Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் பாதிப்பு!

 

யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 21 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும் இந்நோய்க்காக சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

14 ஆம் திகதி இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் துன்னாலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இத்துடன் இதுவரை யாழ். மாவட்டத்தில்
எலிக்காய்ச்சல் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களின் குருதி மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தன. இவர்களில் 7 பேருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்த கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இளைஞருக்கும் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக விவசாயிகளுக்கும், கடல்நீர் ஏரி மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யாழ். மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடைகளுக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய குருதி மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 

http://www.samakalam.com/யாழ்-மாவட்டத்தில்-எலிக்/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாதிக்கப் பட்டடவர்களுக்கு அனது ஆழ்ந்த ஆறுதலும் அனுதாபங்களும், கொரனா கால நடவடிக்கைகள் ஒத்த நடைமுறைகளை பாதிக்கப்பட்ட இடங்களில் செயல்படுத்த வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எலிக்காய்ச்சல் நோயால் இதுவரை 121 பேர் பாதிப்பு – 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள்

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை.

எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நேற்றுவரை ஏறத்தாழ 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது.

இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துள்ளனர் என்றார்.

https://thinakkural.lk/article/313966



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.