது  என்றும் பக்தர்களின் வருகையை இது குறைக்கும் செயலாகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் கூறுகையில், 

பண்டைய காலம் தொடக்கம் மரபு ரீதியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. நேர்த்திக்கடனுக்காக சிறுவர்கள் முதல் பெரியோர், கர்ப்பிணித் தாய்மார்கள் என உகந்தை முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கம். ஆனால், தற்போது அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை பிற்போட்டிருப்பதும் குறுகிய காலத்தில் செல்லவைப்பதும் யாத்திரிகர்களை தடுக்கும் செயலாக காணப்படுகிறது.

சிங்களவர்கள், தமிழர்கள் என பலரும் கதிர்காம யாத்திரை மேற்கொள்வது வழக்கம். இது ஈழத்து சைவர்களின் வாழ்வியலில் ஒன்றாக காணப்படுகிறது.

நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்துவது தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதில், கடினமான பாதை வழியே காடுகள் ஊடாக செல்ல வேண்டும்.

இந்த மாதம் 30ஆம் திகதி திறக்கப்படவிருந்த பாதையின் திறப்பு நாள் பிற்போடப்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்குள் பாத யாத்திரையை நிறைவேற்றுவது கடினம்.

இதனால் பல்லாயிரக்கணக்கான பாத யாத்திரை குழுக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். வழமை போன்று இந்த பாத யாத்திரை நடைபெற வேண்டும். எனவே, உரிய அரச தரப்பினர் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/186215

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமம் காட்டுப்பாதை திறக்கப்பட்டது; காட்டுவழிப் பாத யாத்திரையை ஆரம்பித்தனர் பக்தர்கள்!

30 JUN, 2024 | 11:21 AM
image
 

கதிர்காமம் முருகன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடியேற்றத்தினை காண காட்டுப்பாதை வழியாக மக்கள் இன்று (30) காலை பாத யாத்திரையை தொடங்கினர்.

பக்தர்களுக்கான லாகுகலை உகந்தை காட்டுப் பாதையின் கதவானது, உகந்தை முருகன் ஆலயத்தில் இன்று காலை 6.00 மணியளவில்  நடைபெற்ற சிறப்பு வழிபாட்டினை தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்துவைக்கப்பட்டது.

பாத யாத்திரீகர்களுக்காக பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார அமைச்சு, பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மேற்பார்வையுடன் மருத்துவம், நீர் வழங்கல், தங்குமிடம் மற்றும் சுகாதார வசதிகளும் ஆளுநரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக்க அபேவிக்ரம உள்ளிட்ட குழுவினர் இதன்போது கலந்துகொண்டனர்.

அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் தங்களது காட்டுவழிப் பயணத்தினை இன்று ஆரம்பித்தனர்.

மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் கதிர்காம உற்சவம் 2024.07.22 அன்று தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.

அத்துடன் இன்று திறக்கப்பட்ட கதிர்காமம் காட்டுப்பாதை எதிர்வரும் 2024.07.11 அன்று மூடப்படும்.

kadupathai33.jpg

kadupathai1.jpg

kadupathai55.jpg

https://www.virakesari.lk/article/187294

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் மேல் மோசடி செய்த உக்ரைன் (Ukraine) பிரஜைகள் இருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேபர்கள் இருவரும் தனியார் வங்கி ஒன்றின் ஆண்டு நிறைவுக்கு பரிசுகள் தருவதாக முகப்புத்தகத்தில் விளம்பரம் செய்து இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விளம்பரத்தைப் பார்த்து இணைப்பை உள்ளிடுபவர்களின் வங்கிக் கணக்குத் தகவல் உட்பட பல தனிப்பட்ட தகவல்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும். கைது நடவடிக்கை இவ்வாறு பிரவேசிக்கும் நபர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்ட பணத்தை ஒரு குழுவினர் மோசடி செய்து செல்வதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் உனவடுன பிரதேசத்தில் இருந்து இது தொடர்பான மோசடி இடம்பெறுவதை கண்டுபிடித்துள்ளனர். விசாரணை அதிகாரிகள் அங்கு சென்று 2 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற உத்தரவு கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த நாட்டுக்கு வந்துள்ள இவர்கள், டெலிகிராம் குழு ஒன்றின் ஊடாக இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இன்று (28) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். https://ibctamil.com/article/ukrainians-arrested-for-money-laundering-gifts-1727533926?itm_source=parsely-api#google_vignette
    • களுத்தரா....,  மாத்தரா...., குருனிகலா...., கல்லே.... 😂
    • காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கை காட்டினால் மட்டுமே ஜனாதிபதி உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததாக கூற முடியும் - வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் 28 SEP, 2024 | 03:37 PM ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என்று வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா தெரிவித்தார். இன்று (28) தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு தாக்குதலாலும் உடல் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.  மேலும், இறுதி யுத்தம் முடிவடைந்த  நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்போது  தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா? இவர்களுக்கு என்ன நடந்தது? கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளுக்கே யுத்தத்தை நடாத்திய பொறுப்பு இருக்கிறது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக் கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது. தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்த வகையில் எமக்கான மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி நெறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம். குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள் சர்வதேச நீதிப் நெறிமுறைக்காகவே இதுவரை போராடிக்கொண்டிருக்கின்றோம்.  300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல் போராடிக்கொண்டிருந்த தாய், தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின் ஏக்கத்துக்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோளினை விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளம் குழந்தைகளையும், பாடசாலை மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும் தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை  உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே, சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதியன்று வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.  அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக காலை 10 மணிக்கு இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை. எனவே, எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும் நம்பவில்லை.  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக  ஜனாதிபதியாக பதவியேற்க முன்னர் குறிப்பிட்டிருந்தார்.  குறிப்பாக, சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும். எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே, புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/194991
    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.