Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'உறக்கம்'
 
 
இன்று நடைமுறையில் கூடுதலாக sleep என்ற பொருளில் பாவிக்கப்படும் சொல்களான 'தூங்குதல்', 'தூக்கம்', 'நித்திரை' போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காணமுடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சம்ஸ்கிருதச் சொல் 'nidra' ['निद्रा'] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு 'உறக்கம்', 'துயில்', 'துஞ்சுதல்' போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
 
மார்ச் 15 - 'உலக உறக்க தினம்" எல்லா நாடுகளிலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு நாள் நம்முடைய அவசர வாழ்க்கையில் நாம் பகுதியாக நிராகரிக்கும் அல்லது தள்ளி போடப்படும் உறக்கத்தின் முக்கியத்தை எல்லோர் காதிலும் உரக்கச்சொல்ல இது ஒரு அரிய வாய்ப்பாக எமக்கு அமைகிறது.
 
1886 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் எட்டு மணித்தியால வேலை கட்டுப்பாட்டை கோரி வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப் பட்டது, அவர்களின் முதன்மை முழக்கம் "எட்டு மணித்தியால வேலை, எட்டு மணித்தியால உறக்கம், எட்டு மணித்தியாலம் உங்கள் தேவைக்கு". இது ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் உறங்க வேண்டும் என்பதை மேலோட்டமாக வரையறுக்கிறது.
 
அவ்வகையில், நாம் உறக்கத்துக்கு கால் வாசியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மனித ஆயுட்காலத்தை பாவிக்கிறோம். பொதுவாக மனதையும் உடலையும் மூடும் காலமாக நாம் உறக்கத்தை நினைக்கிறோம். ஆனால், உறக்கத்தைப் பற்றி சரியாக அறிவதற்கு, உண்மையில் அப்பொழுது என்ன நடக்கிறது என்பதை நாம் கொஞ்சம் விரிவாக பார்க்கவேண்டும்.
 
1950 ஆம் ஆண்டுக்கு முன்பு உறக்கம் என்பது உயிர்ப்பற்ற பணி அல்லது செயலற்று இருக்கும் காலம் என்றே பலர் நம்பினர். இதன் போது உடலும் மூளையும் செயலற்றதாக இருப்பதாகவும் கருதினர். அதனால் தான் திருவள்ளுவர் கூட "துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்" என்று கூறிச் சென்றார். ஆனால் இது உண்மையல்ல.
 
இது எதோ சில செயல்களில் உள்ள காலமே. உதாரணமாக, முக்கியமான, உயிர் வாழ்வுக்கு தேவையான, பல செயலாக்கம், மறுசீரமைப்பு, மற்றும் பலப்படுத்துதல் அப்பொழுது ஏற்படுகிறது - இவை வாழ்க்கை தரத்துடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. அது மட்டும் அல்ல இவை மனம் மற்றும் உடல் நலத்தை பாதிக்கக் கூடியவையும் ஆகும்.
 
உறக்கத்தைப் பற்றிய ஆய்வாளர்களின், எமக்கு ஆச்சரியம் தரும் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் சுருக்கமான கண்ணோட்டத்தையும், இன்னும் எதை அறிய ஆய்வுகள் செய்கிறார்கள் என்பதையும் கீழே பார்ப்போம்
 
எல்லா உறக்கமும் ஒரே மாதிரி அல்ல
 
உதாரணமாக, நீங்கள் உறங்கும் நேரம் முழுவதும், உங்கள் மூளை மீண்டும் மீண்டும் இரண்டு வெவ்வேறு உறங்கு நிலைக்கூடாக சுழற்சிக்கு உள்ளாகிறது. அவை விரைவு அற்ற விழியியக்க நிலை மற்றும் விரைவு விழியியக்க நிலை [non-REM sleep and REM (rapid-eye movement) sleep] ஆகும். இதில், மனித உடல் உறங்கும் பொழுது , முதலில் வருவது விழி அசைவற்ற உறக்கம் ஆகும். அவை நாலு நிலைகளைக் கொண்டது.
 
இதனின் முதல் நிலை நீங்கள் உறங்கிய உடனேயே நிகழ்கிறது. இது விழித்திருப்பதுக்கும் உறக்க நிலைக்கும் இடைப்பட்டது. எனவே இது மிகவும் குறுகிய கால அளவைக் கொண்டது. இரண்டாவது நிலை லேசான உறக்கத்தை உள்ளடக்கியது. இங்கு இதய துடிப்பு மற்றும் சுவாசம் சீராவதுடன் உடல் வெப்பமும் வீழ்ச்சி அடைகிறது. மூன்றாவது நாலாவது நிலை ஆழ்ந்த உறக்கம் ஆகும். இங்கு அந்த நபருக்கு சில உடல் அசைவுகள் இருப்பதுடன், அந்த நபரை எழுப்புவது மிகவும் கடினம் ஆகும்.
 
கற்றல் மற்றும் நினைவகம் [learning and memory] போன்றவற்றிற்கு, விரைவு விழியியக்க நிலை தான் முக்கிய பங்கு வகுக்கிறது என முன்பு நம்பியிருந்தாலும், புதிய ஆய்வுகள் விரைவு அற்ற விழியியக்க நிலை இதற்கு முக்கியம் என்பதைக் சுட்டிக்காட்டுவதுடன், உறக்கத்தின் ஓய்வுக்குகந்த கட்டமாகவும் மற்றும் மறுசீரமைப்பு கட்டமாகவும் இது [the more restful and restorative phase of sleep] தொழிற்படுவது தெரிய வந்துள்ளது.
 
இறுதியாக விரைவு விழியியக்க நிலை ஏற்படுகிறது. இது முன்னையதை விட ஆழமானது, இங்கு கண்கள் மற்றும் கண் இமைகள் படபடக்கின்றன, இங்கு 'brain waves' எனப்படும் மூளை அலைகள், விழித்திருக்கும் போது உள்ள மூளை அலைகளைப் போலவே ஒத்து இருக்கின்றன. அத்துடன் சுவாசம் ஒழுங்கற்றதாக இருப்பதுடன், பெரும்பாலான கனவுகள் இந்த நிலையில் தான் ஏற்படுகின்றன. ஆனால் மூளை உங்கள் தசைகளை முடக்குகிறது, அதனால் தான் நீங்கள் கனவுகளைச் செயல்படுத்துவதில்லை, அதாவது கனவில் காணும் காட்சிக்கு பதில் அல்லது பதில் நடவடிக்கை செய்வதில்லை. இந்த முழு சுழற்சியும் ஒருவரின் உறக்கத்தில் நாலு ஐந்து தடவை நடைபெறுகிறது.
 
உங்கள் உடல் உறக்க கட்டுப்பாடுகளால் கட்டப்பட்டது
 
ஆய்வாளர்களின் முடிவின் படி, இரண்டு முக்கிய செயல்முறைகள் ஒருவரின் உறக்கத்தை ஒழுங்கு படுத்துகிறது. அவை சர்க்காடியன் தாளங்கள் [ரிதம்] மற்றும் உறக்க உந்தல் [circadian rhythms and sleep drive] ஆகும். சர்க்காடியன் தாளங்கள் 24 மணி நேர சுழற்சியில் உடல் செயல்பாடு, மன மற்றும் மனித நடத்தை ஆகியவற்றின் அனைத்து மாற்றங்களையும் பின்பற்றுகின்றன. மூளையில் உள்ள குறிப்பிட்ட சில இயற்கையான காரணிகளால் கட்டுப்படுத்தப் படுவதைத் தவிர, இந்த சர்க்காடியன் தாளம் பொதுவாக ஒரு நபரைச் சுற்றியுள்ள சூழலில் ஒளி நிலைகளால் பாதிக்கப்படுகிறது. ஒரு நபரின் சர்க்காடியன் தாளங்கள் உறக்க சுழற்சிகள், ஹார்மோன் உற்பத்தி, உடல் வெப்பநிலை மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகளை தீர்மானிக்கிறது.
 
உதாரணமாக அனைவருக்கும் பொதுவாக ஒரு நிலையான தினசரி உள்ளது. இந்த வழக்கம் கொஞ்சம் மாறினால், அதன் தாக்கத்தை நாள் முழுவதும் உணர முடியும். உதாரணமாக, நீங்கள் வழக்கத்தை விட தாமதமாக எழுந்தால், நாள் முழுவதும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். உங்கள் செயல்பாடுகள் உங்கள் உடலின் உயிரியல் அட்டவணை அல்லது மணிநேரங்களைப் பின்பற்றாததால் இது நிகழ்கிறது. இதுவே உங்கள் உடலின் இயற்கையான தாளம் ஆகும்.
 
உறக்கத்தை தூண்டும் செயல் பாட்டையே உறக்க உந்தல் என்கிறோம். உணவுக்காக உடல் பசிப்பது போல உங்கள் உடலும் உறக்கத்திற்கு ஏங்குகிறது. அந்த ஏக்கமே உறக்க உந்தல் ஆகும். நீங்கள் பசியாக இருக்கும்போது சாப்பிட உங்கள் உடல் உங்களை கட்டாயப்படுத்த முடியாது, ஆனால், நீங்கள் சோர்வாக இருக்கும்போது, அது தானாகவே உங்களை உறங்க வைக்கும். அந்த செயல் தான் உறக்க உந்தல் ஆகும்.
 
உதாரணமாக, நீங்கள் ஒரு முக்கியமான கூட்டத்தில் இருந்தாலும் அல்லது உங்கள் காரை செலுத்திக் கொண்டு இருந்தாலும் கூட, அது உங்களை உறக்கத்தில் ஆழ்த்திவிடும். மேலும் நீங்கள் உறக்க மின்மையாலோ அல்லது வேறு ஒரு காரணத்தாலோ சோர்வு அடைந்தால், நீங்கள் ஒரு சில நொடிகள் நுண் உறக்கத்துக்கு (microsleep) போகலாம். அதாவது நீங்கள் விழித்திருக்கும் வேளையிலே, கணப் பொழுதுகள் நீடிக்கும் மிகச் சிறிய உறக்கத்துக்கு நீங்கள் உள்ளாகலாம். இது ஒரு நொடி முதல் அரை நிமிடம் வரை நீடிக்கலாம். ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும். ஆகவே ஒழுங்கான போதுமான உறக்கம் மிக மிக அவசியம்.
 
ஏன் உங்களுக்கு உறக்கம் அவசியம்?
 
நீங்கள் ஒரு மோசமான இரவு உறக்கத்தின் பின், உங்கள் கண் பனிமூட்டம் போல் மங்கலாக [foggy] இருப்பதை உணர்ந்து இருப்பீர்கள். எனவே, உறக்கம் மூளையின் செயல்பாட்டை கணிசமாக பாதிக்கிறது என்பதில் உங்களுக்கு ஆச்சரியம் இருக்காது. ஆகவே, நீங்கள் முதலில் ஆரோக்கியமான அளவு உறக்கம் அவசியம் என்பதை அறிவீர்கள், ஏனென்றால், மூளையின் உள்ளீடிற்கு ஏற்ப சரிப்படுத்த மூளையின் நெகிழ்த்தன்மை அல்லது மூளையின் திறன் அவசியம் [“brain plasticity,” or the brain’s ability to adapt to input.]. உதாரணமாக, நாம் சொற்ப நேரமே உறங்கினோம் என்றால், நாம் காலையில் கற்றுக்கொண்டவைகளை மூளை செயல்முறை படுத்தவோ அல்லது அவைகளை எதிர்காலத்தில் ஞாபகத்தில் வைத்திருக்கவோ எங்களுக்கு அதிக சிக்கல் ஏற்படலாம். அது மட்டும் அல்ல விரைவாக எதாவது ஒன்றில் தேவைக்கு ஏற்ப கவனம் செலுத்துவது மற்றும் பதிலளிப்பது அல்லது பொருத்தமான பதில் நடவடிக்கை கையாளுவது கடினம் ஆகலாம்.
 
மேலும் ஆய்வுகள், மூளை செல்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுவதை உறக்கம் ஊக்குவிப்பதாக காட்டுகிறது. அது மட்டும் அல்ல, உடலின் மற்ற பகுதிகளுக்கும் உறக்கம் மிக முக்கியம் ஆகும்.
 
பொதுவாக மக்களுக்கு போதுமான உறக்கம் இல்லாத போது, அவர்களின் உடல்நல அபாயங்கள் [health risks] அதிகரிக்கின்றன. உதாரணமாக மனச்சோர்வு, வலிப்பு [திடீர் நோய்பிடிப்பு], உயர் இரத்த அழுத்தம், மோசமடையும் ஒற்றைத் தலைவலி, வலுவிழந்த நோய் எதிர்ப்பு சக்தி, போன்ற அறிகுறிகளுடன் [Symptoms of depression, seizures, high blood pressure and migraines worsen. Immunity is compromised,] நோய் மற்றும் தொற்றுக்களுக்கான சாத்தியக்கூறுகளையும் அதிகரிக்கும்.
 
மேலும் உறக்கம் வளர்சிதை மாற்றம் அல்லது அனுசேபத்துக்கு [Metabolism] முக்கிய பங்கு வகுக்கிறது. இங்கு வளர்சிதை மாற்றம் என்பது உயிர்வாழ்வதற்காக உயிரினங்களில் நடைபெறும் ஒரு தொகுதி வேதி வினைகள் [Chemical reaction] ஆகும். உதாரணமாக, ஒரு இரவு உறக்கத்தை தவறவிடுவது, முன் நீரிழிவு நோய்க்கு [pre diabetic state] ஒரு ஆரோக்கியமான நபரை மாற்றலாம்? இவ்வாறு ஆரோக்கியத்துக்கும் உறக்கத்துக்கு பல முக்கிய தொடர்புகள் உண்டு. அவைகளில் சிலவற்றை கீழே தருகிறேன்.
 
நல்ல உறக்கம் ஒருவரின் கவனத்தை அல்லது மனதை ஒருமுகப்படுத்துவதையும் மற்றும் நினைவு ஆற்றலையும் மேம்படுத்துகிறது.
உங்கள் தீர்மானம் எடுக்கும் திறனையும் மற்றும் நீண்ட கால நினைவாற்றலையும் உறக்கம் இல்லாமை வெகுவாக பாதிக்கிறது. அதுமட்டும் அல்ல, காலப்போக்கில், குறைந்த உறக்கம் அறிவாற்றல் வீழ்ச்சிக்கும் ஞாபக மறதிக்கும் மற்றும் டிமென்ஷியா [மறதி நோய்] ஏற்படுவதற்கும் பங்களிக்கின்றன. வயது முதிர்ந்தவர்களுக்கும், எல்லோரும் போல், ஒரு நாளைக்கு ஏழுக்கும் ஒன்பது மணித்தியாலத்துக்கும் இடையில் உறக்கம் வேண்டும். ஆனால், வயது போனவர்கள் பொதுவாக நேரத்துடன் உறக்கத்துக்கு போய் நேரத்துடன் விழிக்கிறார்கள்.
 
உரக்க பற்றாக்குறை அறிகுறிகள்
 
தசை வலிமை மற்றும் நீடித்துழைக்கும் திறமை அல்லது ஆற்றல் [சகிப்புத்தன்மை] குறைகிறது, முக்கிய உறுப்புகள் தன் முழுத் திறனில் அல்லது உகந்த அளவில் செயல்பட முடியாமல் போகிறது. வலியை தாங்கும் திறன் அல்லது வலி சகிப்புத்தன்மை குறைகிறது. அத்துடன் உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்திறன் குறைகிறது. இன்சுலின் இரத்தத்தின் சர்க்கரையை குறைக்க உதவும் ஒரு புரதம் ஆகும்.
 
நோய் எதிர்ப்பு அமைப்பும் வலு இழப்பதுடன், அது தொற்று மற்றும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் ஏன் குறைந்த அளவு உறக்கம் கொள்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உண்டு, பெரும்பாலானவை மிகவும் தனிப்பட்டவை ஆகும்.
 
 
ஆக்கம்
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்
 
மொழிபெயர்ப்பு
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்
பி கு : அண்ணாவிடம் [கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்] நான் சென்றபோது எடுத்தப்படம் இணைத்துள்ளேன் 
 
 
 
 
12496067_10205681427577742_6274524108014922711_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=-i9ym2Y384EQ7kNvgFv4I3o&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYB4gOVtvgugKxqzBTeFtUt-_4FzzJvhJxor8TrPsDStQw&oe=6694E8F7
117773856_10217564349083353_7682885558605288561_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Gi4H0JRMcAQQ7kNvgFfRm4U&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDIKxLvKA2p4ytXHZl6TBoLC0zjEmh-Qm6X92qu9-m3lA&oe=6694C8AF 117823979_10217564350443387_6654596283752503557_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CzCKPifxkh0Q7kNvgGI_be0&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBdhuUVYWUF_qzPyR_ZG9lg-u88xb34MCe4Cr7mKXc2_w&oe=6694F1F5 117729842_10217564350963400_2811776557265005675_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Sf2nBJEuEWQQ7kNvgEUy5TM&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYAqCNt6DsGOCsY6Dx2o_wC8vUqqp8ubiO8BJ5Mupsep6Q&oe=6694EED3 117823984_10217564351963425_5150293543521846426_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=CvAO_pVeVfoQ7kNvgEDYSOv&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYDXtp2luyamr15NzdMQvpmGjT7npJcdn74Zlkvh9QGHmg&oe=6694EB0D
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.