Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"முதியோர்களின் வாழ்வின் சில நிகழ்வுகள்" / உராய்வு  [Events in senior's everyday life / Friction] 

 

 

கடந்த காலத்தில் கட்டழகாகத் திகழ்ந்தவர்கள், கம்பீரமாக தோற்றமளித்தவர்கள், வீரமான செயற்பாடுகளுடன் விரைவாக செயற்பட்டவர்களே இன்றைய முதியோர். இன்று கட்டழகு குலைந்து, கம்பீரம் குறைந்து, முதியோர் என்ற முத்திரை பதித்து இவர்கள் காலம் கழிக்கின்றனர். மனித வாழ்வில் மட்டுமல்ல அனைத்து உயிரினங்கள் வாழ்விலும் தவிர்க்க முடியாத இயற்கை நியதிகளில் ஒன்றுதான் முதுமையாகும்.  பொதுவாக 65 வயதைத் தாண்டியவர்களே முதியோர் எனக் கருதப்படுகின்றனர். இவர்கள் சிலவேளை 'தனக்கு வயதாகி விட்டதே என்று கவலைப்படுவதும் உண்டு. இது இயற்கையின் நியதி என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது.          
 
 
எப்படியென்றாலும்  இன்று முதியோர்கள் வீட்டிற்குள்ளேயே அல்லது வெளியேயோ எதாவது ஒன்றை கையாளும் பொழுது, தமக்கு வயது போய்விட்டதே என்ற உணர்வாலும், வயதிற்கு ஏற்ற பலயீனத்தாலும், மிகவும் கவனமாக அவதானமாக, மெதுவாக, தமது உடல் நிலையை கவனத்துக்கு எடுத்து,  அதை செயல்படுத்துகிறார்கள். முதியோர்கள் மிகவும் அபாயகரமான மற்றும் அபாயமற்ற  விபத்துக்கள் போன்றவற்றை [fatal and non fatal accidents] பொதுவாக விழுவது மூலம் [falls] அடைகிறார்கள். அது மட்டும் அல்ல , 65 அகவைக்கு மேற்பட்டோர்களில் , முக்கால் வாசி பேர் [almost three quarters] அதிகமாக கை, கால், தோள்களில் [ arms legs and shoulders] காயத்துக்கு அல்லது வலிகளுக்கு உள்ளாகிறார்கள்.  
 
 
அப்படியான ஒரு விபத்து முதியோர்களிடம் ஏற்படின்,  அதனால் காயங்கள் [injuries] எதாவது ஏற்படின், அது நீண்ட காலம் குணமடைய எடுக்கலாம், சிலவேளை அது முற்றாக குணமடையாமல் கூட போகலாம்? மேலும் முதியோர்கள் பொல்லு [பொல்லுத்தடி / walking stick] அல்லது சக்கர நாற்காலி [wheelchair] போன்றவற்றை தம் அசைவுக்கு [moving around] துணையாக மற்றும் இலகுவாக இருப்பதற்காக, அதிகமாக  பாவிக்கிறார்கள். சில முதியோர்கள் வாகனமும் செலுத்துகிறார்கள். எனவே இவை எல்லாவற்றிலும் உராய்வு அல்லது உராய்வு விசை [frictional force] முக்கிய பங்கு அளிக்கிறது. உதாரணமாக, ஒரு பொருள் மற்றொரு பொருளின் மீது சறுக்கும்போது, இரு தொடு பரப்புகளுக்கிடையே செயல்படும் விசை உராய்வு விசையாகும். பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் இந்த உராய்வு விசை செயல்படும் என்பது குறிப்பிடத் தக்கது.  
 
 
நாம் எம் இளம்பிராயத்தில் இருந்து உராய்வு என்ற சொல்லை கேள்விப்பட்டு இருந்தாலும், உராய்வு என்றால் என்ன ? விசை என்றால் என்ன ? மற்றும் இவையை  நாம் எப்படி எம் அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பு படுத்தலாம் என்பது, எல்லோருக்கும் தெரியும் என்று கருதமுடியாது. ஒரு பொருத்தமான உதாரணமாக, தடுப்பக்கருவியை [பிரேக்கைப் / brake] பயன்படுத்துவதன் மூலம் ஒரு வாகனத்தின் வேகத்தை வீதியில் குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவதை குறிக்கலாம். இன்னும் ஒரு ஆச்சரியமான உதாரணமாக, ஒரு கிராம புரத்தை கருத்தில் கொள்வோம். வயல் வெளிகளில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கட்டிப் போடும்போது நீளமான கயிற்றைக் கொண்டு கட்டுவார்கள். சில சமயம் கம்புகளில் முடிச்சுகள் போட்டுக் கட்டாமல், முளைக்கம்பு மீது நான்கைந்து சுற்றுகள் மட்டுமே சுற்றிவிட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதுவும் அவிழாமல் இருக்கும். முடிச்சுகள்தான் அவிழாமல் இருக்கிறது என்று நினைத்தால், முடிச்சு போடாமலேயே கயிறுகளும் அவிழ்வதில்லை. அது ஏன்? இதற்குக் காரணம், நூலுக்கும் பொருளுக்கும் உள்ள உராய்வு விசைதான். இதனால்தான் முடிச்சுகள் அவிழ்வதில்லை.
 
 
உராய்வு விசையை கவனத்தில் எடுத்தால், அது உராயும் இரு மேற்பரப்புகளின் தன்மையிலும், மற்றும் அதன் பொருளிலும் [The materials that are in contact and the nature of their surfaces]  தங்கி உள்ளது தெரியவரும். உதாரணமாக ஒரு மென்மையான மற்றும் ஈரமான தரையில் நடக்க கடினமாக இருப்பதும் மற்றும்  வாழைத்தோலில் மிதித்து நழுவி விழுவதும் இதனால் ஆகும். மேலும்  ஒரு வேளை உராய்வு விசை முற்றிலும் இல்லாமல் இருக்குமானால், மலைகள் மீது திரண்டு நிற்கும் பாறைகள் உருண்டு விழும். நடக்கவோ உட்காரவோ ஓடவோ முடியாமலும் சுவர்க் கடிகாரங்களை மாட்ட ஆணி அடிக்க முடியாமலும்  பூட்டைப் பூட்ட முடியாமலும் (பூட்டு செய்யவே முடியாது) போகும். 
 
 
உராய்வை வெல்ல அல்லது தோற்கடிக்க நாம் அதற்க்கு எதிராக கடும் வேலை செய்யவேண்டி இருந்தாலும், பல வேளைகளில் அது எமக்கு உதவும் விசையாகவும் உள்ளது. உதாரணமாக, எமது சப்பாத்துக்கும் தரைக்கும் இடையிலான உராய்வு, எம்மை வழுக்குவதில் இருந்து தடுக்கிறது [friction between our shoes and the floor stop us from slipping]. அது போல, காரின் சில்லுக்கும் வீதிக்கும் இடையில் உள்ள உராய்வு காரை சறுக்குவதில் இருந்து தடுக்கிறது [friction between tyres and the road stop cars from skidding]. அவ்வாறே பிரேக்குக்கும் மற்றும் சக்கரத்துக்கும் இடையில் உள்ள உராய்வு வண்டியை நிற்பாட்டிட அல்லது மெதுவாக்க உதவுகிறது [friction between the brakes and wheel help bikes and cars to slow down]. எனவே இங்கு எல்லாம் உராய்வு விசை பயனுள்ள விசையாக எமக்கு தொழிற்படுகிறது.
 
 
கார் அல்லது சக்கர நாற்காலியின் தடுப்பக்கருவியை அழுத்தும் பொழுது, பிரேக் பட்டைகள் [brake pads] சக்கரத்தை இறுக்கி பிடிக்க [grip the wheel], டயர்களும்  இதனால், தரையை இறுக்க பிடிக்கிறது. இறுதியாக வண்டி ஓய்விற்கு வருகிறது. எனவே பிரேக் பட்டைகள் மற்றும் டயர்கள் [brake pads and tyres] நல்ல தரத்தில் இருப்பது அவசியம். அப்ப தான் குறுகிய நேரத்தில் வாகனத்தை ஓய்வுநிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை முதியோர்கள் கட்டாயம் புரிந்து இருக்க  வேண்டும்.  இதன் மூலம் தமக்கு ஏற்படும் தேவையற்ற விபத்துகளை அவர்கள் தடுக்கமுடியும்.
 
 
உங்கள் சப்பாத்துக்கும் தரைக்கும் இடையில் உராய்வு இல்லாமல், உங்களால் என்றுமே முறையாக நடக்க முடியாது. உதாரணமாக உராய்வு இல்லையென்றால், நாம் எல்லோரும், எமக்கு மேல் எந்த கட்டுப்படும் இல்லாமல்  வழுக்கிக்கொண்டு இருப்போம். நீங்கள் நடக்கும் பொழுது, முன்னோக்கி போக முயற்சிப்பதற்காக. நீங்கள் உங்கள் பாதத்தை பின்னுக்குத் தள்ளுகிறீர்கள். உராய்வு உங்கள் சப்பாத்தை தரையுடன் வைத்திருப்பதால் [friction holds your shoe to the ground], உங்களால் நடக்க முடிகிறது. எனவே சவக்காரம் படிந்த அல்லது எண்ணெய் படித்த தரை, [soapy or oily surfaces] மிகவும் குறைந்தளவு உராய்வை கொண்டு இருப்பதால், அப்படியான வழுக்கும் மேற்பரப்புகளில் [slippery surfaces] நடப்பதை கட்டாயம் முதியோர் தவிர்க்கவேண்டும்.  
 
 
இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று உராயும் பொழுது கைகள் சூடு ஆவதை உணர்ந்து இருப்பீர்கள் [hands feel warm]. உராய்வே இதற்க்கு பொறுப்பாகும். அதாவது இரு கைகளும் ஒன்றுக்கு ஒன்று தேய்க்கும் பொழுது, அங்கு சில அளவு எதிர்ப்பு ஏற்படுகிறது [some amount of resistance]. ஆனால் அதே கையை, சும்மா ஒன்றாக இணைக்கும் பொழுது [just put your hands together], அங்கு ஒரு எதிர்ப்பும் இருக்காது. எனவே எந்த அளவு வெப்பமும் [no amount of warmness] கையில் ஏற்படவில்லை. இவ்வாறு மேலும் பல நிகழ்வுகள் உராய்வு விசை மூலம் அன்றாட வாழ்க்கையில் நடை பெறுகின்றன. 
 
 
அவை தீக்குச்சி கொளுத்துதல் [Lighting Matchsticks], நடத்தல் [Walking], எழுதல் [Writing], ஓட்டுதல் [Driving], சறுக்குதல் [ஸ்கேட்டிங் / Skating], சுவரில் ஒரு ஆணியைத் துளைத்தல் [Drilling a nail into the wall], கம்பளத்தை ஒரு குச்சியால் அடிப்பதன் மூலம்  தூசி அகற்றல் [The dusting of the carpet by beating it with a stick], இஸ்திரியிடல் [Ironing a shirt], பொருள்களைப் பிடித்துக் கொள்ளுதல் [Holding onto objects], உங்கள் விரலில் மோதிரம் [Ring on your finger] மற்றும் இவை போன்றவையாகும். அதில் சிலவற்றை நாம் இங்கு விளக்கமாக தந்துள்ளோம். இதை ஆதாரமாக கொண்டு, மற்றவற்றை நீங்கள் புத்தாகங்கள் ஊடாகவோ அல்லது வலைத்தளங்களிலோ அறியலாம். அது உங்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன்,  உங்களை மேலும் மேலும் அறியத் தூண்டும். 
 
 
[மூலம், ஆங்கிலத்தில் என் அண்ணா, 
கலாநிதி கந்தையா சுந்தரலிங்கம்
 
மொழிபெயர்ப்பு:
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
 
221680909_10219604370802621_6149994960671276118_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=Lq7-b-XbgH4Q7kNvgE_V0vU&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYClUygI-WwLbK1KtW13_eC75FOly4P-YcZBjj7_zTpQ1w&oe=669837F6 221724294_10219604374002701_6562571075943696156_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=wbLEo__vTVsQ7kNvgGfS6nH&_nc_ht=scontent-lhr6-2.xx&oh=00_AYAEBLoyd9WpeHjg4niQscSwREDiiCygOCLeX7wYDeoBJw&oe=66985E13
 
 
No photo description available.  221846723_10219604371362635_1706117603348367177_n.jpg?stp=dst-jpg_p235x350&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=33274f&_nc_ohc=y3VDKitHgKYQ7kNvgFMGnTK&_nc_ht=scontent-lhr6-1.xx&oh=00_AYAX9ko1qs9rRAE_I3WJkP6gUHbwtd6oB3jF5utcChPbuw&oe=66985D5F
 
 
 
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.