Jump to content

நயினாதீவுக்கு சென்ற படகு கவிழ்ந்தது : ஒருவர் பலி; மூவர் வைத்தியசாலையில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
03 JUL, 2024 | 10:14 AM
image
 

யாழ்ப்பாணம், குறிகட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (42) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

குறிகட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பொருட்கள் ஏற்றி இறக்கலில் ஈடுபட்ட படகொன்று நான்கு தொழிலாளர்களுடன் நேற்று (02) இரவு 7 மணியளவில் நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனால் படகில் பயணித்த நால்வரும் கடலில் வீழ்ந்தனர்.

அவர்கள் கரை நோக்கி நீந்தியவேளை, கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும், நால்வரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் உடலானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/187556

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உரிய விளக்கம் கோரல்... நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, ஈஸ்வரபாதம்‌ சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ யசோதை சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌, லக்ஷ்மி சரவணபவன்‌, பணிப்பாளர்‌, நியூ உதயன்‌ பப்ளிக்கேசன்‌ பிறைவேட்‌ லிமிடெட்‌ நால்வரும்‌ 361, கஸ்தூரியார்‌ வீதி, யாழ்ப்பாணம்‌ கேள்விக்‌ கடிதம்‌ தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி அம்மன்‌ ஆலய முகாமைத்துவ சபையின்‌ தலைவர்‌ கலாநிதி ஆறு. திருமுருகன்‌ அவர்களின்‌ அறிவுறுத்தலில்‌ எழுதும்‌ கேள்விக்‌ கடிதமாவது, 04.07.2024 அன்று தங்களது நிறுவனத்தினால்‌ பிரசுரிக்கப்படும்‌ உதயன்‌ நாளிதழின்‌ முன்பக்கத்தில்‌ “மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு!  ஆறு.திருமுருகனால்‌ நடத்தப்படும்‌ சிறுவர்‌ இல்லம்‌ இழுத்துமூடல்‌ எனும்‌ தலைப்பில்‌ செய்தியொன்று தலைப்புச்‌ செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.  குறித்த செய்தி பிரசுரிக்கப்பட்ட 04.07.2024 இற்கு முன்பதாக அவ்வாறான எந்தவொரு உத்தரவும்‌ வடமாகாண கெளரவ ஆளுனரினால்‌ வழங்கப்பட்டிருக்கவில்லை.  மேலும்‌ மாணவிகள்‌ குளிக்கும்‌ வீடியோக்கள்‌ பதிவு எனும்‌ முற்றிலும்‌ பொய்யான விடயம்‌ குறித்த செய்தியில்‌ உள்ளடக்கப்பட்டுள்ளது. மேற்படி முகவரியில்‌ தங்கள்‌ நிறுவனம்‌ அமைந்துள்ள ஆதனமானது எனது கட்சிக்காரர்‌ தலைவராக கடமையாற்றும்‌ சிவபூமி அறக்கட்டளைக்கு நன்கொடையளிக்கப்பட்டு விட்டது என்பதாலும்‌  குறித்த ஆதனத்திலிருந்து தங்களை வெளியேற்ற எனது கட்சிக்காரர்‌ நடவடிக்கை எடுத்து வருகின்றார்‌ என்பதனாலும்‌ அவர்‌ மீதுள்ள குரோதத்தின்‌ காரணமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளதென எனது கட்சிக்காரர்‌ கருதுகின்றார்‌. எனது கட்சிக்காரர்‌ கடந்த இரு தசாப்த காலத்தில்‌ தனது நாவன்மையின்‌ மூலம்‌ சேகரித்த நிதியைக்‌ கொண்டு பல்வேறு சமய சமூகப்‌ பணிகளை செய்து வருவதோடு ஈழ சைவ சமயிகளினுடைய குறிப்பிடத்தக்க தலைவராகவும்‌ இருந்து வருகின்றார்‌.  தங்களது பத்திரிகையில்‌ வெளியிடப்பட்ட முற்றிலும்‌ பொய்யான செய்தியானது பொதுப்பணிகளில்‌ ஈடுபட்டு வரும்‌ எனது கட்சிக்காரரை இழிவுபடுத்தும்‌ தன்மையானது என்பதோடு அவரது நற்பெயருக்கு இழுக்கேற்படுத்தும்‌ தீய நோக்கம்‌ கொண்டதுமாகும்‌. எனவே இக் கடிதம் கிடைத்து 48 மணத்தியாலங்களிற்குள் தங்ளால் பிரசுரிக்கப்படும் உதயன் நாளிதழில் 04.07.2024ம் திகதி வெளி வந்த செய்திக்கு நிகரான வடிவத்தில் எனது கட்சிக்காரரிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்பதுடன், இக் கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் ரூபா 300 மில்லியன் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என எனது கட்சிக்காரர் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன். மேற்குறித்த விடையங்களை உரிய காலத்துள் செய்ய தவறுமிடத்து தங்களுக்கு எதிராக பொருத்தமான நீதிம்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இத்தால் தங்களிற்கு அறியத்தருகின்றேன். கலாநிதி குமாரவடிவேல் குருபரன் LL.B (Hons) (Colombo)  B.C.L (Oxford) Ph.D (London) Attomey-at-Law (Sri Lanka) Notary Public and  Commissioner for Oaths.
    • அப்படி அல்ல சுவைப்பிரியரே! துஷ்டரைக் கண்டால் தூர விலகு. அவர்கள் தமிழர்கள் இத்திரியிலும் துஷ்டர்களைக் கண்டு விலகி நிற்கிறார்கள். 😔
    • தமிழர்கள் எல்லோரும் வென்று விட்டார்களா?? மற்றைய விபரங்களையும். பதிவிடவும்.  🙏
    • இதுவரை நீங்கள் பிரச்சனை தொடவில்லை    கருத்துகள் எழுதவில்லை   ஆனால்  சும்மா போற வறவனைப் பற்றி  நிறையவே எழுதுகிறீர்கள்    
    • உங்கள் வீட்டுப் பெண்டுகள் என்றால் பத்தரை மாற்ருத் தங்கம்,  ஊரான் வீட்டுப் பிள்ளைகளென்றால் கிள்ளுக் கீரைகளோ ? நல்லா வாயில வருகிறது  😏 பாதிக்கப்பட்ட பிள்ளைகளையிட்டு கவலை தெரிவிக்க வக்கில்லை, சிறுவர் இல்லங்களை இறுக்கமான கண்காணிப்பின்கீழ் கொண்டுவர வேண்டும்  என்று கூறுவதற்கு  ப்துப்பில்லை,  சமயப் பிரச்சனையை இங்கே இழுப்பவர்களுக்கு ஆதரவு வேறு?  சிறுவர்களையும் பெண்களையும் ஆதரவற்ற ஏதிலிகளையும் துன்புறுத்துவோருக்கும் (உங்களைப்போன்ற) அதற்கு சப்பைக்கட்டு கட்டி ஆதரவு வழங்குவோருக்கும்  மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.  😡    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.