Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி
 
 
எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில், நீதிக் கருத்துகளை பாடலாக எழுதப்பட்ட, ஒரு பழைமையான நூல் விவேக சிந்தாமணி ஆகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று நேரடியாக அறிவுறுத்தும். விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. இது கதை மூலம், நடைமுறையாக, எடுத்துக் கூறும் நூலாகும். இனி தூக்கணமும் குரங்கும் என்ற நாலு வரிப் பாடலைப் பார்ப்போம்.
 
"வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே"
[விவேகசிந்தாமணி பாடல்: 10]
 
ஒரு காட்டிலே அடர்ந்து வளர்ந்த மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையிலே குருவி ஒன்று கூடு கட்டி குடும்பத்தோடு நீண்ட காலமாக வசித்து வந்தது. பெண்களின் காதிலே தொங்கும் தூக்கணம் போல அதன் கூடு இருந்தமையால் எல்லோரும் அதனை தூக்கணம் குருவி என்று அழைப்பார்கள். அதன் கூடும் உள்ளே மிகவும் அழகாக இருக்கும். அப்படிப்பட்ட அழகான தூக்கணம் வாழும் மரத்திலே இன்னொரு கிளையில் ஒரு குரங்கும் பல காலமாக இருந்து வந்தது.
 
ஒருநாள் இரவு மிகவும் பலத்த மழை பெய்தது. மரங்கள் புயல் காற்றிலே கடுமையாக ஆடின. மிருகங்கள் குகைகளில் பதுங்கிக் கொண்டன. பறவைகள் கூடுகளில் ஒளித்துக் கொண்டன. ஆனால் அந்தக் குரங்கு மட்டும் கைகளால் மரக்கிளையை இறுகக் கட்டிக் கொண்டு மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கூட்டில் இருந்த ஆண் குருவி, குரங்கின் நிலையை கண்டு கவலை கொண்டு, "நண்பரே! இப்படிப் பெரு மழையில் வீணாக நனைந்துகொண்டு இருக்கிறீரே. உமக்கு மனிதரைப் போல இரண்டு கைகள் இருக்கின்றன. எனவே முன்னரே மனிதர்களைப்போல வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தால் இப்போது மழையில் நனைய வேண்டி இருக்காது. கொஞ்சம் யோசித்துப் பாரும்" என்றது.
 
 
தூக்கணத்தின் அறிவூட்டலைக் கேட்ட குரங்கு கோபம் கொண்டது. அது தூக்கணம் இருந்த கிளைக்குத் தாவியது. தன் இரண்டு கைகளாலும் தூக்கணம் இருந்த கூட்டைப் பிய்த்து எறிந்தது. கெட்டவர்களுக்குப் புத்தி சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும் என இப்பாடல் மூலம் விவேகசிந்தாமணி எடுத்துக் கூறுகிறது.
 
அதாவது, சிறுகுருவி பாடுபட்டுக் கட்டிய அழகிய கூட்டினைச் சிதைத்து இடர் விளைவித்த ஈனச் செயலை உதாரணங்காட்டி, "நல்லவற்றை அற்பர்களுக்குக் கூறினால் கூறியவர்களுக்கு அதனால் துன்பமே ஏற்படும்" என்று நமக்கு உணர்த்துகின்றது இந்த விவேக சிந்தாமணிப் பாடல்.
 
எனவே யாகாவராயினும் எப்போதும் நா காப்பதே நன்று!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
12715419_10205832428952682_6326968306258860565_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=Jkf_UtqyLOUQ7kNvgHz4HDZ&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDZRWYQ0WPTWogPDMLuGSY9D5C1FR5ypAYHIoEb1td0Yg&oe=66B3C992 12670863_10205832429752702_7781001450734388047_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=vssqQDl9UcAQ7kNvgEFvgRl&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYDmxviPU9doxNSs0vCVvlBbeoHlXtQN8Zw-vUJx1Igrug&oe=66B3B35B 12670614_10205832430232714_4080149354903743678_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=ddsYiPnChIYQ7kNvgF4X9AG&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDWgTgOTXW3j-N-oL9TNYxBr5sWPEEn2O7ZQZoixzPZpg&oe=66B39CAE
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.