Jump to content

டெலிபோன் அணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: தமிழ் மக்களுக்கு மனோ விடுத்த அறிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெலிபோன் அணிக்குள் விருப்பு வாக்கு போட்டி: தமிழ் மக்களுக்கு மனோ விடுத்த அறிவிப்பு!

டெலிபோன் அணிக்குள் இன்று நிகழும் விருப்பு வாக்கு போட்டியை தமிழ் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
விசேட தெளிவூட்டல் அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தேர்தல் பிரசாரத்தில் கடைசி வாரம். இன்று வெவ்வேறு கட்சிகள் மத்தியில் நடைபெறும் போட்டி முடிந்து விட்டது. அதற்கு பதில், இன்று டெலிபோன் அணிக்குள் போட்டி இடும் பெரும்பான்மை இன வேட்பாளர்கள், தமிழ் வாக்காளர்களின் விருப்பு வாக்குகளை தேடி அலைகிறார்கள். தமது தொகுதி சிங்கள மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அங்கே தாம் இழந்த சிங்கள வாக்குகளை ஈடு செய்ய, தமிழ் விருப்பு வாக்குகளை பெற்று கரையேற தவியாய் தவிக்கிறார்கள்.

இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்கும்படி தமிழ் வாக்களர்களை நான் கோருகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

தமுகூ தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள விசேட வாக்காளர் தெளிவூட்டல் அறிக்கையில் மேலும் கூறி உள்ளதாவது;
கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், எமது வேட்பாளராக இருந்து சஜித் பிரேமதாசவுக்கு கொழும்பு, கம்பஹா, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களில் வெற்றி வாக்குகளை பெற்று கொடுத்தோம். நுவரெலியா மாவட்டத்தை வென்று கொடுத்தோம். இவை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சாதனை வெற்றிகள்.

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு பெற்று பெற முடியாத பல பெரும்பான்மை இன அரசியல்வாதிகள், இன்று டெலிபோன் சின்ன வேட்பாளர்களாக, தமிழ் விருப்பு வாக்குகளை தேடி ஓடி வருகிறார்கள். தமிழ் வாக்களர்கள் முன் தோன்றி, தமிழ் மக்கள் மீது திடீர் பாசம் கொண்டு பேசுகிறார்கள். தமிழ் வாக்காளர்களை கண்டு பேசி கட்டி அணைக்க முயல்கிறார்கள். எப்படியாவது கொஞ்சம் தமிழ் விருப்பு வாக்குகளை வாங்கி கரையேற முயல்கிறார்கள்.

இது என்ன வகையில் நியாயம்?

தமிழ் மக்கள் துன்பப்படும் போது, துயரப்படும் போது, கண்ணீர் விடும் போது, சிக்கல்களில் சிக்கி தவிக்கும் போது, அது எமக்கு வலித்தது. தொடர்ந்தும் வலிக்கும். நாம்தாம் அங்கே இருந்தோம். நான்தான் எப்போதும் அங்கே இருந்தேன். இன்று தமிழ் விருப்பு வாக்குகளை தேடி வரும் எவரும் அங்கே இருக்கவில்லை.

நாளை அடுத்த பாராளுமன்றத்தில், அனுர நிர்வாகத்துடன் தமிழ் மக்கள் சார்பாக கலந்து உரையாட போவது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களும், எம்பிக்களும் தான். தமிழ் கட்சிகள்தான். வேறு எவரும் கிடையாது. வேறு எவருக்கும் எம்மீது அக்கறை கிடையாது. இதை தமிழ் மக்கள் மிக நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் வாக்காளர்கள் மீது திடீர் பாசம் காட்டும் இந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்களுக்கு, தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளை தவறி போயும் கொடுத்து விட்டால், களத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி அடைய முடியாமல் போய் விடும். எமக்கு பெரிய அளவில் சிங்கள வாக்குகள் கிடைக்க போவதில்லை. ஆனால், எமது விருப்பு வாக்குகளையும் வாங்கி, அதனுடன் கொஞ்சம் சிங்கள விருப்பு வாக்குகளையும் வாங்கி சேர்த்து, இவர்கள் விருப்பு வாக்கு பட்டியல் வரிசையில் மேலே போய் விடுவார்கள். தமிழ் வாக்குகளை மாத்திரம் பெறுகின்ற நாம், கடைசியில் தெரிவு செய்யப்படும் எம்பீகளை தீர்மானிக்கும் விருப்பு வாக்கு பட்டியல் வரிசையில் பின்தங்கி விடுவோம். ஆகவே, இது எமது விரல்களால், எமது கண்களையே குத்தி கொள்வதாகும்.
ஆகவே, இந்த விருப்பு வாக்கு சூட்சுமத்தையும், தந்திரத்தையும் தமிழ் வாக்காளர்கள் மிக தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
டெலிபோன் சின்னத்துக்கு வாக்களித்து விட்டு, அந்த பட்டியலில், புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் கூட்டணி வேட்பாளர்களாக போட்டியிடும் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்குதான் தமது விருப்பு வாக்குகளை முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும்.

 

http://www.samakalam.com/டெலிபோன்-அணிக்குள்-விருப/

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்று பல மேள வாசிப்புக் காரர்கள் வாய்ப்புத் தேடி இலங்கை வந்து இங்குள்ள நட்டுவருடன் கலந்து விட்டதாக ஒரு கதை கேள்விப்பட்டுளேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயராக இருக்கலாம் 
    • "I don't think that Trump would agree to peace only on Russia's terms, as this would look like a defeat for the US, and his advisers understand this," Mr Fesenko told Reuters news agency. உக்கிரேனிய அரசியல் ஆய்வாளரின் (பெசண்கோ) கருத்தின்படி அமெரிக்கா உக்கிரேனின் விடயத்தில் ட்ரம்ப் நினைப்பது போல செய்ய முடியாது என்பதாக, அவ்வாறு நிகழ்ந்தால் அது அமெரிக்காவின் தோல்வியாகிவிடும் என. உக்கிரேனியர்கள் கூட இந்த போர் தொடரலாம் என நினைக்கிறார்கள் என கருதுகிறேன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நன்றி! பிரித்தானியாவின் முன்னால் பிரதமர், போரிஸ் ஜோன்ஸனை சனல் 4 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிகழ்ச்சியில் பாதியிலேயே அவருடைய புத்தகத்தினை விளம்பரப்படுத்தியமைக்காக வெளியேற்றி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த புத்தகத்தில் உலக அரசியல் பற்றிய பல எதிர்வுகூறல்கள் உள்ளதாம்? வாசித்து வீட்டீர்களா? கார்டியன் இணையச்செய்தி கூகிள் மொழிமாற்றம் மூலம். தனது புத்தகத்தை விளம்பரப்படுத்தியதற்காக போரிஸ் ஜான்சனை அமெரிக்க தேர்தல் நிகழ்ச்சியில் இருந்து சேனல் 4 'நீக்கம் செய்தது' என்று இணை தொகுப்பாளர் கூறுகிறார் முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி 'அதைத் தள்ளிவிடுங்கள்' என்று எச்சரிக்கப்பட்ட போதிலும் தனது நினைவுக் குறிப்பைக் கொண்டு வந்தார், பின்னர் டிவி பேனலில் மாற்றப்பட்டார் அமெரிக்க தேர்தல் 2024 - சமீபத்திய புதுப்பிப்புகள் அமெரிக்க தேர்தல் முடிவுகள் 2024: நேரடி வரைபடம் மற்றும் டிராக்கர்   பிஏ மீடியா புதன் 6 நவம்பர் 2024 12.15 AEDT பகிரவும்       நிகழ்ச்சியின் இணை தொகுப்பாளரான கிருஷ்ணன் குரு-மூர்த்தியின் கூற்றுப்படி, போரிஸ் ஜான்சன் அமெரிக்கத் தேர்தல் தொடர்பான சேனல் 4 இன் கவரேஜில் விருந்தினராக தோன்றியபோது "தனது புத்தகத்தைப் பற்றி முட்டி மோதியதற்காக" நீக்கப்பட்டார். நிகழ்ச்சியிலிருந்து ஜான்சன் வெளியேறுவது திட்டமிடப்பட்டதா அல்லது அவர் முன்கூட்டியே புறப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.   கிருஷ்ணன் குரு-மூர்த்தி: "இப்போது, இங்கே ஸ்டுடியோவில் எங்களிடம் ஒரு புதிய பேனல் உள்ளது - போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி அதிகம் பேசியதற்காக நீக்கப்பட்டார்" #C4AmericaDecides pic.twitter.com/k64MosGctX — டேவிட் (@Zero_4) நவம்பர் 5, 2024 "}}"> நிகழ்ச்சியின் போது, முன்னாள் இங்கிலாந்து பிரதமர், அமெரிக்கா முடிவு: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் என்ற தலைப்பில் நேரலை நிகழ்ச்சியில் சில நிமிடங்களில் தனது நினைவுக் குறிப்பைப் பிடித்துக் கொண்டு அதைச் செருகியதற்காகக் கூறப்பட்டார் . சேனல் 4 செய்தி வாசிப்பாளரான குரு-மூர்த்தி ஜான்சனிடம் "அதைத் தள்ளிவிடுங்கள்" மற்றும் "நிறுத்துங்கள் போதும்" என்று கூறினார், அவர் தனது புதிய புத்தகத்தை இரண்டு முறை குறிப்பிட்டு அதை பார்வையாளர்களுக்கு பிடிக்க முயன்றார். முன்னாள் பிரதமரின் நடவடிக்கைகள் "மிகவும் மலிவானவை" என்று குரு-மூர்த்தி விவரித்தார். ஜான்சன் பதிலளித்தார்: "என்னைத் தடுக்க உங்களால் எதுவும் செய்ய முடியாது ... எனது புத்தகத்தை இணைக்க எனக்கு அனுமதி உண்டு." 🚨 புதியது: போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தை இன்றிரவு சேனல் 4 அமெரிக்க தேர்தல் ஒளிபரப்பில் சில தருணங்களில் செருகியுள்ளார் pic.twitter.com/fZnpwRfIhi — அரசியல் UK (@PolitlcsUK) நவம்பர் 5, 2024 "}}"> பின்னர் குழு விவாதத்தின் போது, ஜான்சன் ஜூலை மாதம் படுகொலை செய்ய முயற்சித்த பின்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப்பை சந்தித்ததாகக் கூறினார். "இதை நான் குறிப்பிடத் தவறினால், எனது புத்தகம் அன்லீஷ்டுக்கு விளம்பரம் செய்கிறேன், உக்ரைனைப் பற்றி அவருடன் பேசினேன்," என்று அவர் கூறினார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், அரசியல் ரீதியாக மீண்டும் ட்ரம்ப் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது பற்றி அவரிடம் கேட்டபோது, ஜான்சன் கூறினார்: "அன்லீஷ்டில் இந்த விஷயத்தைப் பற்றிய முழு விவாதத்தையும் நீங்கள் காண்பீர்கள், அதற்கான பதில் வெளிப்படையாக உள்ளது." இணை தொகுப்பாளர் எமிலி மைட்லிஸ் அவரிடம் கூறினார்: "நாங்கள் அனைவரும் உங்கள் புத்தகத்தைப் படிக்கப் போவதில்லை, எனவே எங்களிடம் கூறுங்கள், நீங்கள் அரசியல் ரீதியாக மீண்டும் வர விரும்புகிறீர்களா … உங்களால் ஒரு கேள்விக்கு உண்மையில் பதிலளிக்க முடியாது." ஜான்சன் பதிலளித்தார்: “எமிலி உங்கள் எல்லா கேள்விகளுக்கும் இரவு முழுவதும் பதிலளித்தேன். தற்போது நான் எனது புத்தகத்தை விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ளேன், இது அனைத்து நல்ல புத்தகக் கடைகளிலும் கிடைக்கிறது. பின்னர் நிகழ்ச்சியில், ஜான்சனுக்கு பதிலாக சேனல் 4 குழுவில் மைக்கேல் கோஹன் நியமிக்கப்பட்டார், அவர் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் வழக்கறிஞராக பணியாற்றினார். குரு-மூர்த்தி பார்வையாளர்களிடம் கூறினார்: "போரிஸ் ஜான்சன் தனது புத்தகத்தைப் பற்றி களமிறங்கியதற்காக நீக்கப்பட்டுள்ளார்." சனல் 4 இன் பிரதிநிதி ஒருவர் கருத்துக்காக PA ஊடகத்தால் தொடர்பு கொள்ளப்பட்டார்.  
    • சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.