Jump to content

வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள். -கவிஞர் வீரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: 

வீட்டு வளவுக்குள் இருக்கும் பற்றைக்குள் செல்லாதவர்கள் எல்லாம் இப்ப வன்னிக்காடுகள் பற்றி விமர்சிக்கிறார்கள்.
-கவிஞர் வீரா

https://www.facebook.com/share/jw9Jn6Xv9sfuM1eE/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் புலிகளின் குரல்/தொலைக்காட்சியில் முன்பு வருபவரோ? இதே பெயரில் அது வேறு ஒருவரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, நியாயம் said:

இவர் புலிகளின் குரல்/தொலைக்காட்சியில் முன்பு வருபவரோ? இதே பெயரில் அது வேறு ஒருவரோ?

அவரே தான் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹமாஸ் தலைவரின் மரணம் காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 55 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. . சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி. ஹமாஸை அவர் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றினார், அதன் விளைவாக இஸ்ரேல் அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சின்வார் இஸ்ரேல் சிறப்புப் படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையில் கொல்லப்படவில்லை, மாறாக காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் தற்செயலாக ரோந்து மேற்கொண்ட இஸ்ரேலியப் படைகள் நடத்திய ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், போர் உடை அணிந்திருந்த சின்வார் ஷெல் குண்டு வீச்சு தாக்குதலில் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்ததைக் காட்டுகிறது.   இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களைப் பாராட்டிய அதே சமயத்தில், எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அது போரை முடிவுக்குக் கொண்டு வராது என்றார். நெதன்யாகு மேலும் கூறுகையில், "நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தீமையை `நன்மை’ வீழ்த்தியதை இன்று மீண்டும் ஒருமுறை உலகிற்குக் காட்டியுள்ளோம். ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை. இது கடினமான நேரம். நாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது” என்றார். "நமக்கு முன்னால் இன்னும் பெரிய சவால்கள் உள்ளன. நமக்கு சகிப்புத்தன்மை, ஒற்றுமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு தேவை. நாம் ஒன்றாகப் போராட வேண்டும், கடவுளின் உதவியால், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்றும் அவர் கூறினார்.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பணயக்கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். காஸா போரை ஆதரிக்கும் நெதன்யாகு மற்றும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். நெதன்யாகு தனது போர் இலக்குகளை பலமுறை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். "ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ பலத்தை அழித்து இஸ்ரேல் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்பதே அவரின் இலக்கு. ஒரு வருடமாக தொடரும் போரில் குறைந்தது 42,000 பாலத்தீனர்களைக் கொன்று, காஸாவின் பெரும் பகுதிகளை தரைமட்டம் ஆக்கிய போதிலும், இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்று இஸ்ரேல் கருதுகிறது. மீதமுள்ள பணயக்கைதிகளின் விடுதலை, இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம். சின்வாரைக் கொன்றது இஸ்ரேல் விரும்பிய வெற்றி என்ற போதிலும் போரின் மற்ற இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு கூறுகிறார்.   யாஹ்யா சின்வார் யார்? சின்வார் 1962 ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருக்கும் கான் யூனிஸ் நகரில் அகதிகள் முகாமில் பிறந்தார். 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல், காஸா முனையைக் கைப்பற்றிய போது அவருக்கு ஐந்து வயது தான் ஆகியிருந்தது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலியப் படைகளால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட அல்லது தப்பியோடிய 700,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களில் சின்வாரின் குடும்பமும் ஒன்று. அவரது குடும்பத்தினர் காஸா பகுதியின் வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஷ்கெலோன் நகரத்தை சேர்ந்தவர்கள். இஸ்ரேல் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொண்டார். சின்வார் இஸ்ரேல் சிறையில் இருந்ததால், அவரது பல் மாதிரிகள் மற்றும் அவரது டிஎன்ஏ மாதிரிகள் இஸ்ரேலிடம் உள்ளன. அவையே காஸாவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவருடையதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவின. 2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவரை விடுவிக்க, இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சின்வாரும் ஒருவர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று, கவனமாக திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் சின்வாரும் அவரது ஆட்களும் சேர்ந்து இஸ்ரேலுக்கு மிக மோசமான தோல்வியை கொடுத்தார்கள். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சின்வாரின் மரணத்தைக் கொண்டாடும் விதமாக மக்கள் இஸ்ரேலிய தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர் பணயக்கைதிகளை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லையா? காஸாவில் எஞ்சியிருக்கும் 101 இஸ்ரேல் பணயக்கைதிகளில் பாதி பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது. பணயக் கைதிகள் பிடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, அவர்களை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பணயக்கைதியான மதன் ஜாங்கவுக்கரின் தாயார், “நெதன்யாகு, பணயக்கைதிகளை புதைத்து விடாதீர்கள். மத்தியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அணுகி, புதிய முயற்சியை முன்வையுங்கள். பணயக்கைதிகளை மீட்பது உங்களால் மட்டுமே முடியும்” என்றார். அவர் மேலும் கூறுகையில் "நெதன்யாகு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ஒரு புதிய இஸ்ரேலிய ஒப்பந்தத்தை முன்வைக்க முன்வரவில்லை என்றால் அவர் பணயக்கைதிகளாக இருக்கும் எங்கள் குடும்பங்களை கைவிட்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.” "அவர்களுக்காக போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. மாறாக நெதன்யாகு போரை இன்னும் அதிகப்படுத்தி வருகிறார். அனைவரும் திரும்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ” என்றார். "சின்வாரும் அவரது ஆட்களும் இஸ்ரேலைத் தாக்கும் அளவுக்கு அதன் பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. நெதன்யாகு, இந்த பாதுகாப்புத் தோல்விகளில் தனது பங்கை மறைக்கவும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை காலவரையின்றி ஒத்திவைக்கவும் காஸா போர் சூழலை ஆதரிக்கிறார்." என்று அவர் குற்றம்சாட்டினார். நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். காஸாவில் ஹமாஸை வீழ்த்தி "முழுமையான வெற்றி" கண்டால் மட்டுமே இஸ்ரேலிய பாதுகாப்பை மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார். இஸ்ரேல் காஸாவுக்குள் செய்தி நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. ராணுவ மேற்பார்வையின் கீழ் அரிதான பயணங்களை மட்டுமே அனுமதிக்கிறது. பிபிசிக்கும் இதே நிலைதான்.   சின்வாரின் சொந்த ஊர் மக்களின் நிலைப்பாடு சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில், பிபிசிக்காக சில நம்பகமான உள்ளூர் பத்திரிகையாளர்கள் பாலத்தீனர்களை பேட்டி கண்டனர். அவர்களும் போர் தொடரும் என்றே கூறினார்கள். டாக்டர் ரமலான் ஃபாரிஸ் கூறுகையில் “இந்தப் போர் சின்வார், ஹனியே அல்லது மிஷால் அல்லது எந்தத் தலைவரையோ அல்லது அதிகாரியையோ சார்ந்தது அல்ல, இது பாலத்தீன மக்களுக்கு எதிரான அழிவுகரமானப் போர். இது நாங்கள் அனைவரும் அறிந்து கொண்ட உண்மை. சின்வார் உள்ளிட்டவர்களை தாண்டி இது மிகப்பெரிய பிரச்னை” என்றார். சிலர் சின்வாரின் மரணத்தால் சோகமாக இருப்பதாகவும், மற்றவர்கள் அலட்சியமாக இருப்பதாகவும் அட்னான் அஷூர் கூறினார். அஷூர் மேலும் கூறுகையில், "அவர்களுக்கு நாங்கள் மட்டுமல்ல, முழு மத்திய கிழக்கும் வேண்டும். அவர்கள் லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடனும் சண்டையிடுகிறார்கள். இது 1919 முதல், அதாவது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான போர்" என்று கூறினார். சின்வாரின் மரணம் ஹமாஸை பாதிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. "இல்லை என்று நம்புகிறேன், ஹமாஸ் என்பது வெறும் சின்வார் என்ற தனி நபரை சார்ந்தது அல்ல" என்றார் அவர்.   'ஹமாஸை அழிக்க முடியாது’ காஸாவில் போர் தொடர்கிறது. 25 பாலத்தீனர்கள் வடக்கு காஸாவில் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் மூலமாக ஹமாஸ் கட்டளை மையத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பதை உறுதிப்படுத்தினர். இஸ்ரேல் அதிக உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியதை அடுத்து பாராசூட் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. 1990களில் இருந்து ஒவ்வொரு ஹமாஸ் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து ஒரு வாரிசு வந்து விடுகிறார். சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் கொண்டாடும் அதே வேளையில், ஹமாஸ் பணயக்கைதிகளை இன்னும் வைத்திருக்கிறது, இன்னும் சண்டையிட்டு கொண்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy97j0985go
    • இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும் ஐ.நாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல் திருவிழா சூடு பிடித்துள்ளது.  இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம்.  தமிழ்த் தேசியத்தை காப்பாற்ற வேண்டுமென்கிற முழக்கம் சகல மேடைகளிலும் எதிரொலிக்கிறது. ஒட்டாத குழுக்கள் அனைத்தும் தேச விடுதலை பற்றி பேசாமல். தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்றுவது என்கின்ற இலட்சியத்தோடு இயங்குகின்றன.  தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றிக் கணக்குகள், விருப்புவாக்கு தெரிவுகள் குறித்தே பரவலாக ஆராயப்படுகிறது.  தமிழர் தாயக கணிப்புகள் பல, வன்னி மாவட்டத்தில் செல்வமும் ,காதர் மஸ்தானும் வெற்றி பெறுவார்கள் என கட்டியம் கூறுகின்றன. ஏனைய மாவட்டங்களில் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாதென்கிறார்கள். மலையகத்தில் அனுஷா சந்திரசேகரன் , வடிவேல் சுரேஷ் , ஜீவன் தொண்டைமான் மற்றும் திகாம்பரம் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.  வடக்கு -கிழக்கு தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரை திருக்கோணமலையிலும் அம்பாறையிலும் 'மோதல் தவிர்ப்பு' உடன்பாடு காணப்பட்டு தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.  சங்கின் உறுப்பினர்களும் திருக்கோணமலை வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.  தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திராவும் திசைகாட்டிச் சின்னத்தில் இறங்குவதால் போட்டி பலமான இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு உணர்திறன் மிக்க இடங்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற முன்னிற்கும் தமிழ்த் தேசியவாதிகள், ஏனைய மாவட்டங்களில் ஏன் ஒன்றிணையவில்லை என்கிற ஆதங்கம் மக்களிடம் உண்டு.  இனி தமிழர் தாயக அரசியலுக்கும் தென்னிலங்கை அரசியலுக்குமான மோதல்கள் ,முரண்பாடுகள் குறித்து பார்ப்போம். இளையோர் பார்வையானது அநுராவின் ' தேசிய மக்கள் சக்தியின் மீது குவிவதை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எச்சரிக்கை உணர்வோடு அவதானிக்கின்றன.  இதன் எதிர்வினை அரசியலாக, 'வடக்கு கிழக்கு ஊழல் அரசியல்வாதிகளை அநுராவால் அம்பலப்படுத்த முடியுமா?' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ' 'மதுபானசாலை அனுமதிப்பத்திர பட்டியலை (பார் லைஸென்ஸ்) அநுர வெளியிடுவாரா ? ' என்று சுமந்திரனும் கூறத் தொடங்கியுள்ளனர்.  உண்மையிலேயே சகல மட்ட ஊழல்களையும் அநுர அரசு அம்பலப்படுத்த வேண்டுமென்பதே மக்களின் பெருவிருப்பாகும்.  2015 இல் உருவாக்கப்பட்ட 'நல்லாட்சி' அரசின் மத்திய வங்கி கடன் முறி ஊழல் பற்றிய விசாரணைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பெறுமதி சேர் வரி (வாட் வரி)3.5 பில்லியன் ரூபாவை செலுத்தாத மூவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.  'நுணலும் தன் வாயால் கெடும்' என்பதைப் போல, அநுர அரசிற்கு சவால் விடுத்த உதய கம்மன்பிலவிடமே , அதற்கான ஆதாரங்களை வெளியிடச் சொல்லி விஜித ஹெரத் எச்சரித்துள்ளார். திங்களன்று வருமென்கிறார் கம்மன்பில. பார்ப்போம் . இராஜபக்சக்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும், அக்குழுவின் இணை அனுசரணையாளர்களான கம்மன்பிலவும், விமல் வீரவன்சவும் தமது அரசியல் கருத்துக்களை உதிர்த்தவண்ணமுள்ளனர்.  இருப்பினும் இராஜபக்சக்களின் 'ஈரடி பின்னால்' நகர்வில் ஒரு அரசியல் தந்திரம் மறைந்திருப்பதாக ஊடக நண்பர் ஒருவர் தனது ஆய்வு நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார் . சனாதிபதி தேர்தலில் அநுர தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட ' இராஜபக்ச எதிர்ப்பு' பிம்பத்தை நாடாளுமன்றத் தேர்தலில் வலுவிழக்கச் செய்ய, இராஜபக்சக்கள் போட்டியிடவில்லை என்பதே நண்பரின் வாதம்.  குறைக்கப்படும் வாக்குகள் சஜித் பக்கம் கணிசமான அளவில் திரும்பும் என நண்பர் எதிர்பார்க்கின்றார். இது அநுராவின் வாக்குகளை உடைக்கும் மஹிந்தரின் தந்திரமாக இருக்கலாம்.  ஆனாலும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வருவதன் ஊடாக, கடந்த ஆட்சியாளர்களை அரசியல் ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாக வைத்திருக்கிறது தேசிய மக்கள் சக்தி.  ஆகவே இராஜபக்சக்கள் தற்காலிகமாக ஒதுங்கினாலும் அநுராவின் கிடுக்கிப்பிடி, தேர்தலின் பின்னரும் தொடரும் வாய்ப்புகள் அதிகம் போல் தெரிகிறது . அடுத்ததாக ஜே. வி .பி இன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்கள் வழங்கிய நேர்காணலொன்று, தமிழ் ஊடகப் பரப்பில் பலத்த விவாதமொன்றினை ஏற்படுத்தியுள்ளது . அதுபற்றி பேசாமல் கடந்து செல்ல முடியாது.  ' அடித்தட்டு தமிழ் மக்களின் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினையே' என்று கூறும் சில்வா , ' அம்மக்களுக்கு 13 அல்லது அதிகார பகிர்வு என்ற பிரச்சினை இல்லை ' என்கிறார்.  ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களையும் பாதிக்குமென்பது உண்மை.  தமிழ் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை அவர் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் என்பதை அந் நேர்காணலே எடுத்தியம்புகிறது.  ஆனாலும் இடதுசாரி கருத்தியலை வரித்துக்கொண்ட தோழர் டில்வின் சில்வா அவர்கள், ஒரு தேசிய இனத்தின் அரசியல் உரிமையினை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் ?. அரசியல் உரிமை மட்டுமல்ல.... பொருளாதாரத்தை பங்கிடும் இறைமையுடன் கூடிய உரிமையும் மக்களின் பிரச்சினைதான்.  இவர்களுக்கும் நம்மவர்களுக்கும், இந்த இரண்டையும் இணைத்து முன்னெடுக்கும் அரசியல் புரிய வேண்டும்.  இனப்படுகொலையை எதிர்கொண்ட தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை அரசியல் உரிமையைப் புறந்தள்ளி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.  வல்லரசுக் கழுகுகள் வட்டமிடுகின்றன.  அவதானம் தேவை.  மக்களோடு பேசுங்கள். அவர்களே தமக்கான அரசியல் தீர்வு எதுவென்று சொல்வார்கள். இதயச்சந்திரன்   https://oruvan.com/sri-lanka/2024/10/19/the-retreat-of-the-rajapaksas-and-an-interview-with-rilvin-silva
    • முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை நொக் அவுட் செய்து இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து (நெவில் அன்தனி) ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை 8 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து, 9ஆவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. இதன் படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் நியஸிலாந்தும் தென் ஆபிரிக்காவும் விளையாடவுள்ளதுடன் மகளிர் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக புதிய அணி ஒன்று சம்பியனாவது உறுதியாகி உள்ளது. மந்த கதி தன்மையைக் கொண்ட ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமம் எதிர்கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. சுஸி பேட்ஸ் (26), ஜோர்ஜியா ப்ளிம்மர் (33) ஆகிய இருவரும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்த போதிலும் ஏனைய துடுப்பாட்ட வீராங்கனைகள் அதனை சாதகமாக்கிக்கொள்ளத் தவறினர். அவர்கள் இருவரைவிட இசபெல்லா கேஸ் ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் ப்றூக் ஹாலிடே 18 ஓட்டங்களையும் அணித் தலைவி சொஃபி டிவைன் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டியேந்த்ரா டொட்டின் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அஃபி ஃப்ளெச்சர் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் போன்று இந்தப் போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்ப வீராங்கனைகள் அதிரடியில் இறங்கி இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுப்பர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மந்தகதி தன்மைகொண்ட ஆடுகளத்தில் அவர்களால் ஓட்டங்களை சுலபமாக பெறமுடியமால் போனது. அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ் (15), கியான ஜோசப் (12) ஆகிய இருவரும் இந்தப் போட்டியில் பிரகாசிக்காதது மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மத்திய வரிசையில் ஸ்டெஃபானி டெய்லர் (13), டியேந்த்ரா டொட்டின் (33), அஃபி ஃ;ளெச்சர் (17), ஸாய்டா ஜேம்ஸ் (14) ஆகியோர் கடுமையாக போராடிய போதிலும் அவர்களால் அணியை வெற்றி அடையச் செய்ய முடியாமல் போனது. பந்துவீச்சில் ஈடன் கார்சன் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஈடன் கார்சன். https://www.virakesari.lk/article/196616
    • 2021 ஆம் ஆண்டு 06மாதம் 21ஆம் திகதி மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாக தனது சகோதரன் படுகொலை செய்யப்பட்டதாகவும் இதற்குரிய விசாரணைகளில் தங்களுக்கு நம்பிக்கையற்ற நிலையில் புதிய ஜனாதிபதி இது தொடர்பான உண்மையான விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-06-21ஆம் திகதியன்று மட்டக்களப்பு மன்றேசா வீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊறணியை சேர்ந்த ம.பாலசுந்திரம் என்பவர் உயிரிழந்திருந்தார். இது தொடர்பில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மெய்பாதுகாவலர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சியங்களை அழிக்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளடன் வழக்கினை திசைமாற்றும் செயற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் புதிய ஜனாதிபதி தலையிட்டு தமக்கான நீதியைப்பெற்றுத்தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை, தாயார், சகோதரி ஆகியோர் நேற்றையதினம்(17) மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்கள். குறித்த சம்பவத்தின்போது தமது சகோதரன் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பின்னரே அவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுத்தால் உண்மைகள் வெளிவரும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்த இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அருகிலேயே இந்த சம்பவம் நடைபெற்றதனால் தமது அதிகாரத்தினைக்கொண்டு சாட்சியங்கள் மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் ஜனாதிபதி விசேட விசாரணைக்கு பணிப்புரை விடுக்கவேண்டும் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/310889
    • நாளைக்கு பின‌லில் எந்த‌ ம‌க‌ளிர் அணி வெல்ல‌க் கூடும்...........................
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.