Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
டைட்டானிக் கப்பல், டயானா சிலை

பட மூலாதாரம்,ATLANTIC PRODUCTIONS/MAGELLAN

படக்குறிப்பு, கடலுக்கடியில் உள்ள டைட்டானிக் கப்பலும், அதில் இருந்த டயானா சிலையும். கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரெபேக்கா மோரெல் மற்றும் அலிசன் பிரான்சிஸ்
  • பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

டைட்டானிக் என்றவுடன் நினைவுக்கு வருவது கப்பலின் கூர்மையான முன் பகுதி, அதிலுள்ள உலோக பிடிமானங்களே. அந்த இடத்தில் ஜாக் ? ரோஸ் ஜோடி நிற்பது போன்ற திரைப்படக் காட்சிகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அந்த உலோக பிடிமானங்கள் தற்போது உடைந்து கீழே விழுந்துள்ளன.

புதிய ஆய்வுகள், டைட்டானிக் கப்பல் மெல்லமெல்ல சேதமடைந்ததன் விளைவுகளை வெளிப்படுத்தியுள்ளன. அதன் பிடிமானங்களில் பெரும்பாலானவை உடைந்து கடலின் கீழ் தளத்தில் உள்ளன.

பிரபலமான திரைப்படக் காட்சியின் மூலம் ரோஸ் - ஜாக் ஜோடி இந்த பிடிமானங்களை மக்கள் மனதில் இருந்து நீங்காத ஒன்றாக்கி விட்டது. இந்த ஆண்டு கோடைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எண்ணற்ற ரோபோ ஆய்வுகள், அந்த பிடிமானங்களை கப்பல் இழந்து விட்டதை உறுதிப்படுத்தியுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடலடியில் கப்பல் கிடந்ததன் விளைவாக எப்படி அதன் பாகங்கள் சிதைந்து உருமாறி வருகின்றன என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.

1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் கன்னிப் பயணத்தை மேற்கொண்டிருந்த டைட்டானிக் கப்பல் ஒரு பெரிய பனிப்பாறையின் மீது மோதியதில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர்.

 
 

“டைட்டானிக் கப்பலின் முன் பகுதி மிகவும் பிரபலமானது. பாப் கலாசாரத்தில் இந்த தருணங்கள் எல்லாம் இருக்கின்றன- கப்பல் சிதைவு பற்றி யோசிக்கும் போது அது தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது அது அதே நிலையில் இல்லை” என்கிறார், இந்த புதிய தேடல்களை நடத்திய ஆர்.எம்.எஸ் டைட்டானிக் நிறுவனத்தின் இயக்குநர் தோமசினா ரே.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு சமயத்தில் 4.5 மீட்டர் நீளமான இந்த பிடிமானங்கள் கீழே விழுந்திருக்கலாம் என்று ஆய்வுக்குழு கருதுகிறது.

2022-ம் ஆண்டு ஆழ்கடல் வரைபட நிறுவனமான மெகலன் மற்றும் ஆவணப்பட தயாரிப்பு நிறுவனமான அட்லாண்டிக் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் போது கிடைத்தப் படங்களில் பிடிமானங்கள் கப்பலில் இருப்பது தெரிந்தது. எனினும் அப்போதே அவை சிதைய தொடங்கியிருந்தன.

“ஒரு கட்டத்தில் கம்பிகள் உதிர தொடங்கி கீழே விழுந்துவிட்டன.” என்கிறார் தோமசினா ரே.

டைட்டானிக் கப்பல், டயானா சிலை

பட மூலாதாரம்,RMS TITANIC INC

படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலின் முன்பகுதி (2010 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட படங்கள் ஒப்பீடு)
டைட்டானிக் கப்பல், டயானா சிலை

பட மூலாதாரம்,RMS TITANIC INC

படக்குறிப்பு, கப்பலின் முன் பகுதியில் உள்ள பிடிமானங்கள் உடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.  

ஆய்வில் கிடைத்த 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்கள்

ஆர்.எ. எஸ் டைட்டானிக் நிறுவனம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வை மேற்கொண்டது.

தொலைதூரத்தில் இயக்கப்பட்ட இரண்டு கருவிகள் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட படங்களையும் 24 மணி நேர உயர்தர காட்சிகளையும் எடுத்தன. அவை 800 மீட்டர் இடைவெளியில் கிடக்கும் கப்பலின் முன் பகுதியையும் பின் பகுதியையும் அதை சுற்றியிருக்கும் பொருட்களையும் படம் பிடித்தன.

இந்த காட்சிகளை கவனமாக ஆராய்ந்து வரும் நிறுவனம் , கப்பல் சிதைந்த இடத்தின் துல்லிய தகவல்களை கொண்டு டிஜிட்டல் 3டி ஸ்கேனை உருவாக்கும். வரும் மாதங்களில் மேலும் பல புகைப்படங்கள் வெளிவரும்.

டைட்டானிக் கப்பல், டயானா சிலை

பட மூலாதாரம்,RMS TITANIC INC

படக்குறிப்பு, கடல் தரையில் கப்பலுக்கு அருகில் பிடிமானங்கள் விழுந்து கிடக்கின்றன.  

112 ஆண்டுகளாக ஆழ்கடலில் கிடக்கும் வெண்கல சிலை

டைட்டானிக் கப்பல், டயானா சிலை

பட மூலாதாரம்,RMS TITANIC INC

படக்குறிப்பு, கப்பலின் முதல் வகுப்பு ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலை.

இந்த ஆய்வுக் குழு மற்றொரு பொருளையும் கண்டுபிடித்துள்ளது.

1986ம் ஆண்டு “வெர்சைல்ஸின் டயானா” என்ற வெண்கல சிலையை ராபர் பல்லார்ட் புகைப்படம் எடுத்திருந்தார். 1985-ம் ஆண்டில் டைட்டானிக்கின் சிதைவுகளை கண்டுபிடித்திருந்தவர் அவர்.

ஆனால் அந்த சிலை குறிப்பாக எந்த இடத்தில் இருந்தது என்று தெரியாததால், அதன் பிறகு வேறு எவராலும் அந்த சிலையை காண முடியவில்லை. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழிவுகளுக்கு இடையில் முகம் மேலே தெரியும் வகையில் அந்த சிலை இருந்தது.

“வைக்கோல் போரில் குண்டூசியை தேடுவது போல் இருந்தது. மீண்டும் இந்த ஆண்டு அந்த சிலையை கண்டுபிடித்தது மிகவும் முக்கியமானது” என்கிறார் டைட்டானிக் ஆய்வாளர் மற்றும் விட்னஸ் டைட்டானிக் வலையொலியின் தொகுப்பாளர் ஜேம்ஸ் பெனகா.

டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது இந்த சிலை. “முதல் வகுப்பு ஓய்வறை தான் கப்பலில் இருந்த மிகவும் அழகான அறை. அந்த அறையின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தது இந்த வெண்கல சிலை” என்கிறார் அவர்.

“டைட்டானிக் இரண்டாக பிளவுப்பட்ட போது, அந்த ஓய்வறையும் பிளவுபட்டது. அப்போது ஏற்பட்ட சேதத்தில் சிதைவுகளின் இருளுக்குள் டயானா சிலை சிக்கிக் கொண்டது” என்றார் அவர்.

டைட்டானிக் கப்பலின் முன் பகுதி சிதைவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 1912ம் ஆண்டு பனிப்பாறையின் மீது மோதியதில் டைடானிக் கப்பலில் இருந்த 1500 பேர் உயிரிழந்தனர்.  

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துக்கு மட்டுமே கப்பலின் பாகங்களை மீட்கும் உரிமையும் அதன் சிதைவுகளை அகற்றும் சட்டப்பூர்வ உரிமையும் உள்ளது. கப்பலின் சிதைவுகளிலிருந்து கடந்த பல ஆண்டுகளில் இந்த நிறுவனம் பல ஆயிரக்கணக்கான பொருட்களை மீட்டுள்ளது. இதில் ஒரு பகுதி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு மேலும் பல பொருட்களை மீட்பதற்கு மீண்டும் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அப்போது டயானா சிலையை மேலே எடுத்து வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் பலர் கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்தை கல்லறையாக கருதுகின்றனர். அந்த இடத்தை தொடக் கூடாது என்று நினைக்கின்றனர்.

“டயானா சிலையை மீண்டும் கண்டுபிடித்தது, டைட்டானிக் சிதைவிடத்தை தொடக் கூடாது என்று கூறுபவர்களுக்கான சரியான பதிலாகும்” என்கிறார் பென்கா.

எல்லோராலும் பார்த்து ரசிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டிய ஒரு கலைப் பொருள் டயானா சிலை. அந்த சிலை கடலுக்கு அடியில் கும்மிருட்டில் 112 ஆண்டுகளாக கிடக்கிறது. என்னால் அதை கடலுக்கு அடியில் ஒரு போதும் விட முடியாது” என்றார் .



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.