Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு [2019 சூலை 3 முதல் 7 வரை நடைபெற்ற நினைவு நாள்]"

 

இம்மாநாட்டிற்கு உலகெங்கணும் இருந்து 6,000 பேர் வரை கலந்து கொண்டதுடன், மொரிசியசு செயல் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்  பங்கேற்றனர். அத்துடன் Dr Bhavani, pulavar Dr Francis S Muthu ,  Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi  ஆகியோரும் மற்றும் பல அறியஞர்களும் பங்குபற்றி இருந்தனர். 

 

அமெரிக்க மண்ணில் முதன்முதலாக தமிழுக்காக நடைபெறும் மாநாடு என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும். இம்மாநாட்டிற்கு முழுமுதல் கருவியாகவும் கிரியா ஊக்கியாகவும் செயல்பட்டவர் தலைசிறந்த கல்வியாளரும், அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், அனைத்துலகத் தமிழாய்வு மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவருமான முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களையும், தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவரான, பிறப்பால் ஐரோப்பியராக இருந்தாலும் உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்து மறைந்து, இன்று அனைவரின் உள்ளத்தில் வாழும் டாக்டர் ஜி.யு.போப் அவர்களையும் நினைவு கூறும் வகையில் மாநாட்டு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.


இதற்கான மையநோக்கு பாடல், சமீபத்தில் வெளியாகி, உலக இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதாவது, 'எல்லா ஊர்களும் சொந்த ஊரே; எல்லா மனிதர்களும் உறவினர்களே' என்னும் பொருளில் அமைந்த, 'யாதும் ஊரே... யாவரும் கேளிர்' என்ற, புறநானுாற்று பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, பல நாட்டு இசைக் கலைஞர்களின் பங்களிப்பில், இசை வடிவங்களை கோர்த்து, இசை அமைத்துள்ளார், ராஜன் சோமசுந்தரம்.


சங்க இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள், நவீன இலக்கியம் போன்ற எட்டு தலைப்புகளில் உலகெங்கிலும் இருந்து ஆய்வுக் கட்டுரைகளும் மற்றும்  தமிழ் மொழி, தொல்பொருள் ஆராய்ச்சி சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பல  ஆராய்ச்சியாளர்களின் இன்றைய முடிவுகளும் மேலும் கீழடி பற்றிய சிறப்பு விவாதமும்  கீழடி தொல்லியல் ஆய்வறிக்கையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப் பட்டது


உதாரணமாக, முதல் நாள் நிகழ்வில் [4 th July 2019]   வரவேற்பு பேச்சு, இசை & நடனங்கள் தவிர, நாம் மிகவும் பாராட்டிய முக்கியமான நிகழ்ச்சிகள் 

1) குமரிக்  கண்டத்தில் தொடங்கி வன்னியுடன் முடிவடையும் "இலங்கை" பற்றிய  நடனம்.  மேலும் கூத்து, விபுலாந்தர் அடிகள் , தனிநாயகம் அடிகள் , இலங்கைத் தமிழர்களின் போராட்டம் பற்றிய ஆய்வுச் செய்திகள் மற்றும் தமிழைக் காக்க இளைய தலைமுறைக்கு கூறப்பட்ட செய்தி, 

2) கீழடி தொல்லியல் ஆய்வு , 

3) அமெரிக்கத் தமிழர் அரசியல் நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்த விவாதம் (இணை அமர்வு) / debate organised by United States Tamil political Action Committee ( parallel session) , 

4) முரசு சிம்பொனி பாடகர் குழு / Murasu Symphony choir  & 

5) பட்டி  மன்றம்

போன்றவற்றை குறிக்கலாம் . அதேபோல மூன்றாவது நாள் [6 th July 2019] வரவேற்பு பேச்சு, இசை & நடனங்கள் தவிர, நாம் மிகவும் பாராட்டிய முக்கியமான நிகழ்ச்சிகள் 

 

1) பாரதியார் பற்றி  பாரதி பாஸ்கர்

 

2) பண்டைய தமிழ் நாகரிகம் - தொல்லியல் கண்டுபிடிப்புகள் / Ancient Tamil Civilisation- Archaeological Discoveries

 

3) பண்டைய தமிழ் நாகரிகம் - மரபியல் மற்றும் புவியியல் ஆய்வுகள்  (இணை அமர்வுகள்) / Ancient Tamil Civilisation- Genetic & Genographic Studies  ( Parrallel Sessions)

 

இதில் கலந்து கொண்ட அறிஞர்கள்  டாக்டர் பவானி , புலவர் டாக்டர் பிரான்சிஸ் எஸ் முத்து, டாக்டர் பி மருதநாயகம், டாக்டர் ஸ்பென்ஸ் வெல்ஸ், ஜார்ஜ் எல். ஹார்ட், டாக்டர் பிச்சப்பன் ராமசாமி, டாக்டர் கே ராஜன், டாக்டர் ஏ சண்முகதாஸ், டாக்டர் வி முருகன், டாக்டர் ஸ்ரீ லட்சுமி போன்றவர்கள் [Dr Bhavani ,pulavar Dr Francis S Muthu ,  Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi]

 

இவற்றைத்தவிர, மொரிஷியஸ் அதிபர் பரமசிவும் பிள்ளை பார்லே வையாபுரியின் [President of Mauritius,Paramasivum Pillay "Barlen" Vyapoory] உரை, 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் உரை போன்றவற்றையும் குறிக்கலாம் 

 

“உலகத் தமிழாராய்ச்சி மாநாடு”


உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.


வரலாறு 

 

முதல் மாநாடு 


தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இரண்டாம் மாநாடு 


1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது.


மூன்றாவது மாநாடு 


பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது.

இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன.


நான்காவது மாநாடு

 

1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.


5 வது முதல் 8 வது மாநாடு வரை 


முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது

 

ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் நடத்தப் பெற்றன.


ஒன்பதாவது மாநாடு 


எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது.


அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலகட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும்.


10 ஆவது மாநாடு 


பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 சூலை 3 முதல் 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்றது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தினர். 

 

இம்மாநாட்டிற்கு உலகெங்கணும் இருந்து 6,000 பேர் வரை கலந்து கொண்டதுடன், மொரிசியசு செயல் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்  பங்கேற்றனர். அத்துடன் Dr Bhavani, pulavar Dr Francis S Muthu ,  Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi  ஆகியோரும் மற்றும் பல அறியஞர்களும் பங்குபற்றி இருந்தனர். 

 

11-வது மாநாடு


11-வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இது முதலில் சார்ஜாவில் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் அது  மலேசியாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


12வது மாநாடு


12வது உலகத் தமிழ் மாநாடு 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என சென்னையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி இந்திய கலைத் தலைவர் நிர்மலா ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.


நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு சனவரி 3 இலிருந்து சனவரி 9 வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது என்றாலும், நான் அன்று பொறியியல் இறுதியாண்டு பரீடசை பேராதனை பல்கலைக்கழகத்தில் எழுதிக்கொண்டு இருந்ததால், அங்கு நேரடியாகப் பார்வையாளராகப் போக முடியவில்லை. என்றாலும், நான் கனடாவுக்கு உறவினரை, நண்பர்களை சந்திக்க சென்ற பொழுது, அமெரிக்காவுக்கு அங்கிருந்து சென்று,  2019 சூலை 3 முதல் 7 வரை நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முழுமையாக நேரடியாக பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்தது உண்மையில் மகிழ்வாகவும், பலவற்றை தெரிந்து கொள்ளவும் வாய்ப்பாகவும் இருந்தது. 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

347389329_10223459199930940_5533692657558442953_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=bgpCje0A3EMQ7kNvgFDkrRn&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYB4y89dM0p2skfMHVL4KkolrECAHVIgXHZDumspvlCfEw&oe=668AFAFA 347413537_10223459200290949_2747555520428421370_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=VZJD_k4_DmkQ7kNvgHXzAgT&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYBZvsEfsI1VkBVzd3nHVJIN6WRJuqAjncCgJ5hOsFjLAA&oe=668AFBC8 347549674_10223459200250948_2813374381204654492_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=101&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=suf6xYTHxlEQ7kNvgGjTwZ7&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYA3lDDwGFekHxYCkT8oT2cMgoqbHFrnkMafVK5n16VazA&oe=668AF8F7 347395600_10223459200130945_8658603284719696029_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=yt1Ou9TuczcQ7kNvgFqfsEq&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCiLtz8ONne-aRLvMxFvlRG0XRtSaYfoQl_kbVPi-Tg6g&oe=668AF25A 347602262_10223459201290974_4500047775574876913_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=2crdCJCqeDwQ7kNvgEBdddc&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYAlklXGRvHZoP_Xyw8VoA6FNds6uwNM_x_W40Fd8RcytQ&oe=668AD7DC No photo description available.

No photo description available.

 

No photo description available.

 

 

 

 

https://youtu.be/NtHYz6FuiAc?feature=shared
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.