Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
நவீன கவிதை / "காதலற்ற கோடைக் காலம்"
 
 
"ஏழு வர்ண அழகு தொலைத்து
எங்கும் விரிந்து பரந்த நீல ஆகாயமே
விண்மீன்கள் சிமிட்டாத வானமே
கனவுகள் தொலைத்தேன் மகிழ்ச்சி இழந்தேன்
நீண்ட பகல் கோடையே
வரட்ச்சி தந்து வாழ்வை கடினமாக்கி
இதயத்தை வலியால் நிரப்புவது ஏன்?"
 
"காய்ந்த இலைகள் சருகாகி
வறண்ட மண்ணில் விளையாடுது
வெப்பம் தாங்காது குருவிகள் கூட்டுக்குள் உறங்குது
அழகிய பனித்துளிகள் எங்கும் இல்லை
தார் வீதி வெக்கையை வீசுது
மண் பாதை புழுதியில் குளிக்குது
வேர்வை நாற்றம் மூக்கை துளைக்குது
காதலியை அணைக்க வெப்பம் தடுக்குது!"
 
"வசந்தம் தந்த மென் காற்றும் இல்லை
மாரி தந்த குளிர் காற்றும் இல்லை
கனவுகள் கூட வெறுமையாக போகுது
உறைந்த என் இதயத்தை
கோடை வெப்பம் கூட சூடேற்றலை
விரக்தி, சோகம் கொஞ்சம் கொஞ்சமாக கவ்வுது
காதலற்ற கோடைக் காலம்
நீண்டு கொண்டு போகுது!"
 
"பருவமே, முன்பு என்னை மகிழ வைத்த
உன்னை பற்றிய எண்ணம்,
இப்ப அதன் நினைவு தான்,
எனக்கு சோகம் தருகிறது
உன்னை நினைக்கும் ஒவ்வொரு கணமும்
என் இதயம் உடைகிறது
ஏன் என்றால் என் இன்றைய வாழ்வில்
நீ இல்லை, என்னை ஏமாற்றி கோடையாய் வந்து விட்டாய்
ஏன் என் காதலை சுட்டு எரிகிறாய்!"
 
"இதயம் வலிக்குது,
நரகத்தைப் போல வருத்துது,
உன்னை தூக்கி எறிய முடியாமல்
உன்னை கைவிட முடியாமல்
இன்னும் சில மாதம் உன்னுடன் வாழ
உன் குரல் என் காதில் எதிரொலித்து
என் ஆன்மா இறந்துவிட்டது,
என் இதயம் அழுகுது
ஏன் என்றால் இம்முறை நீ என்னை காதலிக்கவில்லை
காதலற்ற கோடைக் காலமாய் போய்விட்டதே!"
 
"சூரியனை மறைக்கும் மேகத்தின் மந்தாரம்
ஏமாற்றி மறைந்திடும் மந்தார நிழல்
மனம் புழுங்குது கோடை வெப்பத்தில்
நீர் வற்றுது குளம் குட்டைகளில்
கதிரவன் ஒளி கண்டு உயிர் இனம் மகிழ
கொதிக்கும் வெயிலை நிறுத்தாயோ
காதலியை தழுவ விடாயோ
காதலற்ற கோடைக் காலம்
வேண்டாம் எமக்கு இனி !"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
294269392_10221352336380668_2182510315132058917_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=fBGrCNHz0l4Q7kNvgHl8IB6&_nc_ht=scontent-lhr8-1.xx&gid=Anh1Pv4CmUCd32S8soLgFaX&oh=00_AYBVxJD3bnSxfBiXclu7eY3B4qjct2G6JNjaKf0T4lVqcg&oe=66B16D19 294232170_10221352337420694_5223094308890993128_n.jpg?stp=dst-jpg_p480x480&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=qZypaxu9dfAQ7kNvgFOhVSP&_nc_ht=scontent-lhr6-2.xx&gid=Anh1Pv4CmUCd32S8soLgFaX&oh=00_AYBQqswjRo4R0tuCExFln1dQb7Xeo1LBNoxBAIC88Eu-Mg&oe=66B15DF8


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.