Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா

 

 

 

image_6f2507bc5a.jpg

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.

பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையையடுத்தே இரண்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி முதலாமிடத்தை பும்ரா அடைந்துள்ளார்.

இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இலங்கையின் பிரபாத் ஜெயசூரிய, எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜஸ்பிரிட் பும்ரா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஜொஷ் ஹேசில்வூட், 4. பற் கமின்ஸ், ககிஸோ றபாடா, 6. இரவீந்திர ஜடேஜா, 7. நேதன் லையன், பிரபாத் ஜெயசூரிய, 9. கைல் ஜேமிஸன், 10. ஷகீன் ஷா அஃப்ரிடி.

இந்நிலையில் குறித்த பங்களாதேஷுக்கெதிரான போட்டியில் 123 ஓட்டங்களைப் பெற்ற இந்தியாவின் யஷஷ்வி ஜைஸ்வால், துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.

இதுதவிர இப்போட்டியில் 76 ஓட்டங்களைப் பெற்ற விராட் கோலி, 12ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஜோ றூட், 2. கேன் வில்லியம்சன், 3. யஷஸ்வி ஜைஸ்வால், 4. ஸ்டீவன் ஸ்மித், 5. உஸ்மான் கவாஜா, 6. விராட் கோலி, 7. மொஹமட் றிஸ்வான், மர்னுஸ் லபுஷைன், 9. றிஷப் பண்ட், டரைல் மிற்செல்.

இதேவேளை இந்தியாவுக்கெதிரான இப்போட்டியில் 29 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ், சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. ஜோ றூட், 5. மெஹிடி ஹஸன் மிராஸ்.
  2. https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/முதலாமிடத்துக்கு-முன்னேறிய-பும்ரா/44-344974
  • கருத்துக்கள உறவுகள்

பும்ரா சிற‌ந்த‌ வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Jasprit Bumrah now holds the second-best bowling average among bowlers with 400 international wickets, just after the legendary Joel Garner!

461968616_535740879457711_53757492651841

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.