Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"வழிப்போக்கன்"
 
 
“பூர்வீக நிலம், பூர்வீக கலாச்சாரம், பூர்வீக கிராமம் அல்லது நகரத்தின் மீது அன்பை வளர்ப்பது மிக முக்கியமான பணியாகும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த அன்பை எப்படி வளர்ப்பது? அது சிறியதாகத் தொடங்குகிறது - தன் குடும்பத்தின் மீதும், தன் வீடு மீதும், தன் பள்ளி மீதும் அன்புடன். படிப்படியாக விரிவடைந்து, பூர்வீக நிலத்தின் மீதான இந்த அன்பு உங்கள் நாட்டிற்கான அன்பாக மாறும் - அதன் வரலாறு, அதன் கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்திற்காக ” / “Inculcating love for one's native land, native culture, native village or town is a very important task and there is no need to prove it. But how to cultivate this love? She starts small - with love for her family, her home, her school. Gradually expanding, this love for the native land will turn into love for your country - for its history, its past and present ” (டிஎஸ் லிகாச்சேவ் / DS Ligachev).
 
உலகத்தில் எல்லோரும் வழிப்போக்கர்களே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் எங்கே போகிறோம் என்கிற இலட்சியம் இல்லாமலே போய்க் கொண்டு இருக்கிறார்கள். சிலர் இருட்டிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியிலே நடக்கிறார்கள்; சிலர் ஒளியைத்தேடி நடக்கிறார்கள்; சிலர் கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பாதையில் நடக்கிறார்கள்; சிலர் பட்டு விரித்த பாதையில் செல்கிறார்கள். இரண்டுங்கெட்ட இடர்ப்பட்ட நிலையில் இடை வழியிலேயே பயணத்தை முடித்துக் கொள்பவர்களும் பலர்.
 
இதை யாரும் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக இன்று 19 செப்டம்பர் 2024. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பரப்புரை நேற்றுடன் முடிந்து விட்டது. அந்த பரப்புரை காலத்தில் இவை எல்லாவற்றையும் நீங்கள் நேரடியாக பார்த்திருப்பீர்கள். அனுபவித்து இருப்பீர்கள். அவர்களும் அரசியலில், அரசியல் அரங்கில் ஒரு வழிப்போக்கன் தான்! ஆனால் வேறு வழியில் அல்லது நோக்கில் !!
 
என்றாலும் அவ்வப்போது வறுமையின் கொடும் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, இடையிடையே குறுக்கிடும் இடையூறுகளையும், தோல்விகளையும் எதிர்த்துப் போராடிய வண்ணம் வாழ்க்கையைப் பஞ்சினும் இலேசாக மதித்துப் புன்னகை பூத்தபடியே நாடு நாடாய் பயணம் செய்து உலகின் ஒவ்வொரு மூலை முடக்கையும் ஆராயும் ஒரு “வழிப்போக்கன்.” னின் கதைதான் இது!
 
ஒரு காலத்தில், மலைகள் மற்றும் பசுமையான வயல் வெளிக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில், சிவா என்ற ஒரு வழிப்போக்கன் வாழ்ந்து வந்தான். சிவா தனது சிந்தனையில் முயற்சியில், ஒரு நிலையாக நின்று விடாமல், எல்லைகள் தாண்டி அலைந்து திரிபவனாக இருந்தான், எனவே அவனது கிராமத்தின் எல்லைக்கு அப்பால் உலகை ஆராய வேண்டும் என்ற தீவிர ஆசை அவனுக்கு இருந்தது.
 
சிறு வயதிலிருந்தே, சிவா தொலைதூர நிலங்கள், கம்பீரமான உயர்ந்த மலைகள் மற்றும் அலைபாயும் கடல்களின் கதைகளால் ஈர்க்கப்பட்டான். அவனது அமைதியற்ற இதயம் எதாவது சாகசத்திற்காக ஏங்கியது, மேலும் அவன் தனது கற்பனையின் துண்டுகளாக இருக்கும் தொலைதூர இடங்களில் கால் வைக்க கனவு கண்டான்.
 
"ஆகாத காலம் அரைக்கணங்களாய் அகல
போகாத ஒரு ஊர் பொழுதோடு போகிச்சேர
வேகாது கொஞ்சம் வெயிலும்தான் தணிய
சாகாது காத்திருந்தேன் சாலைவழி செல்ல
ஏழாறு திக்கும் ஒரு ஈ காகமன்றி"
 
ஒரு நல்ல காலை வேளையில், தோளில் கனமான பையுடனும், கையில் ஒரு வரைபடத்துடனும், சிவா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் விடை பெற்று, ஏழாறு திக்கும் ஒரு ஈ காகம் கூட அற்ற, மக்கள் பொதுவாக குறைவாகப் பயணித்த பாதையில் செல்லத் தீர்மானித்த அவன், தனது வாழ்க்கையை மாற்றும் ஒரு நீண்ட பயணத்தைத் தொடங்கினான்.
 
பயணம் என்பதே சிரமங்கள் நிறைந்ததுதான். ஆனால், சிரமம் வரும் என்று நினைத்து எவரும் வாழ்க்கையை நடத்துவது இல்லை. பயணம் போகிறோம், எல்லாமும் நன்மையாகவே அமையும் என்று நம்பிக் கொண்டு தான் செல்கிறோம். காரில் பயணம் செய்ய ஆரம்பித்தவுடன் வழியில் எந்த விபத்து வரப் போகிறதோ என்று எண்ணிக் கொண்டு யாரும் பயணம் மேற்கொள்வ தில்லை. பயணம் செய்கிறோம், பல நேரங்களில் தெரிந்த பாதைகளில் போகிறோம்., சில நேரங்களில் பாதை தெரியாமல் தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொண்டு பயணம் தொடர்கிறோம். சில நேரங்களில் பாதை காட்டுவதற்கு எவரும் கண்ணில் படாத போது, நமது அறிவுக்கேற்ற முறையில் அனுமானித்துக் கொண்டும் பயணிக்கிறோம். அப்படித்தான் சிவா உறுதியாக தன் பயணத்தை தொடர்ந்தான்.
 
ஒரு வழிப்போக்கனாக, சிவா பரந்த நிலப்பரப்புகளை கடந்து, பல்வேறு கலாச்சாரங்களை சந்தித்தான், மேலும் அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்தான். அடர்ந்த காடுகளின் வழியாக நடைபயணம் மேற்கொண்டான், உயரமான சிகரங்களில் ஏறி, சீறி பாயும் ஆறுகளைக் கடந்தான். அவன் கால் பாதிக்கும் ஒவ்வொரு அடியும் அவனை உலகின் மர்மங்களை அவிழ்ப்பதற்கும் அவனது சொந்த குணாதிசயத்தின் ஆழத்தைக் கண்டுபிடிப்பதற்கும் உதவியது.
 
ஆமாம், சிவாவுக்கு, சங்க காலப் புறநானூற்றில் கணியன் பூங்குன்றன் என்னும் புலவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கைப் பயணம் பற்றிய உயரிய தத்துவத்தை கூறிச் சென்றது ஞாபகம் வந்தது. அதை இன்று அனுபவரீதியாக கண்டும் கேட்டும் பழகியும் அவன் உணர்ந்தான்.
 
"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றேர்; வாழ்தல
; இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொழுது இரங்கும் மல்லற் பேர்யாறு
நீர்வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."
(புறநானூறு - பாடல் 192)
 
அவனது பயணத்தில், சிவா இன்பம் மற்றும் துன்பம் இரண்டையும் சந்தித்தான். அவன் இயற்கையின் அழகினை அடிவானத்தில் சூரிய அஸ்தமனத்தின் பொழுது கண்டான், அந்நியர்கள் பாடி மயக்கும் மெல்லிசைகளைக் கேட்டான், மேலும் பலவிதமான உணவு வகைகளை, மகிழ்விக்கும் சுவைகளை ருசித்தான். அவன் கணக்கில் அடங்கா சவால்களை எதிர்கொண்டான், இயற்கையில் சீற்றங்களான கொடிய புயல்களை எதிர்கொண்டான், பலதடவை தங்குமிடம் இல்லாமல் நீண்ட இரவுகளை சமாளிக்க வேண்டியும் அவனுக்கு இருந்தது , மற்றும் அறிமுகமில்லாத பிரதேசங்களுக்கு செல்லவும், விந்தையான மனிதர்களை சந்திக்கவும் வழிவகுத்தது. இவைகள் எல்லாவற்றையும் விபரமாக குறிப்பு எடுக்க அவன் தவறவில்லை.
 
அவன் மேலும் பயணங்கள் தொடரும் பொழுது, ஒரு வழிப்போக்கனாக இருப்பதன் உண்மையான சாராம்சம் உலகத்தின் பௌதீக ஆய்வில் அல்லது வெளி உலக ஆய்வில் மட்டுமல்ல, சுயத்தை ஆராய்வதிலும் உள்ளது என்பதை சிவா உணரத் தவறவில்லை. அது மட்டும் அல்ல, அவன் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் பகிர்ந்து கொள்ள எதோ ஒரு கதை மற்றும் மற்றவர்களுக்கு கற்பிக்க எதோ ஒரு பாடம் இருப்பதை அவன் உணர்ந்தான். எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல, தாழ்மையான எளிய கிராமவாசிகள் முதல் உயர்ந்த ஞான முனிவர்கள் வரை, ஒவ்வொரு தொடர்பும் அவனது இதயத்தில் ஒரு அழியாத அடையாளத்தை பதித்து, வாழ்க்கையைப் பற்றிய அவனது கண்ணோட்டத்தை ஆழமாகவும் பரந்தளவும் வடிவமைத்தது.
ஆண்டுகள் கடக்க கடக்க , சிவாவின் பயணங்கள் அவனை பூமியின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு சென்று அவனை ஒரு அனுபவமிக்க பயணியாகவும், புத்திசாலியாகவும், அடக்கமாகவும், நினைவுகளின் பொக்கிஷமாகவும் மாற்றியது.
 
அவனது பயணங்களின் சாகசங்களின் இறுதியில், சிவா தனது கிராமத்திற்குத் திரும்பினான், அவனது இதயம் நன்றியுணர்வு மற்றும் புதிய ஞானத்தால், அறிவால் நிரம்பி வழிந்தது. அவன் தனது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் மற்றும் எல்லோருடனும் தனது கதைகளைப் பகிர்ந்து கொண்டான், இது மேலும் பலரை, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், அது வழங்கும் அதிசயங்களைத் கண்டு அறியவும் அவர்களுக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைத்தது !
 
அவன், இன்று இந்த உலகில் இல்லை, ஆனால் அவனது உருவச்சிலை பலரை அவன் வழியில் உலகத்தை அறிய, ஆராய உருவாக்கிக் கொண்டே இருக்கிறது!
 
"சிவா வழிப்போக்கன் அல்ல வழிகாட்டி" என்று அவனின் உருவச் சிலையின் கீழ் பொறிக்கப்பட்டு இருந்தது.
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
348286257_10223547892908209_4942742689517210830_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Wfiyx6rFWNMQ7kNvgFpZJDZ&_nc_ht=scontent-lhr8-2.xx&oh=00_AYCxOqh0POq5DhAisWtquK2u7o36j8J2Fvn89b_kCXX-kQ&oe=66F1DEC5 347622494_10223547879107864_8873242931120448227_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=UxpoNjuOZTEQ7kNvgE6EmyW&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=00_AYCJg-VMqcesb4ZMdft46FZj-OXUe30Ghsnhee5h4Uq3SA&oe=66F1FF89 
 
 

Edited by kandiah Thillaivinayagalingam

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.