Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கலப்பின மக்கள் வரலாறு
படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அனுலோமா மற்றும் பிரிதிலோமா என கலப்பு சமூக மக்கள் அழைக்கப்பட்டதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கட்டுரை தகவல்
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 9 ஜூலை 2024, 08:19 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டின் வரலாற்றில் மனிதர்கள் உருவான காலம் முதல் தற்காலம் வரையிலும் உள்ள சமூகம் பல மாறுதல்களை தாண்டி வந்திருக்கிறது. அக்கால மக்கள் தாங்கள் வாழ்கின்ற நிலத்தின் அமைப்பை மையமாகக் கொண்டு வாழ்வியல் முறையை அமைத்துக் கொண்டனர்.

அதன்படி குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் மற்றும் பாலை என்ற பெயரில் ஐந்து வகையான நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் தாம் செய்கின்ற தொழில்களின் பெயர்களை சொல்லி அழைக்கின்ற பழக்கம் அம்மக்களிடம் உருவாகியது.

உதாரணமாக கடல் சார்ந்த பகுதியில் மீன் பிடிக்கும் மக்கள் மீனவர் வலைஞர், உம்பளவர் என்றும், மருத நிலத்தில் வயல் வேலை செய்தவர்கள் கடைஞர், குடும்பர்கள் என்றும், காடு சார்ந்த பகுதியான முல்லை நிலத்தில் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்தமக்கள் இடையர்கள், ஆயர்கள் எனவும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் தேன் எடுத்தும், வேட்டையாடி வாழ்ந்த மக்கள் வேட்டுவர் மற்றும் குறவர் என்றும் தொழிற்சார்ந்துள்ள பெயர்களில் அழைத்துக் கொண்டதை கல்வெட்டுகள் நமக்கு உணர்த்துகின்றன.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சங்க காலத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி செய்த களப்பிரர்கள் தமிழ் மக்கள் இடையே தங்களது பண்பாட்டை பரப்பியபோது தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட தொடங்கின.

தொடர்ந்து பல்லவர்கள், சேர, சோழ,பாண்டியர் காலத்திலும் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டது.

அதிலும் இரு பிரிவுகளுக்கு இடையே மண உறவு ஏற்பட்டு அதனால் புதிய சமூகப் பிரிவுகள் உருவாகத் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படி உருவான மக்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அனுலோமா மற்றும் பிரிதிலோமா இனத்தவர்கள் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
கலப்பு சமூக மக்கள் வரலாறு

அனுலோமா பிரிவினர்

சோழர்கள் காலத்தில் வாழ்ந்த மக்களில் யார், யார் கலப்பு சமூகப் பிரிவு மக்கள் என்பதை கல்வெட்டுக்கள் காட்டுவதாக இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் விவரித்தார்.

அனுலோமா, பிரிதிலோமா என்று இரு கலப்பு சமூகப் பிரிவு மக்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இவற்றில் அனுலோமா என்பதற்கு உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தந்தைக்கும் தாழ்ந்த சாதியாக பிறரால் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்துள்ள மக்கள்" என்று அறிந்து கொள்ள முடிகிறது என்றார் பன்னீர்செல்வம்.

"அனுலோமா சமூகத்தைச் சேர்ந்த மக்களில் பாரசிவர்கள் என்பவர்கள் சிவபெருமானின் கோயில்களில் பூசை செய்பவர்கள். இவர்கள் பாண்டிய மன்னர்களின் காலத்தில் திருக்கோயில்களில் பூசை செய்வதற்கு பணியமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அவர்.

 
கலப்பு சமூக மக்கள் வரலாறு
படக்குறிப்பு,அனுலோமா சமூகத்தைச் உள்ள மக்களில் பாரசிவர்கள் என்பவர்கள் சிவபெருமானின் கோயில்களில் பூசை செய்பவர்கள் என கல்வெட்டுகள் கூறுகின்றன.

பாரசிவர்களின் பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் உள்ள சிவன் கோயிலில் ஜடவரும சுந்தரபாண்டியரின் 16-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1312) வெட்டப்பட்ட கல்வெட்டின் மூலம் பாரசிவர்கள் திருக்கோயிலில் பணியாற்றியுள்ளதை அறியலாம்.

"ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடையம்பன் மாரன திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவருக்கு யாண்டு 13-வது உடையார் ஊர் பாகம் கொண்ட அருளிய நாயனார் கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவர்க்கு விவாஸ்த்த பத்திரம் பண்ணிக் கொடுத்த பரிசாவது..." என தொடங்கும் கல்வெட்டில் பாரசிவர்களுக்கு பரிசு கொடுத்துள்ளதை அறிய முடிவதாகக் கூறுகிறார் பன்னீர்செல்வம்.

"பாண்டிய மண்டலம், சோழமண்டலம், மகதை மண்டலம், நடுவில் மண்டலம் ஆகிய பகுதியில் உள்ள திருக்கோயில்களில் பூசை செய்து வருகின்ற பாரசிவர்களுக்கு உரிமைகள் மற்றும் மரியாதை உண்டு என்று சொல்லியுள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது."

 
கலப்பு சமூக மக்கள் வரலாறு
படக்குறிப்பு,இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்

மேலும் பாரசிவர்கள் பற்றி போளூர் வட்டம் கப்பலூர் மற்றும் கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் கோயில்களிலும் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுவதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் கிடைத்துள்ள பாண்டியர்களின் கல்வெட்டுகளில் சிலவற்றில் பாரசிவர்கள் சிவபெருமானுக்கு பூசை செய்பவர்கள் என்ற ஒரே விதமான செய்திகள் மட்டும் அறிய முடிகின்றது. அதே நேரத்தில் பாரசிவர்கள் பிராமணர்களை விட சமூக அமைப்பில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்தவர்கள் என்பதும் புலப்படுவதாகவும் முனைவர் பன்னீர்செல்வம் கூறினார்.

பிரிதிலோமா பிரிவினர்

"பிரிதிலோமா என்ற சமஸ்கிருத சொல்லிற்கு தாழ்ந்த சாதியாக பிறரால் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தந்தைக்கும் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்ட பிரிவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்கள்" என்று பன்னீர்செல்வம் விளக்கினார்.

கலப்பின மக்கள் வரலாறு

பிரிதிலோமா பிரிவினரின் பணிகள், உரிமைகள்

புதுச்சேரி திருபுவனையில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் உள்ள விக்ரமச்சோழனின் 9-ம் ஆட்சியாண்டு (கி.பி 1127) கல்வெட்டின் மூலம் உத்கிரிஸ்ட் - ஆயோகவர் என்ற கலப்பு பிரிவைச் சார்ந்தவர்கள் வாழ்ந்துள்ளது அறிய முடிகிறது.

இதில் அவர்களுடைய உரிமைகள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

கலப்பின மக்கள் வரலாறு

இதே போல் பிரிதிலோமா பிரிவைச் சேர்ந்த சிவன் படவர்கள் பற்றி கரூர் அருகே திருமுக்கூடல் என்ற ஊரில் உள்ள கோவிலில் மாறவருமன் ராஜகேசரி வீரபாண்டிய தேவரின் 11-ம் ஆட்சியாண்டு (கி.பி .1344) கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அமுது படைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பிரிதிலோமா பிரிவை சேர்ந்தவர்கள் பணம் 20 தருவதாக ஒத்துக் கொண்டுள்ளதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது" என்கிறார் பன்னீர்செல்வம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/7/2024 at 06:44, ஏராளன் said:
அதிலும் இரு பிரிவுகளுக்கு இடையே மண உறவு ஏற்பட்டு அதனால் புதிய சமூகப் பிரிவுகள் உருவாகத் தொடங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படி உருவான மக்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டனர். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அனுலோமா மற்றும் பிரிதிலோமா இனத்தவர்கள் என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை கேள்விப்பட்டிராத தகவல்கள், மிக்க நன்றி ஏராளன்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.