Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"சிந்துவெளி ஒரு திராவிட நாகரிகம், கட்டாயம் ஆரிய நாகரிகம் அல்ல"
 
 
சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம்.
 
அதுமட்டும் அல்ல இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நிலங்கள் தேடி நாடோடியாக வந்த ஆயர் கூட்டத்தினர். கிராமப் புறக் கலாச்சாரம் கொண்டிருந்த இவர்கள் கி மு 500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளி மாதிரி நகர்ப்புறக் கலாச்சாரத்தை, நகரங்களை உருவாக்கவில்லை என்பது வரலாற்று உண்மையும் ஆகும். ஆகவே இந்தப் பின் புலத்தில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் வேதக் கலாச் சாரத்திற்குமான அடிப்படை வேறுபாடுகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்பத்தான் நாம் எது உண்மை எது பொய் என்பதை தீர்மானிக்கலாம்.
 
ஆரியரைப் பற்றி வேதத்தில் அவர்கள் ஓரளவாக இடையர்களாகவும் ஓரளவாக விவசாயம் சார்ந்த மக்களாகவும் காட்டுகிறது. மேலும் அவர்கள் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். அவர்களின் வீடுகள் பொதுவாக மூங்கிலால் கட்டப்பட்டவை. இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறுகள், வரிசையாக அமைக்கப் பட்ட வீதிகள், மழை நீர் வடிகால்கள் , சாக் கடைகள், மற்றும் குளியலறைகள் கொண்ட வீடுகளால் அவர்களின் நகர்ப்புற நாகரிக நகரம் நிறைந்திருந்தது.
 
"தனக்கு படையல் கொண்டு வந்த, வேத கால காசி நாட்டின் மன்னன் "திவோதாச", விற்காக,  நூறு கல் கோட்டைகளை இந்திரன் அழித்தான்" என்ற ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 20 இதை மேலும் உறுதிப்படுத்துகிறது, ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்தது இந்த சுலோகம் மூலம் தெரியவருகிறது. தசியூக்கள் என அழைக்கப் பட்ட, ஹரப்பாவிலிருந்த சாம்பன் என்னும் சம்பரன் எனும் பிற்காலச் சிந்துவெளியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்த அரசனை வெற்றி கொள்வதற்கு, சம்பரனின் பழம்பகைவனான, ஆரிய மன்னரான திவோதாச விற்கு இந்திரன் உதவியதை இது கூறுகிறது.
 
2. ரிக் வேத காலத்தில் இந்தோ ஆரியர் பாவித்த உலோகங்கள் பொதுவாக பொன், செம்பு அல்லது வெண்கலம் ஆகும். அதன் சற்று பின் அதாவது யசுர்வேத, அதர்வவேத காலத்தில் இந்த உலோகங்கள் வெள்ளி, இரும்பு போன்றவற்றால் அதிகப்படுத்தப் பட்டன. ஆனால் சிந்து சம வெளி மக்களிடம் வெள்ளி, பொன்னை விட முதன்மையாக உபயோகத்தில் இருந்து உள்ளது. மேலும் கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அவர்களிடம் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இருக்கவில்லை. ஆனால், இந்த ஆரியர்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தார்கள். இரும்பு ஆயுதங்களை உபயோகித்து ஆற்றங்கரைகளில் உள்ள காடுகளைத் திருத்திக் குடியிருப்புகளை உருவாக்கினவர்கள் என்பதும் குறிப் பிடத்தக்கது. இரும்பு வேதத்தில் அயஸ் [ayas] என்று அழைக்கப்பட்டது என பொதுவாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பொன் என்றால் இரும்பு, தங்கம், ஐந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்த்தான் கோவிலில் உள்ள சிலைகளை ஐம்பொன் சிலைகள் என்று கூறுகிறோம். அதே போலத்தான் அயஸ் என்ற சொல்லும் ஆகும். இதனால்த்தான் போலும் வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு.
 
3. வேதங்கள் மூலம் இந்தோ ஆரியன் வில், அம்பு, ஈட்டி, குத்துவாள், கோடாரி போன்ற தாக்குதலிற் பயன் படுத்துகிற ஆயுதங்களும் தடுப்பு நடவடிக்கைக்கு தலைக் கவசங்களும் உடல் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப் படுகிறது. ஆனால் சிந்து சமவெளி மக்களிடம் மேல்கூறிய ஆயுதங்களுடன் தண்டாயுதமும் இருந்தன. ஆனால் தற்காப்புக் கவசங்கள் காணப்படவில்லை. உதாரணமாக ‘ரிக் வேத’த்தின் பத்தாம் மண்டலத்தில் [ மண்டலம் 10 மந்திரம் 95 சுலோகம் 03] புரூரவா: "நீ இல்லாவிட்டால் என் அம்புப் பொதியிலிருந்து அம்பு எய்ய முடியாது. செல்வம் கிடைக்காது. நூற்றுக் கணக்கான பசுக்களை வெற்றி கொண்டு நான் கொண்டு வர இயலாது. வீரர்களில்லாமல் என் செயல்கள் சோபிக்காது. நீ இல்லா விட்டால் என் வீரர்கள் வீர முழக்கமிடவும் தயங்குகிறார்கள்."] என்ற புரூரவா-ஊர்வசியின் காதல் உரையாடலைக் காண்கிறோம்.
 
4. வேத கால ஆரியர்கள் இறைச்சி உண்பவர்கள். மேலும் பொதுவாக மீனை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் மீன் பிடிப்பதைப் பற்றி நேரடியாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சிந்து சம வெளி மக்களுக்கு மீன் பொதுவான உணவு. அங்கு மீன் அதிக அளவில் உள்ளது. அது போல மிக மெலிதான ஓடுகளைக் கொண்ட மெல்லுடலி, ஆமை போன்ற மற்ற கடல் உணவுகளும் அங்கு காணப்படுகின்றன. சோமா என்பது ஒரு பானத்தின் பெயர் மட்டு மல்ல. அது ஒரு கடவுளின் பெயராகவும் விளங்கியது. அந்தக் கடவுளுக்கு கால் நடைகள் உட்பட விலங்கினங்கள் உணவாகப் படைக்கப்பட்டன. அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப் பட்டன என்று ரிக்வேதம் 10.91.14 சொல்கிறது. மேலும் மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9 இதை உறுதிப் படுத்துகிறது. அதாவது, "இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்" என்கிறது. ஆரியர்கள் கிழக்கு பாரசீகத்தில் (Persia) இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதால் அவர்களின் முக்கிய உணவாக மாமிச உணவே இருந்தது என்பது இதனால் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.
 
5. வேத காலத்தில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை வேதங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிந்து சமவெளி மக்களுக்கு குதிரை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களது முத்திரைகளில் குதிரை காணப்படவில்லை. மேலும் மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96,பாடல் (சுலோகம்) 8 இப்படி கூறுகிறது: ‘சோமக் குடியனான இந்திரன், நீண்ட கழுத்தை யுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக் கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப் பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’ அது மட்டும் அல்ல ரிக் வேதத்தில் குதிரைகள் பற்றியும் அவற்றை வளர்த்தவர் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அந்தச் சமூகத்தவர்க்கு குதிரை ஒரு முக்கியமான வளர்ப்பு மிருகம் என்பதால் அது கடவுளுக்கு பலியாகவும் கொடுக்கப்பட்டது. வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் வணிகர் பயன்படுத்திய சுடுமண், மாவுக்கல் முத்திரைகளில் ஆடு, மாடு, யானை, காண்டாமிருகம், பன்றி, ஒட்டகம், மயில் போன்ற உயிரினம் சித்தரிக்கப் பட்டதைக் காணலாம். அவற்றில் இல்லாத விலங்கு குதிரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சிந்து வெளி நாகரிகத்துடன் தொடர்புடைய தொல்லியல் தடயங்களில் குதிரைகளோ குதிரை வண்டிகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்து வெளியில் 1920இல் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாதி உடைந்த முத்திரையின் பதிவைக் காட்டி சிலர் அது குதிரையின் உருவம் என்றும், சிந்துவெளி நாகரிகத்தவர் குதிரைகளை வளர்த்தனர் என்பதைத் தாம் கண்டு பிடித்து விட்டதாகவும் அறிவித்தனர். சிந்துவெளி நாகரிகத்தில் குதிரைகள் வளர்க்கப்பட்டன என்பதற்கு அவர்கள் காட்டிய ஆதாரங்கள் போலியானவை என்பதை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் மைக்கேல் விட்ஸலும் (Michael Witzel), வரலாற் றாய்வாளர் ஸ்டீவ் ஃபார்மரும் (Steve Farmer) திறம்பட விளக்கித் தம் கடுமையான மறுப்புகளை ப்ரண்ட்லைன் (Frontline, அக். 13, 2000) இதழில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் தன் வாழ்நாள் முழு வதையும் சிந்துவெளி ஆய்விற்கு அர்ப்பணித்திருக்கும் அஸ்கோ பர்ப்போலா (Asko Parpola) குதிரையின் பின்பாகம் என சித்தரித்த அந்த படம் உண்மையில் ஒற்றைக் கொம்புடன் சித்தரிக்கப்பட்ட மாட்டின் உருவமே என்பதைக் உறுதிப்படுத்தினார்.
 
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது. ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் [Horses of dusky colour stood beside me, ten chariots, Svanaya's gift, with mares to draw them. Kine [cows] numbering sixty thousand followed after. Kakṣīvān gained them when the days were closing.] (1.126.3). இவைகள் வேத காலத்தில் பசுவிற்கு எப்படி முக்கியம் கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.
 
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்து வெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, ரிக் வேதத்தில் இரண்டு பாடல்களில் [சுலோகங்களில்] ஒரு கை கொண்ட மிருகம்-Mrga Hastin-என யானை குறிக்கப்பட்டுள்ளது. பாடல், 1.64.7 "Mighty, with wondrous power and marvellously bright, self strong like mountains, ye glide swiftly on your way. Like the wild elephants ye eat the forests up when ye assume your strength among the bright red flames" என்று கூறுகிறது. யானையை சங்க காலத்தில் இதே மாதிரி ஒரு கை கொண்ட மிருகம் "கைம்மா" என்று கலித்தொகை 23 "இலங்கு ஒளி மருப்பின் கைம்மா" – பளபளப்பான பிரகாசமான தந்தங்களைக் கொண்ட யானை என்றும், புறநானுறு 368 "ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக் கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன" - ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலை போன்ற யானைகளெல்லாம் அம்பு பட்டு இறந்து கிடக்கின்றன என்றும் கூறுகிறது.
 
8. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர். உஷஸ் என்ற மிக பிரசித்தி பெற்ற சிறு தெய்வத்தை விட மேலும் அதிதி, ப்ரித்வி , இராத்திரி, சரஸ்வதி, வாக்கு போன்ற பெண் சிறு தெய்வங்களும் அங்கு காணப்படுகின்றன. அது மட்டும் அல்ல ஆரியர்கள் தந்தை வழிச் சமூகத்தினர். ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் தாய்வழிச் சமூக அமைப்புடைய திராவிடர்களாவர் என்பதில் சந்தேகம் இல்லை.
 
9. அது மட்டும் அல்ல சிந்து வெளி எழுத்துகள் கட்டாயம் இந்தோ ஆரியன் மொழியை எழுத பாவிக்கப் படவில்லை. ஏனென்றால் ஆரியர்கள் கி மு 1700 ஆண்டுவரை இந்தியா வரவில்லை. கி.மு. 1600 போன்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் நலிவடைய ஆரம்பித்தது. இந்த நாகரிகத்தின் அழிவும் ஆரியக் குடியேற்றங்களும் ஒரே காலத்தில் நடந்தது என்று ஜான் மார்ஷல் கருதுகிறார். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், பூர்வ குடியினரான தாசர்களுக்கும் ஆரியக் குடியேறிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்தன என்றும், தாசர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தம் வசப்படுத்த உதவுமாறு இந்திரன், அக்னி போன்ற கடவுளரை வேண்டினர் என்றும் சில ரிக் வேதப் பாடல்கள் கூறுகின்றன, உதாரணமாக "இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய எதிரிகளை (தாசர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்." என்று மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3 கூறுகிறது.
 
10. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப் படுகின்றன. ரிக் வேதம் 7,21,5 & 10,99,3 ஆகிய இரண்டு பாடல்களில் சிசின தேவர்களை அழி என்று வருகிறது. சிசினம் என்பது ஆண் குறி. ஆண்டவனை லிங்க வடிவில் வழிபட்டவனை அழி என பொருள் படுகிறது.
 
11. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப் பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப் படவில்லை.
 
12. வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் ஆரமில்லாச் சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகள் இருந்தன என்பதற்கு அங்கு கிடைத்த சுடுமண் பொம்மைகள் ஆதாரம், ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 

பி கு :  திராவிடம் என்ற சொல்லில் சில சர்ச்சைகள் தொடர்வது புரிகிறது. திராவிடம் என்பது உண்மையில் பழம் தமிழ். என்றாலும் இதில் இருந்து பிரிந்து / உருமாறி தோன்றிய மொழிகளை ஒரு குடும்பமாக உள்ளடக்க அன்று இந்த சொல் பாவிக்கப் பட்டு அது இன்னும் தொடர்கிறது. 

ஆகவே, நான் 'திராவிடம்' என்னும் வார்த்தையை தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல் - தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு - போன்ற கருத்துக்களில் மட்டுமே பாவித்து உள்ளேன். உதாரணமாக திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனை த்தும் தமிழ் மொழியே" என்றும் "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்று ள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

அதே போல கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் [வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்] த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் [திராவிடத்திலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்] வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்" என்று கூறுகிறார்.'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார் என்பதையும் கவனிக்க.

12936528_10206259873038517_7038746786892682903_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=a3RsUAMDknsQ7kNvgEI7SlC&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYACRC76TKfmNUYNe8Ppa1CV394ELBT5OSxim9UcFK1tCw&oe=66B8DC1D 12916915_10206259878918664_2450509347983486547_o.jpg?stp=dst-jpg_p403x403&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=AWL6Mq8031gQ7kNvgGaw68v&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYBiKZIbGnyKOM5JYWmKRCBrnWUgKOvJJOoubgBOFgh3mw&oe=66B8DAB8 
 
12963503_10206259880638707_5618944015178654405_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=4aswkxSLWDUQ7kNvgEZUE0K&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYB94yIIT3XLBmfyTDNv8uBJ5qtcl_eSS679bJFzUG3KiQ&oe=66B8CFBF 12919714_10206259881758735_1653864849249039562_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=LUBK46YsRN8Q7kNvgHMXUyR&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYDvYwLhAwY4do8PM5qSIJ4YEVv2GhZhDBGFU_JFX3OAvg&oe=66B8DA76 
 
11246017_10206259884358800_8103145755384077078_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=rqEKLU3htA0Q7kNvgHrl2ic&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYC0pm7UYmqniNnILmm5tLTidP-5z3YBRwc8BmNG53N76w&oe=66B8A9F2
 
 
 

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்

சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் சைவநெறி பாடப்பரப்பில் பாடசாலையில் படிக்கும் (ஆண்டு 9 இல்) போதே... இது தொடர்பில் ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன். சிந்துவெளி அடையாளங்கள் தமிழர் மரபை ஒட்டி காணப்படுகிறதே என்று.. குறிப்பாக பசு பதி பாசம் வடிவங்களில் இறையை காண்பது உட்பட. அதற்கு ஆசிரியரால் அன்று விளக்கம் தர முடியவில்லை. எதையோ சொல்லி சமாளிச்சிட்டார். 

இன்று சமூக வலையிலும் அன்றைய என் கேள்விக்கு விடை தேடுகிறார்கள். கீழடியில் காணப்பட்ட அடையாளச் சின்னங்களோடு சிந்து வெளி சின்னங்கள் பொருந்தி வருவதும் ஆராயப்பட்டு வருகிறது. 

இந்த கட்டுரைக்குள்.. தமிழர் மரபுக்கு அப்பால்.. உருவகிக்கப்பட்ட போலித் திராவிடத்தை புகுத்தாமல்.. தமிழர் மரபுகளோடு சம்பந்தப்படுத்திச் சென்றிருந்தால் சிறப்பு என்று தோன்றுகிறது. அதுதான் நியாயமும் கூட. திராவிடம் என்பது கட்டியமைப்பட்ட மாயை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.