Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வங்கதேசம் ஏற்கெனவே மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது
  • எழுதியவர், அர்ச்சனா சுக்லா
  • பதவி, பிபிசி நியூஸ்

அதானி குழுமம் `அதானி பவர்’ நிறுவனம் வாயிலாக வங்கதேசத்தில் மின் விநியோகம் செய்து வந்தது. அங்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் 10% அதானி பவர் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.

வங்கதேசம் செலுத்த வேண்டிய 800 மில்லியன் டாலர் தொகை நிலுவையில் இருப்பதால், அதானி பவர் நிறுவனம் தற்போது அதன் மின்சார விநியோகத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. இதையடுத்து வங்கதேச அரசு நிலுவைத் தொகையைச் செலுத்தும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளது.

பிபிசியிடம் பேசிய இரண்டு மூத்த அரசு அதிகாரிகள், அதானியின் நிலுவைத் தொகையை ஓரளவு செலுத்துவதற்கான செயல்முறையை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர்.

அதானி வங்கதேசத்திற்கு கிழக்கு இந்தியாவில் உள்ள அதன் 1600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கிறது. மின் பற்றாக்குறையால் அவதிப்படும் வங்கதேசத்திற்கான விநியோகத்தைக் குறைப்பது பற்றிய பிபிசி கேள்விகளுக்கு அதானி நிறுவனம் பதிலளிக்கவில்லை.

 

வங்கதேச மின் மேம்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, "நாங்கள் ஏற்கெனவே அதானி குழுமத்திற்கு 170 மில்லியன் டாலருக்கு கடன் கடிதம் (Letter of Credit - விற்பனையாளருக்கு வாங்குபவர் பணம் செலுத்த உத்தரவாதம் அளிக்கும் ஓர் ஆவணம்) வழங்கியுள்ளோம்" என்றார்.

நவம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தாவிட்டால், அனைத்து விநியோகங்களையும் நிறுத்தி வைப்பதாக அதானி பவர் நிறுவனம் மிரட்டியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் வங்கதேச மின் மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், "முழு விநியோகம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படாது” என்று தான் நம்புவதாகக் கூறினார்.

 
வங்கதேசம்: இடைக்கால அரசு பணம் செலுத்தாததால் மின் விநியோகத்தை குறைத்த அதானி நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேச அதிகாரிகள் பிபிசியிடம், தாங்கள் படிப்படியாகவும் முறையாகவும் பணம் செலுத்தி வருவதாகவும், பணம் செலுத்தும் நெருக்கடியை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

"நாங்கள் பணம் செலுத்துவதை விரைவுபடுத்திய போதிலும், மின் விநியோகங்கள் குறைக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் திருப்பிச் செலுத்தத் தயாராக இருக்கிறோம், மாற்று ஏற்பாடுகளைச் செய்வோம்.

ஆனால் எந்த மின் உற்பத்தியாளரும் எங்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கவோ மிரட்டவோ அனுமதிக்க மாட்டோம்” என்று இடைக்கால அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகர் ஃபவுசுல் கபீர் கான் கூறினார்.

``வங்கதேசம் ஜூலையில் நிலுவைத் தொகையில், 35 மில்லியன் டாலர் செலுத்தியது. செப்டம்பரில் அந்தத் தொகையை அதிகரித்து 68 மில்லியன் டாலராக செலுத்தியது, அக்டோபரில் 97 மில்லியன் டாலர் செலுத்தியது," என்று அவர் கூறினார்.

வங்கதேசத்தில் ஏற்கெனவே கிராமப்புறங்களில் மின் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது.

 

அரசியல் குழப்பம்

வங்கதேசம்: இடைக்கால அரசு பணம் செலுத்தாததால் மின் விநியோகத்தை குறைத்த அதானி நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசம் டாலர் நெருக்கடியில் உள்ளது. மின்சாரம், நிலக்கரி, எண்ணெய் போன்ற விலையுயர்ந்த அத்தியாவசிய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்துவதற்கு டாலர் வருவாய் ஈட்டப் போராடி வருகிறது.

ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களால் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் போது வெளிநாட்டு நாணய கையிருப்பும் வீழ்ச்சியடைந்தது.

அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் கோரியுள்ளது. அதன்படி, தற்போதுள்ள 4.7 பில்லியன் டாலர் கடனுடன் கூடுதலாக 3 பில்லியன் டாலர் கடனை கோரியுள்ளது.

அதானி பவர் நிறுவனம் 2015இல் `வங்கதேச பவர் டெவலப்மெண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஷேக் ஹசீனா ஒப்புதல் அளித்த பல ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. தற்போதுள்ள இடைக்கால அரசு இந்த மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தை வெளிப்படைத்தன்மை இல்லாத ஒப்பந்தம் என்று விமர்சித்துள்ளது.

தற்போது ஒரு தேசியக் குழு 11 முந்தைய ஒப்பந்தங்களை மறுமதிப்பீடு செய்து வருகிறது. அதானி உடனான ஒப்பந்தம் உள்பட, பல ஒப்பந்தங்கள் பெரும்பாலும் அதிக விலையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

அதானி பவர் நிறுவனம் மட்டுமின்றி சில இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை விற்கின்றன. இதில் என்.டி.பி.சி லிமிடெட், பி.டி.சி இந்தியா லிமிடெட் ஆகியவை அடங்கும். மற்ற இந்திய மின் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையும் பகுதியளவு செலுத்தப்பட்டு வருவதை மின் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

 
வங்கதேசம்: இடைக்கால அரசு பணம் செலுத்தாததால் மின் விநியோகத்தை குறைத்த அதானி நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேசம் சில எரிவாயு மற்றும் எண்ணெய் அடிப்படையிலான (gas-fired and oil-fired) மின் உற்பத்தி நிலையங்களை, விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் இது மின்சார செலவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

குளிர்காலம் நெருங்கி வருவதால், ஏ.சி தேவையும் குறையும் என்பதால், மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"மற்ற நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகள் 50% திறனில் இயங்குகின்றன. மேலும் டாலர் நெருக்கடி காரணமாக நாடு போதுமான நிலக்கரியை வாங்க முடியவில்லை. எனவே அதானி பவர் வழங்கும் மின் விநியோகம் முக்கியம். இது உள்ளூர் உற்பத்தியாளர்களைவிட சற்று விலை அதிகம் ஆனால் இது முக்கியம்” என எரிசக்தி நிபுணரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான முனைவர் அஜாஜ் ஹொசைன் கூறினார்.

வங்கதேசம் தனது முதல் அணுமின் நிலையத்தை டிசம்பரில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ரஷ்ய உதவியுடன் கட்டப்படும் இந்த நிலையத்திற்கு 12.65 பில்லியன் டாலர் வரை செலவாகும். இந்தத் திட்டம் பெரும்பாலும் நீண்ட கால ரஷ்ய கடன் சேவையால் நிதியளிக்கப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் நாட்டில் இதுவரை காலமும் யாரும் பெறாத பெரும்பான்மையோடு வெற்றியீட்டியிருக்கிறார். அவர்க்கு பாரிய பொறுப்புண்டு இதற்குப்பின்னால். முன்னிருந்த அரசாங்கங்கள் யாரும் சொன்னதை நிறைவேற்றினார்களா? இவர் எதுவும் சொல்லவில்லை, யாரும் அதுபற்றி கேட்கவுமில்லை. அது இருக்க, ஏன் அனுரா வந்தவுடனேயே இவ்வளவு கேள்வி, கோபம்? அவர் இன்னும் பாராளுமன்றமே அமைக்கவில்லை, எதற்காக இத்தனை அவசரம்? ஜனாதிபதி தேர்தலில் கூட, வடக்கு மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிக்கவில்லை, இறுதி நேரத்தில் தங்கள் முடிவை மாற்றியதன் காரணத்தை விளங்க முடியும். மட்டக்களப்பில் கூட சிவநேசதுரை சந்திரகாந்தன், விநாயக மூர்த்தி முரளிதரன் மேல் சட்ட நடவடிக்கை கட்டாயம் எனும் செய்தி பரவியதால் மக்கள் அவர்களை தவிர்த்திருக்கலாம். அது தமிழசுகட்சிக்கு சாதகமாய் அமைந்துள்ளது அவ்வளவே. அதோடு கிழக்கின் விடி வெள்ளிகளால்  அனுராவிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற முடியாது என்பதும் மக்கள் புரிந்ததே.
    • நீங்கள் ஏன் பாராளுமன்றம் போக விரும்புகிறீர்கள் என்று பத்திரிகையாளர் சுமந்திரனை கேட்ட கேள்விக்கு, சுமந்திரன் அளித்த பதில்,  "அனுரா,தங்களால் நல்லாட்சி  2015-2019 காலத்தில் வரையப்பட்ட சட்ட வரைபைஅமுல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்வதாகவும், அது தன்னாலும் இன்னொரு சிங்களவரின் பெயர், (மறந்துவிட்டேன்)  வரையப்பட்டதாகவும் அதை முன்னெடுத்து செல்ல தான் பாராளுமன்றம் போய் தனது திறமைகளை உபயோகித்து அதை நடைமுறைப்படுத்த முடியும் என தான் நம்புவதாலுமே தான் பாராளுமன்றம் போக விருப்பப்படுவதாக." ஒரு நேர்காணலில் சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவர் முன்பு பலதடவை அந்த வரைபில், ஏக்கய ராஜ்ய எனும் சட்ட வரைபு அது என கூறியிருக்கிறார், அதே ஒரு சர்ச்சையான சொல். இவர் சொல்கிறார் ஒருமித்த என்று, வேறொருவர் விளக்குகிறார் ஒற்றை ஆட்சி என்று. இவர் பாராளுமன்றம் போனால் ஏதோ மக்களை ஏமாற்றி சடைஞ்சு நிறைவேற்றி போடுவார். பொன்னம்பலம் அதை ஆராய வெளிகிட்டால் அங்கு சுமந்திரன் என்ன திருகுதாளம் வரைந்தார் என்பது வெளிவரும், கண்டிப்பாக எதிர்ப்பு வரும், ஆகவே தான் வரைந்ததை பொன்னம்பலம் கஜேந்திரன் குழப்பி விட்டார் என பரப்பலாம். அல்லது மாற்றம் செய்தால் நான் போயிருந்தால்; அதை சாதித்திருப்பேன், இதை சாதித்திருப்பேன் மக்கள் ஆணை தரவில்லை என்பார். ஆனால் எல்லாம் வரைந்தவருக்கு ஏன் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது? என்பது கேள்விக்குறி. கோத்த ஓடியபின் அரகலயாவை அடக்கிய ரணில் ஏன் அதை நடைமுறைப்படுத்தவில்லை?   நாட்டின் கடந்த சரித்திரம் புரியாமல் பேசுகிறீர்கள். சந்திரிகாவும் ஒருகாலத்தில் இராணுவத்தை ஒரு வரையறைக்குள் கொண்டுவர எடுத்த எடுப்பில் முயற்சித்தவர், ஆனால் அவர்களுக்கு அடிபணிவதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை அவரால். இதற்கு பல செயற்திட்டங்கள்  தேவைப்படும்  மாற்றியமைக்க முன்பு. அதற்கு முன் பொருளாதார உடனடிப்பிரச்சனையிலேயே தான் கவனம் செலுத்தப்போவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆக்கப்பொறுத்த நாம் ஆறவும் பொறுக்க வேண்டும். இல்லையேல் எல்லாம் கெட்டுவிடும். இதில் நான் என்ன தவறுதலாக எழுதிவிட்டேன்? அவர் இறுதிவரை கொண்ட  கொள்கையில்  உறுதியாக இருந்தார் என்று சொன்னேன், மாற்றத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை. அனுராவுக்கு காலம், சந்தர்ப்பம், அரசியல் எதிர்ப்பற்ற வெற்றி சூழல், மக்கள் மனங்களில் மாற்றம், சாதகமாக அமைந்துள்ளது என்றேன். இதிலென்ன தவறு?   எழுபத்தைந்து வருடங்களாக வேரோடி அடர்ந்து வளர்ந்து வளர்த்து விட்ட விருட்ஷத்தை ஒரு நொடியில் அடியோடு அழிப்பதென்பது எத்தனை பாரிய விளைவை ஏற்படுத்தும் என்பதை புரிந்து பேசுகிறீர்களா? அல்லது என்னோடு விதண்டாவாதம் பண்ண வேண்டுமென்று பேசுகிறீர்களா தெரியவில்லை? முதலில் அதில் உள்ள தழைகளை களைய வேண்டும், கிளைகளை மெதுவாக வெட்ட வேண்டும், பின் மரத்தை சிறு சிறு துண்டுகளாக்க வேண்டும், அதன்பின் வேர்களை கிளற வேண்டும்,  அதன் பின்னே அடிமரத்தில் கைவைக்க வேண்டும். இலகுவாக தானாகவே மரம் ஆட்டம் காணும், சரியும். அதை தமிழர் மத்தியிலேயே சிங்களம் மிகச்சாதுரியமாக செய்தது. இவர் நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டுமாயின் கட்டாயம் இதை செய்தே ஆகவேண்டும். இல்லையேல் அரசியலை ஒருதடவைக்கு மேல் கனவு காணக்கூடாது. இது வெறும் உதாரணம். பிறகு இதில கேள்வி கேட்டு விதண்டாவாதம் பண்ணி குடையக்கூடாது. 
    • செய்ய வேண்டிய வேலை… ஆனால் இவரால் முடியுமா? இப்போ இருக்கும் ஆட்களை சேர்த்து மினக்கெட்டு அவர்கள் மீண்டும் ஒரு சீட்டுக்காக பிய்த்து கொண்டு போவதை விட. அருச்சுனாவின் அணியை பலபிக்க உண்மையான எண்ணம் கொண்டோர் இணையலாம். அந்த அணியில் அருச்சுனா தவிர்ந்த ஏனையோர் சரியாக வழிநடந்தால், உத்வேக படுத்தப்பட்டால் மீளலாம்.
    • இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..
    • உடான்ஸ் லீக்ஸ் இணையதளம் அதிரடியாக அனுரவின் கொள்கை பிரகடனத்தை லீக் செய்துள்ளது, இதன் முக்கிய விபரங்கள்: 1. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் 2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் 3. தமது பிரதேசங்களில் மத ஸ்தலங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் தொல்பொருட்கள் உட்பட எந்த அரச திணைக்களமும் மாகாண சபையை மீறி செயல்பட முடியாது. 4. கடந்த 5 வருடத்தில் கட்டப்பட்ட அனுமதியில்லா மததலங்கள் இடிக்கப்படும். 5. போர் இல்லை, இப்போ மூவின மக்களும் ஒண்டுக்கு இருக்கிறார்கள், எனவே முப்பட்டைகள் 1/3 ஆல் குறைக்கப்படும். இந்த பணம் வைத்திய, கல்வி துறைக்கு நேரடியாக ஒதுக்கப்படும். முப்படை முகாம்கள் 1983 க்கு முந்திய நிலைக்கு போகும். 6.  1948 இல் இருந்து இலங்கை அரசுகள் கடைபிடித்த இன ஒதுக்கலுக்கு அரசு சார்பாக சிறுபான்மையினரிடம் மன்னிப்பு கேட்கிறோம். 7. இலங்கைக்கு உழைத்த, இங்கே பிறந்து இந்தியாவுக்கு அனுப்பபட்டவகளிடம் மன்னிப்பு கேட்கிறோம். 8. மாகாண சபைகளுக்கு வரி விதிக்கும், வெலிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படும். (யாவும் கற்பனை)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.