Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

(நெவில் அன்தனி)

வருடத்தின் அதிசிறந்த உலக மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை ஒலிம்பிக் சம்பியன்கள் சிபான் ஹசன், லெட்சைல் டெபோகோ ஆகியோர் வென்றெடுத்தனர்.

world_best_athletes_of_the_year_lestile_

மொனாக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக மெய்வல்லுநர்கள் விருது விழா 2024இன் போது அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

world_best_athletes_of_the_year_sifan_.p

வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், அதிசிறந்த வெளியரங்க வீராங்கனைக்கான விருதையும் வென்றெடுத்தார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 7 நாட்கள் இடைவெளியில் 2 வெண்கலப் பதக்கங்களையும் ஒரு தங்கப் பதக்கத்தையும் சிபான் ஹசன் வென்றிருந்தார்.

பெண்களுக்கான 5000 மீற்றர், 10000 மீற்றர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்ற சிபான் ஹசன், மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இதேவேளை, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 19.46 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை வென்றமைக்காக பொட்ஸ்வானாவின் லெட்சைல் டெபோகோவுக்கு வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநருக்கான விருது வழங்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/200268



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.