Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எங்கள் அம்மாவின் பிறந்தநாள் நினைவுகள் இன்று [05/10/1917-14/08/2009]


"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே.... நான்
வணங்கும் தெய்வமும் நீயம்மா -என்
கண்கண்ட தெய்வமும் தாயம்மா....


என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா....நான்
வாழ்ந்திடும் வாழ்க்கையும் உன்தம்மா -என்
தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடியே....


நான் மீண்டும் ஒரு முறை வேண்டும்....உன் கருவறை
என் உழைப்பும் முன்னேற்றமும் உன் கனவே -உன்
வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பே....


வேரோடி முளைத்தலும் அது மாறாவிளாத்தியினமே....குழந்தை 
பாரோடி பறந்தாலும் அது உன் சிறகே அம்மா -என்
வாழ்விற்கு ஓளி விளக்கும் நீயே அம்மா....


தாயின் காலடி வாசமும் ஒரு ஆலயமே....அன்பு
சந்நிதியாய் அது எனக்கு நிம்மதியே -நான்
கண்ட முதல் வைத்தியரும் நீயே....


மண்ணும் பெண்ணும் உய்ர்ப்புடமை அம்மா....தாய்மை
பண்பினை போற்றிடும் கற்புடைமை அம்மா -என்
அழுகையில் பதறி சிரிக்கையில் மகிழிந்த்வளே....


நான் அம்மா என்று அழைப்பதும்.... உன் வரமே
என்றும் நான் உன் மழலை அம்மா....தெய்வம்
உனக்கு தந்த குழந்தை அம்மா!"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"அன்பின் இலக்கணம் அன்னை ஆகி 
அகிலத்தில் அவளே உயர்வு ஆவாள்! 
அல்லல் பொறுக்கும் தியாகி ஆகி  
அனைவரையும் அணைக்கும் ஆண்டவன் ஆவாள்!"  


"பாதிக்கும்  இடர்களை தானே தாங்கி 
பாரம் என்று பிள்ளைகளை எண்ணாள்!
குமையாள்; கொதியாள்; குலுங்காமலே நடப்பாள்
குழவி கொஞ்சுகையில் துன்பம் மறப்பாள்!"


"நடைதவறி வீழ்கையில் துணை நின்று 
நமதவறுகள் மன்னித்து  ஒன்று சேர்ப்பாள்! 
கடையன் என்று பிறர் சொலினும்
கைதடுத்துக் காத்து துணிவு ஏற்றுவாள்!" 


"வானும் கடல்மலையும் கானகமும் விந்தையில்லை
வான்நிலாவும் மலரும் மழைவெயிலும் அதிசயமில்லை 
வானவன் படைத்ததிலே எதுவுமே புதுமையில்லை 
தாயைப் படைத்தானே அதற்கு இணையேயில்லை!" 


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

12028715_10205176918405328_7417463253009110680_o.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=110&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=lde593hQ3sUQ7kNvgE-uXrh&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AP47aQKwn-JGqTgRu217yVx&oh=00_AYB5e05mYvCNN5llLDqKYyCURWixodr_hY0qonxK2Aejcg&oe=67286410  12139925_10205176924045469_6036194016147703774_o.jpg?stp=dst-jpg_p235x350&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=13d280&_nc_ohc=EhM9InhSgmEQ7kNvgEZNHsl&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AP47aQKwn-JGqTgRu217yVx&oh=00_AYB_HCi1Khdtto3O0t-vK1errdC89GDoC0rsDU-Fzz5acQ&oe=67285F2A  

No photo description available.

 

 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.