Jump to content

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா, 17ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 JUN, 2024 | 12:24 PM
image

(எம்.நியூட்டன்)      

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா மற்றும்  17ஆவது சர்வதேச மாநாடு  நேற்று வெள்ளிக்கிழமை (14) யாழ்ப்பாணம் தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.  

4வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு நினைவாலயத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு பண்பாட்டுக் குழு வரவேற்புடன் விழா அரங்கிற்கு பேராளர்கள் அழைத்து வரப்பட்டனர். 

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்  நிகழ்வில் சர்வதேச மாநாட்டிற்கான நூல் வெளியிடப்பட்டது.  

நினைவு சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில்   மதத்தலைவர்கள், புதுவைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பாஞ். இராமலிங்கம், லண்டனை சேர்ந்த அமுது இளஞ்செழியன் வி ஐ டி பல்கலைக்கழகம் நிறுவநர் - வேந்தர், முனைவர் ஜி.விசுவநாதன் அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர், பேராசிரியர் இரா. வேல்ராஜ்,  வைத்தியர்  பகீரதன் அமிர்தலிங்கம் துணைத் தலைவர் IMTC இலண்டன், மாவை சோ. தங்கராஜா, ஆலோசகர், IMTC, ஜெர்மனி   வவுனியா பல்கலைக்கழக தூணைவேந்தர் பேராசிரியர் த. மங்களேஸ்வரன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எ. இளங்கோவன்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை  சோ.சேனாதிராஜா, எம்.கே சிவாஜிலிங்கம் யோகேஸ்வரன்  மற்றும் இலங்கை  இந்தியா, மலேசியா என கல்வியலாளர்கள் முதல்நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் மாநாட்டு புத்தக வெளியீடு மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றதுடன் மூன்று நாட்கள் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

20240614_170139.jpg

20240614_161658.jpg

20240614_170346.jpg

20240614_161737.jpg

20240614_161658.jpg

20240614_163236.jpg

https://www.virakesari.lk/article/186117

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக, உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்; அருட்பணி அருட்செல்வன்!

17 JUN, 2024 | 02:25 PM
image

( எம்.நியூட்டன்)

இளைய தலைமுறையினரை தமிழ்மொழியின் பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும், தமிழர்கள் போரில்  தேற்றுப்போன இனம் என்று  கருதப்பட்டாலும் நாம் தோற்றுப்போன இனம் இல்லை என அருட்பணி அருட்செல்வன் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொன்விழா வின் 17ஆவது சர்வதேச மாநாடு  அண்மையில்  யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது இந் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,  

நான் தமிழன், எங்கள் மொழி தமிழ்மொழி, தமிழ் இனத்தவன் என்கின்ற மாபெரும் சமூகத்திலே நாங்கள் நீந்திக்கொண்டிருக்கின்றோம்.

தமிழ் என்று சொல்லும்போது மொழியின் தொன்மை, பண்பாட்டு சிறப்புகள் நாங்கள் ஏற்றுக்கொள்வதன் மூலம் நாங்கள் தமிழனாக இந்த உலகிலே  பூமி பந்தில் பிறந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம் .

இங்கு பல மொழியியலாளர்கள், ஆராட்சியாளர்கள் கூட தமிழ் மொழியில் சிறப்பியல்புகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நிலையிலே எம் இனம் தோற்றும் போன இனமாக பேரினிலே போராட்டத்திலே  அழிவுகளைச் சந்தித்து நாங்கள் ஒடுக்கப்பட்ட தோற்றுப்போன விழிம்பிலே இருக்கிற இனமாக பார்க்கப்பட்டாலும், கருதப்பட்டாலும் நாங்கள் பண்பாடு சார்ந்த வாழ்வியலில் தோற்றுப் போன மக்கள் இனம் இல்லை மொழியினுடைய விசாலமான செழுமை சார்ந்து தோற்றுப்போன இனம் இல்லை அதனால்  எங்களுக்கென்று கடமை பொறுப்பு இன்றும் அதிகமாகவே இருக்கின்றது.  

எங்களுக்குள்  தமிழ் அறிஞர்கள் இருக்கின்றோம் , தமிழ் ஆராச்சியாளர்களாக இருக்கின்றோம் பெருமைக்குரிய விடையம் ஆனால் அதனையும் கடந்து எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் தமிழ் உணர்வு அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். 

அதுதான் இன்றைய  காலத்தின் தேவையாகவும் காலத்தின் அவசர அழைப்பாகவும் இருக்கின்றது தமிழன் என்று பேசலாம் ஆனால் தமிழர் உணர்வு  என்கின்ற அந்த உள் உணர்வு தீயாகப் பற்றி எரியவேண்டும் தமிழன் என்று  நாங்கள் பெரியளவில் பேசி தம்பட்டம் அடிக்கக முடியாத நிலைக்கு எங்களின் கைகள் கால்கள் கட்டப்பட்டுள்ளன. 

ஆனாலும் ஏங்களின் உணர்வுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது எங்களிடம் இருக்கின்ற அந்த தமிழ் எண்ணங்களை தமிழ் சார்ந்த விழுமியங்களை தமிழ் சார்ந்த பண்பாடுகளை நாகரீகங்களை யாராலும  அழித்து விடமுடியாது ஆகவே இந்த பண்பாடு சிந்திக்க தோன்றுகின்றது. 

 ஒரு கட்டத்திலே தமிழ் பண்பாடுகளை கட்டிக் காக்கின்ற பாதுகாவலர்களாக இருந்தாலும் எங்களுக்கு என்று  தமிழ் உணர்வாளர்கள்  இருக்கின்ற பண்பாடு இருக்கின்றது என்கின்ற எண்ணங்களில் இருந்து ஒரு போது விலக முடியாது . 

எங்களின் பண்பாட்டை எண்ணெய்யும் தண்ணீராயும் கலக்கமுடியாதே அதே போன்று தாமரை இதழிலே விழுகின்ற தண்ணீர் துளி அதனனூடு சேர்ந்து கொள்ளாதோ ஓடும் புளியம் பழமும் போன்று இருப்பது போன்று நாங்கள் தனித்துவமான அதற்காககத்தான் நாங்கள் இந்தப் பண்பாட்டை எங்களின் தமிழ் மொழியின் சிறப்புக்களை நாங்கள் கண்டு பிடிக்க முனைவது போன்று இளைய தலைமுறையினரை    பற்றாளர்களாக உணர்வாளர்களாக வளர்க்க வேண்டும்  என்றார்.

https://www.virakesari.lk/article/186270

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.