Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
08 JUL, 2024 | 05:57 PM
image
 

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC) 2ஆவது சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாநாட்டை கடந்த ஜூன் 28ஆம், 29ஆம் திகதிகளில் சென்னையில் வெற்றிகரமாக நடத்தியது. 

தமிழ்மொழியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் (IT) முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திசைகளை ஆராய்வதற்காக முன்னணி அகாடமியன்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை இம்மாநாடு ஒருங்கிணைத்தது.

WhatsApp_Image_2024-07-08_at_3.46.01_PM.

இம்மாநாடு உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவரான J. செல்வகுமாரின் உபசரிப்பு உரையுடன் தொடங்கியது. அவர், தமிழ் கலாசாரத்தை தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் ஒருங்கிணைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST) மற்றும் ஐ.இ.டி-சென்னை செயலாளர் டாக்டர். ஆர். ராஜ்குமார் தொழில்நுட்பத்தின் மாற்றத்தை முன்னிறுத்திய சிறப்புரையை வழங்கினார்.

மாநாட்டின் முக்கிய விருந்தினர்களாக Dr. G. விஸ்வநாதன், நிறுவனர் VIT பல்கலைக்கழகம், Dr.R. வேல்ராஜ், துணைவேந்தர் - அண்ணா பல்கலைக்கழகம், சஞ்சய் குமார் IPS, ADGP-சைபர் குற்றப்பிரிவு, தமிழ்நாடு, மைக் முரளிதரன் தலைமை இயக்குநர், பஹ்வான் சைபர்டெக், க. சரவணகுமார், கொன்சுல் ஜெனரல் – மலேசியா கொன்சுலேட் ஜெனரல், செர்கி வி. ஆசாரோவ், ரஷ்ய கூட்டாட்சி கோன்சுல் ஜெனரல், டேவிட் எக்ல்ஸ்டன், தென்னிந்திய துணை கொன்சுல் ஜெனரல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

WhatsApp_Image_2024-07-08_at_3.45.59_PM.

நிறைவு விழா பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வத்தின் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த மாபெரும் விழாவில் பல முக்கிய தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் ஆர்வமூட்டும் பேச்சுக்களை வழங்கினர்.

தொழில்நுட்பம் மனித குலத்திற்கு – AIயுடன் சவால்கள் மற்றும் நன்மைகள் : இந்த அமர்வு, களத்திலும் சமூகத்திலும் உள்ள செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை ஆராய்ந்தது.

LLM மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் பயன்பாடு : கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெஷின் லெர்னிங் மொடல்களின் எதிர்காலம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்றைய தலைமுறையின் தொழில்நுட்ப துறையில் பெண்கள் முன்னணி : தொழில்நுட்பத்துறையில் பெண்களின் முக்கிய பங்களிப்புகளை சுட்டிக்காட்டியது.

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிக்கும் முறை மற்றும் பாதுகாப்பு : VJ விக்னேஷ்காந்த் மற்றும் ஸ்ரீ ராம் ஆகியோர் பங்கேற்று, சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதின் நன்மைகள் மற்றும் ஆபத்துகளை ஆராய்ந்தனர்.

இந்நிகழ்வு சர்வதேச தமிழ் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் நவீனம், தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கூட்டாக பணியாற்றுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றின்  உறுதியை நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவான உலகத் தமிழ் வர்த்தக சங்கம் வலியுறுத்தியது.

WhatsApp_Image_2024-07-08_at_3.46.00_PM_

WhatsApp_Image_2024-07-08_at_3.45.59_PM_

WhatsApp_Image_2024-07-08_at_3.45.58_PM.

WhatsApp_Image_2024-07-08_at_3.45.57_PM.

WhatsApp_Image_2024-07-08_at_3.45.57_PM_

https://www.virakesari.lk/article/187979



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.