Jump to content

"திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

15/06/2024 அன்று என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நண்பர் [பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்] மற்றும் கட்டிட பொறியாளர் 'திரு கந்தையா ஈஸ்வரன்' ஆகியோரின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம்.


அவரின் இறுதிக்கிரிகைகள் ஜூன் 20, வியாழன் அன்று Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue L3R 5G1, Toronto, Canada தொலைபேசி 905 305 8508. காலை 10.00 மணி முதல் மதியம் 1,30 மணி வரை பார்வையிட்டு, அதே நாளில் மதியம் 2.00 மணிக்கு தகனம் செய்யப்படும் .


"திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024]


"யாழ் மத்திய கல்லூரியில் ஒன்றாக படித்து 
பேராதனை பொறியியல் கற்றல் அழைப்புக்கு
எதிர்கால பிரமாண்ட கனவுகள் உடன் 
நாங்கள் ஒன்றாக கைகோர்த்து பயணித்தோமே! 

அறிவு பாய்ந்த எந்திரவியல் வகுப்பறைகளில்
பகிர்ந்த கனவுகள் எங்கள் நட்பை வளர்த்ததே!  
நீங்கள் ஒரு சிவில் இன்ஜினியர்! மிகவும் பிரகாசமானவர்!
வலிமையின் கலங்கரை விளக்கு! வழிகாட்டும் ஒளி!

நாம் நடந்த பாதைகள், செய்த திட்டங்கள்
அழியாத எண்ணற்ற பல நினைவுகள்
பகிரப்பட்ட சிரிப்பிலிருந்து அமைதியான இரவுகள் வரை
உங்கள் முன்னிலையில் எல்லாம் சரியாகவே இருந்தது!

நோய் கடுமையாக பாதிக்கப் பட்டாலும்,
உங்கள் ஆத்மா உறுதியானது வலிமையானது முழுமையானது
ஸ்கார்பரோவின் அமைதியான அரவணைப்பில் நீங்கள் 
எல்லையில்லா கருணையுடன் இவ்வுலகம் இன்று [15/06/2024] நீத்தீர்கள்!

அன்று, மே 25, 2024 நாங்கள் சந்தித்தோம்
நினைவுகளுக்கு மத்தியில் நாம் என்றும் மறக்க மாட்டோம்
சொற்கள் குறைவாக இருந்தாலும் உங்கள் கண்கள் பேசின
புன்னகையுடன் நீங்கள் எங்களிடம் விடைபெறுகிறீர்கள்!

இப்போது நிம்மதியாக ஓய்வெடுங்கள் அன்பு நண்பரே
உங்கள் மரபுப் புகழ் தென்றல் போல வாழ்கிறது
எங்கள் இதயங்களில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள்
உங்கள் வழியில் எங்களை வழிநடத்துங்கள்!

தூர இடைவெளி இருந்தாலும் நேரம் பறந்தாலும்
நீங்கள் விதைத்த நட்பின் விதைகள்
ஒவ்வொரு நாளும் நம் இதயங்களில் மலரும்
மீண்டும் ஒரு நாள் நாம் சந்திக்கும் வரை!"


அன்புடன் உங்கள் நண்பன் 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]


In Memory of Mr. Kandiah Easwaran


"From Jaffna Central's hallowed halls,
To Peradeniya's learned calls,
Together we journeyed, hand in hand,
Dreaming of a future grand.

In classrooms where knowledge flowed,
Through shared dreams, our friendship sowed,
You, a Civil Engineer, so bright,
A beacon of strength, a guiding light.

The paths we walked, the plans we made,
The countless memories that won't fade,
From the laughter shared, to silent nights,
In your presence, everything felt right.

Though illness took a heavy toll,
Your spirit, steadfast, strong, and whole,
In Scarborough's quiet embrace,
You faced the end with boundless grace.

On that day, in May 25, 2024, we met,
Amidst the memories, we will never forget,
Though words were few, your eyes spoke true,
With a smile, you bid us adieu.

Rest now, dear friend, in peace, at ease,
Your legacy lives on, like the breeze,
In our hearts, you'll always stay,
Guiding us in your own way.

Though miles apart, and time has flown,
The seeds of friendship you have sown,
Will blossom in our hearts each day,
Until we meet again, someday."


Sincerely your friend


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]

448551439_10225360843070830_6803056522961581690_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=IskjCHgbQZEQ7kNvgGmbV77&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYBkhbggJy9332PKqI5AS5IaWMCZa_Zl4RCZiwP_lnK6ig&oe=66771F32 448488897_10225360843270835_1864489758932791034_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=tCzzKIXsSPwQ7kNvgFRGduQ&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBExicgOUB5dsv7pQyBOzRVzMbCGIqR47e9TZqdyLd-BA&oe=667720E4

448549100_10225365685911898_440060323169810945_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=T1x4yx18-UkQ7kNvgF7ZeI2&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBhthFCIqrwxikQ8uxsMTmNkRku8RoDHl3T7WnG-DJofw&oe=6677377F 448683170_10225365686191905_3824909865402308447_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=aVDJqSoGdtkQ7kNvgGVEqCu&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYD1-hs3pNoFN6XOrAEf8QOQHJ6Ul0AA0qnOFLiRtlP79Q&oe=66772351

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.