Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

சுற்றுச்சூழலும் செய்யறிவும் – பா. ஶ்ரீகுமார்

BookdayJune 6, 2024
Article-by-srikumar-balakrishnan.jpg

செய்யறிவு தொழில்நுட்பம் தற்போது பெரும்பாலான துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாற்றங்கள் முன்பை விட வேகமாகவும் பயனளிப்பதாகவும் பரந்த அளவில் கிடைக்க கூடியதாகவும் இருக்கிறது.

செய்யறிவு தொழில்நுட்பம் உயிரியல் துறைகளையும் ஒன்றிணைப்பதில் முன்னிலை வகிக்கிறது. மனித வாழ்க்கையுடன் இவற்றை ஒருங்கிணைத்து மாற்றத்தைக் கொண்டு வர முடிகிறது. இதனால் சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

செய்யறிவு என்றால் என்ன?

செய்யறிவு என்பது நுண்ணறிவுகளை உருவாக்கச் செயல்முறைகளை தானியங்குபடுத்துதல் மற்றும் அவற்றை மேம்படுத்துவதன் வழியே மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும். பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குவதற்கும் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வு செய்வதற்கு இயந்திரங்கள் அல்லது கணிப்பொறி சாதனங்களைப் பயன்படுத்தி செயல்படுத்த கூடிய புதிய தொழில்நுட்பம் தான் செய்யறிவு.

குறிப்பிடத்தக்க சிக்கல்களைக் கணிக்கவும், அது தொடர்பான பிற நடவடிக்கைகளை அடையாளம் காணவும் உதவுகிறது.
செய்யறிவின் கருத்து சமுதாயத்தில் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

செய்யறிவு இன்று உடல் கோளாறுகளைக் கண்டறியவும் மருத்துவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பல்வேறு கற்றல் தேவைகளைக் கொண்ட பயிற்சியாளர்களுக்கான கல்வித் திட்டங்களை மாற்றியமைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.

செய்யறிவானது பூமியின் சுற்றுச்சூழல் சிக்கல்களை அணுகுவதற்கு மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. சுற்றுச்சூழலின் சீரழிவைத் தூண்டும் திறனையும் கண்டறிய உதவுகிறது.

முக்கியமான சுற்றுச்சூழல் சிக்கல்களில் அதிகபட்ச நேர்மறையான தாக்கத்தை உருவாக்க செய்யறிவு அமைப்புகள் உருவாகின்றன. காலநிலை மாற்றத்தை அடையாளம் காணவும், உணவு மற்றும் நீர் பாதுகாப்பை வழங்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் மற்றும் மனித நல்வாழ்வை ஆதரிக்கவும் செய்யறிவு உதவுகிறது.

செய்யறிவு சுற்றுச்சூழல் சவால்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, சுற்றுச்சூழலில் நிகழும் மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே கணிக்க முடியும் மற்றும் விபத்துகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளைப் பெற முடியும்.

செய்யறிவு உதவியுடன், அவசர உதவிக் குழு பல சுற்றுச்சூழல் விபத்துகளை நிகழும் முன் கண்டறிய முடியும். நாம் கவனிக்கும் சூழல்கள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் திறனை அது தருகிறது.

செயற்கைக்கோள் உதவியுடன் பகுப்பாய்வு செய்வதோடு காடுகள் மற்றும் கடல் அலைகளைக் கவனிப்பது உள்ளிட்ட நிலப் பயன்பாட்டு வேறுபாடுகளை தானாகவே அடையாளம் காணக்கூடிய விஷயங்களில் செய்யறிவு முன்னிலைப்படுத்தப்படுகிறது.

செய்யறிவானது காலநிலை மாற்ற நிலைமைகளை கணிக்கும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் வாழ்தலுக்கு தேவையான மாற்றங்களைச் செய்வதற்கான பரிந்துரைகளை உருவாக்குகிறது. இயற்கையை கணிக்கும்போது, துல்லியமாக கணிப்பது முற்றிலும் மாறுபட்ட மற்றும் கடினமான பணியாகும். கால நிலை மாற்றத்தில் பல்வேறு சாத்தியமான அளவுருக்கள் உள்ளன, அவை உடனடியாக அல்லது மறைமுகமாக காலநிலை மாற்றத்தை பாதிக்கின்றன, செய்யறிவுக்கு முன்பான கணிப்புகள் மற்றும் ஆய்வுகள் பல நேரங்களில் மாறுபாடு உடையதாக இருந்தது. ஆனால், தற்போது செய்யறிவு மூலம் இதன் திறன் அதிகரிக்க தொடங்கியுள்ளது

பல்லுயிர் பெருக்கம்

பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன, மேலும் தாவர இனங்களில் எற்படும் பல்வேறு நோய்களை கண்டறிந்து கண்காணிக்க செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் தாவரங்களின் நோய் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் சில நோய்களை சரி செய்யவும் உதவுகிறது.

காண்டாமிருகங்கள் மற்றும் யானைகள் போன்ற வனவிலங்குகளைக் கண்காணிக்கவும், அவற்றைக் கொல்வதைத் தடுக்கும் பொருட்டு குறிப்பிட்ட விலங்குகளை சுட்டிக்காட்டவும் செய்யறிவு உதவுகிறது.

ஆரோக்கியமான பெருங்கடல்கள்

செய்யறிவு அமைப்புகள் பெருங்கடல்களைப் பாதுகாக்கவும், நிலையாகப் பராமரிக்கவும் பல புதுமையான நடைமுறைகளை முன்வைக்கின்றன. செயற்கை நுண்ணறிவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட சாதனங்கள், உயிரினங்கள் மற்றும் வாழ்விடங்களைப் பாதுகாக்க உதவுவதால், ஆதாரம் மற்றும் மீன் வள நிலைத்தன்மையைக் கண்காணிப்பதற்கு உதவுவதற்காக வெவ்வேறு கடல் ஆழத்திலிருந்து தரவுகளைச் சேகரிக்கின்றன.

இந்த அமைப்பு காலநிலை மாற்றங்களைக் கண்காணிக்க உதவுகிறது மற்றும் சட்டவிரோத மீன்பிடியை தடுத்து மேம்பட்ட தீர்வுகளை வழங்குகிறது.

மேலும் விரிவான பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க இயந்திர கற்றல் முறைகள் ஆராயப்படுகின்றன. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கப்பல்களில் இருந்து தானியங்கி அடையாள அமைப்பு (AIS) தரவுகளுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளுக்கு ஏற்ப கப்பல் வழிமுறை மாதிரிகளை செயல்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகள் தொடங்கியுள்ளன.

நீர் பாதுகாப்பு

நீர் மனித வாழ்வின் இன்றியமையாதது நீர்த்தேக்கங்களின் செயல்திறன் மற்றும் நீர் பயன்பாட்டை உருவகப்படுத்த நிபுணர்களுக்கு செய்யறிவு அமைப்புகள் உதவுகின்றன. செய்யறிவு ஸ்மார்ட் மீட்டர் அமைப்பு அதன் நீர் அடித்தளத்தை சரிசெய்வதற்காக கசிவு குழாய்களின் குறிப்பிட்ட இடங்களை அடையாளம் காண உதவுகிறது.

இது நீர் அழுத்தம் உணரிகள் மற்றும் வடிகட்டி அமைப்புகளிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்யும் திறனைக் கொண்டுள்ளது மற்றும் நீர் இழப்பைக் அதிகளவிற்கு கட்டுப்படுத்துகிறது. மேலும், ஒட்டுமொத்த நீர் மேலாண்மை செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது.

செய்யறிவானது காலநிலை மாற்றங்களை அடையாளம் காணும் திறன் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் அபாயகரமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

செய்யறிவு மூலம் பல தீர்வுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன, எதிர்கால திட்டமிடலை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது.

நாம் அளவிடாததை நம்மால் நிர்வகிக்க முடியாது என்பது பழைய வணிகப் பழமொழி. காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு, மாசுபாடு மற்றும் கழிவுகள் ஆகிய மூன்று நெருக்கடிகளை உலகம் எதிர்கொள்வதால் இது முன்னெப்போதையும் விட இன்று பெரும் சவாலாக உள்ளது.

தற்போது அதிக காலநிலை தரவு கிடைக்கிறது, ஆனால் அந்த தரவு எவ்வாறு அணுகப்படுகிறது, விளக்கப்படுகிறது மற்றும் செயல்படுகிறது என்பதை ஒருங்கிணைக்கும் ஒரு தொழில்நுட்பமாகவும் செய்யறிவு செயல்படுகிறது.

பருவநிலை மாற்றம்

வெப்பநிலை அதிகரிப்பு, கடல் மட்ட உயர்வு, அதீத மழைப்பொழிவு நிகழ்வுகள், தீவிர வானிலை நிகழ்வுகள், ஆர்க்டிக்கில் கடல் பனிப்பாறைகள் குறைதல் மற்றும் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயு செறிவுகள் உயர்வு ஆகியவை காலநிலை மாற்றத்தின் சில நன்கு அறியப்பட்ட குறிகாட்டிகளாகும். உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகளை விவரிக்கும் பெரிய அளவிலான அறிவியல் சான்றுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான சான்றுகள் உள்ளூர் அல்லது ஒரு பகுதியில் இருக்கலாம், அதேசமயம் விளைவுகள் மிகப் பெரிய அளவில் காணப்படுகின்றன; உலகம் ஒரு கிராமம் என்ற அடிப்படையிலும் ஒருங்கிணைந்த உலக பொருளாதார வளர்ச்சியும் இதன் பின்னணியில் உள்ளது.

காலநிலை மாற்றம் முதன்மையாக மனிதன் சார்ந்ததா அல்லது காலநிலையின் இயற்கை மாறுபாடா அல்லது இரண்டின் கலவையா என்ற கேள்விகள் இன்னும் உள்ளன, விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள், விவசாயிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பலரிடையே குறிப்பிடத்தக்க ஒருமித்த கருத்து இதில் நிலவுகிறது.

இருப்பினும், காலநிலை மாற்றத்திற்கான மனிதனின் பங்களிப்பை நாம் குறைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

காலநிலை மாற்றம் பற்றிய அறிவியல் புரிதல் சிக்கலானது, அதன் விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பலவகையானவை, முக்கியமாக அவை நேரம் மற்றும் நிலப்பரப்பை சார்ந்தவை. முக்கிய பகுதிகள்/துறைகளைக் கண்டறிவது கடினம் என்றாலும், சமூகம் மற்றும் பொருளாதாரம், அதாவது விவசாயம், கார்பன் பட்ஜெட், கணினி அறிவியல், தரவு அறிவியல், ஆற்றல், சுற்றுச்சூழல், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் நீர் வளங்கள் ஆகியவற்றுடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளன.

செய்யறிவு பயன்பாடு காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பங்களிப்பை தருகிறது.

தற்போது வானிலை, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகளைக் கண்காணிக்க மற்றும் மாசுபாட்டைக் கண்டறியும் கருவிகளில் செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது.
விவசாயத்தை மேம்படுத்தவும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் செய்யறிவு பயன்படுத்தப்படலாம் என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறுகிறது.
செய்யறிவு சக்தியானது பெரிய அளவிலான தரவுகளைச் செயலாக்குவதற்கும், வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள்
தக்க முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது.

உலகின் கடினமான சவால்களில் ஒன்றான காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட செய்யறிவு திறன் உதவுகிறது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி சுமார் 4 பில்லியன் மக்கள் (400 கோடி) ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழ்கின்றனர் .

ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வெப்ப அலையால் மட்டும் 2030 மற்றும் 2050 ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டுக்கு 2,50,000 கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுப்ப பதற்கு செய்யறிவு உதவும் .
இங்கே,காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க செய்யறிவு உதவும் முறைகள் குறித்து பார்ப்போம்.

உருகும் பனிப்பாறைகளை கண்டறிவது:

பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை மனிதனால் செய்யக்கூடியதை விட, பத்தாயிரம் மடங்கு வேகமாக அளவிட செய்யறிவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் வளிமண்டலமானது அதிக வெப்பமடைகிறது. இது, பனிப்பாறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செய்யறிவு பயன்படுத்துவதன் மூலம் பனிப்பாறைகள் எவ்வளவு தூரம் உருகும் அது எவ்வளவு நீரை வெளியிடும் என்ற கணக்குகளை எளிதாக கண்டறிய முடியும். இதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளுக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு செய்யறிவு தொழில்நுட்பம் உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செய்யறிவானது அண்டார்டிக்கில் உள்ள பெரிய பனிப்பாறைகளை ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கில் செயற்கைக்கோள் படங்களில் வரைபடமாக்க முடியும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தப் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டால் இது நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும், மேலும் மேகங்கள் எது பனிப்பாறைகள் எது என்பதை அடையாளம் காணுவதில் மிகுந்த சிக்கலை ஏற்படுத்தும். அதே நேரத்தில் இந்த செய்யறிவை பயன்படுத்தி மிகத் துல்லியமாக பணிப்பாறைகளை கண்டறிந்து தெரிவிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பனிப்பாறைகளில் ஏற்படும் மாற்றங்களை செய்யறிவு மூலம் கண்காணித்து வருகின்றனர்.

காடழிப்பு கண்டறியும் செய்யறிவு:

செயற்கைக்கோள் படங்கள் மற்றும் சூழலியல் நிபுணத்துவம் ஆகியவை காலநிலை நெருக்கடியில் காடழிப்பின் தாக்கத்தை வரைபடமாக்க செய்யறிவு திறன் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்காட்லாந்தின் எடின்பரோவை தளமாகக் கொண்ட ‘ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற நிறுவனம் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்வதாகவும், செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி விண்வெளியில் இருந்து 1 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வரைபடமாக்கியுள்ளதாகவும் கூறுகிறது.
காடழிப்பு விகிதம் மற்றும் காட்டில் எவ்வளவு கரியமில வாயு சேமிக்கப்படுகிறது போன்ற அளவீடுகளை நிறுவனத்தின் தொழில்நுட்பம் தொலைவிலிருந்து அளவிடுகிறது.

இதன் மூலம் காடழிப்பை கண்காணிப்பதுடன் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எளிதில் எடுப்பதற்கும் உதவுகிறது.
ஆப்பிரிக்காவில், புருண்டி, சாட் மற்றும் சூடானில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் திட்டத்தில் செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது .

வானிலை முறைகளை கணிக்க செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது, எனவே அங்குள்ள சமூகங்களும், அதிகாரிகளும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் அதன் தாக்கத்தை எவ்வாறு குறைப்பது என்பதை சிறப்பாக திட்டமிட உதவுகிறது.

தூய்மையான எரிசக்தியை பயன்படுத்துவதற்கான அணுகுமுறையை மேம்படுத்துதல், முறையான கழிவு மேலாண்மை அமைப்புகளை செயல்படுத்துதல் மற்றும் மீண்டும் காடுகளை வளர்ப்பதை ஊக்குவித்தல் ஆகியவை செய்யறிவு தொழில்நுட்பம் மூலம் தற்போது சாத்தியப்படுகிறது.

அதிக கழிவுகளை மறுசுழற்சி செய்ய செய்யறிவு பயன்படுத்துதல்:

மற்றொரு செய்யறிவு திறனானது கழிவு மேலாண்மையை திறமையானதாக்குவதன் மூலம் காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவுகிறது. மீத்தேன், உலகளாவிய பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வுகளில் 16% காரணமாகும் என்று அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட Greyparrot என்ற மென்பொருள் நிறுவனமானது, கழிவுப் பொருட்களை மீட்டெடுக்கவும் மறுசுழற்சி செய்யவும் உதவும் கழிவு செயலாக்கம் மற்றும் மறுசுழற்சி வசதிகளை பகுப்பாய்வு செய்யும் செய்யறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது.

இந்த செய்யறிவைக் கொண்டு இந்த நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 67 கழிவு வகைகளில் 32 பில்லியன் கழிவுப் பொருட்களைக் கண்காணித்துள்ளது , மேலும் சராசரியாக 86 டன் பொருட்களை மறுசுழற்சி முறையில் மீட்டெடுக்க முடியும் என்று கூறுகிறது.

கடலின் மாசுபாடை குறைக்க உதவும் செய்யறிவு:

நெதர்லாந்தில் The Ocean Cleanup என்ற சுற்றுச்சூழல் அமைப்பு , கடலில் இருந்து பிளாஸ்டிக் மாசுபாட்டை அகற்ற செய்யறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

கழிவு பொருட்களை கண்டறியும் செய்யறிவு, தொலைதூர இடங்களில் கடல் குப்பைகளின் விரிவான வரைபடங்களை உருவாக்க நிறுவனத்திற்கு உதவுகிறது . இதனால் கடல் கழிவுகளை எளிதில் சேகரித்து அகற்ற முடிகிறது.

பிளாஸ்டிக் மாசுபாடு, பசுமை இல்ல வாயுக்களை வெளியிடுவதன் மூலமும் இயற்கைக்கு தீங்கு விளைவிப்பதன் மூலமும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது.

காலநிலை பேரழிவுகளை சமாளிக்க உதவும் செய்யறிவு:

பிரேசிலில் உள்ள சாவோ பாலோவில், சிப்ரெமோ என்ற நிறுவனம், காலநிலை பேரழிவுகள் எங்கு, எப்போது ஏற்படும், எந்த வகையான காலநிலை பேரழிவுகள் என்று கணிக்க செய்யறிவை பயன்படுத்துகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் அதனுடன் சமூகங்களில் வளர்ந்து வரும் சவால்களுக்கு தொழில்துறையும், அரசாங்கங்களும் சிறப்பாகத் தயாராக உதவுவதே இதன் நோக்கமாகும்.

இந்த நிறுவனம் காப்பீடு, ஆற்றல், தளவாடங்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்கிறது, அங்கு பேரழிவு நிலைமைகள் மற்றும் காற்றின் தரம் போன்ற காரணிகளின் பகுப்பாய்வு நிகழ்வுகளை தாமதப்படுத்துவது அல்லது இடைநிறுத்துவது பற்றிய முடிவுகளைத் இந்த செய்யறிவு தெரிவிக்கும்.

கூகுள் டீப் மைண்ட்:

கூகுளின் செய்யறிவு ஆராய்ச்சி ஆய்வகமான கூகுள் டீப் மைண்ட், பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட செய்யறிவை பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செய்யறிவு தீர்வுகளை மேம்படுத்தும் தரவுத்தொகுப்புகளின் முழுமையான விருப்பப்பட்டியலை உருவாக்குவது இதில் அடங்கும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இயந்திரக் கற்றலில் முக்கியப் பங்கு வகிக்கும் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான Climate Change AI உடன் Google DeepMind இதைச் செய்து வருகிறது .

மற்ற கூகுள் செய்யறிவு கருவிகள் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதிலும் காற்றாலை ஆற்றலின் மதிப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன.

கரியமில வாயுவை அகற்ற செய்யறிவு:

உலோகம் மற்றும் சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்களில் உள்ள நிறுவனங்களின் செயல்பாடுகளில் கரியமில வாயுவை அகற்ற செய்யறிவு பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்காவில், கலிபோர்னியாவில் உள்ள Eugenie.ai , இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் தரவுகளுடன் செயற்கைக்கோள் படங்களை ஒருங்கிணைக்கும் உமிழ்வு-கண்காணிப்பு தளத்தை உருவாக்கியுள்ளது.

செய்யறிவு இந்தத் தரவை பகுப்பாய்வு செய்து, நிறுவனங்கள் தங்கள் உமிழ்வை 20-30% வரை கண்காணிக்க, கண்டறிய மற்றும் குறைக்க உதவுகிறது .
உலகளவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் சுமார் 30% தொழில் துறைகள் உருவாக்குகின்றன. அவற்றைக் கண்காணிக்க இந்த செய்யறிவு பயன்படுகிறது.

காடுகளை உருவாக்கும் செய்யறிவு:

பிரேசிலின் கடலோர நகரமான ரியோ டி ஜெனிரோவைச் சுற்றியுள்ள மலைகளில் மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக செய்யறிவால் இயங்கும் கணினிகள் பிரேசிலில் ட்ரோன்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

கணினிகள் இலக்குகள் மற்றும் தூவ வேண்டிய விதைகளின் எண்ணிக்கையை வரையறுக்கின்றன.

ஜனவரி 2024 இல் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, ரியோவின் சிட்டி ஹால் மற்றும் ஸ்டார்ட்-அப் மோர்ஃபோ ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.மேலும், அணுக முடியாத பகுதிகளில் விதைகளை விதைத்து மரம் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஒரு ட்ரோன் ஒரு நிமிடத்திற்கு 180 விதைகளை சிதறடிக்க முடியும், இது பாரம்பரிய காடுகளை வளர்ப்பதற்கு மனித கைகளை பயன்படுத்துவதை விட 100 மடங்கு வேகமானது என்று கூறப்படுகிறது.

எழுதியவர் 

WhatsApp-Image-2024-06-06-at-8.25.16-AM-

பா. ஶ்ரீகுமார்

பத்திரிக்கையாளர் & ஊடகவியலாளர், எழுத்தாளர், கவிஞர், அறிவியல் தகவல் தொடர்பாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர் . மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், கதை, கட்டுரைகள் என தொடர்ந்து எழுதி வருபவர்.

அறிவியல் தொழில்நுட்பத்தின் நுணுக்கங்களை தமிழ் மொழியில் பரவலாக எழுதி வருபவர், சமூக அரசியல், பொருளாதார கட்டுரைகளையும் ஆங்கில நாளிதழ் மற்றும் மின்னணு ஊடகங்களில் எழுதி வருபவர். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

கிழக்கு கடற்கரைச் சாலை சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் அமைய வேண்டும் என்று போராடியவர். டூ பாண்ட் நிறுவனத்தால் ஏற்படும் சூழலியல் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்தவர். இறால் வளர்ப்பு எப்படி மண் மற்றும் நீர் வளத்தை பாதிக்கும் என்ற ஆய்வில் பங்கேற்றவர்.

பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியனுடன் இணைந்து ஆரம்ப காலத்தில் சூழலியல் குறித்த பல்வேறு கருத்து தாள்கள் உருவாக்கத்தில் பங்கேற்றவர்.
வானியலில் மிகுந்த ஆர்வமுடையவர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி & சயன்ஸ் சொசைட்டி உருவாக காரணமானவர். ஹலோ வால்நட்சத்திரம், பால்வெளியில் ஒளிரும் வால்நட்சத்திரங்கள், ஜீன் ரகசியம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். கவிதைகள் மற்றும் ஹைக்கூ கவிதைகளை அதிகம் எழுதி வருகிறார்.

அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் அறிவியலை கொண்டு செல்லும் பணியில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். அறிவியல் பலகை மாத இதழின் – இதழலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

 

 

https://bookday.in/article-by-srikumar-balakrishnan/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.