Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரிட்டனில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் : என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,REUTERS

கட்டுரை தகவல்
  • எழுதியவர், அலெக்ஸ் பின்லி, டான் ஜான்சன்
  • பதவி, பிபிசி செய்தி நிருபர்
  • 4 ஆகஸ்ட் 2024

பிரிட்டன் முழுவதும் தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 29-ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற ‘டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில்’ கலந்து கொண்ட மூன்று சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 3) பிரிட்டனின் பல்வேறு நகரங்களில் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டங்கள் கலவரமாக மாறியதையடுத்து 90-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஹல், லிவர்பூல், பிரிஸ்டல், மான்செஸ்டர், ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட், பிளாக்பூல், மற்றும் பெல்ஃபாஸ்ட் ஆகிய இடங்களில் அமைதியின்மை ஏற்பட்டது. இங்கு ஏவுகணைகள் வீசப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன, மற்றும் சில இடங்களில் காவல்துறையினர் தாக்கப்பட்டனர். மற்ற இடங்களில் நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறவில்லை.

‘வெறுப்புணர்வை விதைக்க’ முயற்சிக்கும் ‘தீவிரப் போராட்டக்காரர்களுக்கு’ (extremists) எதிராக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முழு ஆதரவை வழங்குவதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உறுதியளித்துள்ளார்.

லிவர்பூல் நகரத்தில், செங்கற்கள், பாட்டில்கள், மற்றும் வெடிப்பொருட்கள் ஆகியவை போலீசார் மீது வீசப்பட்டன. ஒரு அதிகாரி மீது போராட்டக்காரர்கள் நாற்காலி வீசியபோது அவருக்குத் தலையில் பலமாக அடிப்பட்டது. மற்றொரு அதிகாரியை அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இழுத்து தள்ளித் தாக்கினர்.

 
பிரிட்டனில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் : என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,PA

என்ன நடந்தது?

சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடியேற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களில் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களைச் சொல்லிக் கூச்சலிட்டனர். அவர்களுக்கு எதிராக மற்றொரு தரப்பு போராட்டத்தில் குதித்தது.

இதனைத் தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் லிவர்பூலின் லைம் ஸ்ட்ரீட் ஸ்டேஷன் அருகே மதிய உணவு நேரத்தில் கூடி, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கு அழைப்பு விடுத்து கோஷங்கள் எழுப்பினர். ‘அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ மற்றும் ‘நாஜி கொள்கைகளை, எங்கள் தெருக்களுக்கு வெளியே வைத்து கொள்ளுங்கள்’ என்று அவர்கள் கோஷமிட்டனர்.

இருதரப்பு போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் நாய்களுடன் அங்கு திரண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) அதிகாலை வரை அமைதியின்மை தொடர்ந்தது. பாதுகாப்பு உடைகள் அணிந்திருந்த காவல்துறை அதிகாரிகளை நோக்கி வெடிகள் வீசப்பட்டன. நகரின் வால்டன் பகுதியில் ஒரு நூலகத்திற்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அதை அணைக்க முயன்றனர் என்று மெர்சிசைட் போலீசார் தெரிவித்தனர். கடைகள் உடைக்கப்பட்டன.

இந்தப் போராட்டங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியது. இதில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
பிரிட்டனில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் : என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,SHUTTERSTOCK

அரசு தரப்பு கூறுவது என்ன?

பிரிட்டனின் உதவித் தலைமைக் காவலர் ஜென்னி சிம்ஸ் கூறுகையில், "மெர்சிசைடில் ஒழுங்கின்மை, வன்முறை நடவடிக்கைகளுக்கு இடமில்லை," என்றார்.

மேலும், "இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுக்கும் இந்த நகரத்திற்கும் அவமானத்தைத் தவிர வேறு எதையும் தேடித் தரவில்லை," என்றார்.

ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 4) போராட்டங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சனிக்கிழமை நடந்த அளவுக்கு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று நடந்த அமைச்சர்கள் கூட்டத்தைப் பற்றி அதிபர் கியர் ஸ்டாமரின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் வன்முறை நிகழ்வுகள் ஆகிய இரண்டும் வெவ்வேறு விஷயங்கள்," என்று பிரதமர் அந்தக் கூட்டத்தில் பேசியதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், "எந்தவிதமான வன்முறைக்கும் மன்னிப்பு இல்லை. நம் நகரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் காவல்துறைக்கு ஆதரவளிக்கிறது," என்று மீண்டும் வலியுறுத்தினார்.

சனிக்கிழமையன்று, உள்துறைச் செயலாளர் "ஏற்றுக்கொள்ள முடியாத கலவரத்தில் ஈடுபடுவோர் சிறைத்தண்டனை மற்றும் பிற தண்டனைகளுடன் பயணத் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும்,” என்றும் எச்சரித்தார். மேலும் அனைவரையும் கைது செய்யப் போதுமான சிறைச்சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

பிரிட்டனில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் : என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,PA

இரு குழுக்களுக்கு இடையே மோதல்

பிரிட்டனின் உள்துறைஸ் செயலாளர் யவெட் கூப்பர், "கிரிமினல் குற்றங்களுக்கும் வன்முறை மற்றும் ஒழுங்கின்மைக்கும் பிரிட்டனின் சாலைகளில் இடமில்லை," என்று கூறினார்.

கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு அரசின் முழு ஆதரவு உள்ளது என்றும் அவர் கூறினார்.

பிரிஸ்டல் நகரில், போராட்டக்காரர்களும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுக்களும் முற்றுகையில் ஈடுபட்டனர்.

ஒரு குழு ‘Rule Britannia’ என்ற பிரிட்டனின் தேசபக்திப் பாடலை பாடியது. "நான் இறக்கும் வரை இங்கிலாந்து தான். எங்கள் நாடு எங்களுக்கு திரும்ப வேண்டும்," என்று அந்தக் குழு உரத்தக் குரலில் பாடுவதைக் கேட்க முடிந்தது.

இனவெறிக்கு எதிரான குழு மீது பீர் கேன்கள் வீசப்பட்டன, மேலும் சில எதிர்ப்பாளர்கள் மீது அதிகாரிகள் தடியடி நடத்தினர்.

மான்செஸ்டரில், போலிசாருடன் போராட்டக்காரர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பிளாக்பூலில், ‘Rebellion Festival’ நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு எதிராக ஒரு குழு போராட்டத்தில் இறங்கியது. இரு குழுக்களிடையே மோதல் வெடித்ததால், பாட்டில்கள் மற்றும் நாற்காலிகள் வீசப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்துள்ளதாக லங்காஷயர் போலீசார் தெரிவித்தனர்.

பெல்ஃபாஸ்டில் ஒரு மசூதிக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் மீது பாட்டில், கற்கள் உள்ளிட்டவற்றை வீசியதால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்று பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான போராட்டங்கள் முதல் பெரிய கலவரங்கள் வரை நடந்தன.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அன்று பிரிட்டன் முழுவதும் நடத்தப்பட்ட அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வன்முறையாக மாறவில்லை. சில இடங்களில் எதிர்ப்பாளர்கள் மாலைக்குள் கலைந்து சென்றனர்.

சண்டர்லேண்டில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) இரவு நடந்த வன்முறையைத் தொடர்ந்து சனிக்கிழமை அன்று நடந்த போராட்டங்களில் காயமடைந்த நான்கு போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரிட்டனில் கலவரமாக மாறிய ஆர்ப்பாட்டம் : என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,LEANNE BROWN / BBC

வலதுசாரி ஆர்வலர்களின் திட்டம்

நூற்றுக்கணக்கான மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். ஒரு மசூதிக்கு வெளியே போராட்டத் தடுப்பு போலீஸார் மீது பீர் கேன்கள் மற்றும் செங்கற்கள் வீசப்பட்டன மற்றும் குடிமக்கள் ஆலோசனை அலுவலகம் எரிக்கப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவுத்போர்ட்டில் ஒரு புதிய போராட்டம் உட்பட, வார இறுதியில் பிரிட்டன் முழுவதும் தீவிர வலதுசாரி ஆர்வலர்களால் குறைந்தபட்சம் 30 ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாக பிபிசி கண்டறிந்துள்ளது.

வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இந்த வார இறுதியில் கூடுதலாக 70 வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

ரகசிய உள்துறை செயலர் ஜேம்ஸ் (Shadow home secretary) பொது ஒழுங்கை மீட்டெடுக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கவும் மற்றும் கலவரக்காரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பவும் அதிபர் மற்றும் உள்துறை செயலாளரையும் அழைத்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் ஒரு புதிய தேசிய வன்முறைத் தடுப்பு முன்முயற்சியை பிரிட்டன் பிரதமர் வெளியிட்டார். இது வன்முறை அமைப்புகளை எதிர்த்துப் போராடும் முயற்சியில் உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்ற காவல்துறைக்கு உதவுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு

பிரித்தானிய (UK) பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஜூலை 29ம் திகதி பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் அக்சல் ருடகுபனா என்ற 17 வயதுடைய சிறுவன் நடத்திய பயங்கர தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில் கலவரங்கள் வெடித்தன.

இந்த நிலையில், அதிதீவிர வலதுசாரிகள் பிரித்தானியா முழுவதும் 30க்கும் மேற்பட்ட பேரணி கூட்டங்களை நடத்த திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கோப்ரா கூட்டம்

குறித்த பேரணிகள் தீவிர வலதுசாரி பேரணிகளின் பெரிய நாளாக இருக்கும் என கருதப்படுகிறது.

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு | Starmer Again Called Cobra Meeting Tonight

இதன் படி, இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் மீண்டும் இன்று இரவு கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த அவசர கூட்டத்திற்கு அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்துக கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர சூழ்நிலை

கோப்ரா என்பது உள்நாட்டு அமைதியின்மை, வெள்ளம் போன்ற அவசர சூழ்நிலைகளை கையாளுவதற்கு அழைக்கப்படும் ஒரு கூட்டமாகும்.(Cabinet Office Briefing Room A)

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு | Starmer Again Called Cobra Meeting Tonight

எவ்வாறாயினும், நேற்றையதினமும் கலவரங்களை கட்டுபடுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கூட்டத்தை கூட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://ibctamil.com/article/starmer-again-called-cobra-meeting-tonight-1722971659?itm_source=parsely-top

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வலதுசாரி போராட்டக்காரர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்- பிரிட்டனில் என்ன நடக்கிறது?

வலதுசாரி போராட்டக்காரர்களுக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரிட்டனில் ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர். கட்டுரை தகவல்
  • எழுதியவர், லூசி மானிங், மல்லோரி மோன்ச்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து பிறகு, நேற்று (07-08-2024) இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களின் வீதிகளில், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணிகளை நடத்தினர்.

வடக்கு லண்டன், பிரிஸ்டல் மற்றும் நியூகேஸில் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் இவர்கள் ஒன்றுகூடி பெரும்பாலும் அமைதியான முறையில் ஊர்வலம் சென்றனர்.

"அகதிகள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்" என்று கோஷமிட்டவாறு இவர்கள் சென்றனர்.

கடந்த வார நிகழ்வுகளுக்கு பிறகு, மேலும் 100க்கும் மேற்பட்ட ‘புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டங்கள்’ நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆயிரக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளி, ஜூலை 29 அன்று சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகளை கத்தியால் தாக்கி, கொலை செய்த நபர் ‘ஒரு முஸ்லிம் என்றும், அவர் படகு மூலம் பிரிட்டனுக்குள் நுழைந்த அகதி’ என்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியதே ஆகும். இதன் தொடர்ச்சியாக பிரிட்டனில் கலவரங்கள் வெடித்தன.

மசூதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வசிக்கும் விடுதிகள், இந்த கலவரங்களின் போது குறிவைத்து தாக்கப்பட்டன. சில கடைகள் எரிக்கப்பட்டு, சூறையாடப்பட்டன .

புதன்கிழமை (07-08-2024), இங்கிலாந்து முழுவதும் உள்ள வணிக வீதிகளில், மேலும் வன்முறை நிகழ்வுகள் நடக்குமோ என்ற அச்சத்தில் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை முன்கூட்டியே மூடிவிட்டனர்.

வழக்கறிஞர்களின் நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்களின் மீது தாக்குதல் நடக்கும் என வாட்சாப் குழுக்களில் எச்சரிக்கைகள் பகிரப்பட்டதால், குடியேற்றம் தொடர்பான வழக்குகளை கையாளும் வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆனால் நேற்று மாலையில் ஒரு சில கைதுகள் மட்டுமே பதிவாகின. இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இங்கிலாந்தில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன.

‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’

‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’

லிவர்பூல் நகரில் உள்ள புகலிட சேவை அலுவலகத்திற்கு வெளியே, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.

லண்டனில், வால்தம்ஸ்டோ மற்றும் நார்த் ஃபின்ச்லியில் நடந்த இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாகவும், ‘பெரிய அசம்பாவிதம் இல்லாமல் பேரணிகள் கடந்து சென்றதாகவும்’ காவல்துறை கூறியது.

சுமார் 1,500 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’ பிரிஸ்டலில் கூடினர். அங்குள்ள வீதிகள் தொழிற்சங்கவாதிகள், பாசிச எதிர்ப்பாளர்கள், கறுப்பின மக்கள் மற்றும் ஆசிய சமூகத்தின் உறுப்பினர்களால் நிரம்பியிருந்தன.

பிரைட்டனில், குடியுரிமை மற்றும் அகதிகள் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞர் அலுவலகம் இருப்பதாக நம்பப்பட்ட கட்டிடத்திற்கு வெளியே எட்டு புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்கள் கூடினர்.

ஆனால் அவர்களைச் சூழந்த 2,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, அவர்களை அங்கிருந்து விரட்டினர். பின்னர் காவல்துறை அந்த எட்டு பேர் இருந்த இடத்தைச் சூழ்ந்தது.

நியூகேஸில் , சுமார் 1,000 ‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’, பெரும்பாலும் முஸ்லிம்கள், பீக்கன் மையத்தின் முன் இருந்த நடைபாதையில் கூடினர். அங்குள்ள குடியேற்றச் சேவை வணிக மையம் ஒன்று தாக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் அவர்கள் அங்கு கூடினர்.

சமூக ஊடகங்களில் பரவிய, உறுதிப்படுத்தப்பட்ட காணொளி ஒன்றில், அக்ரிங்டன் நகரின் வீதிகளில் மக்கள் முஸ்லிம்களைக் கட்டித் தழுவி ஆறுதல் கூறியதைக் காண முடிந்தது.

சவுத்தாம்ப்டனில், க்ரோஸ்வெனர் சதுக்கத்தில் கூடிய 300 முதல் 400 பேர், "இனவெறியர்களே திரும்பிச் செல்லுங்கள்" மற்றும் "இங்கு இனவெறிக்கு இடமில்லை" என்று கோஷமிட்டனர் . சுமார் 10 புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பாளர்களும் அந்தப் பகுதிக்கு வந்தனர், இரு குழுக்களும் காவல்துறையினரால் தனித்தனியாக தடுத்து நிறுத்தப்பட்டனர். ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டார்.

‘இனவெறி எதிர்ப்பாளர்கள்’

இனவெறி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்ட 20 வயது செவிலியர் நாசர், தனது சக செவிலியர்கள் யாரும் ஆங்கிலேயர் அல்ல என்றும், தனது ஆதரவைக் காட்ட இங்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

"எனது அப்பா அம்மா பிரிட்டனில் பிறக்கவில்லை, நான் இங்கே பிறந்தேன். எனது பெற்றோர் வாழ இங்கு வந்தார்கள் என்ற காரணத்திற்காக என் மீது தாக்குதல் நடத்த நான் அனுமதிக்கமாட்டேன்" என்று அவர் கூறுகிறார்.

"எங்கள் எதிர்ப்பு அவர்களை பயமுறுத்துகிறது. அதனால்தான் அவர்கள் (கலவரக்காரர்கள்) வரவில்லை" என்று கிளாரா செர்ரா லோபஸ் கூறுகிறார்.

"அமைதியை, அன்பை விரும்புபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் (கலவரக்காரர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குடியேற்றம் இல்லாமல் பிரிட்டன் கிடையாது." என்று கூறினார் கிளாரா.

 

பக்கிங்ஹாம் அரண்மனை கூறியது என்ன?

இனவெறி எதிர்ப்பு போராட்டங்கள்

பட மூலாதாரம்,NIKI SORABJEE

படக்குறிப்பு,இங்கிலாந்தின் பல பகுதிகளில் ‘இனவெறி எதிர்ப்பு போராட்டங்கள்’ பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றன

கடந்த வாரம் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக மொத்தம் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, சிலர் ஏற்கனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

சவுத்போர்ட் மற்றும் லிவர்பூல் நகரங்களில் வன்முறைச் சீர்கேட்டில் ஈடுபட்டதற்காக மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது .

புதன் மாலை பெரும்பாலும் அமைதியாக நடத்தப்பட்ட பேரணிகள், கடந்த வார கலவரங்களின் கைதுகள் மற்றும் தண்டனைகள், இனவெறி வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் மக்கள் என பிரிட்டனில் பல விஷயங்கள் நடந்துள்ளன.

ஆனால், இவையெல்லாம் புதிய கலவரங்களைத் தொடங்க வேண்டும் என திட்டமிடும் கும்பல்களிடம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி.

குரோய்டன் நகரில் ஒரு நிகழ்வு பதிவாகியுள்ளது என்றும், ஆனால் அது போராட்டங்களுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்று லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகம் கூறியது. சுமார் 50 பேர் கூடி, அதிகாரிகள் மீது பொருட்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்தனர். எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

பெல்ஃபாஸ்ட் நகரிலும் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர் , அங்கு சில இடங்களுக்கு தீ வைக்கப்பட்டது மற்றும் அதிகாரிகள் மீது பொருட்கள் வீசப்பட்டன.

புதனன்று, துணைப் பிரதம மந்திரி ஏஞ்சலா ரெய்னர், புலம்பெயர்ந்தோர் தங்கியுள்ள விடுதியான ‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்ஸை’ பார்வையிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரோதர்ஹாமில் உள்ள இந்த விடுதி தாக்கப்பட்டது.

கலவரத்தில் ஈடுபடுபவர்கள் "சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்" என்று உறுதியளித்த அவர், "அதிலிருந்து விலகி இருக்குமாறு” சாமானிய மக்களை வலியுறுத்தினார்.

போராட்டக்காரர்களுக்கு உண்மையில் ‘குடியேற்றம்’ குறித்து நியாயமான கவலைகள் உள்ளதா என்று கேட்டதற்கு, "வீதிகளில் இறங்கி, காவல்துறை மீது ஏவுகணைகளை வீசுவது, விடுதிகளைத் தாக்குவது ஆகியவை நியாயமான செயல்கள் அல்ல. இந்த நாட்டில் அத்தகைய அரசியலை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. அப்படி செய்பவர்களுக்கு இங்கு இடமில்லை. இது மூர்க்கத்தனம்.” என்று கூறினார் ஏஞ்சலா ரெய்னர்.

பக்கிங்ஹாம் அரண்மனையின் கூற்றுப்படி, நாடு முழுவதும் அரங்கேறும் நிகழ்வுகள் குறித்து அரசர் சார்லஸுக்கு தினமும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் உடனடியாக அவர் இதில் தலையிடுவோ அல்லது பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவோ மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. ஆனால்.. ” - வன்முறையால் அச்சத்தில் இருக்கும் பிரிட்டன் முஸ்லிம் சமூகம்

ஹுமா கான்
படக்குறிப்பு,கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார் ஹுமா கான் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரேடா எல் மாவி, மான்செஸ்டரில் இருந்து
  • பதவி, பிபிசி அரபி
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

"மக்கள் எதை போராட்டங்கள் என்கிறார்கள், நான் உண்மையில் இந்த போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று அழைப்பேன்” என்கிறார் ஹுமா கான்.

ஹுமா கான் கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார். உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

பிரிட்டன் நகரங்களில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அவர் சாதாரணமாக எடுத்து கொண்டு அன்றாட பணிகளை தொடர தீர்மானித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அவ்வப்போது மன பதற்றம் அடைந்தார்.

"போராட்டங்களை பார்த்த போது முதலில் அதிர்ச்சியாக இருந்தது. வன்முறையை மக்கள் போராட்டங்கள் என்று சொல்கின்றனர். நான் உண்மையில் அதை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று சொல்வேன். சமூக ஊடக வதந்திகளிலிருந்து அது எப்படி பொய்யாக உருவானது என்பது அதிர்ச்சியாக உள்ளது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அவர் தனது வழக்கமான பணிகளை இப்போதைக்கு மாற்றப்போவதில்லை என்று கூறினாலும், எச்சரிக்கையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.

"என் மத நம்பிக்கைகளுக்காகவும், என் தோற்றத்துக்காகவும், என் உடைகளுக்காகவும் நான் குறி வைக்கப்படுகிறேன். துன்புறுத்தலுக்கு ஆளாகிறேன்.”

“நான் பயங்கரவாதத்தை பார்த்து பயப்பட மாட்டேன்… ஆனால் ஒவ்வொரு முறையும் நான் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது என் மனதில் அந்த அச்ச உணர்வு இருக்கிறது. எனக்கு ஏதாவது நடந்துவிடுமோ, ஆபத்தில் இருக்கிறேனா என பதற்றமடைகிறேன்" என்று அவர் விவரித்தார்.

பிரிட்டனின் என்ன நடக்கிறது?

ஜூலை 29 அன்று இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டதில் இருந்து பரவலான கலவரம் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களில் பரவியுள்ளது. ஆன்லைனில் தவறான தகவல், தீவிர வலதுசாரிகள் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றால் வன்முறை தூண்டப்பட்டு அரங்கேறியது.

சவுத்போர்ட் கத்தி குத்து நிகழ்வுக்கு பிறகு, இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒரு படகில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரவியது. அவர் முஸ்லிம் என்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவின.

விரைவில், வன்முறை வெடித்தது. 2011 ல் நடந்த கலவரங்களுக்குப் பிறகு காணப்படாத அளவுக்கு அழிவுக் காட்சிகளை காண முடிந்தது.

ஆலா
படக்குறிப்பு,மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா

பிரிட்டன் முஸ்லிம்கள் என்ன கூறுகிறார்கள்?

வன்முறையால் ஏற்படும் அமைதியின்மை அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும், ஆனால் எல்லா நேரங்களிலும் அது பேரழிவை ஏற்படுத்தக் கூடியது அல்ல.

செவ்வாயன்று , மான்செஸ்டரின் புறநகரில் நகரின் வடமேற்கில், உள்ள சால்ஃபோர்ட் ஷாப்பிங் சென்டருக்கு மதிய வேளையில் சென்றபோது, அது மிகவும் அமைதியாக இருந்தது.

அந்த நாளின் பிற்பகுதியில் போராட்டங்கள் நடைபெறும் என்று ஆன்லைனில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தததை அடுத்து வணிக வளாகங்களை முன்கூட்டியே மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அந்த பெரிய, காலியான வளாகத்தில் ஒரு சிலரை மட்டுமே காண முடிந்தது. ஒரு சில முகமூடி அணிந்த இளைஞர்களை மட்டுமே போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், அவர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர், ஆனால் போராட்டம் நடத்தும் அறிகுறி இல்லை.

மான்செஸ்டரின் தெற்குப் பகுதியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்தது.

மோஸ் சைட் (Moss Side) என்னும் பகுதியில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அதிகளவிலான முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தன.

அப்பகுதியில் வேலை செய்யும் மற்றும் வசிக்கும் பலர் "எந்த பிரச்னையும் இல்லை, பாதுகாப்பாக உணர்கிறோம் " என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளை கவலையுடன் கண்காணித்து வருகின்றனர்.

"நான் 2018 இல் சிரியாவிலிருந்து இங்கு வந்தேன், நானும் எனது குடும்பமும் இங்கு பாதுகாப்பான இருப்பிடத்தை கண்டடைந்தோம்" என்று மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா கூறுகிறார்.

"சமீபத்திய நிகழ்வுகள் நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தற்போதைக்கு, நான் பெரிதாக யார் கவனத்திலும் விழாமல் அமைதியாக வசித்து வருகிறேன். நான் மீண்டும் ஒரு துன்புறுத்தலை உணர விரும்பவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அப்துல் ஹக்கீம்
படக்குறிப்பு,அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர்.

அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர். தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் முஸ்லிம் குழுக்களுடன் மோதுவதைக் குறித்து அவர் கவலைப்படுகிறார்.

"இந்த இரண்டு குழுக்கள் சந்தித்தால், அவர்கள் ஒரு கலவரத்தை உருவாக்கலாம், உள்நாட்டுப் போரை உருவாக்கலாம். சோமாலியாவிலிருந்து இந்த மான்செஸ்டருக்கு என்னைத் துரத்தியது போலவே மீண்டும் ஒரு நிகழ்வு நடக்கலாம்"

மசூதிகள், வணிகங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாக்க முஸ்லிம் சமூகத்தின் அழைப்பு குறித்தும் அலா வருத்தப்படுகிறார் - "தேவைப்பட்டால் வன்முறையைப் பயன்படுத்துங்கள்” என்னும் அழைப்பு அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

“இதில் எனக்கு உடன்பாடு இல்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்தும் நடக்க வேண்டும்.”

"எங்கள் மசூதிகளைப் பாதுகாக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன், மேலும் நமது நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் பாதுகாக்க வேண்டும், ஆனால் இதை நாமாக செய்தால், நம்மை பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவார்கள். அதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது." என்றார்.

இந்த கலவரத்தால் இளைய தலைமுறையினருக்கும் பாதிப்பு உள்ளது என்கிறார் ஹுமா கான்.

“எனது நெருங்கிய உறவுக்கார சிறுவர்களிடம் நடக்கும் நிகழ்வுகளை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கடினமாக இருப்பது அவர்களுக்கு விவரித்துக் கூறுவதுதான். அவர்கள் 12, 10 மற்றும் 7 ஆகிய வயதில் இருக்கும் சிறுவர்கள். அவர்களிடம் மான்செஸ்டரின் எங்கள் தெருக்களில் நடப்பதற்கு அனைவரும் காரணமல்ல, அனைவரும் தீங்கு விளைவிப்பவர்கள் அல்ல என்று எப்படி உறுதியளிக்க போகிறேன்? இந்த பன்முக கலாச்சார சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் இந்தப் போராட்டம் பிரதிபலிக்கவில்லை” என்றார்.

 

‘இங்கு இனவெறியை நான் அனுபவித்ததே இல்லை’

டாக்டர் ஜவாத் அமீன்
படக்குறிப்பு,"கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்" என்கிறார் டாக்டர் ஜவாத் அமீன்

சிரியாவைச் சேர்ந்த சயீத், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து, ஐரோப்பாவைச் சுற்றிப் பயணங்களை மேற்கொண்டார்.

"நான் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தேன், என்னிடம் ஸ்வீடிஷ் பாஸ்போர்ட் உள்ளது. நான் வேண்டுமென்றே இந்த நாட்டிற்கு [பிரிட்டன்] வந்தேன், ஏனென்றால் அனைத்து தரப்பின் நம்பிக்கைகளும் மதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் - அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.”

“சமீபத்திய இனவெறி நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் இங்கு இனவெறியைக் கண்டதில்லை. இந்த செய்தியைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் கொஞ்சம் பயந்தோம், இது எங்களுக்கு அசாதாரணமான ஒன்று, ஏனென்றால் நாங்கள் இப்படி நிகழ்வை பார்ப்பது அல்லது கேட்பது இதுவே முதல் முறை."

"நான் மூன்று ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் உதவும் பண்பு கொண்டவர்கள். அவர்கள் என் மொழி தடையை உடைக்க உதவுகிறார்கள், ஆனால் நான் செய்திகளில் பார்த்தது உண்மையில் நான் பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது."

கிரேட்டர் மான்செஸ்டர் முஸ்லிம் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் டாக்டர் ஜவாத் அமீன் கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

"சவுத்போர்ட்டில் இந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றிய கவலை என்னவென்றால், ஆன்லைனில் வெறுப்பை பரப்ப விரும்புபவர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் இந்த கலவரம் தூண்டப்பட்டது என்பது தான்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"தாக்குதல் நடத்தியவர் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் பார்த்த அந்த வன்முறைக்கு அது அடிப்படையாக இருக்கக்கூடாது." என்றார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.