Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

“நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.”

என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ”

26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை!

கையிலும் பழுவிலும் அவருக்குக்
காயம் ஏற்பட்டிருந்தது.

கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர்.

அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா?

குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை
Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோருடன் யானும் அவரை சத்திரசிகிச்சை மேசையில் ஏற்றினோம்.

தனது மக்கள் மீது கொண்ட வாஞ்சை காரணமாக எம்மிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தவருக்கு சத்திரசிகிச்சை செய்வதாயின் பொது மயக்கமருந்து கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம்.

பொது மயக்கமருந்து (General Anesthesia) கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை குருதி அமுக்கத்தைச்( Blood Pressure) சோதித்த போது குருதி அமுக்கமானது அதிகரித்துக் காணப்பட்டது.

அதற்காகவும் சத்திரகிச்சையைக் கைவிடமுடியாத நிலை.

அவரை எங்களால் இயன்றளவு ஆசுவாசப் படுத்தி நிமிடங்களின் பின்னர் மீண்டும் சோதித்த போதும் குருதியமுக்கம் அதே நிலையிலேயே இருந்தது.

பொதுவாக நாங்கள் பாவிக்கும் மயக்கமருந்துகள் குருயமுக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை இந்த நிலையில் உயர் குருதி அமுக்கம் உள்ள ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்தால் மேலும் குருதி அமுக்கம் அதிகரித்து நிலைமையை மோசமாக்கிவிடும் என்பது வெளிப்படையானது.

ஆதலினால் அன்று அங்கிருந்த இளைய மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர்( Anesthetist) அந்நிலையில் மயக்கமருந்து கொடுக்க மறுத்துவிட்டார்.

மேலதிக உதவிக்காக மயக்கமருந்து கொடுக்கும் மூத்த வைத்தியர்களை அந்த இடத்துக்கு அழைக்க முடியாதவாறு பலமாக எறிகணைகள் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அண்மைய இடத்திலும் மைதானத்திலும் விழுந்து வெடித்துகொண்டேயிருந்தது.

விண்ணும் மண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க தனது உயிரிலும் மேலாக மக்களை நேசித்த அந்தத் மறத்தலைவனையும் நெஞ்சிருத்தி நிமிர்வோம்!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.