Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
தங்கம், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

6 செப்டெம்பர் 2024, 11:59 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியாவின் ரிசர்வ் வங்கியைப் போல உலகின் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் அதிக அளவில் தங்கத்தை வாங்குகின்றன.

ஜூலை மாதத்தில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வாங்கிய தங்கத்தின் அளவு 37 டன்களாக இருந்தது என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

போலந்து, துருக்கி, உஸ்பெகிஸ்தான், மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகள் தங்கத்தை வாங்குகின்றன.

இப்படி அதிகமாக தங்கம் கொள்முதல் செய்யப்படுவதற்கு நடுவே, சில நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கவும் செய்கின்றன.

ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-காஸா போர், மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடி போல, உலகம் முழுவதும் பிரச்னைகள் அதிகரித்து கொண்டிருக்கும் நேரத்தில் உலக நாடுகளின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

தங்கம், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு நிலையான சொத்தாக இருக்கிறது

எந்தெந்த நாடுகளில் தங்கம் வாங்குகின்றது?

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை), தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்ததாக உலக தங்க கவுன்சிலின் அறிக்கை தெரிவிக்கின்றது.

இதே காலகட்டத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), போலந்து நாட்டின் மத்திய வங்கி 18.68 டன்கள் தங்கத்தை வாங்கி முதல் இடத்தில் இருந்தது. இதில் இந்திய ரிசர்வ் வங்கி 18.67 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளது. மேலும் துருக்கி 14 டன்களும், உஸ்பெகிஸ்தான் 7.46 டன்களும் மற்றும் செக் குடியரசு 5.91 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, இதே இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் 173.6 டன்கள் தங்கத்தை வாங்கிய நிலையில், இந்த ஆண்டு அது 183 டன்களாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), கஜகஸ்தான் 11.83 டன்கள் தங்கத்தையும் சிங்கப்பூர் 7.7 கிலோவும், ஜெர்மனி 780 கிலோ தங்கத்தை விற்றுள்ளன.

பல ஆண்டுகளாக உலக நாடுகளின் சொத்து இருப்புகளில் தங்கம் ஒரு முக்கிய அங்கமாக இன்று வரை இருந்து வருகிறது.

2023-ஆம் ஆண்டில் உலக நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள், தங்கள் சொத்து இருப்புகளில் 1,037 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. 2022-ஆம் ஆண்டில், மத்திய வங்கிகள் 1,082 டன் தங்கத்தை டெபாசிட் செய்துள்ளன. இது உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளைக் கொண்டு மத்திய வங்கிகள் தங்கத்தை ஒரு முக்கியமான சொத்து இருப்பாக பார்க்கின்றன என்பது தெரியவருகின்றது.

மத்திய வங்கிகளுக்கு தங்கம் ஒரு நிலையான சொத்தாக இருக்கிறது. நிதி நெருக்கடி ஏற்படும் போது, தங்கம் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவுகிறது. ஒரு வகையில் சொத்து இருப்புக்களை பன்முகப்படுத்த உதவுகிறது. அமெரிக்க டாலருக்கு 'ரிசர்வ் கரன்சி' என்ற அந்தஸ்து இருக்கிறது. வணிகப் பரிவர்தனைக்காக அமெரிக்க டாலர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதே உலகெங்கிலும் உள்ள பல வங்கிகளின் நோக்கமாக இருக்கிறது. இதனைச் செயல்படுத்தத் தங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.

 
தங்கம், இந்தியா, அமெரிக்கா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மேலும் பிரச்னைகள் ஏற்பட்டால், பணமதிப்பு குறைந்து, தங்கத்தின் விலை உயரும்

இதற்கான காரணம் என்ன?

"அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. அமெரிக்கா வட்டி விகிதங்களை இன்னும் குறைத்தால், டாலரின் மதிப்பு குறையும் என்று மற்ற நாடுகள் நம்புகின்றன. அந்த நிலை வரும்வரை அவர்கள் தங்கத்தை நோக்கி தங்கள் முதலீட்டை செய்கின்றன", என்று ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பொருட்கள் மற்றும் நாணயங்களுக்கான தலைமை அதிகாரியான அனுஜ் குப்தா கூறுகிறார்.

"அமெரிக்கப் பொருளாதாரம் கடனில் இயங்குவதால், வரும் காலத்தில் டாலர்களின் மதிப்பு இன்னும் குறையக்கூடும் என்ற அச்சம் உள்ளது,” என்கிறார் அவர்.

"இந்தியாவும் தனது முதலீட்டைப் பன்முகப்படுத்துவதற்காக இது போலச் செய்கிறது. இந்தியா தனது வெளிநாட்டு இருப்பை அதிகரிக்க வேண்டும். டாலர்களுக்கு ஈடாகத் தங்கத்தை வாங்கினால், இந்தியாவால் அதிக நோட்டுகள் அச்சிட முடியும். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்," என்கிறார் அனுஜ்.

இதைத் தவிர, உலகின் பல பகுதிகளுக்கு இடையே அரசியல் பதட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இதில் மேலும் பிரச்னைகள் ஏற்பட்டால், பணமதிப்பு குறைந்து, தங்கத்தின் விலை உயரும்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.