Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இறுதி தீர்வு சர்வஜன வாக்கெடுப்பினூடாகவே தீர்மானிக்கப்படவேண்டும்: தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து

http://www.samakalam.com/wp-content/uploads/2024/10/TMK-Manifesto.jpg

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச ரீதியான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணி 2024 ஆம் ஆண்டுக்கான தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இலங்கையில் எத்தகைய ஒரு தீர்வு தமக்கு வேண்டும் என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்கும் வகையில் சர்வதேச சமூகம் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த விஞ்ஞாபனம் அத்தகைய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது இருக்கக்கூடிய பல தெரிவுகளில் தமிழ் மக்கள் கூட்டணி வலியுறுத்திவரும் ‘கூட்டு சமஷ்டி’ அடிப்படையிலான தீர்வும் ஒரு ஒரு தெரிவாக இருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது.

இறுதி தீர்வு சர்வதேச ரீதியான சர்வஜன வாக்கெடுப்பொன்றின் ஊடாக தீர்மானிக்கப்படவேண்டும் என்றும் கூட்டு சமஷ்டி அடிப்படையிலான தெரிவின் அடிப்படையிலேயே தீர்வு அமையவேண்டும் என்பதும் தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாடு என்றும் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் குறிப்பிடப்பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது. கட்சியின் இந்த நிலைப்பாட்டினை கட்சியின் தலைவர் நீதியரசர் சி. வி விக்னேஸ்வரன் கடந்த 4 வருடங்களாக பாராளுமன்றத்திலும் சர்வதேசமாட்டங்களிலும் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவளை, இம்முறை தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி, அரசியல் அனுபவம் மிக்க இளையோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் ஆளுமையுள்ள பெண்களை கொண்ட அணி ஒன்றை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளமை பலரதும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

http://www.samakalam.com/இறுதி-தீர்வு-சர்வஜன-வாக்/

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ் மாவட்டத்தில் மட்டும் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி, அரசியல் அனுபவம் மிக்க இளையோர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் ஆளுமையுள்ள பெண்களை கொண்ட அணி ஒன்றை வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளமை பலரதும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, வடமாகாணசபை முதல்வராக இருந்த ஐயா விக்கினேஸ்வரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராக இருந்த தம்பி மணிவண்ணனும் இணைந்து தேர்தலில் போட்டியிடச் சேரமுடிகிறதென்றால், உண்மையில் கட்சிகள் ஒன்றிணைய முடியாதிருப்பதொன்றும் கொள்கையடிப்படையில் இல்லையா? 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

13 எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தரத் தீர்வாக அமையாது; சி.வி

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்ததாவது, 13 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிராக அந்த காலத்திலே இருந்து ஜேவிபி செயற்பட்டது. ஆனால் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் அதற்கு மாற்றான கொள்கையுடன் வாக்கு கேட்டனர். இவ்வாறான நிலையில் இப்போது மீண்டும் தமது நிலைப்பாட்டையா சில்வின் சில்வா ஊடாக வெளிப்படுத்த முயல்கின்றனர். ஆனாலும் அக்கட்சியின் பிமல் ரத்நாயக்க அப்படி அவர் கூறவில்லலை என்றவாறாக கூறியிருக்கிறார். இதனூடாக தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறன கருத்துக்களை கூறுவது அந்த மக்களின் மனங்களை நோகச் செய்யும் என்பது அவர்களுக்கே தெரிகிறது போல உள்ளது.

இந்த 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும் இப்போது  இருக்கும் 13 ஆவதையும் நாங்கள் இதற்காக பறிகொடுத்துவிட்டு ஜேவிபியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும். ஏனெனில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்களவர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறையையும் பாசையும் மதமும் எங்கள் எல்லோரையும் பீடிக்க கூடியதாகத் தான் அமையும். ஆகையினால் அவ்வாறான கருத்துக்களை நாங்கள் கண்டிக்கின்றோம். ரில்வின் சில்வா போன்றவர்கள் அவ்வாறு கூறுவது பிழை என்று தெளிவாக கூறுகின்றோம்.

இந்த 13 ஆவது திருத்தத்தை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி கூறி வருகின்றதை பார்க்கிறோம்.  அவ்வாறு அவர்கள் எதனைக் கூறினாலும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காலத்திலும் எங்களுக்கு ஒரு தீர்வாக அமையாது. அவ்வாறு அமையவும் போவதில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவாறான தீர்வு தரப் போகின்றார்கள் என்று குறிப்பிடுகையில் பொருளாதார பிரச்சனை தான் எங்களுக்கு இருக்கு என்று சில்வின் சில்வா குறிப்பிடுகின்றார். அதுவும் பொருளாதார பிரச்சனை என்று கூறும் போது எங்களுடைய தமிழ்ப் பிரதேசங்களில் காணிகள் அபகரிக்கபடுகின்றன. பௌத்த சின்னங்கள் கொண்டுவரப்பட்டு புதிய புதிய விகாரைகள் அமைக்கப்படுகின்றன.

வடக்கையும் கிழக்கையும் ஒருமித்து வைத்திருக்கும் இடத்திலே சிங்களப் பிரதேசத்தைக் கொண்டு வந்து எங்களுடைய தொடர்ச்சியை அற்றுப் போகச் செய்கின்றார்கள். குறிப்பாக வடகிழக்கிலே அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் எங்களுக்கு ஏற்படும் பலவிதமான சமூக பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி கொண்டு இருக்கிறோம். இவற்றையெல்லாம் பற்றி குளிப்பிடாது பொருளாதார அபிவிருத்தி என்று சில விடயங்களை செய்வதால் பிரச்சனை தீரும் என அவர் நினைத்தாரானால்  அது அவருடைய அறியாமையை வெளிப்படுத்துகிறது.

வடகிழக்கு மாகாணங்களிலே தமிழ் மக்கள் மூவாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக தமிழ் மொழியை பாவித்து அவர்களுக்கென்று வாழ்வு முறையொன்று அமைத்து இருக்கிறார்கள். அதனை எப்போதும் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதனை இல்லாமல் படுத்தும் விதத்தில் பொருளாதார ரீதியான தேவை என்று கூறுவது மனவருத்தத்திற்குரியது. அதனை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் முன்னாள் ஐனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து என்பது தெற்கில் பொருந்தினாலும் வடகிழக்கிலே எங்களுக்கு பொருந்தாது. உண்மையில் இளையவர்கள் அனுபவசாலிகளாகவும் இருக்க முடியும்.  ஆனாலும் ரணில் அவர்கள் அனுபவசாலிகளுக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென கூறுவதற்கு காரணம் இருக்கலாம்.

அதாவது அனுபவம் இல்லாமல் சில புதிய சிந்தனைகளை நடைமுறைப்படுத்தும் போது இந்த நாட்டிற்கு அந்த விடயம் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்துமென்று கருதலாம். ஆனால், வடகிழக்கு மாகாணங்களிலே இது சம்பந்தமாக அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இப்போது இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் எல்லா அதிகாரங்களும் மத்தியிலே தான் இருக்கின்றது.

ஆகவே எங்களுக்கு தேவையானவர்கள் வந்து மக்களுக்காக ஓடியாடி சில சில நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க கூடியதாகவும் பல இடங்களிலும் சென்று மக்களுக்கு எதனை எடுத்துக் கொடுக்க முடியும் என்று ஆராயந்து நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் தான் தேவை. ஆகவே அந்த விதத்தில் வடகிழக்கு மமாகாணங்களில் இளைஞர்கள் கட்டாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென மக்களைப் பொறுத்தவரையில் நினைக்கின்றனர்.

மேலும், மத்தியில் இருக்கின்ற பொருளாதார பிரச்சனைகள் சம்பந்தமான நிதி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அவர் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் பாராளுமன்றத்திலே நாங்கள் இவ்வாறான வயது சென்றவர்களை கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஏனென்றால் அதிகாரம் எங்கள் கைவசம் இல்லாத நிலை உள்ளது. ஆகையினால் அவர் கூறுவது தெற்கிற்கு பொருந்தும் எனினும் வடகிழக்கு மாகாணத்திற்கு பொருந்தாது என்று தான் நான் அவதானிக்கிறேன் என்றார்.

https://thinakkural.lk/article/310897

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.