Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பணம் பலதும் செய்யும்

ஒருவர் சொல்லும் பொய் சில வேளைகளில் அவரையே சிக்கலுக்குள் மாட்டிவிடும்.

ஸ்ரிபன்  றிலே(†51), ஈனா கெனோயர்  (48) இருவரும் அமெரிக்காவில் மைநோட் நகரைச் சேர்ந்தவர்கள். இருவரும் பத்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தார்கள். திருமணம் மட்டும் ஏனோ செய்து கொள்ளவில்லை.

 ஒருநாள் ஸ்ரிபன்,  தனக்கு சொத்தாக மிகப் பெரிய தொகைப் பணம் வர இருக்கிறது, அதற்காக  தான் நொத்தாரிஸைப் போய்ச் சந்திக்க வேண்டும் என்று சுற்றியிருப்பவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்படி பணம் வரும் பட்சத்தில்  ஈனாவை தான் விட்டு விலகி விடுவேன் எனவும் சொல்லிக் கொண்டான். சொத்து விடயமாக 03.11.2023 திகதிக்கு நொத்தாரிஸைப்  பார்க்கப் போவதாகவும் தெரிவித்தான்.

06.11.2023 அன்று திடீரென ஸ்ரிபன்  இயலாமல் படுத்துவிட்டான். வைத்தியசாலைக்குக் கொண்டோடினார்கள். “இறந்து விட்டான்என வைத்தியர்கள் சொன்னார்கள்

“இன்று நிறைய மது குடித்துவிட்டார்என  ஈனா  கவலையோடு சொன்னாள்

“பணம் வரப் போகிறது என்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு குடிப்பதா? என நட்பு வட்டமும் தங்கள் தரப்பில் கவலைப்பட்டார்கள்

ஆனால் பிரேத பரிசோதனையில், அதிகளவு மது அருந்தி  ஸ்ரிபன் இறக்கவில்லை. மாறாக அவன் உட்கொண்ட உணவில் விசம் கலக்கப்பட்டிருந்திருக்கிறது எனத் தெரிய வந்தது.

பொலீஸார்  ஈனாவைக்   கைது செய்தார்கள். தேநீரில் உறைதல் தடுப்பு மருந்தை (antifreeze) தான் கலந்ததை  ஈனா ஒப்புக் கொண்டாள். வழக்கு இப்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது ஈனாவுக்கு 25 வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது.

எல்லாம் சரி. எதற்காக  ஈனா, ஸ்ரிபனை விசம் வைத்துக் கொன்றாள் என்ற கேள்வி ஒன்று இருக்கிறதல்லவா?

ஸ்ரிபன் தனக்கு 30 மில்லியன் டொலர் சொத்து கிடைக்கிறது என  ஈனாவுக்குச் சொல்லி இருக்கிறான். ஸ்ரிபன் இறந்தால் அந்தப் பணம் தனக்குக் கிடைக்கும் என்று அவள் நினைத்து அவன் கதையை முடித்து விட்டாள். ஆனால் சட்டப்படி அவர்கள் திருமணம் செய்யாததால் அந்தப் பணம் தனக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அவள் நினைத்துப் பார்க்கத் தவறி விட்டாள். அப்படியானால் ஸ்ரிபனுக்கு கிடைக்க இருந்த பணம் யாருக்குச் சொந்தமாகப் போகிறதுஒருவருக்கும் கிடைக்காது. ஏனென்றால் தனக்கு 30 மில்லியன் டொலர்கள் கிடைக்கப் போகிறது என்று ஸ்ரிபன்  சொன்னதெல்லாம் பொய்.

தூக்குத் தூக்கி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம். கலைஞர்தான் கதை வசனம். அந்தப் படத்தில் இப்படியான வசனம் இருக்கும்.

“…உயிர் காப்பான் தோழன். தருணத்தில் கொலையும் செய்வாள் பத்தினி

 

https://www.minotdailynews.com/news/local-news/2024/10/kenoyer-gets-25-years-for-poisoning-death/

 

 

 

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டு கலன் antifreeze கராஜுக்குள் கிடக்குது............. அதிலும் ஒன்று concentrated..............🤣.

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.